SS ஸ்ரீராமச்சந்திர ஆரதி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஸ்ரீராமச்சந்திர ஆரதி
ஸ்ரீராமச்சந்திர ஆரதி
ஸ்ரீராமச்சந்திர ஆரதி

(துளசிதாசர் சமஸ்கிருத மொழியில் இயற்றியது)

ஸ்ரீராமசந்த்ர க்ருபாலு பஜமன ஹரண பவ பய தாருணம்
நவகஞ்ஜலோசன கஞ்ஜமுக கரகஞ்ஜ பத கஞ்ஜாருணம் ந
பிறப்பு இறப்பு என்ற மிக பயங்கரமான பயத்திலிருந்து நம்மைக் காப்பவனும், அன்றலர்ந்த தாமரை போன்ற கண்கள், வதனம், கைகள் மற்றும் பாதங்களைக் கொண்டு விளங்குபவனுமான கருணாமூர்த்தி ஸ்ரீராமனை மனமே துதிப்பாயாக!

கந்தர்ப அகணித அமித சவி நவ நீலநீரத ஸுந்தரம்
படபீத மானஹு தடித ருசி சுசி நௌமி ஜனக ஸுதாவரம் ந
மன்மதனையும் மயக்கும் பேரெழில் கொண்டவனும், கற்பனைக்கு எட்டாத கவின் பெட்டகமும், நீல நிறமுள்ள புதிய மேகம் போன்று தோற்றம் அளிப்பவனும், நீல மேனியில் மின்னல்போல மின்னும் மஞ்சளாடை அணிந்தவனும், ஜனகனின் தவப்புதல்வி சீதையின் மணாளனுமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

பஜ தீனபந்து தினேச தானவ தைத்ய வம்ச நிகந்தனம்
ரகுநந்த ஆனந்த கந்த கௌசல சந்த தசரத நந்தனம்ந
எளியோருக்கு இனியவனும் ரவிகுலத்தில் உதித்த செம்மலும், அசுரகுலத்தை அடியோடு அழித்தவனும் ரகுகுலத்திலகமும், இன்பமழை பொழியும் மேகமும், கௌசல்யைக்கு மகிழ்ச்சி தரும் சந்திரனும், தசரதருக்கு மிகவும் பிரிய மகனுமான ஸ்ரீராமனின் புகழ் பாடுவாயாக!

சிரமுகுட குண்டல திலக சாரு உதாரு அங்கவிபூஷணம்
ஆஜானு புஜ சர சாபதர ஸங்க்ராம ஜித கரதூஷணம் ந
ஒளிரும் கிரீடமும் காதுகளில் குண்டலங்களும், நெற்றியில் அழகிய திலகமும், உடல் முழுவதும் பல ஆபரணங்களும், முழங்கால் வரை நீண்ட புஜங்களும், கையில் வில்லும் அம்பும் விளங்க, போரில் கரனையும் தூஷணனையும் வென்ற ஸ்ரீராமனைத் துதிப்பாய் மனமே!

இதி வதத துளசீதாஸ சங்கர சேஷ முனிமன ரஞ்ஜனம்
மம ஹ்ருதய கஞ்ஜ நிவாஸகுரு காமாதி கல தல கஞ்ஜனம் ந
சிவனையும், ஆதிசேஷனையும், தவமுனிவர் களையும் மயங்க வைக்கும் ஹே ராமா! எனது இதயத் தாமரையில் வாசம் செய்து காமத்தில் விளையும் ஆறு பகைவர்களையும் வேரறுப் பாயாக! இவ்வாறு துளசிதாசர் வேண்டுகிறார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar