SS வடிவுடை அம்மன் விருத்தம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வடிவுடை அம்மன் விருத்தம்
வடிவுடை அம்மன் விருத்தம்
வடிவுடை அம்மன் விருத்தம்

ஆசிரிய விருத்தம்

1. சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியாய் நின்ற உமையே
சுக்கிரவாரப் பெருமையும் கண்டு உனது
சேவையும் சொல்லவும் எளிதாகுமோ
சந்த நிதியாகிய செந்தமிழ்ப் பிராணிஎன்
சலிப்பெல்லாம் மாற்றி அருள்வாய்
சற்குணி மெற்குணி நிற்குணி சதுர்வேத
சமயமும் மாரி நீயே
சிந்தைமிக நொந்துயான் வந்தகுறை உந்தன்முன்
செப்பவும் கேட்க வில்லையோ
சேய்பெற்ற தில்லையோ நீதிஉணர் வில்லையோ
ஜெகமெல்லாம் பெற்ற தாயே
தந்திர முகுந்தனிட தங்கையேசிவ மங்கையே
தரணிபுகழ் ஒற்றியூர் வாழ்
தங்கமலர் நாதர்சடை கங்கை உருவானகொடி
திங்கள் ஒளிவான வடிவே.

2. மண்டலம் தன்னிலே கண்கண்ட தெய்வம்நீ
மற்றுமொரு தெய்வம் உண்டோ
மந்திரப் பேய்களும் தந்திரச் சூனியமும்
மற்றும் சத்ராதி பகையும்
கண்டுனது பாதமலர் நின்றுதுதி செய்திடக்
கலங்கிப் பறந் தோடுமே!
கன்மமும் பிணிகளும் வன்மமும் இல்லாமலே
கண்ட உடன் தெண்டனிடுமே
அன்று முதலாய்வந்த பண்டுபழி பாவமும்
இனிமேல் வரும் வினைகளும்
எந்தன்மேல் கணக்காகச் சிந்தையில் நினைக்காமல்
இயமன் அணுகாமல் அருள்வாய்.
தண்துளப மாலையணி மார்பனிட தங்கையே
தரணிபுகழ் ஒற்றியூர் வாழ்
தங்கமலர் நாதர்சடை கங்கை உருவானகொடி
திங்கள் ஒளிவான வடிவே.

3. பாரெல்லாம் துதிபெற்ற பாதவிரல் மோதிரம்
பாடகம் தண்டை கொலுசும்
பதித்த இடை மீதில் அணிந்த பட்டாடையும்
பசும் பொன்னின் ஒட்டியாணமும்
வாரணியும் மார்பினில் சரப்பளி பதக்கமும்,
வச்சிர மணி தாலி அழகும்
வையகம் துதிபெற்ற கையினில் கடகமும்
வர்ண நிறமான கிளியும்
சீரொழுகு காதினில் கம்ம<லும் தொடு கொப்பும்
ஜெகமெல்லாம் நிறைந்த உருவும்
சித்திர ஒளிப்பார்வையும் ரத்தின மூக்குத்தியும்
செண்பகம் முடித்த குழையும்
தாரணியில் உன்பெருமை சாற்ற எளிதாகுமோ
தரணிபுகழ் ஒற்றியூர் வாழ்
தங்கமலர் நாதர்சடை கங்கை உருவானகொடி
திங்கள் ஒளிவான வடிவே.

4. தாயது வயிற்றிலேமாயமாய்த் தரித்து
நான் தங்கினேன் அங்கு சிலநாள்
தாரணியில் வீழ்ந்தபின் புழுதியில் புரண்டு
விழ்ந்த படிநடந்து சிலநாள்
தாயமும் வளர்ந்திந்தப் பாரினிலே உழன்றுமிகக்
களையாய்த் திரிந்த சிலநாள்
காமனால் வதங்கியே ஊமைபோல் மயங்கிக்
கருத்தது அழிந்து சிலநாள்
மாய்கை யாலே லோக வாழ்க்கைதனை மெய் என்று
மயங்கு தென் மனத்திலம்மா
மாறாத பிறவிதாயால் எடுக்கத்தர
மைந்தன் சுமக்க வசமோ?
தாய் என்றுநானுன்னை நம்பினேன் அருள்புரிவை
தரணிபுகழ் ஒற்றியூர் வாழ்
தங்கமலர் நாதர்சடை கங்கை உருவானகொடி
திங்கள் ஒளிவான வடிவே.

5. நற்செயல் இலாதஉடல் இச்சைபாடான சுகம்
நற்குணம் இலாத குறைகள்
நான்முகன் எனும் பாதகன் செய்த கபடமோ நன்னலப்
பெரியோர் செய்த தவமோ,
சற்சனங்கள் இல்லாத சபையினைப் போலவே
தயங்கி மிகவே இளைத்தேன்
தாயே உன் ஆதரவு ஏழைநான் செய்த பிழை
தாயலாது யார் பொறுப்பார்
அர்ச்சனைகள் செய்து தொழும் இச்சை அடியாரினும்
ஆதுரத்தோடு புரப்பாய்
அன்னை உன்னையல்லாது பின்னை வேறில்லையே
அநாத ரட்சகி அல்லவோ?
தற்சொரூப மாயிலகும் அச்சுதன் தங்கையே
தரணிபுகழ் ஒற்றியூர் வாழ்
தங்கமலர் நாதர்சடை கங்கை உருவானகொடி
திங்கள் ஒளிவான வடிவே.

6. நில்லாத சமுசார மாய்கைஎனை வந்துதான்
நித்தமும் வஞ்சிக் குதே,
நெஞ்சமது பஞ்சுபோல் அஞ்சுதே சஞ்சலம்
நினை விலே பெரிதாகுமோ
நல்லோரை எண்ணாமல் பொல்லாத சினத்தினால்
நடுங்கிப் பேச வருதே
நாவினால் உன் புகழைத் தியானிக்க ஒட்டாமல்
நன்நினைவை மாற்றி விடுமே
கல்லாப் புல்லரிடம் வல்லாண்மை பேசியே
காலனுக் குள்ளா குதே
கள்ள மனமான இதை நல்ல மனதாகிட
கருணா கடாட்சம் வைத்து
கல்லிஎன் வறுமை பிணி நல்ல செல்வங்கள் அருள்
தரணி புகழ் ஒற்றியூர்வாழ்
தங்கமலர் நாதர்சடை கங்கை உருவானகொடி
திங்கள் ஒளிவான வடிவே.

7. பெற்றதாய் தந்தையும் பிறவியும் இருந்தென்ன
பிள்ளை பெண்சாதி என்றும்
பிரியமாய் மனிதர்கள் உறவாய் இருந்தென்ன
பிராணனுக்கு உதவி உண்டோ
நித்தனார் இடமாக முத்திதரவே ஒளிரும்
நீலி அம்பிகை திரிசூலி
நீங்க ஒட்டாமலே தேங்கும்உள மலர்நீக்கும்
நிலையான பதவி அருள்வாய்
மெத்தவே நொந்துனது சிற்றடியை நம்பினேன்
மிகவும் மவுனமாய் இராதே
மேதினியில் உன்னைவிட வேறுமுள தெய்வங்கள்
மெய்யான தெய்வம் உண்டோ
தத்திமித் தாளமொடு மருமலர் தியாகர் மகிழ்
தரணிபுகழ் ஒற்றியூர் வாழ்
தங்கமலர் நாதர்சடை கங்கை உருவானகொடி
திங்கள் ஒளிவான வடிவே.

8. ஓயாத கவலையும் தீராத வறுமையும்
ஒழியாத வன் பிணிகளும்
உலகெலாம் பகைகளும் அளவிலாக் கன்னமும்
ஒருவரால் சொல்ல வசமோ
பேயாக நானிந்தப் பீடையில் சிக்கியே
பிதற்றவும் பூமி தனிலே
பெண்களெனும் மாய்கையால் அங்கமது வாடியே
பிரமையால் மெய் தளர்ந்தேன்
தாய் என்றும் அலறிஅழ ஏனென்று கேட்கிலாய்
தருமமோ உந் தனுக்கு?
தஞ்சம்என்று உன்பதம் நெஞ்சினில் நினைத்தோர்கள்
தளர்வரோ தரணி தனிலே
தாயே இது தர்மமோ மாயனது தங்கையே
தரணிபுகழ் ஒற்றியூர் வாழ்
தங்கமலர் நாதர்சடை கங்கை உருவானகொடி
திங்கள் ஒளிவான வடிவே.

9. எத்தனை துயரம் என்று இயம்புவேன் அம்மம்மா
எளியேன்செய் கொடுமையே தோ
இக்காயம் இச்செல்வம் நிலை என்று நம்பியே
இப்படி எலாம் தளர்ந்தேன்
பெற்ற தாய் நீஎன்று முறையிட்டு அலறிடப்
பேசா திருப்ப தேனோ
பச்சியென் றேற்குதலில் தாட்சியே அம்மணி
பிள்ளை மேல் கோபமேதோ
அத்திமுகனைப் பெற்ற நித்ய கல்யாணியே
அமரர் தொழும் சார்வாணியே
அறியாத சிறுவன்மேல் இனியாவதுளம் மகிழ்ந்து
அன்பு வைத்தருள் புரிகுவாய்
தத்துமயில் வாகனனைப் பெற்ற கௌமாரியே
தரணிபுகழ் ஒற்றியூர் வாழ்
தங்கமலர் நாதர்சடை கங்கை உருவானகொடி
திங்கள் ஒளிவான வடிவே.

10. படிக்க அறியேன் உனைத்துதிக்க அறியேன் என்ன
பாதகத்தின் கொடுமையோ
பாட்டும் அறியேன் கவிதை கேட்டும் அறியேன் மிக்க
பாவலர்கள் நேசம் அறியேன்
நடுங்கிடக் குருஅடி வணங்கி அறியேன் சடில
நாதனடி பூசை அறியேன்
நான் மனிதன் உருவாகிப் பூமியில் சன்மித்தும்
நலமான செல்வம் அறியேன்
கடல் சூழும் இவ்வுலகில் என்போலும் மூடனைக்
கண்ட துண்டோ வரம்அருளுவாய்
காமாட்சி உந்தனுடபாதமே நம்பினேன்
கன்ம வினை அணுகாமலே
தடுத்தடிமை கொண்டெனைக் கடைத்தேறவே அருள்இத்
தரணிபுகழ் ஒற்றியூர் வாழ்
தங்கமலர் நாதர்சடை கங்கை உருவானகொடி
திங்கள் ஒளிவான வடிவே.

11. மண்ணினில் இருக்களவும் இன்று முதலாகவும்
மனு ஒன்று கேட்ப தறியேன்
மாறாத செல்வமும் தேறாத கல்வியும்
மனுநீதி ஞான வழியும்
கண்ணிலிரு நாடாமல் காயமிக வாடாமல்
கைகால்கள் நோகா மலே
காலனுக்கு அங்சாமல் கலிஎனும் மிஞ்சாமல்
கடுஞ் சுனம் வாராமலே
பண்ணவே தருமமும் இனிய உபகாரமும்
பசித்த பேர்க்கு அமுது தரவும்
பாருலகில் உந்தனுட பாதத்தை நம்பினேன்
பட்சம் வைத்து இரட்சியம்மா
தண்ணிதழ் மாலை அணி தர்ப்பரர்க்கு அமுதே
தரணிபுகழ் ஒற்றியூர் வாழ்
தங்கமலர் நாதர்சடை கங்கை உருவானகொடி
திங்கள் ஒளிவான வடிவே.

வடிவுடை அம்மன் விருத்தம் முற்றும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar