SS குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்தோத்திரம்
குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்தோத்திரம்
குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்தோத்திரம்

கல்யாண ரூபாய கலௌ ஜநாநாம்
கல்யாண தாத்ரே கருணா ஸுதாப்தே
கம்ப்வாதீ த்வ்யாயுத ஸத்கராய
வாதாலயாதீச நமோ நமோஸ்தே.

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

பொருள்: குருவாயூரப்பா! கருணாமிருதஸாகரா! மங்கலகரமான திருமேனியைக் கொண்டவரும், கலியில் பக்தர்களுக்கு மங்கலத்தை வாரி அருள்பவரும், சங்கம் முதலிய திவ்ய ஆயுதங்களைக் கைகளில் தரித்தவருமான தங்களுக்கு நமஸ்காரங்கள்!

நாராயணே த்யாதி ஜபத் பிருச் சை:
பக்தைஸ் ஸதா பூர்ண மஹாலயாய
ஸ்வதீர்த்த காங்கோபம வாரி மக்ந
நிவர்திதா சேஷருஜே நமஸ்தே.

பொருள்: நாராயணா... குருவாயூரப்பா.... கோவிந்தா.... முதலிய திருநாமங்களை உரத்த குரலில் ஜபிக்கின்ற பக்தர்களால் எப்போதும் நிரம்பிய கோயிலைக் கொண்டவரும், தங்களின் தீர்த்தமான கங்கை நீருக்கு ஒப்பான தண்ணீரில் ஸ்நானம் செய்தவர்களின் ஸமஸ்த ரோகங்களையும் போக்குபவருமான தங்களுக்கு நமஸ்காரம்!

ப்ராஹ்மே முகூர்த்தே பரித: ஸ்வபக்தை:
சந்த்ருஷ்ட ஸர்வோத்தம விஸ்வரூப
ஸ்வதைல ஸம்ஸேவக ரோகஹர்த்ரே
வாதாலயாதீச நமோ நமஸ்தே

பொருள்: குருவாயூரப்பா... விடியற்காலையில் நான்கு பக்கத்தில் இருந்தும் வந்த பக்தர்கள் நன்கு தரிசனம் செய்யுமாறு விஸ்வரூப தரிசனத்தை அளிப்பவரே! தங்களுக்கு அபிஷேகம் செய்த நல்லெண்ணெய்யை உள்ளுக்கும் மேலுக்கும் உபயோகப்படுத்திக் கொள்பவர்களின் ரோகத்தைப் போக்கும் தங்களுக்கு நமஸ்காரம்!

பாலான் ஸ்வகீயான் தவ ஸன்னிதானே
திவ்யான்ன தானாத் பரிபாலயத்பி:
ஸதா படத்பிச்ச புராண ரத்னம்
ஸம் ஸேவிதாயாஸ்து நமோஹரதே

பொருள்: தங்கள் சன்னிதானத்தில், தங்களின் குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் செய்து வைத்து, அந்தக் குழந்தைகளை நன்கு காப்பாற்றுகிறவர்களாலும், புராணங்களுக்குள் சிறந்த ஸ்ரீமத் பாகவதத்தை நன்கு படிக்கின்ற பக்தர்களாலும் நன்கு ஸேவிக்கப்படும் தங்களுக்கு நமஸ்காரம்!

நித்யான்னதாத்ரே சா ஹிஸுரேப்ய:
நித்யம் திவிஸ்சிதைர் நிபூஜிதாய
மாத்ரா ச பித்ரா சததோத்தவேந
ஸம்பூஜி தாயாஸ்து நமோ நமஸ்தே

பொருள்: நித்யம் வேத வித்துக்களுக்கு அன்னம் அளிப்பவரும், நித்யம் தேவர்களால் இரவு பூஜிக்கப்படுகிறவரும், தாயான தேவகியாலும், பிதாவான வஸுதேவராலும், பக்தரான உத்தவராலும் பூஜிக்கப்பட்டவருமான தங்களுக்கு நமஸ்காரம்! (தேவகி, வஸுதேவர், உத்தவர்- இவர்களால் பூஜிக்கப்பட்டு, ஸ்ரீபகவான் வைகுண்டம் போனதும், சமுத்திரத்தினால் துவாரகை மூழ்கியது. இந்த விக்ரஹம் மட்டும் சமுத்திரத்தின் அலையினால் மிதந்து மேற்கு சமுத்திரம் வந்து சேர்ந்தது. குருவும் (ப்ரஹஸ்பதியும்). வாயுவும் எடுத்து அங்கு பிரதிஷ்டை செய்தனர். அதுவே குருவாயூர் என்று பிரசித்திபெற்றது).

ஆனந்தராமாக்ய மகிப்ரணீதம்
ஸ்தோத்ரம் படேத்யஸ்து நரஸ்த்ரிகாலம்
வாதாலயே சஸ்ய க்ருபாபலேன
லபேத ஸர்வாணிச மங்களாநி

குருவாதபுரீச பஞ்ச காக்யம்
ஸ்துதி ரத்னம் படதாம் ஸுமங்கலம் ஸ்யாத்
ஹ்ருதிசாபி விசேத் ஹரிஸ் வயம்து
ரதிநாதயுத துல்ய தேஹ காந்தி.

பொருள்: குருவாயூரப்பனைப் பற்றிய 5 ஸ்லோகங்கள் உள்ள இந்த உயர்ந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர்களுக்கு உயர்ந்த மங்கலம் உண்டாகும். பதினாயிரம் மன்மதனுக்கு ஒப்பான தேஹ காந்தியுள்ள ஸ்ரீமந் நாராயணனும் இதயத்தில் பிரவேசித்து தரிசனம் அளிப்பார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar