(அகில லோகஜனனியான ஆதிபராசக்தியின் மஹிமையை விளக்கி நமது காஞ்சி காமகோடி பரமாச்சாரியாள் அருங்கருணையால் சௌந்தர்ய லஹரியின் ஸாரத்தைப் பிழிந்து ஸ்ரீ துர்க்கா பஞ்சரத்னம் என்ற ஐந்து ஸ்தோத்திரம் கொண்ட அரிய க்ரந்தத்தை இயற்றி இருக்கிறார்கள். வரங்களை வாரிவழங்கும் அக்ஷய பாத்திரமான இந்த துர்க்கா பஞ்சரத்தினத்தை நித்யம் பாராயணம் செய்தால் கோரியவை நிறைவேறும்.)