SS சப்தமாதர் போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சப்தமாதர் போற்றி
சப்தமாதர் போற்றி
சப்தமாதர்  போற்றி

ஓம் பிரம்மியே போற்றி
ஓம் பிரம்ம சக்தியே போற்றி
ஓம் அன்னவாகினியே போற்றி
ஓம் அபயகரத்தாளே போற்றி
ஓம் இந்தளூர்த்தேவியே போற்றி
ஓம் ஈர்த்து அருள்பவளே போற்றி
ஓம் சடைமுடியாளே போற்றி
ஓம் ஜபமாலை ஏந்தியவளே போற்றி
ஓம் நான்முகியே போற்றி
ஓம் நால்வேதமாதாவே போற்றி

ஓம் பத்மாசனியே போற்றி
ஓம் பயநாசினியே போற்றி
ஓம் மலர்விழியாளே போற்றி
ஓம் மான்தோலுடையாளே போற்றி
ஓம் மாகேஸ்வரியே போற்றி
ஓம் மகேஸ்வரன் ரூபியே போற்றி
ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
ஓம் அசுரநிக்ரஹியே போற்றி
ஓம் கருணாபுரத்தேவியே போற்றி
ஓம் காளை வாகினியே போற்றி

ஓம் த்ரிசூலதாரியே போற்றி
ஓம் த்ரைலோக்ய மோகினியே போற்றி
ஓம் பஞ்சமுகியே போற்றி
ஓம் பல்லாயுதமேந்தியவளே போற்றி
ஓம் படர் சடையாளே போற்றி
ஓம் பாம்பணியாளே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் வெண்ணிற மேனியளே போற்றி
ஓம் வெற்றியளிப்பவளே போற்றி

ஓம் கௌமாரியே போற்றி
ஓம் குமார சக்தியே போற்றி
ஓம் அகந்தை அளிப்பவளே போற்றி
ஓம் அசுர சம்காரியே போற்றி
ஓம் உண்மையுணர்த்துபவளே போற்றி
ஓம் உடும்ப மரத்தடியிலிருப்பவளே போற்றி
ஓம் கஞ்சனூர்த் தேவியே போற்றி
ஓம் குங்கும வண்ணியே போற்றி
ஓம் சண்முகியே போற்றி
ஓம் சக்தி ஆயுததாரியே போற்றி

ஓம் மயில்வாகினியே போற்றி
ஓம் மகுடமணிந்தவளே போற்றி
ஓம் வீர சக்தியே போற்றி
ஓம் வறியோர்க்காவலே போற்றி
ஓம் வைஷ்ணவியே போற்றி
ஓம் விரிகண்ணாளே போற்றி
ஓம் கருடவாகினியே போற்றி
ஓம் கதாயுததாரியே போற்றி
ஓம் சங்கேந்தியவளே போற்றி
ஓம் சக்கரமும் ஏற்றவளே போற்றி

ஓம் சுந்தரவதனியே போற்றி
ஓம் சேந்தன்குடித்தேவியே போற்றி
ஓம் பெருமுலையாளே போற்றி
ஓம் பேரழகியே போற்றி
ஓம் மகாமாயையே போற்றி
ஓம் மஞ்சள்நிற ஆடையளே போற்றி
ஓம் வனமால்தாரியே போற்றி
ஓம் விஷ்ணு அம்சதேவியே போற்றி
ஓம் வாராகியே போற்றி
ஓம் வழுவூர்த்தேவியே போற்றி

ஓம் அஸ்திரவாராகியே போற்றி
ஓம் ஆபரணதாரியே போற்றி
ஓம் கதாயுததாரியே போற்றி
ஓம் கபாலமாலையணிந்தவளே போற்றி
ஓம் கலப்பை ஏந்தியவளே போற்றி
ஓம் கார்முகில் வண்ணியே போற்றி
ஓம் சக்தி சேனாபதியே போற்றி
ஓம் ஸ்வப்ன வாராகியே போற்றி
ஓம் துஷ்டநிக்ரஹியே போற்றி
ஓம் தூம்ரவாராகியே போற்றி

ஓம் பட்டுடுத்தவளே போற்றி
ஓம் பகை பொடிப்பவளே போற்றி
ஓம் மஹிஷ வாகினியே போற்றி
ஓம் மகா வாராகியே போற்றி
ஓம் இந்திராணியே போற்றி
ஓம் இன்னல் களைபவளே போற்றி
ஓம் அங்குசதாரியே போற்றி
ஓம் ஆயிரம் கண்ணாளே போற்றி
ஓம் கஜவாகினியே போற்றி
ஓம் கதாயுதபாணியே போற்றி

ஓம் கலக்கம் தீர்ப்பவளே போற்றி
ஓம் கல்பமரத்தடியிலிருப்பவளே போற்றி
ஓம் தயாபரியே போற்றி
ஓம் தருமபுரத் தேவியே போற்றி
ஓம் யமபயநாசினியே போற்றி
ஓம் யானைக்கொடியுடையவளே போற்றி
ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
ஓம் சண்டனையழித்தவளே போற்றி
ஓம் ஆந்தை வாகினியே போற்றி
ஓம் அஷ்டயோகினி சூழ்ந்தவளே போற்றி

ஓம் அதிகந்தரியே போற்றி
ஓம் ஆடியருள்பவளே போற்றி
ஓம் ஊர்த்துவகேசியே போற்றி
ஓம் உத்திரமாயூரதேவியே போற்றி
ஓம் கர்ஜிப்பவளே போற்றி
ஓம் கனல் ஏந்தியவளே போற்றி
ஓம் பத்மாக்ஷியே போற்றி
ஓம் பிரளயரூபியே போற்றி
ஓம் வாருணிசாமுண்டியே போற்றி
ஓம் வடவிருக்ஷத்தடியிலிருப்பவளே போற்றி

ஓம் ரக்தசாமுண்டியே போற்றி
ஓம் ராக்ஷஸநிக்ரஹியே போற்றி
ஓம் எழுபெருந்தேவியரே போற்றி
ஓம் எளியோரைக் காப்போரே போற்றி
ஓம் சிவாலயத் தேவியரே போற்றி
ஓம் சீக்கிரமே கனிபவரே போற்றி
ஓம் வடதிசை நோக்குபவரே போற்றி
ஓம் வரம்யாவும் அருள்பவரே போற்றி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar