SS திருமால் புகழ் பாடல்கள் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> திருமால் புகழ் பாடல்கள்
திருமால் புகழ் பாடல்கள்
திருமால் புகழ் பாடல்கள்

ஆண்டாள் பாசுரங்கள்

கருப்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான்
தித்தித்து இருக்குமோ

மறுப்பு ஒசித்த மாதவன்தன்
வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்பு உற்றுக் கேட்கிறேன்
சொல் ஆழி வெண்சங்கே !
நாறு நறும் பொழில் மா
லிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைத்த அக்கார
அடிசில் சொன்னேன்
ஏறுதிரு உடையான் இன்று வந்து
இவை கொள்ளுங் கோலோ !

வாராணமாயிரம்

வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான் !

நாளை வதுவை மணம் என்று நாள்இட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான்ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான் !

மத்தளம் கொட்ட வரிச்சங்கம் நின்று ஊத
முத்தடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான் !

திருப்பாவை

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகன
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேல் ஓர் எம்பாவாய் !

தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரங்கள்

பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே !

வேதநூல் பிராயம் நூறு
மனிதர்தாம் புகுவ ரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
நின்றுஅதில் பதினை யாண்டு
பேதை பாலகன் அதாகும்
பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்கமா நகர் உளானே !

திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள்

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடிஇளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன்
நாராயணா  என்னும் நாமம் !

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா  என்னும் நாமம் !

செங்கால் மடநாராய் இன்றே சென்று
திருக்கண்ணபுரம் புக்குஎன் செங்கண் மாலுக்கு
என்காதல் என்துணைவர்க்கு உரைத்தி யாகில்
இதுஒப்பது எனக்கு இன்பம் இல்லைநாளும்
பைங்கான்மீது எல்லாம் உனதே ஆகப்
பழனமீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன்பெடையும் நீயும்
இருநிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே!

கம்பர் பாடல்கள்

வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தனஉன்
பாதங்கள் இவைஎன்னில் படிவங்கள் எப்படியோ
ஒதங்கொள் கடலன்றி ஒன்றினோ (டு) ஒன்றொவ்வாப்
பூதங்கள் தொறும் உறைந்தால் அவையுன்னைப் பொறுக்குமோ ?

தாய்தன்னை அறியாத கன்றில்லை ; தன் கன்றை
ஆயும் அறியும் ; உலகின்தாய் ஆகி, ஐய !
நீயறிதி எப்பொருளும் ; அவை யுன்னை நிலையறியா
மாயை இ(து) என்கொலோ? வாராதே வரவல்லாய் !

(வேறு)

தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற
சுடரே ! தொடக் கறுத்தோர் சுற்றமே ! பற்றி
நீந்த அரிய நெடுங் கருணைக்(கு) எல்லாம்
நிலையமே! வேதம் நெறிமுறையின் நேடி
ஆய்ந்த உணர்வின் உணர்வே ! பகையால்
அலைப்புண்(டு) அடியேம் அடிபோற்ற அந்நாள்
ஈந்த வரம்உதவ எய்தினையே எந்தாய் !
இருநிலத்தவோ? நின் இணையடித்தா மரைதாம் !

மேவாதவர் இல்லை மேவினரும் இல்லை
வெளியோடிருள் இல்லை மேல்கீழும் இல்லை
மூவாமை இல்லை மூத்தமையும் இல்லை
முதல்இடையோ டீறில்லை, முன்னொடுபின் இல்லை !
தேவா ! இங்கு இதுவோ நீ சென்ற நிலை என்றால்,
சிலையேந்தி வந்தெம்மைச் சேவடிகள் நோவக்
காவா தொழியிற் பழிபெரிதோ? அன்றேல்
கருங்கடலில் கண்வளர்வாய் ! கைம்மாறும் உண்டோ ?

நாழி நவைநீர் உலகெலாம் ஆக
நளினத்து நீதந்த நான்முகனார் தாமே
ஊழி பலபலவும் நின்றளந்தால் ஒன்றும்
உலவாப் பெருங்குணத்(த) உத்தமனே ! மேல்நாள்
தாழி தரையாகத் தண்தயிர் நீராகத்
தடவரையே மத்தாகத் தாமரைக்கை நோவ
ஆழி கடைந்தமுதம் எங்களுக்கே ஈந்தாய்
அவுணர்கள்தாம் நின்அடிமை ஆகாமை உண்டே


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar