SS அனுமான் துதி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அனுமான் துதி
அனுமான் துதி
அனுமான் துதி

பாராயணத்திற்கான கம்பராமாயணப் பாடல்கள்

அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்

சுந்தர வில்லியேவ சூழ்கடல் இலங்கை மேவி, அந்தமில் வீடுநல்கும் ஆயிழை தன்னைக் கண்டு வந்தவெல் வரக்கர் சிந்தி வளையெரி மடுத்து மீண்ட நந்தலில் லாததூதன் நம்மையும் அளித்துக் காப்பான்

அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி வெஞ்சினக் கதிர்பின் சென்று முழுமறை யுணர்ந்தாய் போற்றி மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென விருப்பாய் போற்றி

அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன் செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன் வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும் அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே

அன்னகை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து இன்னெடும் கடலைநீயும் எங்ஙனம் கடந்தாய், என்ன உன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று மன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி

சொல்லுரம் பெற்ற சோர்விலா தூயவீரன் வல்லவன் ராமன் சீதை வாயுறை பெற்ற அன்பன் அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனைப் பாடும்கலை கல்லினைப் பெண்ணாய்ச் செய்தான் கழலிணைப் போற்றுவோமே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar