SS தன்வந்திரி பகவான் போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தன்வந்திரி பகவான் போற்றி
தன்வந்திரி பகவான் போற்றி
தன்வந்திரி பகவான்   போற்றி

ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் திருப்பாற்கடலில் தோன்றியவனே போற்றி
ஓம் தீர்க்காயுள் தருபவனே போற்றி
ஓம் துன்பத்தைத் துடைப்பவனே போற்றி
ஓம் அச்சம் போக்குபவனே போற்றி
ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
ஓம் அபயம் அளிப்பவனே போற்றி
ஓம் அன்பு கொண்டவனே போற்றி
ஓம் அமரனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

ஓம் அமரப் பிரபுவே போற்றி
ஓம் அருளை வாரி வழங்குபவனே போற்றி
ஓம் அடைக்கலம் கொடுப்பவனே போற்றி
ஓம் அழிவற்றவனே போற்றி
ஓம் அமிர்தம் அளிப்பவனே போற்றி
ஓம் அமிர்த கலசம் ஏந்தியவனே போற்றி
ஓம் அமிர்தத்தை உற்பத்தி செய்தவனே போற்றி
ஓம் அமிர்தமானவனே போற்றி
ஓம் அனைத்தையும் அறிந்தவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

ஓம் ஆயுர் வேதமே போற்றி
ஓம் ஆயுர் வேதத்தின் தலைவனே போற்றி
ஓம் ஆயுளை நீட்டிப்பவனே போற்றி
ஓம் ஆயுதக்கலை நிபுணனே போற்றி
ஓம் ஆத்ம பலம் தருபவனே போற்றி
ஓம் ஆசாபாசம் அற்றவனே போற்றி
ஓம் ஆனந்த ரூபனே போற்றி
ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
ஓம் ஆற்றல் பெற்றவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

ஓம் உலக ரட்சகனே போற்றி
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் உலக சஞ்சாரியே போற்றி
ஓம் உலகாள்பவனே போற்றி
ஓம் உலகத்தைக் காத்தருள்பவனே போற்றி
ஓம் உலக மக்களால் பூஜிக்கப்படுபவனே போற்றி
ஓம் உயிர் காப்பவனே போற்றி
ஓம் உயிர்காக்கும் உறைவிடமே போற்றி
ஓம் உண்மையான சாதுவே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

ஓம் எமனுக்கும் எமனானவனே போற்றி
ஓம் எழிலனே போற்றி
ஓம் எளியார்க்கும் எளியவனே போற்றி
ஓம் எல்லா ஐஸ்வர்யங்களையும் அணிந்தவனே போற்றி
ஓம் எல்லா நலன்களும் அருள்பவனே போற்றி
ஓம் எல்லோருக்கும் வாரி வழங்குபவனே போற்றி
ஓம் எல்லையில்லா இன்பப் பெருக்கே போற்றி
ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
ஓம் எல்லையற்ற மகிமை கொண்டவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் கருணைக் அமிர்தக்கடலே போற்றி
ஓம் கருணா கரனே போற்றி
ஓம் காக்கும் தெய்வமே போற்றி
ஓம் காத்தருள் புரிபவனே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் காவேரியில் ஸ்நானம் செய்பவனே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

ஓம் சகல நன்மைகளையும் தருபவனே போற்றி
ஓம் சகல செல்வங்களையும் வழங்குபவனே போற்றி
ஓம் சமத்துவம் படைப்பவனே போற்றி
ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
ஓம் சகிப்புத் தன்மை மிக்கவனே போற்றி
ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவனே போற்றி
ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
ஓம் சர்வலோகாதிபதியே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

ஓம் சர்வ மங்களம் அளிப்பவனே போற்றி
ஓம் சந்திரனின் சகோதரனே போற்றி
ஓம் சிறந்த ஆற்றல் கொண்டவனே போற்றி
ஓம் சித்தி அளிப்பவனே போற்றி
ஓம் சிறந்த அறநெறியோனே போற்றி
ஓம் சீரங்கத்தில் வாழ்பவனே போற்றி
ஓம் சுகம் அளிப்பவனே போற்றி
ஓம் சுகபோக பாக்யம் தருபவனே போற்றி
ஓம் சுபம் தருபவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

ஓம் தசாவதாரமே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் தெய்வீக மருந்தே போற்றி
ஓம் தெய்வீக மருத்துவனே போற்றி
ஓம் தேகபலம் தருபவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தேவர்களால் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் தேவாமிர்தமே போற்றி
ஓம் தேனாமிர்தமே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

ஓம் பகலவனே போற்றி
ஓம் பக்திமயமானவனே போற்றி
ஓம் பண்டிதர்களின் தலைவனே போற்றி
ஓம் பாற்கடலில் தோன்றியவனே போற்றி
ஓம் பாதபூஜைக்குரியவனே போற்றி
ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் புராண புருஷனே போற்றி
ஓம் பூஜிக்கப்படுபவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி

ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
ஓம் மஹா பண்டிதனே போற்றி
ஓம் மஹா மேதாவியே போற்றி
ஓம் மஹா விஷ்ணுவே போற்றி
ஓம் முக்தி தரும் குருவே போற்றி
ஓம் முழு முதல் மருத்துவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் ஸ்ரீ சக்தியே! தன்வந்திரி பகவானே போற்றி போற்றி.

நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் துர்க்கைச் சித்தர் அருளிய தன்வந்திரி மந்திரம்

தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். கீழ்க்குறிப்பிட்ட அவருடைய மந்திரத்தை தினமும் காலை, மாலை வேளைகளில் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும். நோயற்ற வாழ்வு கிட்டும். மேலும் மருத்துவமனைகளில் தன்வந்திரி படத்தை வைத்து இந்த மந்திரத்தையும் அதன்கீழ் எழுதி வழிபட்டால் அந்த மருத்துவமனை பிரபல்யமடையும். தன்வந்திரியின் அருள் கிட்டும்.

ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா

தன்வந்திரி ஸ்லோகம்

சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

புசித்தபின் சொல்லும் மந்திரம்

வாங்ம ஆஸன் - நஸோ ப்ராண: -
அக்ஷயோஸ் சக்ஷ: கர்ணயோ ஸ்தோத்ரம் -
பாஹுவோர்பலம் - ஊருவோரோஜ: அரிஷ்டா
விஸ்வான்யம் காஷி தந: தநுவா மே ஸஹ
நமஸ்தே அஸ்து மாமா ஹிம்ஸீ:

இறைவனே! எனது அங்கங்கள் பசியால் களைத்து இருந்தன. அறுசுவை உணவைப் பெற்றதும், அவைகள் புத்துயிர் பெற்று எழுந்தன. நாக்கு பேசும் வல்லமைப் பெற்றது. மூச்சுக்காற்றில் உயிர் சக்தியும், கண்கள் உற்று உணரும் பார்வையும், காதுகள் கேட்டு அறியும் திறனும் பெற்றன. இரு கால்களில் வலிவும், தொடைகளில் நடக்கும் வல்லமையும் எழுந்தன. என்னுடைய எல்லா உறுப்புகளும் எவ்வித சோர்வும் அற்று அதன் நிலையிலே நின்றன. உன்னுடைய பேரருளால், உணவுத் தானியங்கள் விளைந்தன. அவைகளை உண்டு, அதனால் என் எல்லா அங்கங்களும் நலன் பெற்றமைக்காக நான் நன்றியுடன் வணங்குகிறேன். இவ்வண்ணம் என்னுடைய வாழ்நாள் முழுதும், எனக்கு எவ்விதக் கேடும் வராமல் தாங்களே காத்தருள வேண்டும்.

கரங்கள் நலம் பெற மந்திரம்

அயம் மே ஹஸ்தோ பகவானயம் மே பகவத்தர:
அயம் மே விஸ்வபேஷ ஜோயகம் சிவாபி மர்சன:

என்னுடைய இரு கரங்களும் உன்னை வழிபடவும், உன்னை வழிபடும் பணிகளில் பயன்படவும், நிறைந்த சக்தியைப் பெற நீ அருள வேண்டும். இறைவனின் அருட்செயலில் இந்தக் கரங்கள் பங்கு பெறுவதால், இறைவனை விட அடியார்களின் கரத்தை மேலாக மதிக்கட்டும். இந்த என்னுடைய இரண்டு கரங்களும் உலகங்கள் எல்லாவற்றிலும் ஏற்படும் துயரங்களைத் துடைத்து, நல்லவைகளை வழங்கும் திருக்கரங்களாகப் போற்றப்படட்டும். இறைவா, இதற்கு நீ என்றும் அருள்வாய்!

நினைவாற்றல் மந்திரம்

ஸ மேன்த்ரோ மேதயா ஸப்ருணோது
அம்ருதஸ்ய தேவ தாரணோ பூயாஸம் - சரீரம்
மே விசர்ஷணம் - ஜிஹ்வாமே மது மத்தமா -
கர்ணாப்யாம் பூரி விஸ்ருவம் - ப்ரஹ்மணே;
கோசோஸி மேதயா பிஹித: - ஸ்ருதம் மே கோபாய:

மேலான அறிவைப் பெற உதவும் மேதா சக்தியை இறைவன் எனக்கு வழங்கட்டும். அதன் துணையால் சாவா நிலைபெறும் நல்லறிவு பெறுவேன். அறிவைத் தாங்குகிற வலிமையான நோயற்ற உடலும், பெற்ற அறிவை மற்றவர் அறியும் வண்ணம் சொல்லுகிற தேனொழுகும் வாக்கும், பிற நல்லறிஞர்கள் சொல்லும் நல்லுரைகளைக் காதுகளில் கேட்டு, அதனால் விரிவடைந்த அறிவையும், இறைவன் எனக்கு வழங்கட்டும். எல்லா உலகிற்கும் மூலமாக விளங்கும் இறைவனைப் போற்றிப் பணிந்து ஏத்த நான் பெற்ற மேதையாகிற கருவூலத்தில் உள்ள அறிவுமிக்க தகுதி பெறட்டும். இறைவனே! நான் அறிவால் கற்றதையும், காதுகளால் கேட்டு அறிந்தவைகளையும் மறக்காமல் இருக்கவேண்டும். அதற்கு தாங்களே துணை செய்ய வேண்டும்.

ரோக நிவாரண மந்திரம்

ஓம் அச்சுத அனந்த கோவிந்தாய நம:

இந்த விஷ்ணு மந்திரம் ரோக நிவாரண மந்திரமாகச் சொல்லப்படுகிறது. இதை நோயுற்றவர்களின் முன்பு அமர்ந்துகொண்டு, துளசி தீர்த்தத்தில் ஜெபித்துக் கொள்ள வேண்டும். நோயுற்றவர்களுக்கு உள்ளேயும் அருந்தக் கொடுத்து, ப்ரோக்ஷணமும் செய்ய வேண்டும். இந்த மந்திரத்தை மூன்றுலட்சம் ஆவிர்த்தி ஜெபம் செய்து கொண்டால் பலன் மிகுதி.

இஷ்ட சித்தி மந்திரம்

ஆர்யா துர்கா வேத கர்பா அம்பிகா பத்ர காள்யபி
பத்ரா சேக்ஷம்யா ஷேமகரீ நைக பாஹீ நமாமிதாம்

மாயா தேவியின் நாமங்கள் இவைகள். காமனைகளை நிறைவேற்றி வைத்து, சுக சவுபாக்கியங்களைத் தருவன. இந்த மந்திரம் மூன்று சந்தியா காலங்களிலும், மூன்று மாதங்கள் தொடர்ந்து ஜெபித்து வந்தால் பலன் தரும். துர்கா, காளி உபாசகர்களுக்கு இது பலன் தரும் துணை மந்திரமாகும்.

குசாமார்ஜந விதி ஸ்லோகம்

ஓம் நம: புருஷார்த்தாய புருஷாய மஹாத்மநே
அருப பஹுருபாய வ்யாபிநே பரமாத்மநே!
ஹராமுகஸ்ய துரிதம் ஸர்வஞ்ச குசலம் குரு
ஸர்வே ரோகா ஸ்ச ரக்ஷிம்ஸி க்ஷயம் யாந்து விபீஷணா

குசாமார்ஜந விதி என்பது, நோய்கள் தீர்வதற்காக ஹரி வம்சத்தில் சொல்லப்படும் ஒரு விதியாகும். தர்பங்கள் மஹா விஷ்ணுவான ஸ்ரீமன் நாராயணனின் உடலிலிருந்து தோன்றியவைகள். இதை உறுதிப்படுத்தவே, இராம அவதாரத்தில் தர்ப சயனம் என்ற ÷க்ஷத்திரத்தில் ஸ்ரீராமர் தர்பையின் மீது சயனித்து இருந்தார். இறைவனின் உடலைத் தொட்ட பொருள்கள் எல்லாம் பவித்திரமானவைகள். இறைவனோடு கலந்த பொருள்கள் எல்லாம் பரிசுத்தமானவைகள். கங்கை தீர்த்தம், துளசி தாமரை புஷ்பம், பாரிஜாத புஷ்பம், குசம், ஹரிசந்தனம் போன்ற இன்னும் பல்வேறு பொருட்கள், இறைவனைத் தொட்டதாலும் கலந்ததாலும், புனிதத்தன்மை பெற்றன.

இந்தப் பவித்ரமான குசத்தினால் பவித்ரங்களைச் செய்து தேவ பூஜையிலும், பிதுர் காரியங்களிலும், பவித்ர விரல்களில் அணிவது வழிவழி வழக்கம். குசத்தினால் நோயுற்றவனின் உடலில் மேலிருந்து கீழாக மெல்லத் தடவிக் கொண்டு, மேலே சொன்ன மந்திரத்தை அபிமந்திரித்தால் கோள்களினால் ஏற்பட்ட நோய்களும், பாவங்களால் ஏற்பட்ட ரூபங்களும் கண்டிப்பாகத் தீரும்.

அமுகஸ்ய என்ற இடத்தில் நோயுற்றவனின் பெயரைக் கூறி ஜெபிப்பது சிறப்பு.

தன்வந்த்ரி மகாமந்திரங்களையும் குசாமார்ஜந விதிப்படி ஜெபித்து பலன் அடையலாம். குசாமார்ஜந விதிப்படி ஜெபிக்க சூரியன் இருக்கும் நேரமே சிறப்பு. அதுவும் காலச்சந்தி மிகச்சிறப்பு. சூரியன் மலைவாயிலில் விழும் முன் - சந்தியா காலத்தில் ஜெபிப்பதும் நல்லது.

ஒருவருடைய நட்சத்திர தினம், ஐந்தாம் நட்சத்திர நாள், பத்து பதினொன்றாம் நட்சத்திர நாள், குறிப்பாகப் பலன்தரும் நட்சத்திர நாளாகும். அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, ஏகாதசி, துவாதசி போன்ற திதிகள் நோய்களை மிகுதிப்படுத்தும் திதிகள். இத்திதிகளில் நோய்கள் நீங்க, திதிகளை அறுபதாகப் பிரித்து யாருக்காக ஜெபிக்கிறோமோ. அவருடைய வயது என்னவோ, அந்த எண்ணிக்கை நேரத்தில் துவங்கி, திதி நிறையும் வரை ஜெபிப்பது, நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தலையாய வழிமுறையாகும்.

ஒரு மந்திரம் பலிப்பது என்பது, அவரவர்களுடைய பூர்வ ஜென்ம புண்ணியத்தின் நிரந்தர வைப்பைப் பொருத்தது. நீங்கள் பூர்வ புண்ணியம் அதிகம் பெற்றவர்களாக இருந்தால், மந்திரங்கள் முற்ற முழுதுமாக, ஏன் மேலும் சற்று அதிகமாகவே கூட உங்களுக்குப் பலித்துப் பொங்கி வழிந்து ஓடும். பூர்வ புண்ணிய குறைவு இருக்கும் பொழுது அதற்கேற்ற பலனே கிடைக்கிறது. எல்லோரையும் ஈர்த்துக் கொண்டு, தேரை இழுப்பதைப் போல ஜெபம் செய்கிறவர்கள், எந்தவிதமான இடர்பாடுகளும் இல்லாமல் முழுப்பலனையும் முறையாக அடைந்து விடுகிறார்கள். இது மந்திர சாஸ்திரத்தில் உள்ள மகத்தான ரகசியம். இதனால்தான் நாம் செய்யும் ஜெபத்தையே அந்தந்த மூர்த்திகளிடம் அர்ப்பணம் செய்து விடுகிறோம்.

தன்வந்த்ரி மஹா மந்திரத்திற்கு ஒரு மகத்தான சக்தி. அது சொல்லுகிறவனையும், கேட்கிறவனையும் நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றி விடுகிறது. தன்வந்த்ரி மந்திரம், ஜெபம், தர்ப்பணம், மார்ஜனம், ஹோமம், போஜனம் போன்ற எல்லா அங்கங்களோடு செய்வதுதான் சிறப்பான வழி. இருப்பினும், இது எளிதாக பலிக்கும் என்பதற்காகவே ஜெபமும் தர்ப்பணமும் போதும் என்ற வழிமுறைகளை எடுத்துக்காட்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar