SS அனுமான் பஞ்சரத்னம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அனுமான் பஞ்சரத்னம்
அனுமான் பஞ்சரத்னம்
அனுமான்  பஞ்சரத்னம்

வீதாகில விஷயேச்சம்
ஜாதாநந்தாச்ருபுளமத்யச்சம்

ஸீதாபதிதூதாத்யம்
வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருதயம்

தருணாருண முககமலம்
கருணாரஸபூர பூரிதாபாங்கம்

ஸஞ்ஜீவந மாசாஸே
மஞ்ஜுலமஹிமாந மஞ்ஜநயபாக்யம்

சம்பரவைரிசராதிகம்
அம்புஜதள விபுலலோசநோதாரம்

கம்புளமநில நிஷ்டம்
பிம்பஜ்வலிதோஷ்ட மேகவலம்பே

தூரீக்ருதஸீ தார்த்தி:
ப்ரகடீக்ருத ராமவைபவஸ் பூர்த்தி

தாரித தசமுககீர்த்தி:
புரதோ மமபாது ஹநுமதோ மூர்த்தி

வாநரநிகராத்யக்ஷம்
தாநவகுல குமுத ரவிகர ஸத்ருக்ஷம்

தீநஜநாவநதீக்ஷம்
பவநநப: பாகபுஞ்ஜ மத்ராக்ஷம்

ஏகத் பவநஸுதஸ்ய
ஸ்தோத்ரம் ய:படதி பஞ்சரத்நாக்யம்

சிரமிஹ நிகிலாந் போகாந்
புக்த்வா ஸ்ரீராமபக்திபாக் பகவதி

ஆதிசங்கரர் அருளிய ஹநுமத் புஜங்க ஸ்தோத்ரம்

1. ப்ரபந்நாநுராகம் ப்ரபாகாஞ்சநாங்கம்
ஜகத்பீதாஸெளர்யம் துஷாராத்ரிதைர்யம்
த்ருணீபூதஹேதிம் ரணோத்யத் விபூதிம்
பஜே வாயுபுத்ரம் பவித்ராப்த மித்ரம்

பொன் போன்ற மேனியன். கற்றோன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்கள் அனுமா போற்றி.

2. பஜே ராம ரம்பாவநீ நித்யவாஸம்
பஜே பாலபாநு ப்ரபாசாருபாஸம்
பஜே சந்த்ரிகா குந்த மந்தாரஹாஸம்
பஜே ஸந்ததம் ராம பூபாலதாஸம்

பேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சூரியனை பழமென்று எண்ணிப் பாயந்தவன். தீமைகளை அடியொடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன். அந்த ராமதாசனான அனுமனைப் போற்றுவோம்.

3. பஜே லக்ஷ்மணப்ராண ரஹாதிதக்ஷம்
பஜே தோஷிதாநேக கீர்வாண பக்ஷம்
பஜே கோர ஸங்க்ராம ஸீமாஹதாக்ஷம்
பஜே ராமநாமாதி ஸம்ப்ராப்த ரக்ஷம்

லக்ஷ்மணனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தைத் தவிர்த்தவன். ஞானி. சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே (அவனே வியக்கும் வண்ணம்) நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.

4. கராலாட்ட ஹாஸம் க்ஷிதிக்ஷிப்தபாதம் கநக்ராந்தப்பருங்கம் கடிஸ்தோருஜங்கம் வியத்வ்யாப்வகேஸம் புஜாச்லேஷிதாச்சமம் ஜயஸ்ரீ ஸமேதம் பஜே ராமதூதம்

சிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும்படியான அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அசாத்ய அழகு. அத்தகைய சீதாராம தாசனைப் போற்றுவோம்.

5. சலத்வாலகாத் ப்ரமச்சக்ரவாளம்
கடோராட்டஹாஸ ப்ரபிந்நாப் ஜஜாண்டம்
மஹாஸிம்ஹநாதாத் விஸீர்ணத்ரிலோகம்
பஜே சாஞ்ஜநேயம் ப்ரபும் வஜ்ரகாயம்

ஆஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி. சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துணை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைப்போல் பறந்தாய். இலங்கையில் அட்டஹாசம் செய்தாய். நீயே சத்திய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.

6. ரணே பீஷிணே மேகநாதே ஸநாதே
ஸரோஷம் ஸமாரோப்யஸிவாவ்ருஷ்டி முக்ராம்
ககாநாம் கநாநாம் ஸுராணாஞ்ச மார்கே
நடந்தம் மஹாந்தம் ஹநூமந்தமீடே

போரிலே நீ ருத்ரனாக எரிப்பாய். மேகநாதனுடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷனே உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடந்தபோது - ஆதர்ஷ பூமியைத் தாங்குபவனாகிய அவனே பூமியில் கிடந்தபோது - நுண்ணறிவின் உதவியாலே விண்ணில் பாய்ந்து சென்று பல்லாயிர லட்ச யோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இளவலின் உயிர் காத்த அனுமந்தன் பெருமையை யாரால் எப்படிக் கூற இயலும் ?! எவராலும் முடியாது !

7. கநத்ரத்ந ஜம்பாரி தம்போளிதாரா
கநத்தந்த நிர்தூத காலோக்ர தந்தம்
பதாகாதபீ தாப்தி பூதாதிவாஸம்
ரண÷க்ஷõணிதாக்ஷம்பஜே பிங்காளக்ஷம்

பொன்முடி தரித்தவா போற்றி. மாண்பு மிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம் பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியுடன் செயல்படுபவன். உயர்வான பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை போற்றுகின்றோம்.

8. மஹாக்ரோபீடாம் மஹோத்பாத பீடாம்
மஹாக்ராஹபீடாம் மஹா தீவ்ரபீடாம்
ஹரந்தயாஸுதே பாதபத்மாநுரக்கா:
நமஸ்தே கபிச்ரேஷ்டராமப்ரியாய

ராமனுக்கு இனியனே, ராக சொரூபனே, நோய் தீர்க்கும் சஞ்சீவியே, உலக ரட்சகனே, பத்ம பாதனே, வானர சிரேஷ்டனே, குமுதனே, உன்னைப் போற்றுகிறோம்.

9. ஸுதாஸிந்து முல்லங்க்ய நாக ப்ரதீப்தா:
ஸுதா சௌஷதீஸ்தா ப்ரகுப்தப்ரபாவா க்ஷணே
த்ரோணசைலஸ்ய ப்ருஷ்டே ப்ரரூடா:
த்வயா வாயுஸூநோ கிலாநீய தத்கா:

பேரருளும் பெருமையும் கொண்ட கபீந்தரா (வானரத் தலைவனே). நீ தானே தேடி வந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமையில் மிக்கவனே. உமை வணங்குகிறேன்.

10. நிராதங்கமாவிச்ய லங்காம் விசங்கோ
பவாநேவ ஸீதாதி ஸோகாபஹாரீ:
ஸமுத்ரம் தரங்காதி ரௌத்ரம் விநித்ரம்
விலங்க்யோ ருஜங்காஸ்துதோமர்த்ய ஸங்கை:

பொன்னாலான இலங்காபுரியை பொடிப் பொடியாக்கிய பிரபு நீயே ! தீயில் கருகிய இலங்கையும் வெந்தீயில் அழிந்தவற்றுள் நதிகள், கடல் என, எதுதான் உன் வெஞ்சினத்திற்குத் தப்பியது  ? உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை÷ உன்னுடையதாக்கிக் கொண்டாயோ மாருதி ?

11. ரமானாக ராம க்ஷமாநாத ராமம்
அசோகே ஸ்சோகாம் விதாய ப்ரஹர்ஷம்
வினார்தர்கநாம் ஜீவநாம் தானவானம்
விடாப்ய பிரஹர்ஷாத் ஹநுமத் ஸ்த்வமேம

ராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே ! ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரா. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறை பெற்ற தவசீலனே ! இதற்கு என்ன தவம் செய்தனை ?

12. ஜராபாரதோ பூரி பீடாம் சரீரே
நீரதாரணரூட காட ப்ரதாபி
பவத் பாத பக்தீம் பவத் பக்தி ரக்திம்
குரு ஸ்ரீ ஹநுமத் பிரபோமே தயாளோ!

குருவே ஸ்ரீ ஹனுமனே ! என இவ்வையகமே போற்றி மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப்போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன் மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. (உன் திருமேனி கண்டால் சிலிர்ப்பு ஏற்படும்) நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிலிருந்தே பெற்று அவனுக்கே அளிக்கும் பிரபுவாக உள்ளவன் நீயே ! உன்னைத் துதிக்கிறோம்.

13. மஹாயோகிநோ ப்ரஹ்மருத்ராதயோ வா
ந ஜாநந்தி தத்வம் நிஜம் ராகவஸ்ய
கதம் ஜ்ஞாயதே மாத்ருசைர் நிதயமேவ
ப்ரஸீத ப்ரபோ மாருதே நமஸ்தே

ருத்ரனும் பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீயே ! தத்துவமும் தர்க்கமும்  அறிந்தவன் நீ ! இசையில் லயிப்பவன் ! எங்கெல்லாம் சத்தியத்திற்குக் கெடுதல் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் வலியச் சென்று சத்தியத்தை ரட்சிப்பவன் நீயே ! உன்னைப் போற்றுகிறேன்.

14. நமஸ்தே மஹாஸத்வ பாஹாய துப்யம்
நமஸ்தே மஹாவஜ்ரதேஹாய துப்யம்
நமஸ்தே பராபூதஸூர்யாய துப்யம்
நமஸ்தே க்ருதாமர்த்யகார்யாய துப்யம்

சத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாழு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினைக் கொண்டவா போற்றி.

15. நமஸ்தே ஸதா ப்ரஹ்மசர்யாய துப்யம்
நமஸ்தே ஸதா வாயுபுத்ராய துப்யம்
நமஸ்தே பிங்களாக்ஷõய துப்யம்
நமஸ்தே ஸதா ராமபக்தாய துப்யம்

நித்ய பிரம்மசாரியே போற்றி ! வாயு மைந்தனே போற்றி ! எப்போதும் ராமநாம சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீயே.

16. ஹநூமத்புஜங்கப்ரயாதம் ப்ரபாதே ப்ரதோஷேபி வா சார்தராத்ரேபி மர்த்ய படந் பக்தியுக்த: ப்ரமுக் தாகஜால: நமஸ் ஸர்வதா ராமபக்திம் ப்ரயாதி

இந்த அனுமனது புஜங்க ஸ்தோத்திரத்தை மனம் வாக்கு காயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு பிரதோஷ காலங்களில் (தினமும் மாலை நேரத்தில்) ஜபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். எதிரி பயம் விலகும். நியாயமான கோரிக்கைகள் ஈடேறும். சத்திய வழி நடப்பதால் கிட்டும் நன்மைகள் தடையின்றிச் சேரும் சர்வமங்களம் கூடும். நேர்வழியில் சென்று அனைத்திலும் வெல்லும் திறனும் தானே வரும்.

ஸ்ரீ ஹனுமத் புஜங்கம் நிறைவுற்றது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar