SS வாராஹி வழிபாடு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வாராஹி வழிபாடு
வாராஹி வழிபாடு
வாராஹி வழிபாடு

ஸ்ரீலலிதா பராபட்டாரிகாவுக்கு சேனா நாயிகைகள் நால்வர். அவர்கள் ஸம்பத்கரீ. அச்வா ரூடா, மந்த்ரிண்யம்பா தண்டநாதா என்பவராவார்.

1. ஸம்பத்கரீ -ஸ்ரீ லலிதா தேவியின் அங்குசம் என்ற ஆயுதத்தினின்றும் ஆவிர்பவித்தவள். யானைப்படைக்குத் தலைவி.

2. அச்வாரூடா-பாசத்தினின்றும் உதித்தவள். குதிரைப்படைக்கு லலிதா தேவியினால் தலைவியாக நியமிக்கப்பட்டவள்.

3. மந்த்ரிண்யம்பா-ஸ்ரீ லலிதா தேவியின் அமைச்சர், தலைவி லலிதைக்கு உறுதுணையாய் நிற்பவள்.

4. தண்டநாதா-சக்திஸேனை அனைத்துக்கும் தலைவி, சேனாநாயிகா. இவளைத்தான் வாராஹீ எனக்கூறுகின்றோம். இவளுடைய ரதத்திற்கு கிரிசக்கரம் என்று பெயர். கிரிசக்ர ரதாரூட தண்டனாதா புரஸ்க்ரூதா என லலிதா ஸஹஸ்ர நாமம் கூறும். இவள் வாஹனமாகிய சிம்மத்திற்கு வஜ்ரகோஷம் என்று பெயர். இது மூன்று யோசனை தூரம் உயரம் கொண்டது.

இந்த தண்டநாதாவுக்கு பல பெயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை பஞ்சமீ, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேச்வரீ, ஸமய ஸங்கேதா, வாராஹ போத்ரினீ, சிவா, வார்த்தாளீ, மஹாஸேனா, ஆஞ்ஞா சக்ரேச்வரீ, அரிக்ன என்பனவாகும். இவளது இந்த நாமாக்களையும் சொல்லுபவர் சங்கடம், துக்கம் இவற்றை என்றும் அனுபவிக்கமாட்டார்.

இவள் பண்டாசுரனுடைய வலது கையினின்றும் தோன்றிய விசுக்ரன் என்பவனைக்கொன்று உலகிற்கு உதவினாள். இவள் லலிதாதேவியின் வாஸபூமியான ஸ்ரீநகரத்தில் 16வது பிராகரத்தில் கொலுவீற்றிருக்கிறாள். இந்த 16வது பிரகாரம் மரகதமயமானது. மஹா பத்மாடவீதியில் இருந்து கொண்டு இவள் லலிதா பரமேஸ்வரிக்கு அருந்தொண்டாற்றுவாள்.

இவள் நூறு ஸ்தம்பங்கள் கொண்ட மண்டபத்தில் பொன் தாமரையில் வீற்றிருப்பாள். உருக்கிய பொன் போல் மேனியள், செந்நிற ஆடை அணிந்து சர்வ ஆபரணங்களையும் அணிந்து அழகுடன் தோன்றுவாள்.

இவள் 8 கைகளிலும் சங்கம், சக்கரம், அபயம், வரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம் என்ற ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பாள்-சந்திரகலையை சூட்டிக்கொண்டு வராஹ முகத்துடன் காட்சியளிப்பாள்.

இவளுக்கு உன்மத்த பைரவீ, ஸ்வப்னேசீ, திரஸ்க்ருதி, கிரிபதா, தேவீ என்பவர்கள் பரிவாரங்களாவர்.

இந்த வாராஹீ தன்னை உபாசிப்பவர்களுக்கு சத்ருபாதையைப் போக்குவாள். இவள் மாத்ருகா கணத்தில் ஒருவளாய் கணக்கிடப்பட்டிருக்கின்றாள். மாதாக்கள் ப்ராம்ஹீ, மாஹேச்வரீ, கௌமாரீ, வைஷ்ணவீ, வாராஹீ, இந்த்ராணி, சாமுண்டா என்பவர்கள். மஹா லக்ஷ்மியையும் சேர்த்து எட்டு எனக் கணக்கிடுவர். இவர்கள் அனைவரும் <உலகம் மங்களம் பெற பாடுபடுவர்.

இந்த வாராஹீ மாதா தாருகாஸுரன் சண்டையில் காளிக்கு உதவியாகவும், சும்பாஸுரன் சண்டையில் சண்டிகாதேவிக்கு உதவியாகவும், பண்டாஸுர வதத்தில் லலிதா தேவிக்கு உதவியாகவும் இருந்து பல தொண்டுகள் புரிந்திருக்கின்றாள். இவள் ப்ரேதா-ஸனத்தில் அமர்ந்திருப்பாள். யஞ்ஞவராஹமூர்த்தியின் உருவத்துடன் இருப்பாள். இவளுடைய த்யானங்கள் மந்த்ர சாஸ்தரங்களில் பலவாறாகக் கூறப்பெற்றிருக்கின்றன.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar