SS அட்சரமாலிகா ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அட்சரமாலிகா ஸ்தோத்திரம்
அட்சரமாலிகா ஸ்தோத்திரம்
அட்சரமாலிகா ஸ்தோத்திரம்

1. ஸாம்பஸதாஸிவ ஸாம்ப ஸதாஸிவ
ஸாம்ப ஸதாஸிவ ஸாம்ப ஸ்ரீவா ஹரா - ஸாம்ப
அத்புத விக்ரக அமராதீஸ்வர
அகணித குணகண அமிருதஸிவா ஹரா - ஸாம்ப

உமையொருபாகனே ! ஸதாசிவனே! மாதொருயாதியனே! மங்கலரூபனே!
மனங்கவர் உருவனே! தேவர்கள் தலைவனே! எண்ணத்துக் கடங்காத
பரந்து நின்ற நற்குணத் தொகுப்பே! பிறவாப் பெருமையனே!
மங்கல உருவனே ! - (சரணம்)

2. ஆநந்த அம்ருத ! ஆஸ்ரித ரட்சக!
ஆத்மாநந்த ! மஹேச ஸிவா ஹர ! (ஸாம்ப)

ஆநந்த அமுதே ! அடியாரைக் காப்பவனே !
ஆன்மாவின் உன் ஊறும் மகிழ்வே! பெருந்தேவனே ! சிவா ! ஹரா !

3. இந்து கலாதர ! இந்த்ராதிப்ரிய !
சுந்தரரூப ! சுரேச ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

பிறைசூடியே ! இந்திரன்முதலாம் தேவர்களின் நற்பயனே !
அடிகனே ! தேவர்தலைவனே ! சிவா ! ஹர !

4. ஈச ! ஸுரேச ! மஹேச! ஜநப்ரிய !
கேசவஸேவித ! கீர்த்தி ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

தலைவனே ! இமையோர் தெய்வமே! பெரியானே! <உலகின் உயிரே !
மால்வணங்கும் தேவனே ! புகழின் தலைவா ! அரசனே !

5. உரக அதிப்ரிய பூஷண ! ஸங்கர !
நரக விநாஸ ! நடேச ஸிவா ! ஹர!  (ஸாம்ப)

அரவணியானே ! மங்கலந் தருபவனே !
நரக வாழ்விலிருந்து கரைஏற்றுபவனே ! மங்கல நடம்புரிவோனே ! அரனே !

6. ஊர்ஜித தாநவ நாஸ ! பராத்பர !
ஆர்ஜித பாவ விநாச ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

அரக்கரை வீழ்த்தும் சிவனே ! மேலோர்க்கும் மேலானவனே !
(எம்) வினைத் தொகுதிகளின் தாக்கத்தை அழிப்பவனே !

7. ருக் வேத ஸ்ருதி மௌலி விபூஷண
அர்க்க சந்தர அக்நி த்ரிநேத்ர ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

ருக் வேத கீதங்களின் முடிவில் ஒளிர்பவனே !
ஞாயிறு திங்கள் தீயாம் முச்சுடர் ஒளிர்முக்கண்ணா ! சிவனே ! அரனே !

8. ரூப நாமாதிப்ரபஞ்ச விலக்ஷண !
தாப நிவாரண ! தத்வ ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

ஓருருவும் ஒரு பெயரும் கொள் உலகின் வேறானவனே !
தாபந் தீர்ப்பவனே ! அனைத்தினும் வாழ்சிவனே ! அரனே !

9. (இ) லிங்கஸ்வரூப ! ஸபேஸ ! புதப்ரிய !
மங்கலமூர்த்தி ! மஹேச ! ஸிவா ! ஹர (ஸாம்ப)

சோதிஉருவனே ! நடராசனே ! அறிஞர்களின் தலைவனே !
மங்கல உருவே ! பெரியோனே ! சிவனே ! அரனே !

10. ஏக ! அநேக ! சர்வேச ! ஜனப்ரிய !
போகாதிப்ரிய ! பூரண ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

ஒன்றே ! பலவானவனே ! சர்வேசனே ! உலகினர் தலைவ !
வினைப்பயன் நுகர்விக்கும் தலைவ ! முழுமங்கல நிறைவே ! அரனே !

11. ளூதாதீஸ்வர ! ரூப ப்ரியஸிவ !
வேதாந்தப்ரிய வேத்ய ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

ளுகார முதலே ! அழகிய உருவனே ! மங்கலமே !
வேதமுடிவில் நிலைகொள் நாயகனே ! சிவமே ! அரனே !

12. ஐஸ்வர்யார்ச்சித ! சின்மய ! சித்கன !
சச்சிதாநந்த ! மஹேச ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

செல்வங்கள் வணங்கும் தலைவனே ! அறிவுருவனே ! அறிவின்செறிவே !
சச்சிதாநந்தனே ! பெரியானே ! சிவமாம் அரனே !

13. ஓங்காராதிப ! உரகவிபூஷண !
ஹ்ரீங்காரப்ரிய ! ஈச ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

ஓங்காரமுதலே ! பாம்பணிபூண்டோனே !
ஹ்ரீம் எனும் ஒலியின்வித்தே ! ஈசனே ! சிவனே ! அரனே !

14. ஒளரஸ நாளித ! அந்தகநாஸ !
கௌரீஸஹித ! கிரீஸ ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

வீரத்தின் முதலே ! கால நாசனே !
கௌரியுடனுறை கிரீசனே ! சிவனே ! அரனே !

15. அம்பர வாஸ ! சிதம்பர நாயக !
தும்புரு நாரத ஸேவ்ய ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

வானில் துலங்கும் நாயகனே ! அறிவின் உருவே !
தும்புருநாரதர் இசையால் போற்றிட அருள்சிவனே ! அரனே !

16. ஆ ! ஹரகாரப்ரிய ! அட்டதிக் ஈஸ்வர !
யோகிஹ்ருதய ப்ரியவாஸ ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

ஆ! ஹர எனும் ஒலியின் தலைவனே ! எண்திசை நாயக !
யோகிகளின் இருதயவாஸனே ! சிவனே ! அரனே !

17. கமலாஸநவர ! கைலாஸாதிப !
கருணா ஸாகர ! காந்த ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

ஆறாதார கமலங்களில் நிற்பவனே ! கயிலை நாயகனே !
கருணைக் கடலே ! ஒளிரும் சிவனே ! அரனே !

18. கட்க ம்ருக சூல டங்க தஙர்த்தர !
விக்ரம ரூப ! விசேஷ  ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

குறுவான்; மான்; சூலம்; மழு; வில்; ஏந்தியவனே!
வீரத்தின் உ<ருவே ! பல்வேறு உருவங்கொள் சிவமே ! அரனே !

19. கங்கா கிரிஜா வல்லப ! குணஹித !
சங்கர ! ஸர்வறஜநேஸ ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

கங்கா நாயகனே ! பார்வதி தலைவா ! நற்குண உருவே !
நலம் விளைப்போனே ! அனைத் துயிர்க்கிறையே ! சிவனே ! அரனே !

20.காதுக பஞ்சந ! பாதக நாசன !
போதஸ்வரூப ! பூர்ணஸிவா ! ஹர ! (ஸாம்ப)

கொடியரை அழிப்பாய் ! பாவத்தைத் துடைப்பாய் !
தெளிந்த அறிவின் உ<ருவே ! நிறைமங்கலனே ! அரனே !

21. ஙா ந்சுஸ்வரூப ! நந்தவநாஸ்ரய !
வேத வேதாந்தஸ்வரூப ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

ஙா கரஒலியின் உருவே ! மலர்த்தோட்டங்களை விரும்பி அடைபவனே !
அறிவுநூலாம் வேதாந்த முடிவே ! சிவமே ! அரனே !

22. சண்ட விநாசந ! ஸகலஜகப்ரிய !
மண்டலாதீச ! மஹேச !  ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

கால காலனே ! அனைத்துலகின் தலைவனே !
ஐம் மண்டலங்களின் தலைவனே ! மகேசனே ! சிவனே ! அரனே !

23. சத்ர கிரீடஸுகண்டல அதிப்ரிய !
புத்ரப்ரிய ! புவநேச ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

வெண்கொற்றக்குடை; கிரீடம்; நன்மணி ஆரம் இவற்றில் அன்பு கொண்டவனே !
புத்ரப்ரியனே ! புவநேஸனே ! சிவனே ! அரனே !

24. ஜன்ம ஜரா மரணாதி விநாஸந !
கல்மஷ விரஹித காஸி ஸிவாஹர !

பிறப்பு; தளர்வு; இறப்பு முதலியனவற்றை அழிப்பவனே !
குழப்பமின்றிய ஒளிவாழ்வின் சிவமே ! அரனே !

25. ஜ்ஜங்கார ஆச்ரித ! ப்ருங்கி ரிஷீஸ்வர !
ஓங்காரேஸ ! விஸ்வேஸ ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

ஜ்ஜங்கார ஒலி உருவே ! பிருங்கி முதலிய முனிவர்தலைவனே !
ஓங்கார முதல்வனே ! உலகின் தலைவனே ! சிவனே ! அரனே !

26. (க்) ஞான அக்ஞாந விநாஸந ! நிர்மல
தீநஜநப்ரிய ! தீப்தி ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

ஞான அஞ்ஞானங்களைத் துடைப்பவனே ! நிர்மலனே !
ஏழையர் <உலகினை விரும்புபவனே ! ஒளிஉருவே ! அரனே !

27. டங் கர்யாவ்ருத ! தாரணஸத்வர !
கிங்கரஸேவ்ய ! கிரீடி ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

டங் கார ஒலியின் உள்ளுறையே ! உலகந்தாங்கும் <உத்தமனே !
பூதகணங்களின் ஸேவையை ஏற்பவனே ! கிரீட மணிந்தசிவனே ! அரனே !

28. டங்கஸ்வரூப ! ஸஹஸ்ரகரோத்தம !
வாகீஸ்வரவர ! தேவஸிவா ! ஹர ! (ஸாம்ப)

மழுவேந்தீ ! ஆயிரங்கரமுடையோனே !
நல்வாக்கின் மன்னவனே ! ஒளியாம்சிவமே ! அரனே !

29. டம்பவிநாஸன ! தாடிம பூஷண !
அம்பரவாஸ ! கிலேஸ ஸிவாஹர ! (ஸாம்ப)

தற்பெருமையை அழிப்பவனே ! மாதுளை நிறத்தோனே !
ஆகாயத் தத்துவத்தலைவனே ! வருத்த மொழிக்கும் சிவமே !

30. டண்டண் டமருக டாரிம ! நிஸ்சல !
(உ) டுண் டிவிநாயகஸேவ்ய ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

டண்டண் எனும் ஒலியால் உலகைப் படைப்பவனே ! நிலைதிரியாய் பெருமையனே !
குண்டி விநாயகன் ஸேவையை ஏற்பவனே ! சிவனே ! அரனே !

31. நளிந விலோசன ! நடன மநோஹர !
அளிகுண பூஷண ! அம்ருதஸிவா ! ஹர (ஸாம்ப)

தாமரைக் கண்ணனே ! ஆடல்வல்லோனே ! மனங்கவர்வோனே !
வண்டுகுலாமலர் அணிகொண்டோனே ! பிறவா இறவாச்சிவனே ! அரனே !

32. தத்வமஸ்யாதி வாக்யார்த்தஸ்வரூப !
நித்யஸ்வரூப ! நிஜேஸ ! ஸிவ ! ஹர ! (ஸாம்ப)

தத்துவமசி முதலான வாக்கியங்களின் உருவே !
அழியாப்பொருளே ! உண்மையின் தலைவனே ! சிவமே ! அரனே !

33. ஸ்தாவர ஜங்கம புவன விலக்ஷண !
வ்யாக்ரவரமுனி ஸேவ்ய ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

அசையும்பொருளும் அசையாப்பொருள்களும் கூடியஉலகின் தலைவனே !
புலிக்கால் முனி தொழும் பெற்றியனே ! அரனே !

34. தந்திவிநாஸந ! நளின மநோஹர !
சந்தநலேபந ஸரண ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

யானை உரித்தோனே ! நளிநமான மநோஹரனே !
சந்தநம் பூசிய உடலோனே ! சரணம் அடைந்தாரைக் காப்பவனே ! அரனே !

35. தரணீதர தர ! தவள விபாஸித !
தநாதிபஸக ! வரத ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

<உலகு தாங்கும் சேடனின் உள்ளுறைவோனே ! பொடியணிமேனியனே !
குபேரனைத் தோழமை கொண்டோனே ! வேண்டும்ராமருள்வோனே சிவனே ! அரனே !

36. நாநாமணி கண பூஷண ! நிர்க்குண !
நத ஜந போஷண ! நாத ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

பலவகை மணிகளால் தொடுத்த மாலைகள் பூண்டவனே ! குணமற்றவனே !
வணங்கியோரைக் காப்பவனே ! தலைவனே ! சிவனே ! அரனே !

37. பார்வதி நாயக ! பந்நக பூஷண !
பரமானந்த ! பரேஸ ! ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

பார்வதி நாயகனே ! அரவணி பூண்டநாதனே !
பேரானந்தக்கடலே ! மேலாம் பெரியோனே ! சிவனே ! அரனே !

38. பால விலோசன ! பாநுகோடி ப்ரகாசக !
ஹாலாஹலதர ! அம்ருதஸிவா ! ஹர ! (ஸாம்ப)

நெற்றிக்கண்ணனே ! கோடிசூரியர்களின் ஒளி கொண்டவனே !
ஆலகாலத்தை மணியெனக் கழுத்தில் பூண்டவனே ! இறவாப் பெருமையனே ! சிவனே ! அரனே !

39. பந்த விமோசந ! த்ருத சர்மாம் பர !
ஸ்கந்தாதிப்ரிய ! கநக ஸிவா ! அர ! (ஸாம்ப)

மாயாபாசங்களிலிருந்து விடுவிப்பவனே ! தோ<லுடை கொண்டவனே !
கந்தனைத் தந்தவனே ! பொன்னார் மேனிச்சிவமே ! அரனே !

40. பஸ்மவிலேப ! பவபயபஞ்சன !
விஸ்மயரூப ! விசேஷ ஸிவா ! அர ! (ஸாம்ப)

முழுநீறு பூசிய முனிவனே ! பிறவிப் பிணிஅச்சம் நீக்குபவனே !
மலர் முகத்தோனே ! பல்வகை உருவங்கொள் சிவனே ! அரனே!

41. மந்மத நாஸந ! மதுரா நாயக !
சர்மவிபூஷண ஸாட்சி ஸிவா ! அர ! (ஸாம்ப)

காமனைக் காய்ந்தவனே ! மதுராபுரி மன்னனே !
தோலாடை கொண்டோனே ! (மனச்) சான்றாம் சிவமே ! அரனே !

42. யதிஜந ஹ்ருதய நிவாஸித ! ஈஸ்வர !
விதி விஷ்ணுவாதி ஸுஸேவ்ய சிவா ! அர ! (ஸாம்ப)

துறவியர்கணங்களின் இதயவாசியே ! ஈஸ்வரனே !
திருமால் உள்ளிட்ட தேவர்களால் விதிப்படி பூசிக்கப்படுபவனே ! அரனே !

43. ராமேஸ்வர ! ரமணீய முகாம்புஜ !
ஸோமேஸ்வர ! ஸுஹ்ருதேச சிவா ! அர ! (ஸாம்ப)

ராமனின் தலைவனே ! அடியார் மனங்கவர் தாமரைமுகனே !
ஸோமேசனே ! நண்பர் மனத்தை ஆள்பவனே ! அரனே !

44. லங்காதீஸ்வர ஸேவித ! சுககர !
லாவண்யாம்ருத ! லலித சிவா ! ஹர ! (ஸாம்ப)

இலங்கேசனால் வழிபடப்பட்டவனே ! நலம் தருபவனே !
அழகின் பெருக்கே ! மென்மைச்சிவமே ! அரனே !

45. வநஜாநந ! வர ! வாஸுகி பூஷண !
வநமாலாதி விபூஷ சிவா ! ஹர ! (ஸாம்ப)

தாமரை முகத்தனே ! கரும்பாம்பாம் வாசுகியை அணிந்தவனே !
துளபமாலை அணிந்தவனே ! சிவமே ! அரனே !

46. ஸாந்த ஸ்வரூப ! அதிப்ரிய ! சுந்தர !
காந்தீமதி ப்ரிய ! காசி சிவா ! ஹர ! (ஸாம்ப)

சாந்தத்தின் <உருவே ! ஆன்மாக்களின் உறுதுணையே ! ஆணழகனே !
ஒளி உருவாளின் நாயகனே ! ஒளியாம் சிவனே ! அரனே !

47. ஷண்முக ஜனக ! ஸுரேந்த்ர முனிப்ரிய !
ஷாட்குண்யாதி ஸமேத சிவா ! அர ! (ஸாம்ப)

ஷண்முகன் தாதையே ! தேவர்கள் - இந்திரன் - முனிவர்களின் தலைவனே !
அறுகுணமே உருவாகிய மூர்த்தியே ! சிவமே ! அரனே !

48. ஸம்ஸாரார் ணவநாஸக ! ஸாஸ்வத !
ஸாதுஹ்ருதி ப்ரியவாஸ ! ஸிவா ! அர ! (ஸாம்ப)

பிறவிக்கடலை அழிப்பவனே ! என்றும் நிலையானவனே !
நல்லோர் இதயத்து மகிழ்ந்துறைவோனே ! சிவனே ! அரனே !

49. ஹர ! புரு÷ஷாத்தம ! ஆநந்தாம்ருத !
முரரிபு ஸேவித ! நடேஸ ஸிவா ! ஹர ! (ஸாம்ப)

அரனே ! புரு÷ஷாத்தமனே ! ஆநந்த அமுதே !
முரனைக் கொன்ற மாலின் தலைவனே ! ஆடல்தலைவனே ! சிவனே ! அரனே !

50. லளிதாநந்தித ! நிஜத்ரிவிஸ்வேஸ்வர !
காளீநடப்ரிய ! காஸிஸிவா ! ஹர ! (ஸாம்ப)

லளிதாதேவியின் நாதனே ! மூவுலகின் முதல்வனே !
காளியோடு தாண்டவமிடுவதில் மகிழ்வோனே ! ஒளியாம்சிவமே! அரசனே !

51. அக்ஷரரூப ! அதிப்ரியஸுந்தர !
ஸக்ஷிஜகத்ரயஸ்வாமி ! ஸிவா ! ஹர !
சங்கரநாரயண ! தீர்த்தப்பிரிய !
ஸிவ கங்காதீர ஸுவாஸ  ! ஸிவா ! ஹர !
ஸாம்ப ஸதாஸிவ ஸாம்ப ஸதாஸிவ
ஸாம்ப ஸதாஸிவ ஸாம்பஸிவா ! ஹர !

ஒலியின் அழியா உருவோனே ! மனங்கவர் அழகுருவனே !
மூவுலகின் கண்கண்ட தேவே ! சிவனே ! அரனே!
மாலொரு பாதியனே ! தீர்த்தங்களில் மகிழ்ந்துறைவோனே !
கங்கைக்கரைத் தலங்களில் நிலை பெற்றவனே ! சிவமே ! அரனே !
மாதொரு பாகனே ! சதாசிவனே ! ஸாம்பா ! சதாசிவனே !
ஸாம்ப ஸதாசிவ ! ஸாம்பஸதாசிவ ! ஸாம்ப ஸதாசிவ ! போற்றி போற்றி !


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar