SS சிவகாமசுந்தரி அஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சிவகாமசுந்தரி அஷ்டகம்
சிவகாமசுந்தரி அஷ்டகம்
சிவகாமசுந்தரி அஷ்டகம்

வியாக்ரபாத மகரிஷி அருளியது

புண்டரீக ப்ருமத்ய வாஸினீம், ந்ருத்தராஜ ஸஹதர்மிணீம்
அத்ரிராஜதனயாம் தினேதினே சிந்தயாமி சிவகாம சுந்தரீம்

பொருள் : தாமரைகள் அடர்ந்த சிதம்பரம் தலத்தின் மத்தியில் வசிப்பவளும், நட(ன) ராஜனின் துணைவியானவளும், மலையரசன் மகளுமான சிவகாமசுந்தரியை தினமும் தியானிக்கிறேன்.

ப்ரஹ்ம விஷ்ணுமுக தேவ பூஜிதாம் பாஸ்ரீபத்ம சுக வத்ஸ சோபிதாம்
பாஸுலேச கலபானனாத்மஜாம் சிந்தயாமி சிவகாம ஸுந்தரீம்

பொருள் : பிரும்மா, விஷ்ணு ஆகியோரை முதன்மையாக முன்னிருத்திக் கொண்டு தேவர்களால் மதிக்கப்படுபவளும் , தாமரை போன்ற கரத்தில் கிளியினை ஏந்தி நிற்பவளும் ஈசனின் அம்சம் இணைந்து பிரகாசிப்பவளுமான சிவகாம சுந்தரியை நான் தினமும் பூஜிக்கிறேன்.

வேதசீர்ஷ வினுத ஆத்ம வைபவாம் வாஞ்சி தார்த்த பலதான தத்பராம்
வ்யாஸ ஸுனுமுகதாபசார்ச்சிதாம் சிந்தயாமி சிவகாம ஸுந்தரீம்

பொருள் : வேதங்களின் பீஜமான (உட்கருவான) உபநிஷதங்களால் கொண்டாடப்படும் பெருமையை உடையவளும், பக்தர்கள் விரும்பும் பலன்களை அளிப்பதையே லட்சியமாகக் கொண்டவளும், வியாச முனிவரின் மகனான சுக பிரும்ம ரிஷி போன்றவர்களால் அர்ச்சிக்கப்பட்டவளுமான சிவகாமசுந்தரியை நான் தினமும் வணங்குகிறேன்.

÷ஷாடசார்ண பரதேவதாம் உமாம் பஞ்ச பாணநிச யோத்பவ வேஷணாம்
பாரிஜாத தரு மூல மண்டபாம் சிந்தயாமி சிவகாம ஸுந்தரீம்

பொருள் : பதினாறு வயதுடைய மங்கையும் (தேவதையும்) உமா எனப்படுபவளும், மன்மதனை மீண்டும் உயிர்பெற்றெழச் செய்த கருணைமிகு பார்வையையுடையவளும் (சிவனுடைய கண் வீச்சினால் எரிந்த காமனை அம்பாளின் கடாட்ச வீச்சு உயிர் பெற்றெழச் செய்தது) பாரிஜாத மரத்தினடியில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் வசிப்பவளுமான அருள்மிகு சிவகாம சுந்தரியை நான் தினமும் துதிக்கிறேன்.

விஸ்வயோநிம் அமலாம் அநுத்தமாம் வாக்விலாஸ பலதாம் விசக்ஷணாம்
வாரிவாஹ ஸத்ருசாலாம்பராம் சிந்தயாமி சிவகாம ஸுந்தரீம்

பொருள் : உலகம் உண்டாகக் காரணமானவளும் மும்மலங்களுக்கு (ஆசை, கோபம், வெறுப்பு) அப்பாற்பட்டவளும், தனக்கு இணையில்லாதவளும், உயர்ந்த வாக் விலாசத்தை அளிப்பவளும், மிகத் திறமையானவளும், மேகத்தைப் போன்ற கூந்தலை உடையவளுமான சிவகாம சுந்தரியை அன்றாடம் வணங்குகிறேன்.

நந்திகேச வினுத ஆத்ம வைபவாம் ஸ்வ நாம மந்து ஜபக்ருத் ஸுகப்ரதாம்
நாச ஹீன பததாம் நடேஸ்வரீம் சிந்தயாமி சிவகாம சுந்தரீம்

பொருள் : நந்தியெம்பெருமானால் வணங்கப்பட்டவளும், தனக்குரிய மந்திரங்களையோ, தன் பெயரையோ சொல்பவர்களுக்கு நன்மைகளை அளிப்பவளும், தன் பக்தர்களின் கீழ் நிலையை நாசம் செய்து உயர்ந்த பதத்தை அளிப்பவளும், நடனத்திற்குத் தலைவியுமான சிவகாம சுந்தரியை தினமும் துதிக்கிறேன்.

ஸோமசூர்ய ஹீதபக்பிர்லோசனாம், ஸர்வமோஹ கைரீம் ஸதீடிநாம்
ஸத்ரிவர்க்க பரமாத்ம ஸெளக்யதாம் சிந்தயாமி சிவகாம சுந்தரீம்

பொருள் : சூரியன், சந்திரன், அக்னி ஆகியோரையே தன் கண்களாக உடையவளும், எல்லோரையும் மோகிக்கச் செய்பவளும், புத்தியில் சக்தியாக விளங்குபவளும், தர்மம், அர்த்தம், காமம் என்ற மூன்றுக்கும் மேலான மோட்சத்தை அளிப்பவளும் எல்லா நன்மைகளையும் அளிப்பவருமான சிவகாம சுந்தரியை நான் தினமும் பூஜிக்கிறேன்.

புண்டரீக சரணர்ஷினா க்ருதம் ஸ்தோத்ரம் ஏதத் அன்வஹம் படந்தியே
புண்டரீக ப்ரதாயானாம் அம்பிகாயச் திஷ்டி மகிலாம் மஹேஸ்வரீ

பொருள் : வியாக்ரபாத முனிவரால் செய்யப்பட்ட இந்தத் துதியை தினமும் சொல்பவர்களுக்கு புண்டரீகபுர நாயகியாக விளங்குபவளும் சிவலோக நாயகியும் மகேஸ்வரியுமான சிவகாம சுந்தரி அவரவர் விரும்பியதை அளிப்பாள் என்பது நிச்சயம் !


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar