SS சோடச மகாலட்சுமி வழிபாடு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சோடச மகாலட்சுமி வழிபாடு
சோடச மகாலட்சுமி வழிபாடு
சோடச மகாலட்சுமி வழிபாடு

1. தனலட்சுமி

ஸகல உயிர்களிடத்தும் நிறைவாக இருப்பவள் ஸ்ரீ தனலெட்சுமி. எனவே நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் இருக்க வேண்டும். போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்து ஸ்ரீதனலெட்சுமியின் அருளை பரிபூர்ணமாகப் பெறலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் சகலப் பிராணிகளிடமும் புஷ்டி (நிறைவு) உருவத்தில் இருக்கின்றாளோ அந்த ஐஸ்வர்ய லட்சுமியை நான் வணங்குகிறேன்.

2. வித்யாலட்சுமி

எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்தவேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார்மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலெட்சுமியின் அனுகிரகத்தைப் பெறலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் புத்தி உருவில் இருக்கின்றாளோ அந்த வித்யாலெட்சுமியை வணங்குகிறேன்.

3. தான்யலட்சுமி

ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் நாம், நம் பசியைத் தீர்த்துக் கொள்வதோடு நில்லாமல் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான்ய லட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு க்ஷúதாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பசி உருவில் இருக்கின்றாளோ அந்த தான்யலட்சுமியை வணங்குகின்றேன்.

4. வீரலட்சுமி

உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும், பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும். செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மண உறுதியுடன் ஸ்ரீவீரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

யாதேவீ ஸர்வபூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தைரிய உருவில் இருக்கின்றாளோ அந்த வீரலட்சுமியை வணங்குகிறேன்.

5. சௌபாக்யலட்சுமி

ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு, மற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்து ஸ்ரீஸெளபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு துஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாளோ அந்த ஸெளபாக்கிய லட்சுமியை வணங்குகிறேன்.

6. சந்தானலட்சுமி

எல்லா உயிர்களிடத்தும் தாய் உருக் கொண்டிருக்கும் ஸ்ரீஸந்தானலட்சுமியின் அருளைப் பெற எல்லாக் குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண்டும். தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பார்கள். தாயன்போடு ஸ்ரீஸந்தான லட்சுமியைத் துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

யாதேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் இருக்கின்றாளோ அந்த ஸந்தான லட்சுமியை வணங்குகிறேன்.

7. காருண்யலட்சுமி

சகல ஜீவன்களிடத்தும் கருணையோடு பழகவேண்டும். உயிர்வதை கூடாது. மற்ற உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை. ஜீவ காருண்யத்தோடு வாழ்ந்தால் ஸ்ரீகாருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு தயாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தயை உருவில் இருக்கின்றாளோ அந்த காருண்ய லட்சுமியை வணங்குகிறேன்.

8. மகாலட்சுமி

நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் ஸ்திரமாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீமகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள். இதை விடுத்து பிறரிடம் எதையாவது பெற வேண்டும். என்ற எண்ணத்துடனிருந்தால் மற்றவர்களிடம் கையேந்தும் நிலையில் தான் நம் வாழ்க்கை அமையும். இரைக்கின்ற கிணறு சுரக்கும், கொடுத்தால் நிச்சயம் கிடைக்கும்.

யாதேவீ ஸர்வபூதேஷு மஹாலட்சுமிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் செல்வ உருவில் இருக்கின்றாளோ அந்த வைபவ லட்சுமியை வணங்குகிறேன்.

9. சக்திலட்சுமி

ஸ்ரீ தேவியானவள் எல்லா உயிர்களுக்கும் தானே சக்தி வடிவமாக இருக்கிறாள். எனவே எந்த வேலையையும் என்னால் முடியாது என்று சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

யாதேவீ ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

எல்லா உயிரினங்களிடத்தும் எந்த தேவீ சக்தி வடிவில் இருக்கின்றாளோ, அந்த சக்தி லட்சுமியை வணங்குகிறேன்.

10. சாந்திலட்சுமி

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாமே சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லெட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் சாந்தி உருவில் இருக்கின்றாளோ அந்த சாந்தி லட்சுமியை வணங்குகிறேன்.

11. சாயாலட்சுமி

நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையைச் செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்த்து ஸ்ரீச்சாயா லட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

யாதேவீ ஸர்வபூதேஷு ச்சாயாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பிரதி பிம்ப வடிவில் இருக்கின்றாளோ அந்த சாயா லட்சுமியை வணங்குகிறேன்.

12. த்ருஷ்ணாலட்சுமி

எப்பொழுதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்கவேண்டும். பிறருக்கு உதவ வேண்டும். ஞானம் பெற வேண்டும். பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணா லட்சுமியைத் துதித்து நலமடையலாம்.

யாதேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் ஆசை உருவில் இருக்கின்றாளோ அந்த த்ருஷ்ணா லட்சுமியை வணங்குகிறேன்.

13. சாந்தலட்சுமி

எல்லா உயிர்களிடத்தும் பொறுமை உருவில் இருக்கும் ஸ்ரீக்ஷõந்த லட்சுமியை தியானிப்போம். பொறுமை கடலினும் பெரிது, பொறுத்தார் பூமியை ஆள்வார், பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

யாதேவீ ஸர்வபூதேஷு க்ஷõந்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பொறுமை வடிவில் இருக்கின்றாளோ அந்த சாந்த லட்சுமியை நமஸ்க்கரிக்கின்றேன்.

14. கீர்த்திலட்சுமி

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

யாதேவீ ஸர்வபூதேஷு கீர்த்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் கீர்த்தி வடிவில் இருக்கின்றாளோ அந்த கீர்த்தி லட்சுமியை வணங்குகிறேன்.

15. விஜயலட்சுமி

விடாத முயற்சியும், உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜய லட்சுமி எப்பொழுதும் நம்முடனிருப்பாள்.

யாதேவீ ஸர்வபூதேஷு விஜயரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் வெற்றி வடிவில் இருக்கின்றாளோ அந்த விஜய லட்சுமியை வணங்குகிறேன்.

16. ஆரோக்கியலட்சுமி

நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது. உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கோபம், பொறாமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்கி அவள் அருள் பெற்று வளமுடன் வாழ்வோம்.

யாதேவீ ஸர்வபூதேஷு காந்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய உருவில் உறைகின்றாளோ அந்த ஆரோக்கிய லட்சுமியை நமஸ்க்கரிக்கின்றேன்.

தேவர்களால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தில் அவரவர் விரும்பியதை 108 முறை சொன்னால் விரும்பியது விரைவில் கிடைக்கும். நமஸ்தேஸ்து என்று சொல்லும் போதெல்லாம் நமஸ்காரம் செய்த பலன் விரைவில் கிடைக்கும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar