SS பரமசிவன் ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பரமசிவன் ஸ்தோத்திரம்
பரமசிவன் ஸ்தோத்திரம்
பரமசிவன் ஸ்தோத்திரம்

1. காயாமரத்தின் கனியாகி
கனியிற் கொட்டையுள்ளாட
தாயா ஈரேழுலகுக்குத் தந்தையுமான
தயாபரனே
ஆயமறை நூல்தனை வகுத்தவனே
யுந்த னடைக்கலங்காண்
பேயாயெங்கள் பெருமானே
பித்தா யெனைநீ ஆளாயோ.

2. அரவம் பணியா யணிவோனே வரனே
அடியார்க் கெளியோனே
மருவின் கொழுந்தின் வாசனைபோல்
மாயா மருளா மகதேவா
குருவைச் சீடன் தனைத் தேடி
குடிகொண்டு உளத்திலிருப்போனே
இரவும் பகலுமுனைப் புகழ்வேன்
ஈசா எனைநீ ஆளாயோ.

3. மட்டார் குழலிதனைக் கூடி
மாயா வயிற்றுக்கு இரைதேடி
பட்டாங்கடித்துப் பரஞ்சோதி
பாதம் காண வேணுமென்ற
கட்டாச் சுரபி கன்றதுபோல்
காசினி எங்குந்திரிந்து அடியேன்
எட்டாக் கொம்பை ஒட்டி நின்றேன்
ஈசா எனைநீ ஆளாயோ.

4. வனக்குன்றெடுத்து வளர்த்த பெண்ணை
வைத்தாய் உந்தன் இடப்பாகம்
சினக்கும் புலித்தோல் தரித்தோனே
சிவனே எங்கள் பெருமானே
நினைக்கும் பொழுது அடியேன்முன்
நிமலா வந்து  நில்லாயோ
எனக்கும் உனக்கும் போகா
ஈசா எனைநீ ஆளாயோ.

5. கொல்லுங் களிறை உரித்தோனே
குடிகொண்டுளத்தி லிருப்போனே
செல்லுந் தளத்தில் இருந்தென்ன
சிவனேயடியேன் படமாட்டேன்
அல்லும் பகலும் உன்னைப் புகழ்வேன்
ஐயா உந்தன் அடைக்கலங்காண்
இல்லும் பிறப்புமினி வேண்டேன்
ஈசா எனைநீ ஆளாயோ.

6. வருவதும் போவதும் இனிவேண்டேன்
வாழ்வும் வேண்டேன் புவிவேண்டேன்
தருவதெனக்கு உன்பாதஞ்
சர்வ ஜீவதயாபரனே
குருவுபதேசம் நீ தந்து
குடிகொண்டுளத்தி லிருந்தடியே
அருவினை அறுத்தே எனையாண்டவனே
எளியேன் முன் நீவாரோயோ.

7. நில்லாவாழ்வைச் சதமென்று
நெறியான் அடக்க மாட்டால்
நல்லார் பொல்லார் என்றறியாமல்
நமன்போல் நடுங்கித் திரிந்தாலும்
அல்லாக் குழலா ளுமைபாகா
வரனே யடியார்க் கெளியோனே
எல்லாம் பொறுக்கப் பாரமுனக்கே
ஈசா எனைநீ ஆளாயோ.

8. பொங்கு கடல் சூழுலகமெங்கும்
புவியிலேழு புவனமெல்லாம்
எங்கும் உந்தன் ஒளியன்றோ
இறைவா எங்கள் பெருமானே
அங்கம் தளர்ந்து மிக மெலிந்து
வடியேன் வயிற்றுக்கு இரைதேடி
எங்குந்திரிந்து உழலாமல்
ஈசா எனைநீ ஆளாயோ.

9. பொய்யும் மெய்யும் தானுரைத்துப்
புவிமேல் வாழ்வைச் சதமென்று
கையுஞ் சலித்துக் கால்சலித்து
கர்த்தா வுன்றன் செயலன்றோ
செய்யும் தொழிலையும் மெய்யென்று
சிவனே அடியேன் பாடுவானேன்
மெய்யுஞ் சிலையான் தனையெரித்த
ஈசா எனைநீ ஆளாயோ.

10. நெருப்போவுந்தன் திருமேனி
நீறோ பூசித் திரிவதல்லால்
பொருப் போவுந்த னிருப்பிடந்தான்
புவியீரேழு புவனமன்றோ
தருப்போல் கிளைத்துத் தழைத்து நின்றாய்
சகல சீவசெந்துக்குள்ளே
இருப்பா யெந்தனுளந் தனிலே
ஈசா எனைநீ ஆளாயோ.

11. மங்குமனித ரெலும்பை யெல்லா
மார்மேல் நிரையப் பூண்டுகொண்டு
அங்கம் வளர்க்கப்படும் பாடு
யார் தானறியப் போகிறார்கள்
சங்குகரத்தில் மழுமானுந்
தரித்து சூலம் பிடித்தெதிரே
எங்கும் திரிந்து உழலாமல்
ஈசா எனைநீ ஆளாயோ.

12. கல்லாதவனாய் இருந்தாலும்
கனத்த பாவஞ் செய்தாலும்
பொல்லாதவனா இருந்தாலும்
புலையுங் கொலையுஞ் செய்தாலுஞ்
செல்லா வாசல் தனைச் சென்று
சிவனே உன்னை மறந்தாலும்
எல்லாம் பொறுக்கக் கடனுனக்கே
ஈசா எனைநீ ஆளாயோ.

13. பாடுவேன் பாடுபடச் சொன்னால்
பாரஞ் சுமக்கப் பாரமுனக்கே
விடுவேன் ஆசை விடச்சொன்னால்
விதியின் பயன் தன் பயனன்றோ
சுடுவேன் பாவந் தனையின்று
சுடரே உந்தன் ஒளியாலே
இடுவேன் வழக்கு நானுன்னை
ஈசா எனைநீ ஆளாயோ.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar