SS பிரத்யங்கிரா உடனுறை ஸ்ரீ மந்திர வாராஹி பஞ்சகம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பிரத்யங்கிரா உடனுறை ஸ்ரீ மந்திர வாராஹி பஞ்சகம்!
பிரத்யங்கிரா உடனுறை ஸ்ரீ மந்திர வாராஹி பஞ்சகம்!
பிரத்யங்கிரா உடனுறை ஸ்ரீ மந்திர வாராஹி பஞ்சகம்!

அயிகிரி நந்தினி மெட்டு:

அந்தினி ருந்தினி ஜம்பினி சர்வ வசீகரி வாராஹி
தண்டினி சத்ருவாக் ஸ்தம்பினி நீசங்கேதா வார்த்தாளி
வந்துனை வணங்கிடச் சமயேஸ்வரி நீ பூமிதானேஸ்வரியே
வந்தனம் மங்களம் தரும் ப்ரத்யங்கிரா உடனுறை வாராஹி

பாங்குடை வலிதையின் ஸ்ரீபுரரக்ஷிணி போத்ரிணி வாராஹி
சிங்கமாம் வஜ்ரகோஷத்தில் அமர்ந்தே துன்பங்கள் களைபவளே
சங்கு சக்கரம் அபயவரம் ஏர் உலக்கை கரங்களிலே
இங்கு பஞ்ச பஞ்சிகா பீடத்திலே என்றும் வாழ்பவள் பஞ்சமியே

முன்னம் விசுக்ரன் எனும் அசுரன் உயிர் மாய்த்தவள் வாராஹி
இன்னும் தாருகாசுர வதம் தனிலே காளிக்கு ஜெயம் தந்தாய்
தன்னிலை தவறிய கம்பாசுரனை வதைத்திட்ட கண்டிகையே
மின்னும் பண்டாசுர வதம் அதனில் நீ லலிதையின் துணையானாய்.

நாடிதினம் தொழ ஓடியே வருவாள் அன்னை வாராஹி
பாடிப்பரவசம் கொண்டிடும் அன்பர் வாக்கினிலே வருவாள்
வீடுகொடுப்பவள் வேண்டும் வரந்தரும் ப்ருஹத் வாராஹியளே
ஆடியிலே நவராத்திரி பூஜையில் பூரிக்கும் பூரணியே

தங்கும் மரகதமாடம் உறைபவள் கிரிசக்ர ரதம் அமர்வாள்
தங்க நிறத்தினள் செம்பட்டுடுத்திச் சந்திரகலை சூடி
மங்காப் புகழுடன் ப்ரயங்கிராவுடன் சேர்ந்தே அருள்புரிவாள்
சங்கடம்தீர் சதுராள் வாராஹியென் வார்த்தைக்கு பலம் சேர்ப்பாள்.

தியானம்:
ஏராளமாய்ச் செல்வம் தன்மடியில் ஏற்றவளாம்
வாராஹி வாராஹி என்றே உன்னை
சீரான அன்புடன் மனமுருகி நான் அழைத்தால்
வாராது இருப்பாளோ வாராஹி எனும் என் தாய்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar