SS வெண் செந்துரை விநாயகர் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வெண் செந்துரை விநாயகர்
வெண் செந்துரை விநாயகர்
வெண் செந்துரை விநாயகர்

முந்தி முந்தி விநாயகரே முக்கணனார் தன்மகனே
கந்தருக்கு முன்பிறந்த கற்பகமே முன்னடவாய்
வேலவர்க்கு முன்பிறந்த விநாயகரே முன்னடவாய்
வேம்படியிற் பிள்ளையாரே விக்கினரே முன்னடவாய்
பேழை வயிற்றோனே பெருச்சாளி வாகனரே
காரண மால்மருகா கற்பகமே மெய்ப்பொருளே
சீரான நல்மருகா செல்வக் கணபதியே
ஒன்றைக் கொம்போனே உமையாள் திருமகளே
கற்றைச் சடையணிந்த கங்காதரன் மகனே
வித்தைக்கு விநாயகனே வெண்ணெயுண்டோன் மருகா
மத்தகக்கரி முகவா மாயோன் மருகோனே
ஐந்துகரத் தோனே யானைமுகத் தோனே
தந்தமத வாரணனே தற்பரனே முன்னடவாய்
நெஞ்சிற் குடியிருந்து நீயெனக்கு முன்னடவாய்
பஞ்சஞ்சு மெல்லடியாள் பார்வதியாள் புத்திரனே
வேழ்முகத்தோனே விநாயகரே முன்னடவாய்
தாழ்விலாச் சங்கரனார் சற்புத்திரா வாருமையா
முன்னடக்கம் பிள்ளையார்க்கு கண்ணடக்கம் பொன்னாலே
கண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தாலே
முத்தாலே தண்டை கொஞ்ச முன்னடவாய் பிள்ளையாரே
செல்வக் கணபதியுன் சீர்பாதம் நான்மற வேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar