SS முத்தாலம்மன் போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> முத்தாலம்மன் போற்றி
முத்தாலம்மன் போற்றி
முத்தாலம்மன் போற்றி

ஓம் அம்மையே முத்தால பரமேஸ்வரியே போற்றி
ஓம் ஆதிமுதற் சக்தியே போற்றி
ஓம் இதய இருள் நீக்குபவளே போற்றி
ஓம் ஈகையுடையோளே போற்றி
ஓம் உமையாம்பிகையே போற்றி
ஓம் ஊரைக் காப்பவளே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் நிறைந்தவளே போற்றி
ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை தருபவளே போற்றி

ஓம் ஓங்கார நாயகியே போற்றி
ஓம் ஒளடதத்து நாயகியே போற்றி
ஓம் கல்வி தந்தவளே போற்றி
ஓம் காத்து அருள்பவளே போற்றி
ஓம் கிழமையானவளே போற்றி
ஓம் கீர்த்தி தருபவளே போற்றி
ஓம் குறைகள் பொறுப்பவளே போற்றி
ஓம் கூட்டம் நிறைப்பவளே போற்றி
ஓம் கெங்கா தேவியே போற்றி
ஓம் கேள்வி ஞானமே போற்றி

ஓம் கை கொடுப்பவளே போற்றி
ஓம் கொடுத்து அருள்பவளே போற்றி
ஓம் கோமாதாவே போற்றி
ஓம் கௌரி அம்பிகையே போற்றி
ஓம் சக்தி தேவியே போற்றி
ஓம் சாத்தானை ஒழிப்பவளே போற்றி
ஓம் சித்தி உடையவளே போற்றி
ஓம் சீர்மை நாயகியே போற்றி
ஓம் சுகம் தருபவளே போற்றி
ஓம் சூதை அளிப்பவளே போற்றி

ஓம் செண்பகா தேவியே போற்றி
ஓம் செந்தமிழ் வாசகியே போற்றி
ஓம் சைகை புரிந்தவளே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி
ஓம் சோகம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் சௌந்திர நாயகியே போற்றி
ஓம் அஞ்ஞானம் அழிப்பவளே போற்றி
ஓம் மெய்ஞ்ஞான ஒளியே போற்றி
ஓம் கண்ணின் ஒளியே போற்றி
ஓம் கண்ணாத்தாள் தாயே போற்றி

ஓம் அணிகலன் தருபவளே போற்றி
ஓம் அணிமணிகள் நாதமே போற்றி
ஓம் வீணையின் நாயகியே போற்றி
ஓம் வினைகள் நீக்குபவளே போற்றி
ஓம் அணுவின் அணுவே போற்றி
ஓம் அனாத ரக்ஷகியே போற்றி
ஓம் பிணியை ஒழிப்பவளே போற்றி
ஓம் பிழை பொறுத்தருள்பவளே போற்றி
ஓம் காணியாய் நிற்பவளே போற்றி
ஓம் காளிகா தேவியே போற்றி

ஓம் தினை தேன் தருபவளே போற்றி
ஓம் தித்திக்கும் மாவிளக்கே போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி
ஓம் தானம் தருபவளே போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தாலி பாக்கியமே போற்றி
ஓம் தீமை களைபவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் தூய்மை குணத்தாளே போற்றி
ஓம் தென்றலாய் ஆனவளே போற்றி

ஓம் தேசம் காப்பவளே போற்றி
ஓம் தைத் திங்கள் சங்கரியே போற்றி
ஓம் தொல்லை நீக்குபவளே போற்றி
ஓம் தொண்டர்க்கு அருள்பவளே போற்றி
ஓம் தோழமை உடையாளே போற்றி
ஓம் தோசம் அகற்றுபவளே போற்றி
ஓம் நன்மை தருபவளே போற்றி
ஓம் நர்த்தன நாயகியே போற்றி
ஓம் நாட்டிய தேவியே போற்றி
ஓம் நாக தேவியே போற்றி

ஓம் புனித அருளே போற்றி
ஓம் நித்திய கல்யாணியே போற்றி
ஓம் நீசம் ஒளிப்பவளே போற்றி
ஓம் நீதி காப்பவளே போற்றி
ஓம் நுட்பம் கொடுப்பவளே போற்றி
ஓம் நுண்ணறிவானவளே போற்றி
ஓம் நூலை கொடுத்தவளே போற்றி
ஓம் நூலாய் ஆனாய் போற்றி
ஓம் நெறி வகுத்தவளே போற்றி
ஓம் நெய்யாய் உறைபவளே போற்றி

ஓம் நேசம் கொடுப்பவளே போற்றி
ஓம் நொடியாய் ஆனவளே போற்றி
ஓம் நோயை ஒழிப்பவளே போற்றி
ஓம் பரமன் தேவியே போற்றி
ஓம் பரமக்குடி காப்பவளே போற்றி
ஓம் பாடலின் இசையே போற்றி
ஓம் பிச்சியாய் ஆனவளே போற்றி
ஓம் பிழை பொறுப்பவளே போற்றி
ஓம் பில்லி சூன்யம் அகற்றுபவளே போற்றி
ஓம் பிள்ளைகளை காப்பவளே போற்றி

ஓம் பீதி அகற்றுபவளே போற்றி
ஓம் பீடை ஒழிப்பவளே போற்றி
ஓம் பீடு நடையாளே போற்றி
ஓம் புனர் ஜென்மம் கொண்டவளே போற்றி
ஓம் புத்தியாய் ஆனவளே போற்றி
ஓம் புத்தியை கொடுப்பவளே போற்றி
ஓம் புதுமை தருபவளே போற்றி
ஓம் புவனங்கள் ஆள்பவளே போற்றி
ஓம் பூமாதாவே போற்றி
ஓம் பூவில் உறைபவளே போற்றி

ஓம் பூமாரியே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூவாய் ஆனவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் பூமா தேவியே போற்றி
ஓம் பூவின் மணமே போற்றி
ஓம் புத்துலகம் தருபவளே போற்றி
ஓம் பூத நாயகியே போற்றி போற்றி போற்றி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar