SS கைலாச ஸம்ஹிதையில் பஞ்சரத்ன ஸ்தோத்ரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கைலாச ஸம்ஹிதையில் பஞ்சரத்ன ஸ்தோத்ரம்
கைலாச ஸம்ஹிதையில் பஞ்சரத்ன ஸ்தோத்ரம்
கைலாச ஸம்ஹிதையில் பஞ்சரத்ன ஸ்தோத்ரம்

மத்தரோக சிரோபரிஸ்தித ந்ருத்ய மானபதாம்புஜம்!
பக்த சிந்நித சித்திதான விசக்ஷணம் கமலேக்ஷணம்!!
புக்தி முக்தி பலப்ரதம் புவி பத்ம ஜாச்யுத பூஜிதம்!
தக்ஷிணாமுக மாஸ்ரயே மம ஸர்வ ஸித்தித மீஸ்வரம்!!

அறியாமை வடிவாகிய பூதத்தின்மீது நிருத்தரூபமாக ஒரு பாதக் கமலத்தை வைத்திருப்பவராகவும், அடியார்களின் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவதில் நிபுணராகவும், தாமரை யொத்த கண்களை யுடையவராகவும், போக மோக்ஷங்கள் அளிப்பவராகவும், பூலோகத்தில் பிரம்மன், விஷ்ணு முதலியோர்களால் பூஜிக்கப்பட்டவராகவும், அடியேனுக்கு எல்லா சித்திகளையும் அருளிச் செய்பவராகவும் இருக்கும் தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

வித்ததப்ரிய மர்ச்சிதம் க்ருதக்ருச்ர தீவ்ர தபோவ்ரதை:
முக்திகாமி பிராச்ரிதைர்முஹீர் முனிபிர்த்ருட மானஸை:
முக்திதர் திஜ பாத பங்கஜ ஸக்த மானஸ யோகினாம்
தக்ஷிணாமுக மாஸ்ரயே மம சர்வ ஸித்தித மீஸ்வரம்.

குபேரன், தீவிர தபஸ்விகள், மோக்ஷத்தை விரும்புபவர்கள், மேலும் மன உறுதிபெற்ற முனிவர்கள் இவர்களால் பூஜிக்கப்படுபவரும், தன்னையடைந்த யோகிகளுக்கு முக்தியை அளிப்பவருமாகிய தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

க்ருத்த தக்ஷ மகாதிபம் வர வீரபத்ர கணேனவை
யக்ஷ ராக்ஷஸ மாத்ய கின்னர தேவ பன்னக வந்திதம்
ரத்னபுக் கணநாத ப்ருத் ப்ரமரார்ச்சிதாங்க்ரி ஸரோருஹம்
தக்ஷிணாமுக மாஸ்ரயே மம ஸர்வ ஸித்தித மீஸ்வரம்.

வீரபத்ரர் முதலிய சுணங்களால் தக்ஷனுடை யாகத்தை அழித்தவரும், இயக்கர், அரக்கர், மானுடர், கின்னரர், தேவர்கள், நாகர்கள், சமுத்திரர்கள், விநாயகர் முதலியோர்களால் வணங்கப்படுபவருமாகிய தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

நக்த நாத கலாதரம் நகஜா பயோதர மண்டல
லிப்த சந்தன பங்க குங்கும முத்ரிதா மல விக்ரஹம்
சக்தி மந்தமசேவு ஸ்ருஷ்டி விதானகே ஸகலப்ரபும்
தக்ஷிணாமுக மாஸ்ரயே மம ஸர்வ ஸித்தித மீஸ்வரம்.

சந்திரப்பிறை சூடியவரும், மலைமகளின் மார்பகத்தில் பூசப்பட்ட சந்தனம், குங்குமம் இவற்றால் அடையாளமிடப்பட்ட நிர்மலமான சரீரத்தையுடையவரும், சக்தியோடுகூடி ஸ்ருஷ்டியைச் செய்யும் காலத்து சகலராகவும் இருக்கிற தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

ரக்த நிரஜ துல்ய பாத பயோஜ ஸன்மணி நூபுரம்
பத்தனத்ரய பேத பேசல பங்கஜாக்ஷ சிலீமுகம்
ஹேம சைல சராஷனம் ப்ருது சிஞ்சினீக்ருத தஷகம்
தக்ஷிணாமுக மாஸ்ரயே மம ஸர்வ ஸித்தித மீஸ்வரம்.

செந்தாமரையொத்த பாதத்தில் நன்மணிகளாலான சதங்கை யணிபவரும், முப்புரங்களையழித்தவரும், இமயமலையில் கைலாசத்தில் சுகமாக வீற்றிருப்பவரும், ப்ருது என்ற அரசனுக்கு அருள்செய்தவருமாகிய தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

ய: படேத்ச தினேதினே ஸ்தவபஞ்சரத்ன முமாபதே!
ப்ராதரேவ மயாக்ருதம் நிகிலாகதூஸ மஹாநலம்!
தஸய புத்ர களத்ர மித்ர தனானி ஸந்து க்ருபா பலாத்
ஹே மகேஸ்வர சங்கராகில விஸ்வநாயக சாஸ்வத!!

ஹே மஹேஸ்வரா! சங்கரா! விஸ்வநாயகா! நிலைபேறானவரே! இந்த பஞ்சரத்ன ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் எவர் துதிக்கின்றாரோ அவருக்கு எல்லா பாபங்களும் அழிந்து, புத்திரன், மனைவி, நண்பர், செல்வம் யாவும் உம்முடைய கருணையால் உண்டாகட்டும். (அகத்தியர் அருளியது)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar