SS அம்பா நவமணி மாலை - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அம்பா நவமணி மாலை
அம்பா நவமணி மாலை
அம்பா நவமணி மாலை

வாணீம் ஜிதஸூகவாணீ மளிகுல
வேணீம் பவாம்புதி த்ரோணீம்
வீணாஸூகஷி ஸூபாணிம்
நதகீர்வாணீம் நமாமி ஸர்வாணீம்

பொருள் : வேதவடிவினளும், தன் இனிய சொற்களினால் கிளியின் பேச்சை வென்றவளும், கருவண்டுக் கூட்டம் போன்ற கூந்தலை உடையவளும், சம்சார சாகரத்தைக் கடக்க உதவும் தோணி போன்றவளும், வீணை, கிளிக்குஞ்சு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவளும், சரஸ்வதியினால் நமஸ்கரிக்கப் பட்டவளும், பரமசிவனுடைய பத்தினியுமான அன்னையை நமஸ்கரிக்கிறேன்.

குவலயதளநீலாங்கீம் குவலயரøக்ஷகதீக்ஷிதாபாங்கீம்
லோசன விஜிதகுரங்கீம் மாதங்கீம் நௌமி
ஸங்கரார்தாதங்கீம்

பொருள் : நீலோத்பவ மலரின் வண்ணம்போன்ற சரீரத்தை உடையவளும், பூமண்டலத்தைக் காப்பதையே தனது லட்சியமாகக் கொண்டவளும், கண்களினால் பெண் மான்களை வென்றவளும், மதங்க மகரிஷியின் மகளும், சங்கரனின் மனம் கவர்ந்தவளுமான அம்பாளை வணங்குகிறேன்.

கமலாகமலஜகாந்தா தரஸாரஸ
தத்தகாந்த கரகமலாம்
கரயுகலவித்ருதகமலாம் விமலாம்
கமலாங்க சூட ஸகலகலாம்

பொருள் : லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் ஏந்தியிருக்கும் தாமரை போன்ற மென்மையான கைகளை உடையவளும், இரண்டு கைகளிலும் தாமரையைத் தரித்தவளும், தூய்மையானவளும், சந்திர சூடனான பரமசிவனுடைய சகலவித்யைகளின் உருவமாக இருப்பவளுமான பராசக்தியை பூஜிக்கிறேன்.

ஸுந்தர ஹிமகர மதனாம் குந்தஸூரதனும்
முகுந்த நிதிஸதனாம்
கருணேஜ்ஜீவித மதனாம் ஸரகுஸலாயா
ஸுரேக்ஷüக்ருதகதனாம்

பொருள் : அழகிய சந்திரன் போன்ற முகத்தை உடையவளும், முல்லைமலர் போன்ற பற்களை உடையவளும், முகுந்தம் என்ற நிதிக்கு (நவநிதிகளில் ஒன்று) இருப்பிடமானவளும், மன்மதனை கருணையினால் உயிர்த்தவளும், தேவர்களின் நலனுக்காக அசுரர்களை அழித்தவளுமான பராசக்தியை துதிக்கிறேன்.

துங்கஸ்தன ஜிதகும்பாம் க்ருத பரிரம்பாம்
ஷிவேன குஹடிம்பாம்
தாரித ஸும்ப நிஸும்பாம் நர்த்திதரம்பாம்
புரோ விகததம்பாம்

பொருள் : உன்னதமான ஸ்தனங்களினால் குடத்தை வென்றவளும், பரமசிவனால் அணைத்துக் கொள்ளப்பட்டவளும்; ஸகந்தமாதாவும், சும்பன் நிசும்பன் ஆகிய அசுரர்களை வதம் செய்தவளும், தன் முன்னால் ரம்பை என்ற அப்சர மங்கையை நடனம் செய்கின்ற பெருமையை உடையவளும், அகங்காரமில்லாத மற்றவளுமான அன்னையை வணங்குகிறேன்.

அருணாதரஜிதபிம்பாம் ஜகதம்பாம்
கமனவிஜித காதம்பாம்
பாலித ஸுஜன கதம்பாம் ப்ருதுல
நிதம்பாம் பஜே ஸஹேரம்பாம்

பொருள் : கோவைப்பழத்தை வென்ற சிவந்த கீழுதடை உடையவளும், லோகமாதாவும், நடையினால் அன்னத்தை வென்றவளும், பக்தர்களின் குடும்பத்தைக் காப்பாற்றுபவளும், பெரிதான பின்பாகத்தையுடையவளும், கணபதியுடன் காட்சிதருபவளுமான அம்பிகையை ஆராதிக்கிறேன்.

ஸரணாகத ஜன பரணாம்
கருணா வருணாலயம் நவாவரணாம்
மணிமய திவ்யாபரணாம் சரணாம்
போஜாத ஸேவ கோத்தரணாம்

பொருள் : சரணடையும் பக்தர்களை ரக்ஷிப்பவளும், கருணைக் கடலாயிருப்பவளும், பாத கமலங்களை சேவிக்கின்றவர்களை துன்பத்திலிருந்து விடுவிப்பவளுமான தேவி தங்களைத் தவிர வேறு யாரையும் நான் அறியவில்லை.

நதஜனரக்ஷõ தீஷாம் தக்ஷõம்
ப்ரத்யக்ஷதைவதாத் யக்ஷõம்
வாஹீக்ருத ஹர்யக்ஷõம்
க்ஷபிதவிபக்ஷõம் ஸீரேஷுக்ருதரக்ஷõம்

பொருள் : நமஸ்கரிக்கும் அடியவரை ரட்சிப்பதையே விரதமாகக் கொண்டவளும், சாமர்த்தியமுள்ளவளும், சூரியன் முதலான தேவதைகளுக்கும் அதிபதியான தேவியாக விருப்பவளும், சிம்மவாஹினியும், சத்ருக்களை அழிப்பவளும், தேவர்களை காத்தருளும் தேவியுமான தங்களைத் தவிர வேறு யாரையும் நான் அறியேன்.

தன்யாம் ஸுரவரமான்யாம் ஹிமகிரி
கன்யாம் த்ரிலோக மூர்த்தன்யாம்
விஹ்ருத ஸுரத்ரும வன்யாம் வேத்மி
வினா த்வாம் ந தேவதாஸ்வன்யாம்

பொருள் : பாக்கியமுள்ளவளும், தேவர்களால் வணங்கத்தக்கவளும், இமயகுமாரியும், மூன்று உலகங்களிலும் சிறந்தவளும், மந்தாரம் முதலிய தேவ விருட்சங்கள் அடங்கிய தோட்டத்தில் விளையாடுபவளான தங்களைத் தவிர வேறு தெய்வத்தை நான் அறியவில்லை.

ஏதாம் நவமணி மாலாம் படந்தி
பக்த்யேஹ யே பராஸக்த்யா:
தேஷாம் வதனே ஸதனே ந்ருத்யதி
வாணீ ரமா ச பரமமுதா

பொருள் : பராசக்தி மேலான இந்த நவமணி மாலையை பக்தியுடன் எவர்கள் படிக்கிறார்களோ அவர்களின் வாக்கில் சரஸ்வதியும், வீட்டில் மஹாலட்சுமியும் மிக பூரிப்புடன் நடனமாடுகின்றனர்.

பாதய வா பாதாளே ஸ்தாபய வா
ஸகல புவன ஸாம் ராஜ்யே
மாதஸ்தவ பதயுகளம் நாஹம்
முஞ்சாமி நைவ முஞ்சாமி

பொருள் : பராசக்தி தாயே, தாங்கள் என்னை அதல பாதாளத்தில் தள்ளினாலும் சரி, பெரிய சாம் ராஜ்யத்திற்கு அதிபதியாக்கினா<லும் சரி, தங்களின் இரண்டு பாதங்களையும் நான் விட மாட்டேன், விடவே மாட்டேன்.

அற்புதமான இத்துதியை சொல்பவர் இல்லத்தில் அம்மன் திருவருளால் அனைத்து வளமும் நலமும் சேரும். அஷ்ட லட்சுமி கடாட்சம் அகலாமல் நிலைக்கும்.

அம்பா நவமணிமாலை முற்றிற்று.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar