SS அம்மன் 1008 போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அம்மன் 1008 போற்றி
அம்மன் 1008 போற்றி
அம்மன் 1008 போற்றி

 திருவிளையாடற் புராணம்

ஓம் அங்கயற்கண் எம்பிராட்டி போற்றி போற்றி
ஓம் அரும்பும் இளநகை போற்றி போற்றி
ஓம் அண்டங்கள் ஈன்றாய் போற்றி போற்றி
ஓம் அலங்கல் ஓதி போற்றி போற்றி
ஓம் ஆரமென அணங்கே போற்றி போற்றி
ஓம் ஆருயிர்க் கிழத்தி போற்றி போற்றி
ஓம் ஆதிக்கு இறைவி போற்றி போற்றி
ஓம் ஆவி நாயகி போற்றி போற்றி
ஓம் ஆனந்த வெள்ளம் போற்றி போற்றி
ஓம் அறந்தழுவு நெறியே போற்றி போற்றி
ஓம் மீன நோக்கினாய் போற்றி போற்றி
ஓம் வானார் மலையான் போற்றி போற்றி
ஓம் வீரக் கன்னி போற்றி போற்றி
ஓம் பெண்களுக்கு அரசி போற்றி போற்றி
ஓம் பழுதறு கற்பினோய் போற்றி போற்றி
ஓம் வெண்ணகை உமையாள் போற்றி போற்றி
ஓம் ஈறிலா ஒருத்தி போற்றி போற்றி
ஓம் இமய மயிலே போற்றி போற்றி
ஓம் சேற்கண் உமையாள் போற்றி போற்றி
ஓம் <உலகம் ஈன்றாய் போற்றி போற்றி
ஓம் உம்பருள் உயர்ந்தாய் போற்றி போற்றி
ஓம் மலர்மென் கூந்தல் போற்றி போற்றி
ஓம் மங்கை நாயகி போற்றி போற்றி
ஓம் திலக நாயகி போற்றி போற்றி
ஓம் தடாதகைப் பூவை போற்றி போற்றி
ஓம் அலர்பசும் பொன்னே போற்றி போற்றி
ஓம் அரதன அமுதே போற்றி போற்றி
ஓம் பல்லுயிர் ஈன்றாய் போற்றி போற்றி
ஓம் பாங்குறை மங்கை போற்றி போற்றி
ஓம் எல்லாம் உடையாள் போற்றி போற்றி
ஓம் எங்கள் பெருமாட்டி போற்றி போற்றி
ஓம் வீடளிக்கும் அம்மை போற்றி போற்றி
ஓம் இகமபோகம் ஈவாய் போற்றி போற்றி
ஓம் மடவரல் மாதேவி போற்றி போற்றி
ஓம் மின்னங் கயற்கொடி போற்றி போற்றி
ஓம் மகரம் பிடித்த வளையாள் போற்றி
ஓம் மீனெடுங் கண்ணி போற்றி போற்றி
ஓம் கரணமெலாம் கடந்தாய் போற்றி போற்றி
ஓம் கள்ளமில் ஒருத்தி போற்றி போற்றி
ஓம் பரஞான வடிவே போற்றி போற்றி
ஓம் பரமனிடம் பிரியாள் போற்றி போற்றி
ஓம் வினைக்கயிறு ஊசலாட்டும் வித்தகி போற்றி
ஓம் வேத மயிலே போற்றி போற்றி
ஓம் கலைமுழு துணர்ந்தோய் போற்றி போற்றி
ஓம் கன்னிஎம் பிராட்டி போற்றி போற்றி
ஓம் தென்னவன் கன்னி போற்றி போற்றி
ஓம் தவ வலியுடையோய் போற்றி போற்றி
ஓம் கன்னியங் கயற்கண்ணி போற்றி போற்றி
ஓம் கனகவெற்பன் மகளே போற்றி போற்றி
ஓம் தீண்டுதற் கரியாய் போற்றி போற்றி
ஓம் திருந்துநான் மறையாள் போற்றி போற்றி
ஓம் திருக்காளத்தியாளே போற்றி போற்றி
ஓம் தென்னவன் செல்வம் போற்றி போற்றி
ஓம் அருள்தரும் அம்மை போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் மடந்தை போற்றி போற்றி
ஓம் ஒளியால் உலகீன்றாய் போற்றி போற்றி
ஓம் <உயிரனைத்தும் காப்பாய் போற்றி போற்றி
ஓம் அளியால் வளர்ப்பாய் போற்றி போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி போற்றி
ஓம் வேத முடிவே போற்றி போற்றி
ஓம் விளையாடும் பிராட்டி போற்றி போற்றி
ஓம் போதையாய் உலகின்றாய் போற்றி போற்றி
ஓம் பரஞானப் பூங்கோதை போற்றி போற்றி
ஓம் மாதா அரசே போற்றி போற்றி
ஓம் மதுரைப் பிராட்டி போற்றி போற்றி
ஓம் ஞான மூர்த்தி பெட்பே போற்றி
ஓம் ஞானப் பெருமகள் போற்றி போற்றி
ஓம் மீனவன் மகவாம் பிராட்டி போற்றி
ஓம் காமரு வல்லி போற்றி போற்றி
ஓம் கருங்கயற் கணங்கு போற்றி போற்றி
ஓம் சோம சேகரன் பங்கினோள் போற்றி
ஓம் சுந்தர வல்லி போற்றி போற்றி
ஓம் செழியன் செல்வி போற்றி போற்றி
ஓம் தென்றல் நாடன் திருமகள் போற்றி
ஓம் கமலமுகப் பிராட்டி போற்றி போற்றி
ஓம் குமரற்கு ஊட்டும் உமையே போற்றி
ஓம் கடலமுதப் பிராட்டி போற்றி போற்றி

குமரகுருபரர்

ஓம் மதுர மொழுகிய தமிழே போற்றி
ஓம் பாண்டிப் பிராட்டி போற்றி போற்றி
ஓம் தென்னற் கொருசெல்வி போற்றி போற்றி
ஓம் மன்னற் கொருசெல்வி போற்றி போற்றி
ஓம் இன்னமுது சமைத்த அன்னாய் போற்றி
ஓம் தென்னன் தமிழுடன் பிறந்தாய் போற்றி
ஓம் கருணையின் முழுகிய கரும்பே போற்றி
ஓம் கலைமதியெனவளர் கன்றே போற்றி
ஓம் தமிழ் மதுரைக்கரசி போற்றி போற்றி
ஓம் தமனிய மலைபடர் கொடியே போற்றி
ஓம் சங்கம் வளர்ந்திட நின்றாய் போற்றி
ஓம் தமிழொடு பிறந்த கொடியே போற்றி
ஓம் சிலையில் நெடுங்கணை தொட்டாய் போற்றி
ஓம் குன்றளவில் ஆளியை வென்றாய் போற்றி
ஓம் குதிகொளுங் கனிச்சுவைப் பெருக்கே போற்றி
ஓம் மழலையின் அமுதுகு கிள்ளாய் போற்றி
ஓம் செழுமறை தெளிய வடித்தாய் போற்றி
ஓம் காலங் கடந்த கடவுள் போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகம் போற்றி
ஓம் எழுதாச் சொல்லின் மழலாய் போற்றி
ஓம் இகபரம் முழுதும் தருவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணைக்கோர் துணையே போற்றி
ஓம் துவாத சாந்தம் கடந்தாய் போற்றி
ஓம் மூலத் தலத்து முதலே போற்றி
ஓம் முக்கட் சுடர்க்கு விருந்தே போற்றி
ஓம் பரமா னந்தப் பெருக்கே போற்றி
ஓம் சிறியேம் பெற்ற பேறே போற்றி
ஓம் தெய்வக் கூடல் தழைத்தாய் போற்றி
ஓம் செங்கோற் செழியர் மகளே போற்றி
ஓம் முதுதமிழ் உத்தியின் திருமகள் போற்றி
ஓம் முழுதுல குடையதோர் குலமணி போற்றி
ஓம் செஞ்சோற் கூடல் கொண்டாய் போற்றி
ஓம் நெஞ்சக் கஞ்சமும் கொண்டாய் போற்றி
ஓம் காவலன் மகளே போற்றி போற்றி
ஓம் கயற்கண் ணாயகி போற்றி போற்றி
ஓம் கவுரியன் மகளே போற்றி போற்றி
ஓம் கண்ணா ரமுதே போற்றி போற்றி
ஓம் தொடுக்கும் பாடற் பயனே போற்றி
ஓம் துறைத்தீந் தமிழின் சுவையே போற்றி
ஓம் அகந்தைக் கிழங்கை யகழ்வாய் போற்றி
ஓம் உளக்கோயிற் கேற்றும் விளக்கே போற்றி
ஓம் இமயப் பொருப்பின் பிடியே போற்றி
ஓம் குமரித் துறைமகள் போற்றி போற்றி
ஓம் பிறவிப் பெரும்பிணி மருந்தே போற்றி
ஓம் பிறைமௌலிப் பெம்மான் விருந்தே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி போற்றி
ஓம் பரமா னந்தத்தின் விளைவே போற்றி
ஓம் அருளே பழுத்த கொம்பே போற்றி
ஓம் அரசர்கோ மகளே போற்றி போற்றி
ஓம் அன்பர் என்புருகக் கசிவாய் போற்றி
ஓம் ஆணிப்பொன் வல்லி போற்றி போற்றி
ஓம் ஆகங் கலந்தாய் போற்றி போற்றி
ஓம் பாகம் பகிர்ந்த பெண்ணே போற்றி
ஓம் திரைக்கதை வைகைத் துறை போற்றி
ஓம் கருணைப் பெருக்கே போற்றி போற்றி
ஓம் அத்தன் மனத்தொளிர் ஓவியம் போற்றி
ஓம் அபிடேக வல்லி போற்றி போற்றி
ஓம் திருத்தொண்டர்க் கருள்கனியுங் கனியே போற்றி
ஓம் மதுரைத் துரைமகன் போற்றி போற்றி
ஓம் கயற்கொடி கொடுத்த கொடியே போற்றி
ஓம் பொற்கொடி யிமய மடக்கொடி போற்றி
ஓம் சொக்கர் திருவழக்கு ஒத்தாய் போற்றி
ஓம் சொற்பொலி பழம்பாடல் சொன்னாய் போற்றி
ஓம் திருமகள் போற்றி கலைமகள் போற்றி
ஓம் பொருநைத் துறைவி போற்றி போற்றி
ஓம் அண்டர்தம் நாயகி போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண்ணாயகி போற்றி போற்றி
ஓம் எவ்விடத்தும் தானாகி நின்றாய் போற்றி
ஓம் வெவ்விடத்தை யமுதாக்கும் விரைக்கொடி போற்றி
ஓம் கடம்பவனத் தாயே போற்றி போற்றி
ஓம் கர்ப்பூர வல்லி போற்றி போற்றி
ஓம் திருவால வாயின் மருந்தே போற்றி
ஓம் தென்னர்கோன் பெற்ற அமுதே போற்றி
ஓம் மணியே போற்றி மருந்தே போற்றி
ஓம் கனியே கருணைக் கடலே போற்றி
ஓம் வையம் ஒருங்கீன்ற மானே போற்றி
ஓம் வடமேரு வில்லியின் வல்லி போற்றி
ஓம் கண்ணுதல் உள்ளத்து ஒண்ணுதல் போற்றி
ஓம் பாடும் பணியிற் பணித்தாய் போற்றி
ஓம் தெளிக்கும் பனுவற் கனியே போற்றி
ஓம் களிக்கும் கலாப மயிலே போற்றி
ஓம் வாக்குப் பெருகப் பணித்தாய் போற்றி
ஓம் காக்குங் கருணைக் கடலே போற்றி
ஓம் செழுந்தமிழ்ச் செல்வம் திளைத்தாய் போற்றி
ஓம் சிந்தை குளிரச் சிறந்தாய் போற்றி
ஓம் பண்ணும் பரதமும் ஆனாய் போற்றி
ஓம் எண்ணும் பொழுதில் இரங்குவாய் போற்றி
ஓம் விண்ணும் புவியும் கலந்தாய் போற்றி
ஓம் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் போற்றி
ஓம் கல்விச் செல்வப் பேறே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வம் போற்றி போற்றி

சிவப்பிரகாச சுவாமிகள்

ஓம் இமய வல்லி போற்றி போற்றி
ஓம் யாவும் ஆவாய் போற்றி போற்றி
ஓம் உமையம்மை மாதேவி போற்றி போற்றி
ஓம் உண்ணா முலையாய் போற்றி போற்றி
ஓம் அணியிழை மங்கை போற்றி போற்றி
ஓம் அரையன் பாவை போற்றி போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி போற்றி
ஓம் பூவைத் தேவி போற்றி போற்றி
ஓம் பனிமலை மகளே போற்றி போற்றி
ஓம் பெரிய அம்மை போற்றி போற்றி
ஓம் பெரிய நாயகி போற்றி போற்றி
ஓம் மாணிக்க வல்லி போற்றி போற்றி
ஓம் மகரத வல்லி போற்றி போற்றி
ஓம் அபிராம வல்லி போற்றி போற்றி
ஓம் அபிடேக வல்லி போற்றி போற்றி
ஓம் அங்கையற் கண்ணமுது போற்றி போற்றி
ஓம் மங்கையர் கரசி போற்றி போற்றி
ஓம் தமிழொடு பிறந்தாள் போற்றி போற்றி
ஓம் பழமதுரை வளர்ந்தாள் போற்றி போற்றி
ஓம் தமிழ்க்கடல் தழைவித்த அமுதே போற்றி
ஓம் பண்ணார் இன்னிசைத் தமிழே போற்றி
ஓம் தமிழின் ஒழுகும் நறுஞ்சுவை போற்றி
ஓம் முக்கட் சுடரின் விருந்தே போற்றி
ஓம் மும்முதல் வித்தே போற்றி போற்றி
ஓம் பரமானந் தத்தின் விளைவே போற்றி
ஓம் பழமறைக் குருத்தே போற்றி போற்றி
ஓம் அருள் பழுத்த கொம்பே போற்றி
ஓம் பிறவிப் பெரும்பிணி மருந்தே போற்றி
ஓம் மலயத் துவசன் வாழ்வே போற்றி
ஓம் கல்யாண சவுந்தரி போற்றி போற்றி
ஓம் பொருநைத் துறைவன் பாவாய் போற்றி
ஓம் புழுகுநெய்ச் சொக்கர் பொன்னே போற்றி
ஓம் போர்க்கோலம் திருக்கோலம் புனைவாய் போற்றி
ஓம் போகமாய் விளைந்தோய் போற்றி போற்றி
ஓம் புவனமாய்ப் பொலிந்தோய் போற்றி போற்றி
ஓம் ஏகமாய் இருந்தோய் போற்றி போற்றி
ஓம் எண்ணிருந்து நின்றாய் போற்றி போற்றி
ஓம் மும்மைத் தமிழை வளர்த்தாய் போற்றி
ஓம் முப்பத் திண்டறம் வளர்த்தாய் போற்றி
ஓம் ஆனேறு ஏறும் அரசி போற்றி
ஓம் கம்பைமா நதியின் கற்பகம் போற்றி
ஓம் பின்தாழ் நறுங்கூந்தல் பிடியே போற்றி
ஓம் பண்ணே போற்றி பயனே போற்றி
ஓம் பகையே போற்றி உறவே போற்றி
ஓம் பண்ணும் பரதமும் ஆனாய் போற்றி
ஓம் கண்ணும் கருத்துமாய் நின்றாய் போற்றி
ஓம் கல்விப் பெருஞ்செல்வப் பேறே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வக் கனியே போற்றி
ஓம் மன்னிய கருணா நிதியே போற்றி
ஓம் மறைமுடி வளரும் பைங்கிளி போற்றி
ஓம் எளியேம் சொன்மாலை ஏற்போய் போற்றி
ஓம் ஆறாத துயரம் அழிப்பாய் போற்றி
ஓம் பேறாகி வாழும் பெண்ணே போற்றி
ஓம் பெண்டகை மாமணி போற்றி போற்றி
ஓம் பெரிய நாயகி போற்றி போற்றி

சிவஞான முனிவர்

ஓம் உரைவிளங்கமுத வல்லி போற்றி
ஓம் திசை குளந்தை அமுதே போற்றி
ஓம் அன்பர் <உளக்கமலம் அமர்ந்தோய் போற்றி
ஓம் காமரு கண்டர்தம் அன்பே போற்றி
ஓம் அன்பரக வாழ்வே அமுதே போற்றி
ஓம் செம்மலை மீது படரும் பைங்கொடி போற்றி
ஓம் தெளிமறை நெறியினர் உளத்தாய் போற்றி
ஓம் திருமலி மலைமகள் நின்னடி போற்றி
ஓம் அறம்பெறல் நங்காய் அறிவே போற்றி
ஓம் நெற்றிவிழி அற்புதனை ஆட்டுவாய் போற்றி
ஓம் நெஞ்சம் கரைக்கும் அம்பிகை போற்றி
ஓம் குன்றம் பயந்த நறுங்கனி போற்றி
ஓம் அளக்க லாகா அமுதே போற்றி
ஓம் இளஞ்சாயல் மாதே இன்பமே போற்றி
ஓம் அல்லி மலர்குழல் வல்லி போற்றி
ஓம் கொள்ளாத் தெவிட்டாச் சுவையே போற்றி
ஓம் தேவர் தொழுதெழு தேனே போற்றி
ஓம் தேவர் குரவனின் திருவே போற்றி
ஓம் பனிமா லிமயம் பயில்வாய் போற்றி
ஓம் பணிலம் <<உயர்த்த பாவாய் போற்றி
ஓம் தொழுவார் உளம்நின்ற கொழுந்தே போற்றி
ஓம் இருள்கூர் நறுங்குழல் எந்தாய் போற்றி
ஓம் அருள்பெறும் அடியவர் அகத்தாய் போற்றி
ஓம் ஞான மனங்கமழ் நறுங்கோதை போற்றி
ஓம் கருணைப் பரையே கனியே போற்றி
ஓம் இருமையும் உதவிடு மடமயில் போற்றி
ஓம் தொழுவோர் மனத்துநறும் பாகே போற்றி
ஓம் தண்டமிழ்ச் சுவைக்கண்ட தாயே போற்றி
ஓம் அண்டர் அஞ்சலிக்கும் அன்னை போற்றி
ஓம் இதமுறு பரசுக வடிவே போற்றி
ஓம் இமகிரி தரவரும் உமையே போற்றி
ஓம் பரமானந்தப் பெருவாழ்வே போற்றி
ஓம் பரமானந்தம் உறைவாய் போற்றி
ஓம் பெட்பு மனத்தின் சுவையே போற்றி
ஓம் புத்தமிழ்து அருந்தும் தாயே போற்றி
ஓம் கொழிக்கும் கருணைப் பெருக்கே போற்றி
ஓம் கமலா கரபுரத் தலைவி போற்றி
ஓம் மடிகொண் டயராது புரப்போய் போற்றி
ஓம் அடியார் சிந்தை காண்டோய் போற்றி
ஓம் சுடர்பொற் கொடியே சுந்தரி போற்றி

தாயுமானவர்

ஓம் அறிவினுக்கு அறிவே ஆனந்தம் போற்றி
ஓம் தெரிவரிய பூரணமாய் நின்றாய் போற்றி
ஓம் சுத்த துரியமாய் நின்றாய் போற்றி
ஓம் பெருவளி ஐம்பூதம் ஆனோய் போற்றி
ஓம் அருமறைச் சிரப்பொருள் ஆனோய் போற்றி
ஓம் ஒன்றாகிப் பலவாகி நின்றாய் போற்றி
ஓம் நன்றாகித் தீதாகி நின்றாய் போற்றி
ஓம் கருதரிய மலர்மணம் ஆனோய் போற்றி
ஓம் கருதரிய கருத்துள் நின்றாய் போற்றி
ஓம் அருள்பழுத்த பழச்சுவை அமிர்தே போற்றி
ஓம் பொருளெல்லாம் தந்திடும் பொன்னே போற்றி
ஓம் அண்டம் அனைத்தும் ஆனோய் போற்றி
ஓம் ஆதியந்தம் காட்டா முதலே போற்றி
ஓம் நீதிபெறும் குருவாகி நின்றாய் போற்றி
ஓம் அகரவுயிர் முதலா ஆனோய் போற்றி
ஓம் பகர்வன வெல்லாம் ஆனோய் போற்றி
ஓம் அடிமைக்கண் வளர்தெடுத்த அன்னை போற்றி
ஓம் ஆனந்த மயமாகி நின்றாய் போற்றி
ஓம் அமிர்தே கரும்பே தேனே போற்றி
ஓம் அழியாத நிலையாகி நின்றாய் போற்றி
ஓம் உயிர்த்திரளை ஆட்டும் உமையே போற்றி
ஓம் நாசமுடன் உற்பத்தி நண்ணாய் போற்றி
ஓம் காலமும் தேசமும் வகுத்தாய் போற்றி
ஓம் பரமாகிச் சொல்லரிய பரையே போற்றி
ஓம் இன்றாகி நாளையாய் நின்றாய் போற்றி


(திருவெண்ணீற்றுமை பிள்ளைதமிழ்)
மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை

ஓம் ஐயன் வழியே அமைந்தோய் போற்றி
ஓம் சைவச் செழுங்கோடி ஆனோய் போற்றி
ஓம் சுகந்தருபரையே சுந்தரி போற்றி
ஓம் அவத்துறை மாற்றும் தவந்தாய் போற்றி
ஓம் உயிர்க்கெல்லாம் தாயாய் உள்ளோய் போற்றி
ஓம் உத்தமக் கௌமாரி உள்தாள் போற்றி
ஓம் அளகைப் பெருந்திரு அம்மை போற்றி
ஓம் அளவிழா உயிர்கட் கருள்வாய் போற்றி
ஓம் மாதவர் மனத்திடைத் தளிரடி போற்றி
ஓம் மாண்புடை அற்புத மயிலே போற்றி
ஓம் அடியார் மனநிறை விளக்கொளி போற்றி
ஓம் ஞானச் செல்வி நல்லாய் போற்றி
ஓம் வளமான கலைஞான வல்லி போற்றி
ஓம் அளவில் புண்ணியம் பூத்தோய் போற்றி
ஓம் அருளே பழுத்த கொடியே போற்றி
ஓம் மென்னம் மெய்ஞான என்தாயே போற்றி
ஓம் நிலவுவானச் சுடரே போற்றி
ஓம் நீங்கா இன்சுவைக் கரும்பே போற்றி
ஓம் காரார் முடிக்கிரி மாதே போற்றி
ஓம் ஏழ்பே தத்தமைத் தாயே போற்றி
ஓம் கோமளப் பொண்ணமுது கோவெ போற்றி
ஓம் தெய்வதக் கொடிய தேவே போற்றி
ஓம் வரையில் முளைத்த மருந்தே போற்றி
ஓம் மனத்தவத் துறையும் உத்தமி போற்றி
ஓம் வெண்ணீற் றுமையாய் விளங்குவாய் போற்றி
ஓம் காரிகை நீயே கல்யாணி போற்றி
ஓம் வடிவை யம்பிகைக் கொடியே போற்றி
ஓம் அடியவர் பாற்பொலி சுடரே போற்றி
ஓம் கோமளக் கிளிமொழிக் குழந்தாய் போற்றி
ஓம் செல்வக் கொடியே செழிப்பே போற்றி
ஓம் அறிவுக் கினிய அம்மை போற்றி
ஓம் ஆரருள் ஒருத்தியாய் அமைந்தோய் போற்றி
ஓம் தேசுமலை பனிமலைப் புதல்வி போற்றி
ஓம் தூண்டா விளக்கே துணிவே போற்றி
ஓம் நல்லூர் எழிலுமை நல்லாய் போற்றி
ஓம் மலைபெற்ற மருந்தே மணியே போற்றி
ஓம் மறையைக் கலைசெய் மாதே போற்றி
ஓம் சிவலோகத் துறையும் சிலையே போற்றி
ஓம் சிவஞானச் சுயஞ்சோதிச் சுடரே போற்றி
ஓம் பெருமணங்கமழ் உமைப் பெண்ணே போற்றி
ஓம் பெரியோர் பெற்ற பேறே போற்றி
ஓம் அலகில் புவனம் ஈன்றாய் போற்றி
ஓம் அடிமை கொண்டருள் உமையே போற்றி

(காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்)
 மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை

ஓம் உலகெலாம் உதவிய ஒருத்தி போற்றி
ஓம் மறைநான்கு அரற்றும் வடிவே போற்றி
ஓம் மகளிர் கும்பிடும் மோனம் போற்றி
ஓம் பவள வல்லிப் பாவை போற்றி
ஓம் பவநோய் மாற்றும் மருந்தே போற்றி
ஓம் மலைவல்லி விமலை மாதே போற்றி
ஓம் அடியார் உளங்குடி கொண்டோய் போற்றி
ஓம் ஊறுஞ் சுவைகொள் அமுதே போற்றி
ஓம் திருந்துநல் லுளம்புகு விளக்கமே போற்றி
ஓம் திருப்பெரு மணத்தமர் அருளே போற்றி
ஓம் ஓங்குந் தமிழில் உறைவாய் போற்றி
ஓம் உலகம் உவக்கும் உமையே போற்றி
ஓம் மாறா அன்பர் உளத்தாய் போற்றி
ஓம் மறையெனு மாவிற் குயிலே போற்றி
ஓம் கருணை ததும்பும் தேனே போற்றி
ஓம் உணர்பவர் உட்பொலி தாயே போற்றி
ஓம் கரியகன் ஞாலம் ஆவாய் போற்றி
ஓம் கருதுநர் பாலொளி யாவாய் போற்றி
ஓம் மறைமுழுவதுமே அணிந்தாய் போற்றி
ஓம் மலையிற் பிறந்த மருந்தே போற்றி
ஓம் மகிமை அளிக்கும் அனமே போற்றி
ஓம் மதிய முடித்தவர் நிதியே போற்றி
ஓம் தொண்டர் உளத்தின் விளக்கே போற்றி
ஓம் எங்கள் குடிக்கு முதலே போற்றி
ஓம் கல்வி மிக்கார் வாழ்க்கை போற்றி
ஓம் கருணை சூற்கொண்ட மயிலே போற்றி
ஓம் பணியே துணிபினர் பற்றே போற்றி
ஓம் மணியே இனிய அமுதே போற்றி
ஓம் அருளே உளங்கொள் அனமே போற்றி
ஓம் அன்பரைத் தடுத்தே ஆண்டாய் போற்றி
ஓம் கலையே மெய்ஞ்ஞானக் கனியே போற்றி
ஓம் கண்ணே ஆனந்தக் கடலே போற்றி
ஓம் மணியே போற்றி வாழ்வே போற்றி
ஓம் மாறாக் கருணை மயிலே போற்றி
ஓம் பெரியோர் பெற்ற பேறே போற்றி
ஓம் பெற்றியோர் உற்ற வாழ்வே போற்றி
ஓம் சிந்தை தேர்ந்தோர் இன்பமே போற்றி
ஓம் தெள்ளாமிர் தினியே கனியே போற்றி
ஓம் குடிமுழுவதும் அடிமை கொண்டாய் போற்றி
ஓம் கோலவெண்ணீற்றின் உமையே போற்றி
ஓம் சூழும் பிறவி ஒழிப்பாய் போற்றி
ஓம் தோலா வளமையூராய் போற்றி
ஓம் இமயம் உயிர்ந்த மருந்தே போற்றி
ஓம் இன்பச் சுவையின் அமுதே போற்றி
ஓம் வேண்டும் அடியார் விருப்பே போற்றி
ஓம் விருப்பறாகு உள்ளம் அமர்வாய் போற்றி
ஓம் தோன்றாத் துணைக்கோர் துணையே போற்றி
ஓம் தூண்டா விளக்கே போற்றி போற்றி
ஓம் அணுகற்கரிய பேர் ஒளியே போற்றி
ஓம் அறிவிலார்க் கினிய தேனே போற்றி
ஓம் எல்லா உலகும் ஈன்றாய் போற்றி
ஓம் இமயவர் போற்றும் பிடியே போற்றி
ஓம் மயலற்றவர் மெய்ப் பொருளே போற்றி
ஓம் கயிலத் தரசன் மகளே போற்றி
ஓம் பொருநைத்துறையன் குலத்தாய் போற்றி
ஓம் புணரித் துறைவரும் அமிழ்தே போற்றி
ஓம் கல்நேர் உள்ளம் கரைப்பாய் போற்றி
ஓம் பொன்னே மணியே போற்றி போற்றி
ஓம் தன்னேரிலிக்குத் துணையே போற்றி
ஓம் எண்ணான்கு அறமும் பூத்தாய் போற்றி
ஓம் தலைவி போற்றி தாயே போற்றி
ஓம் தரணி முற்றும் புரப்பாய் போற்றி
ஓம் சொல்லற் கரிய மறையே போற்றி
ஓம் சுகுமார் இன்பக் கடலே போற்றி
ஓம் உள்ளத் தொளிரும் விளக்கே போற்றி
ஓம் உலகம் அனைத்தின் உயிர்ப்பே போற்றி
ஓம் பொன்னே உலகம் பூத்தாய் போற்றி
ஓம் புரந்தாய் வழுதியர் மகளே போற்றி
ஓம் மின்னே ஞான விளக்கே போற்றி
ஓம் அன்னாய் நெகிழ்வார்க்கு அணியே போற்றி
ஓம் அரசீ மறையின் விரிவே போற்றி
ஓம் இன்ப விளைவே போற்றி போற்றி
ஓம் தமிழில் ஆரணம் தந்தாய் போற்றி
ஓம் இமயம் பிறந்த குயிலே போற்றி
ஓம் எமது பவப்பிணி யிரித்தாய் போற்றி
ஓம் இதய முளைத்த கரும்பே போற்றி
ஓம் அறிஞர்கள் அறியும் நாயகி போற்றி
ஓம் அருள்விளை யூருரை அன்னாய் போற்றி
ஓம் எங்கள் குடிக்கோர் வாழ்முதல் போற்றி
ஓம் இன்சொல் உறையூர் நங்காய் போற்றி
ஓம் சைவக் குமரி போற்றி போற்றி
ஓம் சதுர்மறை யானாய் போற்றி போற்றி
ஓம் மங்கல வல்லி போற்றி போற்றி
ஓம் மலங்கள் அறுப்பாய் போற்றி போற்றி
ஓம் புண்ணிய வெண்ணீறு பூண்பாய் போற்றி
ஓம் கண்ணுள் நிறையுங்கனிவே போற்றி
ஓம் நினைப்பவர் வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் நிலையாய் என்றும் நிற்பாய் போற்றி
ஓம் கருணை மருந்தே போற்றி போற்றி
ஓம் கலையின் வடிவே போற்றி போற்றி
ஓம் குடந்தை வாழ்வே போற்றி போற்றி
ஓம் மடந்தை நல்லாய் போற்றி போற்றி
ஓம் சிந்தனை யொன்றக் கவர்வாய் போற்றி
ஓம் வந்தருள் செய்யும் வரமே போற்றி
ஓம் யோகியர் சிந்தை யொளியே போற்றி
ஓம் பாவியர் தீமை பறப்பாய் போற்றி
ஓம் ஆக்குந் தொழிலும் அறிவாய் போற்றி
ஓம் போக்குநந் தொழிலும் அறிவாய் போற்றி
ஓம் தண்டமிழ் வாழ்வே போற்றி போற்றி
ஓம் தகையோர் புகழே போற்றி போற்றி
ஓம் வழிவழியடிமை போற்றி போற்றி
ஓம் கொழியருள் வடிவக் கொம்பே போற்றி
ஓம் சால நினைப்பவர் உளத்தாய் போற்றி
ஓம் வாழ்வே யளிக்கும் தாயே போற்றி
ஓம் மறைக்கும் எட்டா மறையே போற்றி
ஓம் மனத்தா மரையில் இருப்பாய் போற்றி
ஓம் ஞாலம் பொலிதரு முகிலே போற்றி
ஓம் சீலம் பொலிவார் செயலே போற்றி
ஓம் ஆலம் பொலிந்தவன் அணங்கே போற்றி
ஓம் கோலம் பொலிந்த கொம்பே போற்றி
ஓம் கரையிலானந்தக் கடலே போற்றி
ஓம் கருதிக் குழைவார்க் குரியாய் போற்றி
ஓம் வரையின் மருப்புக் கன்றே போற்றி
ஓம் இருட்டற உளத்தெழு கதிரே போற்றி
ஓம் தரைமுதல் பூத்த கொடியே போற்றி
ஓம் தானே யாகிய துணையே போற்றி
ஓம் மடமறும் உளத்து விளக்கே போற்றி
ஓம் மறையும் உணரா முதலே போற்றி
ஓம் புன்புலை யோர்க்கருள் புரிவாய் போற்றி
ஓம் புத்தமுதப் பாகே போற்றி போற்றி
ஓம் ஆடும் பிரானொடு அமர்ந்தாய் போற்றி
ஓம் பாடும் படியெனைப் பணித்தாய் போற்றி
ஓம் கொள்கையர் உள்ளக் கோயிலாய் போற்றி
ஓம் உளக்குவார் நெஞ்சம் உறைவாய் போற்றி
ஓம் கருணை பொழியுங் கண்ணாய் போற்றி
ஓம் கருத்துள் என்றும் நின்றாய் போற்றி
ஓம் தனக்குத் தானே சரியாய் போற்றி
ஓம் தாய்போல் எல்லாந் தருவாய் போற்றி
ஓம் திருவே வேதச் செல்வி போற்றி
ஓம் தேனே எங்குலத் தெய்வம் போற்றி
ஓம் அலகில் உலகம் அளித்தாய் போற்றி
ஓம் உலகம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் எண்ணுவார் உள்ளம் இருப்பாய் போற்றி
ஓம் எப்போதும் நாவில் இனிப்பாய் போற்றி
ஓம் அன்பர் அகத்து வாழ்வே போற்றி
ஓம் என்பையும் உருக்கும் இறைவி போற்றி
ஓம் எண்ணிய எண்ணிய தருவாய் போற்றி
ஓம் எண்ணிய வண்ணம் வருவாய் போற்றி
ஓம் கண்ணிய மறையில் கலந்தாய் போற்றி
ஓம் காட்சி விருப்பம் தந்தாய் போற்றி
ஓம் புண்ணிய வண்ணம் பூண்டாய் போற்றி
ஓம் புகழில் மலர்ந்த பொன்னே போற்றி
ஓம் காவலர் புகழும் நாயகி போற்றி
ஓம் பாவலர் பரவும் பண்ணே போற்றி
ஓம் வரமே வாய்க்கும் வடிவமே போற்றி
ஓம் அருள்மா முதல்வி போற்றி போற்றி
ஓம் சைவக் கொழுந்தே போற்றி போற்றி
ஓம் சார்ந்தவர் துணையே போற்றி போற்றி
ஓம் தவத்துறை திருமகள் போற்றி போற்றி
ஓம் அவத்துறை மாற்றும் அன்னாய் போற்றி
ஓம் தண்ணளி பொழியும் கண்ணே போற்றி
ஓம் தன்னேர் இலாத் தலைவி போற்றி
ஓம் அறியா தவர்க்கும் உரியாய் போற்றி
ஓம் அமரர் தமக்கும் அருள்வாய் போற்றி
ஓம் அடியவர் உளங்குடி புகுவாய் போற்றி
ஓம் படிமிசை யெங்கும் பரந்தாய் போற்றி
ஓம் தேவர் முடிக்கணி யானாய் போற்றி
ஓம் தென்தமிழ் தந்தாய் போற்றி போற்றி
ஓம் பகழும் தவத்துறை மணியே போற்றி
ஓம் இகழுநர் தமக்கும் இரங்குவாய் போற்றி
ஓம் பொருந்துத் துணையாய் போற்றி போற்றி
ஓம் மருந்தே யனையாய் போற்றி போற்றி
ஓம் உண்ணற் கரிய அமிழ்தே போற்றி
ஓம் உவந்தார் <உள்ளத்து விருந்தே போற்றி
ஓம் கருணைப் பெமாமயிலே போற்றி
ஓம் பெருமை அருள் மாமணியே போற்றி
ஓம் தமிழ்ச்சுவை கண்டாய் போற்றி போற்றி
ஓம் தவத்துறை அம்பிகை போற்றி போற்றி
ஓம் மாறா அருளில் மலர்வாய் போற்றி
ஓம் சேரார் தமையும் சோர்வாய் போற்றி
ஓம் வாரார் தம்மிடம் வருவாய் போற்றி
ஓம் சீரார் செல்வி போற்றி போற்றி
ஓம் எவ்வுல கங்களும் ஆண்டோய் போற்றி
ஓம் எவ்வகை உயிர்களும் ஈன்றாய் போற்றி
ஓம் வேத முடிவின் விதியே போற்றி
ஓம் பாதி மதியான பாதியே போற்றி
ஓம் செங்கை முகிழ்த்தெனை யாண்டாய் போற்றி
ஓம் செல்வம் அனைத்தும் தந்தாய் போற்றி
ஓம் பவத்துறை மாற்றும் பாவாய் போற்றி
ஓம் சிவத்திரு வாளர் உளத்தவள் போற்றி
ஓம் தவத்துறை யன்னாய் போற்றி போற்றி
ஓம் திருவார் இன்பாய் அருள்வாய் போற்றி
ஓம் தேவர்சூழ் அளகைத் திருவே போற்றி
ஓம் உயிர்க்குயிராகும் உணர்வே போற்றி
ஓம் ஓயா தென்னுளம் உவந்தாய் போற்றி
ஓம் கருணைப் பெருக்கே போற்றி போற்றி
ஓம் இருளை அகற்றுஞ் சுடரே போற்றி
ஓம் ஞானச் சுடரே போற்றி போற்றி
ஓம் நான்மறை போற்றும் நாயகி போற்றி
ஓம் முத்தமிழ் உடைய உத்தமி போற்றி
ஓம் முடியா வேத முதலே போற்றி
ஓம் சைவ நெறியின் வாழ்வே போற்றி
ஓம் பொய்யாப் புகழே போற்றி போற்றி

(குலசை உலா)
தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்

ஓம் விண்ணோர் போற்றும் விமலை போற்றி
ஓம் பரமன் தவம்வளர் மங்கை போற்றி
ஓம் கருணை யாளும் பெருமையாய் போற்றி

(திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத் தமிழ்)
  சோணாசல பாரதி

ஓம் கருணை பொங்கும் இமாகலை போற்றி
ஓம் திருமா மறையின் முடிவே போற்றி
ஓம் அரனின் மனைவி அமலை போற்றி
ஓம் அன்ன பூரணி அன்பே போற்றி
ஓம் தருமம் எண்ணான்கும் வளர்த்தா போற்றி
ஓம் சிவஞான வல்லி வளர்த்தாய் போற்றி
ஓம் சிவத்தின் ஞானச் செந்தேன் போற்றி
ஓம் அருளை ஆர்ந்த அம்மை போற்றி
ஓம் சுருங்கா ஞானச் சுடரே போற்றி
ஓம் உலகம் பெற்ற உயர்ந்தோய் போற்றி
ஓம் விமலா னந்த வாரிதி போற்றி
ஓம் சிவையே பரையே <உமையே போற்றி
ஓம் சிவகாமி போற்றி சிவச்சுடர் போற்றி
ஓம் பொறைமகள் போற்றி பொன்னே போற்றி
ஓம் கோமளை சாமளை சோனையே போற்றி
ஓம் காமாட்சி போற்றி மீனாட்சி போற்றி
ஓம் ஞானப் பூங்கொடி நங்காய் போற்றி
ஓம் நாத வடிவே நலமே போற்றி
ஓம் அம்பிகை போற்றி அன்பே போற்றி

(குலசைநகர அறம் வளர்த்த நாயகி பிள்ளைத்தமிழ்)
  தெய்வசிகாமணி கவிராயர்

ஓம் வாதி சக்தி கல்யாணி போற்றி
ஓம் அறம்வளர்த் தருளும் தேவி போற்றி
ஓம் பரகதிப் பொருளறம் வளர்த்தாய் போற்றி
ஓம் தெய்வ நாயகித் தேனே போற்றி
ஓம் தேவர்கள் மூவர்கள் ஆனாய் போற்றி
ஓம் உலகு புரந்த உமையே போற்றி
ஓம் பரிசுத்தர் புகழும் பார்வதி போற்றி
ஓம் பிரமண் புகழும் பெண்ணே போற்றி
ஓம் பிரணவப் பொருளே அரணே போற்றி
ஓம் சங்கரன் பங்கில் சார்ந்தாய் போற்றி
ஓம் சங்கரி வால சவுந்தரி போற்றி
ஓம் குமரனைப் பெறுநற் குணத்தாய் போற்றி
ஓம் கொடுமுனைத் திரிசூலக நீலி போற்றி
ஓம் இமைய வெற்பின் புதல்வி போற்றி
ஓம் அமலை நித்திய வரதி போற்றி
ஓம் கவுரி கருணைக் கடலே போற்றி
ஓம் மங்கல கல்யாணி மலைமகள் போற்றி
ஓம் முதியதமிழரசன் அருமகள் போற்றி
ஓம் உத்தம வரதி உயரியோய் போற்றி
ஓம் ஐம்பத் தோரட்சரத் தமைந்தாய் போற்றி
ஓம் சிவன்மனக் கிளியாய்ச் சிறந்தாய் போற்றி
ஓம் தரும வர்த்தினி தணணடி போற்றி
ஓம் நாலரண் தலைவி நல்லாய் போற்றி
ஓம் நூல்முறை கூர்பரி பூரணி போற்றி

(சிதம்பரம் சிவகாமியம்மை பிள்மைத் தமிழ்)

ஓம் குற்றம் அகற்றிய கொடியே போற்றி
ஓம் கற்றவர்க்கு அருளும் கற்பகம் போற்றி
ஓம் தமிழே மணக்கும் குமுதம் போற்றி
ஓம் திரிபுர சுந்தரி திருவே போற்றி
ஓம் கரிபுர கனகச் சிதம்பரி போற்றி
ஓம் பிறவியைப் போக்கும் மருந்தே போற்றி
ஓம் பறவாப் பசுங்கிளிப் பான்மை போற்றி
ஓம் மரகத வண்ணக் கொடியே போற்றி
ஓம் புரமெரித் தவளே புனிதாய் போற்றி
ஓம் சிவலோக அம்பிகை சீர்த்தி போற்றி
ஓம் புவனங் கடந்த புண்ணியன் போற்றி
ஓம் பஞ்சவர் தூதர் தங்காய் போற்றி
ஓம் அஞ்சனக் குயிலே அன்பே போற்றி
ஓம் செந்தமிழ் மாலை புனைவாய் போற்றி
ஓம் பந்தனைப் பனிதீர வந்தாய் போற்றி
ஓம் ஐந்தொழில் அருளும் கையினாய் போற்றி
ஓம் பைந்தருக் கிளையே சங்கரி போற்றி
ஓம் ஆதி போதினி அஞ்சனி போற்றி
ஓம் நீதிநூல் நெறிவிழா திசைந்தோய் போற்றி
ஓம் ஆனந்த வனத்தில் ஆடுவாய் போற்றி
ஓம் சிவசங்கரர்பால் மிகுந்தாய் போற்றி
ஓம் புவனம் நடத்தும் பாவாய் போற்றி
ஓம் பொன்னம் பலப்பைஞ் செல்வி போற்றி
ஓம் தெண்தமிழ்த் தில்லை சிவகாமி போற்றி
ஓம் கற்றார் உளம்வாழ் கோகிலம் போற்றி
ஓம் கொற்றவை சக்தி கணத்தோய் போற்றி
ஓம் ஞான விளக்கே ஞாயிறே போற்றி
ஓம் மதியிடை விளங்கும் ஒளியே போற்றி
ஓம் மதிபதி கஞ்சுனி மலைமகள் போற்றி
ஓம் வஞ்சி நற்கொடி வன்மை போற்றி
ஓம் வஞ்சை யொத்திடு பதத்தாய் போற்றி
ஓம் கபிலாய பரம்பரி கருணை போற்றி
ஓம் மயி<லுருக் கொண்ட முக்கண்ணி போற்றி
ஓம் அரகரி சங்கரன் பைங்கிளி போற்றி
ஓம் பழுத்த விதத்தின் பொருளே போற்றி
ஓம் பாக்கிய வல்லி பார்வதி போற்றி
ஓம் குறிஞ்சிக் கிழவனைப் பெற்றாய் போற்றி
ஓம் பெரிய பராசக்தி பெண்ணரசி போற்றி
ஓம் கலாப கஞ்சுளி கொந்தளி போற்றி
ஓம் சகல உயிர்க்கும் உயிரே போற்றி
ஓம் சகலமும் உயிரும் பூத்தோய் போற்றி
ஓம் வளரும் ஒளிக்குள் ஒளியே போற்றி
ஓம் தழைக்கும் சிவத்தின் செயலே போற்றி
ஓம் போகம் விளைக்கும் பொருளே போற்றி
ஓம் செகம புகழும் திருவே போற்றி
ஓம் வசிகர மங்கலை புரந்தரி போற்றி
ஓம் அம்பல வருடன் அமைந்தாய் போற்றி
ஓம் அடையார் படையை வென்றோய் போற்றி
ஓம் கறையணி கங்கணி கரும்பே போற்றி
ஓம் பல்லுயிர்ப் பந்தடித் தாடுமையே போற்றி
ஓம் சிவலோகச் சிற்றில் செய்தோய் போற்றி
ஓம் திருமகள் உருத்திரை தேவி போற்றி
ஓம் மங்கையர்க்கரசி மைக்குழலாய் போற்றி
ஓம் வினைதீர வந்த விமலை போற்றி
ஓம் ஊழிதொறும் வாழும் சுமங்கலி போற்றி
ஓம் ஓசைசேர் புலிசை வாழ்வோய் போற்றி
ஓம் கூடரும் குடிலும் கூடுவாய் போற்றி
ஓம் தேனொழுகு வாச மஞ்சரி போற்றி
ஓம் சாமரை முசும் வெண்டிகை போற்றி

இராமலிங்க சுவாமிகள்

ஓம் சோதிவலப்பாகக் கொடியே போற்றி
ஓம் ஆனந்த சொரூபக் கொடியே போற்றி
ஓம் உலகுகட்டி ஆளும் கொடியே போற்றி
ஓம் சிவகாமி நிமிலக் கொடியே போற்றி
ஓம் மாற்றுயர் பொன்னாம் கொடியே போற்றி
ஓம் ஞான சிவகாமக் கொடியே போற்றி
ஓம் தனிக்கொடி போற்றி தவக்கொடி போற்றி
ஓம் சன்மார்க்க நீதிக் கொடியே போற்றி
ஓம் இறைவர் வலப்பாகக் கொடியே போற்றி
ஓம் எமையீன்ற ஞானக் கொடியே போற்றி
ஓம் சிவதருமக் கொடியே போற்றி போற்றி
ஓம் பதிக்கொடி நற்கொடி போற்றி போற்றி
ஓம் தெய்வக்கொடி  போற்றி வான்கொடி போற்றி
ஓம் மெய்ஞானக் கொடியே  போற்றி போற்றி
ஓம் பரமஞானக் பதிக்கொடி போற்றி போற்றி
ஓம் வள்ளற் கொடியே போற்றி போற்றி

திருஞான சம்பந்தர்

ஓம் மலையான் மகளே மணியே போற்றி
ஓம் மலையின் அரிவை மாமகள் போற்றி
ஓம் மங்கை நல்ல மாதே போற்றி
ஓம் பண்ணின் இன்மொழிப் பாவை போற்றி
ஓம் மொழியில் அடங்கா மொழியோய் போற்றி
ஓம் உருவார் மெல்லியல் பார்ப்பதி போற்றி
ஓம் பாலின் நேர்மொழி உடையோய் போற்றி
ஓம் மேம்படு தேவி மெல்லடி போற்றி

(4,5,6 - ஆம் திருமுறை)

ஓம் விண்ணினை விரும்ப வைத்தோய் போற்றி
ஓம் வேள்வியை வேட்க வைத்தோய் போற்றி
ஓம் பண்ணினைப் பாட வைத்தோய் போற்றி
ஓம் பக்தர்கள் பயில வைத்தோய் போற்றி
ஓம் ஆரிருள் அண்டம் வைத்தோய் போற்றி
ஓம் அறுவகைச் சமயம் அமைத்தோய் போற்றி
ஓம் உட்டங்கு சிந்தை வைத்தோய் போற்றி
ஓம் உள்குவார்க்கு <உள்ளம் வைத்தோய் போற்றி
ஓம் ஆனெய் ஆட வைத்தோய் போற்றி
ஓம் அன்பெனும் பாசம் வைத்தோய் போற்றி
ஓம் ஊனப்பேர் ஒழிய வைத்தோய் போற்றி
ஓம் கதியே உணர வைத்தோய் போற்றி
ஓம் ஞானப்பேர் நவில வைத்தோய் போற்றி
ஓம் ஞானமும் நடுவும் வைத்தோய் போற்றி
ஓம் கொங்கினுள் கரும்பு வைத்தோய் போற்றி
ஓம் கூற்றங் கெடுக்க வைத்தோய் போற்றி
ஓம் சங்கினுள் முத்தம் வைத்தோய் போற்றி
ஓம் சாம்பலும் பூச வைத்தோய் போற்றி
ஓம் அங்கமும் வேதமும் வைத்தோய் போற்றி
ஓம் ஆரமு துண்ண வைத்தோய் போற்றி
ஓம் பார்மல்கி ஏத்தப்படுவோய் போற்றி
ஓம் பருப்பத்தே பல்<<லூ நின்றோய் போற்றி
ஓம் அல்லல் அடியார்க்கு அறுப்பாய் போற்றி
ஓம் அமரர் நன்னாடும் அருள்வாய் போற்றி
ஓம் நல்லூரும் பல்லூரும் மேயாய் போற்றி
ஓம் நள்ளாறு நாளும் பிரியாய் போற்றி
ஓம் முல்லை நகையான் பாதம் போற்றி
ஓம் முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
ஓம் தில்லை நடமிடும் தேவி போற்றி
ஓம் திருச்சாய்க் காடுமறை தேவி போற்றி
ஓம் கள்ளம் கடிந்தென்னை ஆண்டாய் போற்றி
ஓம் கருத்துடைப் பூதப்படையாய் போற்றி
ஓம் உள்ளத்து உவகை தருவாய் போற்றி
ஓம் உறுநோய் சிறுபிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் இரவும் பகலுமாய் நின்றாய் போற்றி
ஓம் எப்போதும் என்மனம் உள்ளாய் போற்றி
ஓம் சீரால் வணங்கப்படுவாய் போற்றி
ஓம் திசைக்கெலாம் தேவியாய் நின்றாய் போற்றி
ஓம் ஆரா அமுதம் ஆனோய் போற்றி
ஓம் அண்ணல் பெருமை உடையாய் போற்றி
ஓம் பாரார் பரவப்படுவாய் போற்றி
ஓம் பழன நகரெம் பிராட்டி போற்றி
ஓம் ஏழுழிக் கப்புறமாய் நின்றாய் போற்றி
ஓம் ஆய்ந்து மலர்தூவ நின்றாய் போற்றி
ஓம் அளவில் பெருமை உடையாய் போற்றி
ஓம் <உள்ளுறும் அன்பர் மனத்தாய் போற்றி
ஓம் போராதென் சிந்தை இருந்தாய் போற்றி
ஓம் ஊராரு மூவுலகத் துள்ளாய் போற்றி
ஓம் உலகம் நடுங்காமல் காப்பாய் போற்றி
ஓம் ஆண்டுலகேழ் அத்தனையும் வைத்தாய் போற்றி
ஓம் அங்கங்கே அமைத்தே நின்றாய் போற்றி
ஓம் விடையேறி வேண்டுலகத் திருப்பாய் போற்றி
ஓம் தொண்டர்கள் தொழவும் வைத்தாய் போற்றி
ஓம் தூமதிபோல் துலங்கும் நுதலோய் போற்றி
ஓம் இண்டையத் திகழ வைத்தாய் போற்றி
ஓம் எமக்கென்றும் இன்பம் வைத்தாய் போற்றி
ஓம் வானவர் வணங்க வைத்தாய் போற்றி
ஓம் வல்லினை மாய வைத்தாய் போற்றி
ஓம் ஆட்டுவார்க் கருளும் வைத்தாய் போற்றி
ஓம் சித்தத்தை ஒன்ற வைத்தாய் போற்றி
ஓம் சிவமதே நினைய வைத்தாய் போற்றி
ஓம் முத்தியை முற்ற வைத்தாய் போற்றி
ஓம் முறைமுறை நெறிகள் வைத்தாய் போற்றி
ஓம் இரப்பவர்க்கு ஈய வைத்தாய் போற்றி
ஓம் ஈபவர்க்கு அருளும் வைத்தாய் போற்றி
ஓம் ஓசையொலியேலாம் ஆனாய் போற்றி
ஓம் உலகுக்கு ஓரமுதாய் நின்றாய் போற்றி
ஓம் வாசமலர் எல்லாம் ஆனாய் போற்றி
ஓம் மலையான மகளாய நின்றாய் போற்றி
ஓம் பேசப் பெரிதும் இனியாய் போற்றி
ஓம் தேச விளக்கெலாம் ஆனாய் போற்றி
ஓம் திருவையாறு அமர்ந்திடும் செல்வி போற்றி
ஓம் நோக்கரிய திருமேனியுடையாய் போற்றி
ஓம் நோவாமே நோக்கருள் வைத்தாய் போற்றி
ஓம் காப்பரிய ஐம்புலனும் காத்தாய் போற்றி
ஓம் தீப்பரிய வல்வினைநோய் தீர்த்தாய் போற்றி
ஓம் மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் போற்றி
ஓம் வானுற்ற மாமலை ஆனாய் போற்றி
ஓம் வடகயிலை மன்னி யிருந்தாய் போற்றி
ஓம் பெண்ணான் பிறப்பிலியாய் நின்றாய் போற்றி
ஓம் பெரியார்கட் கெல்லாம் பெரியோய் போற்றி
ஓம் உற்றிருந்த உணர்வெல்லாம் ஆனாய் போற்றி
ஓம் உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் போற்றி
ஓம் கற்றிருந்த கலை ஞானம் ஆனனாய் போற்றி
ஓம் கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் போற்றி
ஓம் பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் போற்றி
ஓம் பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் எண்டிசைக்கும் ஒண்டசுடராய் நின்றாய் போற்றி
ஓம் ஏகம்பம் மேய இறைவி போற்றி
ஓம் வண்டிசைக்கும் நறுங்கென்றைத் தாராய் போற்றி
ஓம் வாரா உலகருள் வல்லாய் போற்றி
ஓம் தொண்டிசைத்து அடிபரவ நின்றாய் போற்றி
ஓம் தொண்டாய் அடியேனை ஆண்டாய் போற்றி
ஓம் ஐயிரண்டும் ஆறொன்றும் ஆனாய் போற்றி
ஓம் அறுமுன்றும் நான்முன்றும் ஆனாய் போற்றி
ஓம் செய்வினைகள் நல்வினைகள் ஆனாய் போற்றி
ஓம் திசையனைத்தும் மாய்நிறைந்த செல்வி போற்றி
ஓம் கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
ஓம் கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி
ஓம் அற்றவர்கட் காரமுதம் ஆனோய் போற்றி
ஓம் அல்லலுறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
ஓம் பொன்னியலும் மேனியளே போற்றி போற்றி
ஓம் பூதப்படை யுடையாய் போற்றி போற்றி
ஓம் மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி
ஓம் உன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
ஓம் உலகுக்கு ஒருத்தியே போற்றி போற்றி
ஓம் சங்கரியே நின்பாதம் போற்றி போற்றி
ஓம் சத்தியமே நின்பாதம் போற்றி போற்றி
ஓம் போகமிகு நின்பாதம் போற்றி போற்றி
ஓம் புண்ணியமே நின்பாதம் போற்றி போற்றி
ஓம் செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
ஓம் திருமூலட்டானத்தாய் போற்றி போற்றி
ஓம் நம்புவார்க்கு அரும் பொருளே போற்றி போற்றி
ஓம் நால்வேதம் ஆறங்கம் ஆனோய் போற்றி
ஓம் செம்பொருளே திகழ்மணியே போற்றி போற்றி
ஓம் உள்ளமா யுள்ளத்தே நின்றாய் போற்றி
ஓம் உகப்பார் மனத்தென்றும் ஆனோய் போற்றி
ஓம் வள்ளல் பிராட்டியே போற்றி போற்றி
ஓம் தொண்டர்குத் தூநெறியாய் நின்றாய் போற்றி
ஓம் சூழ்நரகில் வீழாமே காப்பாய் போற்றி
ஓம் அண்டத்துக் கடப்பாலாய் உள்ளாய் போற்றி
ஓம் ஆதிரைநாள் ஆதரித்த அம்மா போற்றி
ஓம் தூண்டு சுடரனைய சோதி போற்றி
ஓம் தொல்லமரர் சூளா மணியே போற்றி
ஓம் காண்டற் கரிய கற்பகமே போற்றி
ஓம் கருதுவார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
ஓம் வேண்டுவோர் வேண்டிய ஈவாய் போற்றி
ஓம் பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பீ போற்றி
ஓம் பல்லூழிக் காலம் படைத்தாய் போற்றி
ஓம் முல்லையங் கண்ணிக் குழலாய் போற்றி
ஓம் ஏழ்நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி
ஓம் தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
ஓம் பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி
ஓம் வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
ஓம் முக்கண்ணி போற்றி முதல்வி போற்றி
ஓம் முருகவேள் தன்னைப் பயந்தோய் போற்றி
ஓம் தண்ணியளே போற்றி தாயே போற்றி
ஓம் உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
ஓம் திருவாகி நின்ற திறமே போற்றி
ஓம் கருவாகி யோடும் முகிலே போற்றி
ஓம் தேசம் பரவப் படுவாய் போற்றி
ஓம் பாசம் அறுக்கும் பண்பே போற்றி
ஓம் வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
ஓம் வந்தென் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
ஓம் நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
ஓம் பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
ஓம் பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
ஓம் முவாய் பிறவாய் இறவாய் போற்றி
ஓம் முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
ஓம் தேவாதி தேவர்தொழும் தேவி போற்றி
ஓம் சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி
ஓம் பண்டடேஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் கண்ணாயுலகுக்கு நின்றாய் போற்றி
ஓம் கருணை உருவான கனியே போற்றி
ஓம் அன்பாகி நின்றார்க்கு அணியே போற்றி
ஓம் அருளே உருவாக நின்றாய் போற்றி
ஓம் பெருகி அலைகின்ற ஆறே போற்றி
ஓம் போராநோய் பேர விடுப்பாய் போற்றி
ஓம் உருகி நினைவார்தம் உளத்தாய் போற்றி
ஓம் ஊனந்தவிர்க்கும் பிராட்டி போற்றி
ஓம் ஆட்சியுலகை உடையாய் போற்றி
ஓம் மாட்சி பெரிதும் அரியாய் போற்றி
ஓம் மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
ஓம் சோதித்தார் காணாமே நின்றாய் போற்றி
ஓம் அடியார் அடிமை அறிவாய் போற்றி
ஓம் அமரர் பரியாள வைத்தாய் போற்றி
ஓம் போற்றி இசைக்கப் பொருந்துவாய் போற்றி
ஓம் ஏற்றிசைக்கும் வானமேல் இருந்தாய் போற்றி
ஓம் எண்ணாயிர நூற்பெயராய் போற்றி

(9 ஆம் திருமுறை)

ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி போற்றி
ஓம் உலப்பிலா ஒன்றே போற்றி போற்றி
ஓம் தெளிவளர் பளிங்கே போற்றி போற்றி
ஓம் திரண்மணிக் குன்றே போற்றி போற்றி
ஓம் அளிவளர் அமுதே போற்றி போற்றி
ஓம் ஆனந்தக் கனியே போற்றி போற்றி
ஓம் நற்பரம் பொருளே போற்றி போற்றி
ஓம் நற்பெரும் பொருளே போற்றி போற்றி
ஓம் கருமயில் வெளியே போற்றி போற்றி
ஓம் கயற்கண் நாயகி போற்றி போற்றி
ஓம் குணங்குறி யிறந்தோர் கோலமே போற்றி போற்றி
ஓம் கணக நற்றூணே போற்றி போற்றி
ஓம் கற்பகக் கொழுந்தே போற்றி போற்றி
ஓம் ஏக நாயகி போற்றி போற்றி
ஓம் இமயவர்க்கரசி போற்றி போற்றி
ஓம் எண்ணுயிர்க் குமுதே போற்றி போற்றி
ஓம் எதிரில் போக நாயகி போற்றி
ஓம் கற்றவர் விழுங்கும் கற்பகம் போற்றி
ஓம் கருணை மாக்கடலே போற்றி போற்றி
ஓம் மதிப்பவர் மாமணி விளக்கே போற்றி
ஓம் தாயினோர் இரங்கும் தலைவி போற்றி

(10 - ஆம் திருமுறை)

ஓம் வாரணி போற்றி வயிரவி போற்றி
ஓம் பராசக்தி போற்றி பயிரவி போற்றி
ஓம் சதாசிவ நாயகி போற்றி போற்றி
ஓம் சதாசிவ சக்தி போற்றி போற்றி
ஓம் காளி போற்றி கன்னி போற்றி
ஓம் காமாரி போற்றி கலைநாயகி போற்றி
ஓம் சிவகாமி போற்றி கலைநாயகி போற்றி
ஓம் புராதனி போற்றி தனிநாயகி போற்றி
ஓம் அந்தரி போற்றி சுந்தரி போற்றி
ஓம் அண்ணல் தையால் போற்றி போற்றி
ஓம் ஐயன் மாதேவி போற்றி போற்றி
ஓம் கோமள வல்லி போற்றி போற்றி
ஓம் கோலக் குலக்கொடி போற்றி போற்றி
ஓம் சோதியுள்ள நாயகி போற்றி போற்றி
ஓம் சுகபர சுந்தரி போற்றி போற்றி
ஓம் சடைமுடிச் சூலினி போற்றி போற்றி
ஓம் சன்மார்க்கத் தேவி போற்றி போற்றி
ஓம் பந்தத் தலைவி போற்றி போற்றி
ஓம் பரிபரை நாரணி போற்றி போற்றி
ஓம் பராபரை ஈஸ்வரி போற்றி போற்றி
ஓம் பல்லிசைப் பாவை போற்றி போற்றி
ஓம் திருமேனிச் சிறுமி போற்றி போற்றி
ஓம் திரிபுர சுந்தரி போற்றி போற்றி
ஓம் அருந்தவப் பெண்பிள்ளை போற்றி போற்றி
ஓம் அருட்செல்வி சேவடி போற்றி போற்றி
ஓம் ஆதி சத்தி போற்றி போற்றி
ஓம் ஆவுடை அம்மை போற்றி போற்றி
ஓம் ஆனந்த சுந்தரி போற்றி போற்றி
ஓம் அருந்தவச் செல்வி போற்றி போற்றி
ஓம் தராசக்தி போற்றி பராசக்தி போற்றி
ஓம் ஆங்காரி போற்றி ஓங்காரி போற்றி
ஓம் பராசக்தி போற்றி மால்தங்கை போற்றி
ஓம் விவன சூடாமணி போற்றி போற்றி
ஓம் போகம்செய் சத்தி போற்றி போற்றி
ஓம் வானவர் மோகினி போற்றி போற்றி
ஓம் தேவ சக்தி போற்றி போற்றி
ஓம் ஆதி பயிரவ போற்றி போற்றி
ஓம் அஞ்சொல் மென்மொழி போற்றி போற்றி
ஓம் ஆரணி போற்றி அபிராமி போற்றி
ஓம் நீலாங்க மேனி நிறைந்தோய் போற்றி
ஓம் நிரதிசய ஆனந்த நிலையாய் போற்றி
ஓம் ஏருடை ஞானத் தலைவி போற்றி
ஓம் சீருடைச் சிவமங்கை போற்றி போற்றி
ஓம் கிரியா சக்தி போற்றி போற்றி
ஓம் ஞான சக்தி போற்றி போற்றி
ஓம் நவசக்தி போற்றி நாரணி போற்றி
ஓம் மனோன்மணி போற்றி மங்கலி போற்றி
ஓம் தனியொரு நாயகி போற்றி போற்றி
ஓம் தவத்தின் செல்வி போற்றி போற்றி
ஓம் ஆதி முதல்வி போற்றி போற்றி
ஓம் அம்மென் மொழியாள் போற்றி போற்றி
ஓம் நீலி போற்றி நிராசரி போற்றி
ஓம் ஆவின் கிழத்தி போற்றி போற்றி
ஓம் ஆவிக்குக் கன்னி போற்றி போற்றி
ஓம் நாவின் கிழத்தி போற்றி போற்றி
ஓம் நாண்மிகு சத்தி போற்றி போற்றி
ஓம் முத்தியருளும் முதல்வி போற்றி
ஓம் முக்கண்ணி மலர்ப்பாதம் போற்றி போற்றி
ஓம் செம்மைச் செந்நிறத்தோய் போற்றி போற்றி
ஓம் பிறப்பறுத்தாள்வோய் போற்றி போற்றி
ஓம் வினைத்தனி நாயகி போற்றி போற்றி
ஓம் கலைவாணி போற்றி சுந்தரி போற்றி
ஓம் ஆதி முதல்வி போற்றி போற்றி
ஓம் சுந்தரச் சோதி போற்றி போற்றி

12- ஆம் திருமுறை

ஓம் கனிவாய் மங்கை போற்றி போற்றி
ஓம் கவிகுலப் பாவை போற்றி போற்றி
ஓம் குழலார் சிறுபுறக் கொம்பே போற்றி
ஓம் கோல்வளைக் குழமங்கை போற்றி போற்றி
ஓம் இமயத் தரசி போற்றி போற்றி
ஓம் சிலம்பின் மகளே போற்றி போற்றி
ஓம் இருவடிக்கண் ஏழை போற்றி போற்றி
ஓம் இடப்பாகம் உடையாள் போற்றி போற்றி
ஓம் திருவேகம்பர் தேவி போற்றி போற்றி
ஓம் இமயத்து அணங்கு போற்றி போற்றி
ஓம் குலமலை மானே போற்றி போற்றி
ஓம் குன்றக் கோன்திருப் பாவை போற்றி
ஓம் பொருப்பன் மகளே போற்றி போற்றி
ஓம் பருப்பதத்தின் தையால் போற்றி போற்றி
ஓம் நகராசன் மடந்தை மடவரல் போற்றி
ஓம் கடவுட் கற்பின் மடவரல் போற்றி
ஓம் மதந்தந்த மென்மொழி மலரடி போற்றி
ஓம் இமயான் பயந்த பாவை போற்றி
ஓம் மறப்பெருஞ் செல்வி போற்றி போற்றி
ஓம் அறப்பெருஞ் செல்வி போற்றி போற்றி
ஓம் குயிலெனப் பேசும் கொம்பே போற்றி
ஓம் மயிலிளம் பேடை மணாட்டி போற்றி
ஓம் இமயக் கொழுந்தே போற்றி போற்றி
ஓம் சிமயக்கோட்டிமயச் செல்வி போற்றி
ஓம் வையம் ஏழும் ஈன்றோய் போற்றி
ஓம் ஐய திருவயிற்றம்மை போற்றி
ஓம் வாளரி நெருங்கண் மலையாள் போற்றி
ஓம் தொழுவார் துயர்தீர் தோகை போற்றி
ஓம் விழுவாது அறங்கள் வளர்த்தாய் போற்றி
ஓம் அன்பியல் அன்னம் போற்றி போற்றி
ஓம் அரனின் துணையே போற்றி போற்றி
ஓம் கொத்தார் மலர்க்குழல் போற்றி போற்றி
ஓம் எம்பிராட்டி அம்மை போற்றி போற்றி
ஓம் ஏழுல கீன்றோள் போற்றி போற்றி
ஓம் உம்பர் நாயகி போற்றி போற்றி
ஓம் ஒழியாக் கருணை போற்றி போற்றி
ஓம் அறம்பயந்த அம்மை போற்றி போற்றி
ஓம் பிறையணி வாள்நுதல் போற்றி போற்றி
ஓம் பிறப்பொலிக்கும் தேவி போற்றி போற்றி
ஓம் பைந்தொடிப் பாவை போற்றி போற்றி
ஓம் பனிமலை வல்லி போற்றி போற்றி
ஓம் பாகங் கொண்ட குலக்கொடி போற்றி
ஓம் புண்ணியத் தாயே போற்றி போற்றி
ஓம் மாலை தாழ்குழல் போற்றி போற்றி
ஓம் மாமலை உறைவாய் போற்றி போற்றி
ஓம் மலைக்குலக் கொடியே போற்றி போற்றி
ஓம் மைம்மரு பூங்குழல் போற்றி போற்றி
ஓம் அருட்கருணைத் தாயே போற்றி போற்றி
ஓம் அமுதே அறமே போற்றி போற்றி
ஓம் அருளே அறிவுப் பயனே போற்றி
ஓம் ஆளுடை அம்மை போற்றி போற்றி
ஓம் அகிலம் ஈன்ற அம்மை போற்றி
ஓம் அருமறை உடையாள் போற்றி போற்றி
ஓம் திருவளம் உடையாள் போற்றி போற்றி
ஓம் திருஅறம் புரப்பால் போற்றி போற்றி
ஓம் கோதிலா அமுதே போற்றி போற்றி
ஓம் உலகு பெருதாயே போற்றி போற்றி
ஓம் ஊன்வளர் உயிரே போற்றி போற்றி
ஓம் பிரானுடைய அமர்ந்தாய் போற்றி போற்றி
ஓம் பிறப்பில் தாயே போற்றி போற்றி
ஓம் பாலினும் நன்மொழி போற்றி போற்றி
ஓம் யாழினும் மென்மொழி யாளே போற்றி
ஓம் வண்டமர் பூக்குழல் மாதே போற்றி
ஓம் மாழையங் கண்ணி மணாட்டி போற்றி
ஓம் வாழ வைப்பாள் போற்றி போற்றி

சுந்தரம் தேவாரம்

ஓம் அஞ்சேல் என்றிடும் ஆட்சியே போற்றி
ஓம் அபிராமி யம்மை போற்றி போற்றி
ஓம் அமிர்த கரவல்லி போற்றி போற்றி
ஓம் அல்லியங் கேதை போற்றி போற்றி
ஓம் அழகம்மை நாயகி போற்றி போற்றி
ஓம் அறம்வளர்த்த நாயகி போற்றி போற்றி
ஓம் ஆவுடை நாயகி போற்றி போற்றி
ஓம் ஆனந்த நாயகி போற்றி போற்றி
ஓம் உலக நாயகி போற்றி போற்றி
ஓம் ஒப்பிலா முலையம்மை போற்றி போற்றி
ஓம் கருந்தார்க் குழலம்மை போற்றி போற்றி
ஓம் கனிவாய் மொழியே போற்றி போற்றி
ஓம் காமாட்சி யம்மையே போற்றி போற்றி
ஓம் காவியக் கண்ணி போற்றி போற்றி
ஓம் கேதார கௌரி போற்றி போற்றி
ஓம் கொடியிடை நாயகி போற்றி போற்றி
ஓம் கோல்வளை நாயகி போற்றி போற்றி
ஓம் சிற்றிடை நாயகி போற்றி போற்றி
ஓம் சுந்தராம்பிகையே போற்றி போற்றி
ஓம் சொக்க நாயகி போற்றி போற்றி
ஓம் ஞானப் பூங்கோதை போற்றி போற்றி
ஓம் திருநிலை நாயகி போற்றி போற்றி
ஓம் துணைமாலை நாயகி போற்றி போற்றி
ஓம் நீலாய தாட்சி போற்றி போற்றி
ஓம் பண்மொழி யம்மை போற்றி போற்றி
ஓம் பரங்கருணை நாயகி போற்றி போற்றி
ஓம் பூங்கோதை நாயகி போற்றி போற்றி
ஓம் பெண்ணின் நல்லாள் போற்றி போற்றி
ஓம் வேத நாயகி போற்றி போற்றி
ஓம் வேயிறு தோளியம்மை போற்றி போற்றி

இறைவியைப் பற்றி ஆயிரத்தெட்டு திருப்பெயர்கள் முற்றுப்பெற்றன.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar