SS அதர்வண பத்ரகாளி (பிரத்தியங்கிரா) திருவருள்மாலை - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அதர்வண பத்ரகாளி (பிரத்தியங்கிரா) திருவருள்மாலை
அதர்வண பத்ரகாளி (பிரத்தியங்கிரா) திருவருள்மாலை
அதர்வண பத்ரகாளி (பிரத்தியங்கிரா) திருவருள்மாலை

திருமலியும் வாழ்வருளி அன்பரைக் காப்பதே
சித்தமாயுள்ள தெய்வம்
திப்பிய மறைச் சிரத்தேறி விளையாடுமிரு
திருவடிகள் உடைய தெய்வம்
உறுமலியுமாற்றலால் நன்மக்கள் வாழ்வுபெற
ஊறுபுரி தீயமக்கள்
ஒடுங்குவது வேண்டியே படைக்கலம் பலவேந்தும்
ஒப்பற்ற சமரசக்தி
தருமலியும் வாழ்வுபெறு மிந்திரனும் வானவரும்
சரண்புகுந்தேத்து தெய்வம்
சாதுசனமென்றுமே தீது கண்டிடையாத
சக்தி தருமிக்க தெய்வம்
பருவமழை போலவே அருள்பொழியும் விழிகொண்ட
பரம கலியாண தெய்வம்
பத்திரகாளிப் பெயரின் வைத்த மந்திரதெய்வம்
பரிவுடனெமக் கருள்கவே.

ஓங்கார வுருவாகி யதனுளுறை பொருளாகி
உலகெலாம் ஆளும் இறைவி
உண்மையின் விளக்கத்தை மெய்யன்பர்உணரவே
உருவெடுத் தருளும் இறைவி
ஆங்காரமானுக்கும் அப்பால் நிலைத்துள்ள
அற்புதத் தெய்வம் நீயே
ஆதலால் உலகுயிர்கள் எல்லாம் பணிந்து நின
தருள் வெள்ளம் ஆடுகின்ற
தீங்காய எண்ணமும் தீங்காய செய்கையும்
தீங்காய மொழியுமேந்தித்
திசையெல்லாம் தம்மைப் பழிக்கவே பிறர்மனம்
தேம்பும் வணம் வாழும் மாக்கள்
பாங்காக நல்லறிவை யெய்தவே படையேந்து
பலகரம் கொண்ட பெரியாய்
பத்திரகாளிப் பெயரின் வைத்த மந்திரதெய்வம்
பரிவுடனெமக் கருள்கவே.

கராள வுருவய்கொண்ட காளியென நின்னன்பர்
கனிவி னோடோதுகின்றார்
கருணையிற் பெரியையென மகிமையிற் பெரியையெனக்
காதலொடு மோதுகின்னார்
சராசரமனைத்துக்கும் உள்ளிரு தருள்பொழிதல்
சக்திநின் செயலாகுமே
சாந்தவானந்தர் புரி மந்திரத் திருவேள்வி
தன்னிலே வந்து நின்றாய்
பராபரை யெனச்சொல்க பரமபாவனையென்ப
பாடாத பாட்டினுள்ளாய்
பக்குவ மனத்திடையில் நிற்பதற் குரிமையுள
பழம்பெருந் தெய்வம் அலையோ
பராசரை சிதானந்த பகவதி பகவதி பரமேட்டி
பார்த்தருள வேண்டுகின்றோம்
பத்திரகாளிப் பெயரின் வைத்த மந்திரதெய்வம்
பரிவுடனெமக் கருள்கவே.

பயன்

அறங்கள் பல பல்லாண்டு பல்கிவரும் அரசாய
அரும்பெரும் புதுக்கோட்டையில்
அறிவர் பெருமக்கள் பணி
சதாசிவப்பிரம்மமெனும்
ஆனந்தமூர்த்தி நிலையில்
அறங்கள் வரைப்புகும் புவனேசி ஆகியவள்
அகிலாண்ட நாயகி சிவை
அருளினால் ஆண்டுதோறும் நடைபெறும் வேள்விகளில்
ஆண்டு பரிதாபியினிலே
திறங்களே வளர்வுபெற அருள் பத்திரகாளியின்
திருவருள் இலக்ஷ ஹோமம்
சிறப்புற நிகழ்த்துவது சித்தத்தில் ஏற்றகுரு
சேவை தெளி சாந்த முனிவர்
புறங்களே அகமோடு பூரிப்பை எய்தவே
பொலிவு பெற ஆற்றும் வேள்வி
புவியெலாம் நன்மைபெற வாய்த்ததென வானவர்கள்
புகழுவார் மகிழுவாரே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar