SS தட்சிணாமூர்த்தி அஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தட்சிணாமூர்த்தி அஷ்டகம்
தட்சிணாமூர்த்தி அஷ்டகம்
தட்சிணாமூர்த்தி அஷ்டகம்

வ்ருஷ தேவர் அருளியது.

அகணித குணகணமப்ரமே மாத்யம்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்!
உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

எண்ணுதற்கரிய குணமுடையவரும், காட்சி முதலிய பிரமாணங்களால் அறியவொண்ணாதவரும், உலகங்களைப் படைத்து, காத்து, அழிக்கக் காரணமாயும், சாந்தமான யோகிகளினுள்ளத்தில் குடிகொண்டவரும், முதல்வருமான தக்ஷிணாமூர்த்தியை இடையறாது நான் துதிக்கின்றேன்.

நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்
நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபின தவாக்னி நாமதேயம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

வரம்பிலாத இன்பமுடையவரும், விருப்பங்களை அளிப்பவரும், வணங்கியவரின் மனக்கவலைகளைத் தீர்ப்பதில் வல்லுநரும், காட்டைத் தீ அழிப்பதுபோலத் தன் நாமத்தை உச்சரித்த அளவில் பிறவிக் கடலைக் கடக்கச் செய்கின்றவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

த்ரிபுவனகுரும் ஆகமைக ப்ரமாணம்
த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

மூவுலகிற்கு குருவாயும், ஆகமங்களால் உணரப்படுபவரும், உலகங்களுக்குக் காரணமான யோகமாயையுடையவரும், நூறு சூரியன்போல் ஒளிர்பவரும், இஷ்டங்களை அளிப்பவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்மத்வய பாவிணாம் அதூரம்
பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

உலக வாழ்க்கையை நினைப்பவர்கட்கு எட்டாதவரும், தாமரை அடியிணைகளை தியானிப்பவருக்கு அண்மையிலுள்ள பிறவிக் கடலைத் தாண்ட கப்பல்போன்ற திருவடிகளை உடையவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

க்ருத நிலய மனிசம் வடாகமூலே
நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

எப்போதும் ஆலமரத்தடியிலிருப்பவரும், உபநிடதங்களால் உணர்த்தப்பெறும் உடலுடையவரும், கைவிரலிலுள்ள சின் முத்திரையினால் மெய்ஞ்ஞானம் உணர்த்துபவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்
க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

பிரம்மபுத்திரனால் பூஜிக்கப்பட்ட திருவடித்தாமரைகளில் வணங்கியோர்களுக்கு வீடுபேறு அளிக்க வல்லமையுடையவரும், குருகுலவாசம் செய்த யோகிகளுக்கு நண்பருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்
ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!
பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

துறவிகளினுள்ளத்தில் விளங்குபவரும், கோடி மன்மதனை யொத்த அழகினை உடையவரும், பரோபகாரிகளுக்குச் சேவிக்கத்தக்க முதல்வருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்
ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

புன்முறுவல் பூத்த மலர்ந்த முகமுடையவரும், மறைகளாலறியப்படுபவரும், விடையேறிய வெண்தாமரை போன்ற ஒளிமிக்க திருமேனியுடையவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.

வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:
ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்
வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!!

விருஷபதேவரால் இயற்றப்பட்ட இஷ்டங்களை அளிக்கவல்ல இத்துதியைத் தக்ஷிணாமூர்த்தியின் சன்னதியில் படிப்பவர் சகல துக்கங்களிலும் பாபங்களினும் விடுபட்டவராய் மெய்ஞ்ஞானம் பெற்றுச் சிவலோகத்தில் வாழ்வார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar