SS தாரா அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தாரா அஷ்டோத்திர சத நாமாவளி
தாரா அஷ்டோத்திர சத நாமாவளி
தாரா அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் தாரண்யை நம
ஓம் தரலாயை நம
ஓம் தன்வ்யை நம
ஓம் தாராயை நம
ஓம் தருணவல்லர்யை நம
ஓம் தீர ரூபாதர்யை நம
ஓம் ச்யாமாயை நம
ஓம் தனுக்ஷீணபயோதராயை நம
ஓம் துரீயாயை நம
ஓம் தரலாயை நம

ஓம் தீவ்ரகமனாயை நம
ஓம் நீலவாஹின்யை நம
ஓம் உக்ரதாராயை நம
ஓம் ஜயாயை நம
ஓம் சண்ட்யை நம
ஓம் ஸ்ரீ மதேக ஜடாசிராயை நம
ஓம் தருண்யை நம
ஓம் சாம்பவ்யை நம
ஓம் சின்ன பாலாயை நம
ஓம் பத்ரதாரிண்யை நம

ஓம் உக்ராயை நம
ஓம் உக்ரப்ரபாயை நம
ஓம் நீலாயை நம
ஓம் க்ருஷ்ணாயை நம
ஓம் நீல சரஸ்வத்யை நம
ஓம் த்விதீயாயை நம
ஓம் சோபனாயை நம
ஓம் நித்யாயை நம
ஓம் நவீனாயை நம
ஓம் நித்யநூதனனாயை நம

ஓம் சண்டிகாயை நம
ஓம் விஜயாராத்யாயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ககனவாஹின்யை நம
ஓம் அட்டஹாஸ்யாயை நம
ஓம் கராளாஸ்யாயை நம
ஓம் சராஸ்யாதிதிபூஜிதாயை நம
ஓம் சுகுணாயை நம
ஓம் சுகுணாராத்யாயை நம
ஓம் ஹரீந்த்ரதேவ பூஜிதாயை நம

ஓம் ரக்தப்ரியாயை நம
ஓம் ரக்தாக்ஷ்யை நம
ஓம் ருதிராஸ்ய விபூஷிதாயை நம
ஓம் பலிப்ரியாயை நம
ஓம் பலிரதாயை நம
ஓம் துர்தாயை நம
ஓம் பலவத்யை நம
ஓம் பலாயை நம
ஓம் பலப்ரியாயை நம
ஓம் பலரதாயை நம

ஓம் பலராமப்ரபூஜிதாயை நம
ஓம் அர்த்தகே சேஸ்வர்யை நம
ஓம் கேசாயை நம
ஓம் கேசவாயை நம
ஓம் சவிபூஷிதாயை நம
ஓம் பத்மாலாயை நம
ஓம் பத்மாக்ஷ்யை நம
ஓம் காமாக்யாயை நம
ஓம் கிரிநந்தின்யை நம
ஓம் தக்ஷிணாயை நம

ஓம் தக்ஷõயை  நம
ஓம் தக்ஷஜாயை நம
ஓம் தக்ஷிணேரதாயை நம
ஓம் வஜ்ரபுஷ்பப்ரியாயை நம
ஓம் ரக்தப்ரியாயை நம
ஓம் குசுமபூஷிதாயை நம
ஓம் மாஹேஸ்வர்யை நம
ஓம் மஹாதேவப்ரியாயை நம
ஓம் பஞ்சவிபூஷிதாயை நம
ஓம் இடாயை நம

ஓம் பிங்களாயை நம
ஓம் கஷும்னாப்ராண ரூபிண்யை நம
ஓம் காந்தார்யை நம
ஓம் பஞ்சம்யை நம
ஓம் பஞ்சானனாதி பரிபூஜிதாயை நம
ஓம் தத்ய வித்யாயை நம
ஓம் தத்ய ரூபாயை நம
ஓம் தத்யமார்கானுசாரிண்யை நம
ஓம் தத்வரூபாயை நம
ஓம் தத்வப்ரியாயை நம

ஓம் தத்வஞானாத் மிகானகாயை நம
ஓம் தாண்டவா சார சந்துஷ்டாயை நம
ஓம் தாண்டவப்ரியாகாரிண்யை நம
ஓம் தாளதானரதாயை நம
ஓம் க்ரூரதாபின்யை நம
ஓம் தரணிப்ரபாயை நம
ஓம் த்ரபாயுக்தாயை நம
ஓம் த்ரபாமுக்தாயை நம
ஓம் தர்பிதாயை நம
ஓம் த்ருப்திகாரிண்யை நம

ஓம் தாருண்ய பாவசந்துஷ்டாயை நம
ஓம் சக்தி பக்தானுராகிண்யை நம
ஓம் சிவாசக்தாயை நம
ஓம் சிவரத்யை நம
ஓம் சிவபக்தி பராயணாயை நம
ஓம் தாம்ரத்யுத்யை நம
ஓம் தாம்ர ராகாயை நம
ஓம் தாம்ர பாத்ரபோஜின்யை நம
ஓம் பலபத்ரப்ரேமரதாயை நம
ஓம் பலிபுக்யை நம

ஓம் பலிகல்பின்யை நம
ஓம் ராமரூபாயை நம
ஓம் ராமசக்த்யை நம
ஓம் ராமரூபானுகாரிண்யை நம
ஓம் ராமாயை நம
ஓம் ரதிரூபாயை நம
ஓம் தத்வமயை நம
ஓம் தாராதேவியை நம

உக்ரதாரா, நீலஸரஸ்வதி, ஏகஜடா என்ற 3 பெயர்களால் கூறப்படுபவள். தாரா கருநீல நிறத்தினள். தாராவின் கையில் உள்ள, கத்திரிக்கோல் அவளைக் காளியிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. புத்த மதத்தைப் பின்பற்றும் திபெத்தியர்களுக்கு தாரா கருணைக் கடவுள். இரக்க குணமுள்ளவள். அண்ட சராசரங்களைத் தன்னுள் கொண்டுள்ளதால், கர்ப்பிணிப் பெண்ணைப் போல் சற்று மேடான வயிற்றை உடையவள். பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆல கால விஷத்தை அருந்திய சிவனுக்கு தாயைப் போல் பாலூட்டிக் காப்பாற்றி, இறைவனுக்கும் தாயானவள்.

வாக்குத் திறமையை அளிப்பதில் வல்லவள். கவிதை நடையிலும் உரைநடையிலும் சிறப்பாக எழுதும் ஆற்றலைத் தருவதில் வல்லவள். தன்னை வழிபடும் உண்மையான பக்தனை மிகப்பெரிய பேராபத்திலிருந்தும் காப்பாற்றிப் பாதுகாக்கும் சக்தியினள். துர்வாஸர், வால்மீகி, பரத்வாஜர் ஆகியோர் தாராவை ஆராதித்து பெரும்பேறு பெற்றனர் என்று தாரா தந்திரம் கூறுகிறது. கைலாயமலை பரிக்ரமாவில், இரண்டாம் நாள் வரும் டோல்மாபாஸ் பகுதியின் காவல் தெய்வம் தாரா. அதனால் டோல்மாபாஸ் பகுதி தாரா பீடம் என்று அழைக்கப்படுகிறது. தாரா தேவியினது கோயில் இமாசலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள தாரா தேவி மலையில் உள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள தாம்லுக் என்ற துறைமுக நகரிலும் தேவதச்சன் விஸ்வகர்மா கட்டிய கோயில் உள்ளது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar