SS வாராஹி சித்தி அர்ச்சனை - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வாராஹி சித்தி அர்ச்சனை
வாராஹி சித்தி அர்ச்சனை
வாராஹி சித்தி அர்ச்சனை

ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ பகவத்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ வார்த்தாள்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ வாராஹ்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ வாராஹமுக்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ அந்தே அந்தின்யை நமோ நம:

ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ருந்தே ருந்தின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ஜம்பின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ மோஹே மோஹின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ஸ்தம்பே ஸ்தம்பின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ஸர்வ துஷ்ட நிவாரிண்யை நமோ நம:

ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ஸர்வ பிரதுஷ்ட நிவாரிண்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ சாஸ்திர வித்யாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ அசேஷஜன சேவிதாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ அதிய கார்யசித்திதாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ வாக் விலாசின்யை நமோ நம:

ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ சத்ருவாக் ஸ்தம்பின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ நித்ய வைபவாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ நித்ய சந்தோஷின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ பஞ்சமி திதி ரூபிண்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ பஞ்சமி சித்தி தேவ்யை நமோ நம:

ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ மணிமகுட பூஷணாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ மணிமண்டப வாசின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ரத்த மாம்ஸ ப்ரியாயை  நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ ரக்த மால்யாம்பரதராயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ கபால ஹஸ்த வாமாயை நமோ நம:

ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ கபாலி ப்ரிய தண்டின்யை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ அச்வாரூடாம்பிகாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ அச்வமந்த்ர அதிஷ்டாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ தண்ட நாயகி திவ்யாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ தண்டினி தக்ஷிணி தருணாயை நமோ நம:

ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ நித்ய சௌபாக்ய சௌந்தர்யாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ நித்யா நித்ய நிர்மலாயை நமோ நம:
ஓம்-ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-நமோ நித்ய வைபவ வாராஹ்யை நமோ நம:

இந்த ஸ்ரீ வாராஹி ஸித்தி அர்ச்சனையை வாராஹி உபாசகர்கள் தங்கள் பூஜையில் உபயோகிக்கலாம். ஜெபம் செய்த பிறகு இந்த அர்ச்சனையைச் செய்வது சிறப்பு. அர்ச்சிக்க சிவப்பு மலர்கள், சிறப்பாக விருக்ஷிப்பூ என்ற சிவப்பு தெத்திப்பூ, செம்பரத்தம் பூ, ரத்த செம்மை நிறமுடைய சிவப்பு அரளி, மாதுளம்பூ-இதைப் போன்ற செம்மை நிறமுடைய பூக்கள் சிறந்தன. இப்பூக்களை ரக்த சந்தனத்தில் தோய்த்து அர்ச்சிப்பது மிகச் சிறந்தது. கிடைக்காத நிலையில் சிவப்பு குங்குமத்தில் தோய்த்தும் அர்ச்சிக்கலாம்.

அர்ச்சனையை ஜெப முடிவில் செய்யலாம் என்றாலும் காலை சந்தியிலும், மாலை சந்தியா காலத்திலும், ராக்காலங்களிலும் அர்ச்சிக்கலாம். காலையில் சந்தனத்திலும், மாலையில் செந்நிற குங்குமத்திலும், இரவில்  குருதி தீர்த்தங்களிலும் ஹரித்ரா சூர்ணங்களிலும் தோய்த்து அர்ச்சிக்க பலன்கள் மிகுதி.

இரவு நேரங்களிலும், காலங்களின் சந்திப்புக்களிலும் செய்வது சிறப்பு. இப்படி செய்ய முடியாதவர்கள், இந்த அர்ச்சனையை இயன்றபோது செய்து கொள்ளலாம். காலையில் கால் பங்கும், மாலையில் முக்கால் பங்கும், இரவு நேரங்களில் முழுப் பங்கும் பலன் கிடைக்கும். சிறப்பாக, செம்மாதுளை முத்துக்களால் அர்ச்சித்தால், நவக்கிரக தோஷமும் செவ்வாய் தோஷமும் விலகும். சம்பத் அபிவிருத்தியாகும்.

இந்த அர்ச்சனை ஸ்ரீமத் மந்திர அர்ச்சனை. இதை உபதேசம் பெற்றவர்கள் அர்ச்சிப்பதுடன் ஹோமமும் செய்யலாம். ஹோமம் செய்யும்போது ஒரு நாமாவுக்கு ஒரு திரவியம் வீதம் ஆகுதி தரவேண்டும். இயலாதவர்கள் ஆஜ்யத்தால் ஹோமம் செய்யலாம். ரத்த புஷ்பத்தாலும், ஹரித்ரான்னத்தை சிறு கவளங்களாக உருட்டியும் ஹோமத்தில் சேர்க்க சத்துரு நிவாரணம் ஆகும். நெய்யில் தோய்த்தும், சந்தனத்தில் தோய்த்தும், பாயசம், எள், பசுநெய் மூன்றையும் கலந்து கொண்டு, தங்கக் கிண்ணத்தில் வைத்துக் கொண்டு, தங்கக் கரண்டியால் ஆகுதி தந்தால், செல்வச் செழிப்பு பெருகும். பிரிந்தவர் சேருவார்கள். நட்பை நாடுபவர்களுடன் நட்பு வளரும். சொர்ண பிருங்கராஜ யந்திரத்தால் ஹோமம் செய்ய, வெப்பு நோய் விலகும். கண்பார்வை படிப்படியாக வளர்ச்சி அடையும். கண்நோய்கள் குறையும். திரிதள வில்வம் - மாதுளம் புஷ்பம், கரவீரபுஷ்பம், மதுபுஷ்பம் இவைகள் தனிச் சிறப்புடைய ஹோம புஷ்பங்கள், தேன், நெற்பொரி, எள்ளு உருண்டைப் பண்டங்களும் ஏற்ற ஹோம திரவியங்கள்.

வாராஹியின் செல்வர்களுக்கு சிறந்த உச்சாடனக் கோல் வாராஹி மாலை. வாராஹி தேவியின் உபாஸகர்களான உங்களைப் பயம் தேடி வரவே பயப்படும். உங்கள் சத்துரு உங்களின் மித்துரு உங்கள் கவலைகளை அவளே ஏற்று அதைப் போக்கி விடுவாள். மாதுளம்பழ முத்துக்களும் அவள் பற்களும் ஒரே நிறத்தன. மாதுளம் பழத்தை அவள் திருவடிகளில் அர்ச்சிப்பவர்களுக்கு, அவள் மரகதக் கற்களை அவர்கள் வீட்டில் கொண்டு சேர்க்கிறாள். இத்தகைய புகழ்பெற்ற வாராஹி அம்மனுக்கு தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரிய கோயிலில் தனிக் கோயில் உள்ளது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar