SS விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் (பகுதி-2) - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் (பகுதி-2)
விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் (பகுதி-2)
விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் (பகுதி-2)

51. தர்மகுப் தர்மக்ருத் தர்மீ ஸதஸத் க்ஷர மக்ஷரம்
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராம்ஸுர் விதாதா க்ருத லக்ஷண:

476. தர்மகுப் - தர்மத்தைப் பாதுகாப்பவன்.
477. தர்மக்ருத் - தர்மத்தைக் கடைப்பிடிப்பவன்.
478. தர்மீ - தர்மமே வடிவானவன்.
479. ஸத் - நல்லதாகவே உள்ளவன்.
480. ஸதக்ஷரம் - அக்ஷரம் - ஸத்- எல்லாக் காலத்தும் நிறைவோடு இருப்பவன். (கல்யாண குணங்கள் நிறைந்திருப்பவன்.)
481. அஸத்: அபரப்பிரம்மம்.
482. க்ஷரம்: சத்தல்லாதவர்களுக்கு (பாபிகளுக்கு) துக்கத்தைக் கொடுப்பவன்.
483. அவிஜ்ஞாதா (அடியார்களிடம் தவறுகளை) அறியாதவன்.
484. ஸஹஸ்ராம்சு: எல்லையில் ஞானத்தன்.
485. விதாதா - விதிப்பவன். (கட்டளையிடுபவன்)
486. க்ருத லக்ஷண: அடையாளங்களை உடையவன். (சங்கு சக்கரம் முதலான அடையாளங்கள்)

52. கபஸ்தி நேமிஸ் ஸத்வஸ்தஸ் ஸிம்ஹோ பூத மஹேஸ்வர:
ஆதி தேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்ருத் குரு:

487. கபஸ்தி நேமி: விளங்குகின்ற சக்கராயுதம் உடையவன்.
488. ஸத்வஸ்த: அடியவர் நெஞ்சில் குடியிருப்பவன்.
489. ஸிஹ்ம: தண்டிப்பவன்.
490. பூதமஹேச்வர: எல்லா உயிரினங்களுக்கும் மேலானவன்.
491. ஆதிதேவ: ஆதிப்பிரான்.
492. மஹாதேவ: விளையாட்டாக எதனையும் செய்யும் மகாதேவன்.
493. தேவேச: தேவர்களுக்கு ஈசன்.
494. தேவப்ருத்: தேவர்களைத் தாங்குபவன்.
495. குரு: தேவர்களின் ஆசாரியன்.

53. உத்தரோ கோபதிர் கோப்தா ஞாந கம்ய : புராதந:
ஸரீரபூத ப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரி தக்ஷிண:

496. உத்தர: கரை ஏற்றுபவன்.
497. கோபதி: சொற்களுக்குத் தலைவன்.
498. கோப்தா: கலைகளைக் காப்பாற்றுபவன்.
499. ஜ்ஞாநகம்ய: அறிவினால் அடையப்படுபவன்.
500. புராதந: மிகப் பழமையானவன்.

(ஐந்தாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)
501. சரீரபூதப்ருத்: தத்துவங்களைச் சரீரமாகக் கொண்டு தாங்குபவன்.
502. போக்தா: உண்பவன் (அநுபவிப்பவன்)
503. கபீந்த்ர: வானரங்களுக்குத் தலைவன்.
504. பூரிதக்ஷிண: மிகுந்த தட்சணைகளை வாரி வழங்குபவன்.

54. ஸோமபோ அம்ருதபஸ் ஸோம : புருஜித் புருஸத்தம :
விநயோ ஜயஸ் ஸத்ய ஸந்தோ தாஸார்ஹஸ் ஸாத்வதாம் பதி

505. ஸோமப: ஸோமரசபானம் பண்ணுபவன்.
506. அம்ருதப: அமிருதத்தை அருந்துபவன்.
507. ஸோம: அமுதிலும் இனியவன்.
508. புருஜித்- யாவரையும் வெற்றிகொண்டு வசப்படுத்துபவன்.
509. புருஸத்தம: சான்றோர்களிடம் நிலைத்திருப்பவன்.
510. விநய: தண்டித்துத் திருத்துபவன்.
511. ஜய: தன்னை அண்டியவர்களிடம் தோற்று, அவர்களுக்கு வெற்றியை அளிப்பவன்.
512. ஸத்யஸந்த: வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதி உடையவன்.
513. தாசார்ஹ: அடியவர்கள் இவனிடம் தமது ஆத்மாவைச் சமர்ப்பிப்பதற்கு உரியவன்.
514. ஸாத்வதாம் பதி: சாத்வீக குணமுடைய பாகவதர்களுக்குத் தலைவன்.

55. ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோ அமித விக்ரம:
அம்போநிதிர் அநந்தாத்மா மஹோ ததிஸயோ அந்தக:

515. ஜீவ: வாழவைப்பவன்.
516. விநயிதா: காப்பவன்.
517. ஸாக்ஷீ: பார்த்துக் கொண்டிருப்பவன்.
518. முகுந்த: முக்தி அளிப்பவன்.
519. அமித விக்ரம: அளவற்ற ஆற்றலை உடையவன்.
520. அம்போநிதி: நீருக்குள் (ஆமையாய்) இருப்பவன்.
521. அநந்தாத்மா: பாம்பு வடிவமாக இருந்து, அதன் ஆத்மாவாக உலகங்களைத் தலைமேல் தாங்குபவன்.
522. மஹோததிசய: பரந்து காணப்படும் மகா சமுத்திரத்தின் மேல் உறங்கிக் கொண்டிருப்பவன்.
523. அந்தக: அழிப்பவன்.

56. அஜோ மஹார்ஹ ஸ்வாபாவ்யோ ஜிதா மித்ர: ப்ரமோதந:
ஆநந்தோ நந்தநோ நந்தஸ் ஸத்ய தர்மா த்ரிவிக்ரம :

524. அஜ: அ எனும் அகாரத்தால் பேசப்படும் நாராயணன்.
525. மஹர்ஹ: வழிபாட்டுக்கு மிக உரியவன்.
526. ஸவாபாவ்ய: தியானிக்கத்தக்கவன்.
527. ஜிதாமித்ர: பகைவர்களை வென்றவன்.
528. ப்ரமோதந: மகிழ்பவன், மகிழ்ச்சி அளிப்பவன்.
529. ஆநந்த: ஆனந்தமே வடிவானவன்.
530. நந்தந: ஆனந்தம் அளித்து நிரப்புபவன்.
531. நந்த: எல்லாம் நிரம்பியிருப்பவன்.
532. ஸத்யதர்மா: தர்மத்தை உண்மையுடன் நடத்திச் செல்பவன்.
533. த்ரிவிக்ரம: மூவுலங்களையும் அளந்து கொண்டவன்.

57. மஹர்ஷி : கபிலாசார்ய : க்ருதஜ்ஞோ மேதிநீ பதி:
த்ரிபதஸ் த்ரிதஸாத் ய÷க்ஷõ மஹா ஸ்ருங்க : க்ருதாந்த க்ருத்

534. மஹர்ஷி: பெரிய ஞானி.
535. கபிலாசார்ய: கபில நிறமுடையவன்.
536. க்ருதஜ்ஞ: நன்மையை அறிபவன்.
537. மேதிநீபதி: பூமிக்குத் தலைவன்.
538. த்ரிபதி: ப்ரக்ருதி, புருஷன், ஈஸ்வரன் ஆகிய மூன்று தத்துவங்களை வெளிப்படுத்துபவன்.
539. த்ரிதசாத்யக்ஷ: தேவர்களைக் காப்பாற்றியவன்.
540. மஹாச்ருங்க: பெரிய கொம்பை உடையவன்.
541. க்ருதாந்தக்ருத் - யமன் போல் தோன்றிய இரணியனை முடித்தவன்.

58. மஹா வராஹோ கோவிந்தஸ் சுஷேண : கநகாங் கதீ
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர:

542. மஹாவராஹ: மகாவராக மூர்த்தி (பெருங்கேழலர்)
543. கோவிந்த: பூமியை உடையவன்.
544. ஸுஷேண: சதுரங்க பலமுடையவன்.
545. கநகாங்கநீ: தங்கத்தாலான திருஆபரணம் அணிந்தவன்.
546. குஹ்ய: மறைக்கப்பட்டவன்.
547. கபீர: கம்பீரமான வடிவமுடையவன்.
548. கஹந: (அறியமுடியாத) ஆழமானவன்.
549. குப்த: (விசுவாமித்திரர், அநந்தன், கருடன் போன்றவர்களால்) காப்பாற்றப்பட்டவன் (பாதுகாக்கப்பட்டவன்.)
550. சக்ரகதாதர: சக்ரம், கதை முதலான பல திவ்ய ஆயுதங்களை உடையவன்.

59. வேதாஸ்ஸ்வாங்கோ ஜித: க்ருஷ்ணோத்ருடஸ் ஸங்கர்ஷணோ அச்யுத:
வருணோ வாருணோ வ்ருக்ஷ :புஷ்கரா÷க்ஷõ மஹாமநா :

551. வேதா: மங்களகரமானவன்.
552. ஸ்வாங்க: ஆளுகின்ற அரசாங்கத்தைப் பெற்றவன்:
553. அஜித: வெற்றி கொள்ள முடியாதவன்.
554. கிருஷ்ண: கண்ணன் என்னும் கருநிறத்தோன்.
555. த்ருட: திடமானவன்.
556. ஸங்கர்ஷண: சித், அசித் ஆகியவற்றை ஒரே அடியாகத் தன்னிடம் ஈர்ப்பவன் (வியூக வாசுதேவன்)
557. அச்யுத: தனது நிலையிலிருந்து நழுவாதவன்.
558. வருண: எல்லாவற்றையும் மூடி மறைந்திருப்பவன்.
559. வாருண: பக்தர்களிடம் எப்போதும் இருப்பவன்.
560. வ்ருக்ஷ: மரம் போல் நிழல் தந்து காப்பவன்.
561. புஷ்கராக்ஷ: வலிமையான கண்ணோக் குடையவன், (கருணை பொழியும் கண்களை யுடையவன்)
562. மஹாமநா: பரந்த மனம் படைத்தவன்.

60. பகவாந் பகஹா நந்தீ வநமாலீ ஹலாயுத:
ஆதித்யோ ஜ்யோதி ராதித்யஸ் ஸ்ஹிஷ்ணுர் கதி ஸத்தம:

563. பகவான்: வழிபாட்டுக்குரியவன்.
564. பகஹா: நற்குணவான்.
565. நந்தீ: நந்த கோபன் குமரன்.
566. வநமாலீ: வனமாலை என்னும் திருவாபரணம் அணிந்தவன்.
567. ஹலாயுத: கலப்பையை ஆயுதமாக உடையவன்.
568. ஆதித்ய: தேவகியின் (அதிதி) புதல்வன்.
569. ஜ்யோதிராதித்ய: ஒளி வடிவினன்.
570. ஸஹிஷ்ணு: பொறுத்துக் கொள்பவன்.
571. கதிஸத்தம: தரும வழியைக் காட்டுபவன்.

61. சுதந்வா கண்ட பரசுர் தாருணோ த்ரவிண ப்ரத:
திவஸ்ப்ருக் க்ருச்சமஸ் வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ:

572. ஸுதந்வா: சிறந்த வில்லினை ஏந்தியவன்.
573. கண்டபரசு: கோடரியை ஆயுதமாக உடையவன்.
574. தாருண: பகைவர்களைப் பிளப்பவன்.
575. த்ரவிணப்ரத: செல்வங்களைக் கொடுப்பவன்.
576. த்விஸ்ப்ருக்: பரமபதத்தைத் தொட்டவன், (நன்கறிந்தவன்)
577. ஸர்வத்ருக்: அனைத்தையும் நேரில் கண்டறிந்தவன்.
578. வ்யாஸ: வியாசன்.
579. வாஸஸ்பதி: வாக்குக்குத் தலைவன். (இங்கு மகாபாரதத்தை உரைத்தவன் என்பது பொருள்.)
580. அயோநிஜ: கருவில் தங்கிப் பிறக்காதவன்.

62. த்ரிஸாமா ஸாமகஸ் ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்:
ஸந்யாஸ க்ருச்சமஸ் ஸாந்தோ நிஷ்டா ஸாந்தி : பராயணம்

581. த்ரிஸாமா:  சாமங்களினால் பாடப்படுபவன்.
582. ஸாமக: ஸாமத்தை (சாமகானத்தைப்) பாடுபவன்.
583. ஸாம: பாபத்தை ஒழிப்பவன்.
584. நிர்வாணம்: முக்தி வடிவானவன்.
585. பேஷஜம்: (பிறவிப்பிணிக்கு) மருந்தானவன்.
586. பிஷக்: மருத்துவன்.
587. ஸந்யாஸக்ருத்: தியாகம் செய்பவன்.
588. ஸம: உபதேசிப்பவன்.
589. சாந்த: அமைதியானவன்.
590. நிஷ்டா: தியானத்துக்குப் பொருளாயிருப்பவன்.
591. சாந்தி: சாந்தியுடையவன்.
592. பராயணம்: பரமபக்தியைத்தானே அளிப்பவன்.

63. சுபாங்கஸ் ஸாந்திதஸ் ஸ்ரஷ்டா குமுத : குவலேஸய :
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபா÷க்ஷõ வ்ருஷ ப்ரிய:

593. சுபாங்க: யோகத்தின் எட்டு அங்கங்களையும் நிறைவேற்றித் தரும் மங்களகரமானவன்.
594. சாந்தித: முழு சாந்தியைத் தருபவன்.
595. ஸ்ரஷ்டா: படைப்பவன்.
596. குமுத: மகிழ்பவன்.
597. குவலேசய: ஜீவர்களை அடக்கி ஆள்பவன்.
598. கோஹித: இதத்தை உண்டு பண்ணுபவன்.
599. கோபதி: போக பூமிக்குத் தலைவன்.
600. கோப்தா: காப்பாற்று பவன்.

(ஆறாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)

601. வ்ருஷபாக்ஷ: தரும சக்கரத்துக்கு அச்சாக இருப்பவன்.
602. வ்ருஷப்ரிய: தருமத்தில் அன்புள்ளவன்.

64. அநிவர்த்தீ நிவ்ருத் தாத்மா ஸம்÷க்ஷப்தா ÷க்ஷம க்ருச்சிவ:
ஸ்ரீ வத்ஸ வக்ஷõஸ் ஸ்ரீவாஸ :
ஸ்ரீபதிஸ் ஸ்ரீமதாம்வர:

603. அநிவர்த்தீ: பிறவி தோன்றுவதற்கான செயல்களைச் செய்யாதவன்.
604. நிவ்ருத்தாத்மா: பலன் கருதாமல் பகவத் கைங்கர்யம் செய்பவனுக்குத் தலைவன்.
605. ஸம்÷க்ஷப்தா: (பிறவி எடுத்துக்கொண்டே இருப்பவனுக்கு) ஞானத்தைச் சுருங்கச் செய்பவன்.
606. ÷க்ஷமக்ருத்: மோட்சமாகிய ÷க்ஷமத்தைச் செய்பவன்.
607. சிவ: மங்களத்தைச் செய்பவன்.
608. ஸ்ரீவத்ஸ வக்ஷõ: ஸ்ரீவத்ஸம் என்னும் வட்ட வடிவமான மறுவைத் திருமார்பில் உடையவன்.
609. ஸ்ரீவாஸ: திருமகளுக்கு உறைவிடமானவன்.
610. ஸ்ரீபதி: திருமகளின் தலைவன்.
611. ஸ்ரீமதாம்வர: செல்வர்களுக்கெல்லாம் செல்வன்.

65. ஸ்ரீதஸ் ஸ்ரீஸஸ் ஸ்ரீநிவாஸஸ் ஸ்ரீ நிதிஸ் ஸ்ரீவிபாவந:
ஸ்ரீதரஸ் ஸ்ரீகரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்ரய:

612. ஸ்ரீத: செல்வம், புகழ், அழகு முதலான அனைத்தும் கொடுப்பவன்.
613. ஸ்ரீச: திருவுக்கும் திருவாகியவன்.
614. ஸ்ரீநிவாஸ: பிராட்டி உறையும் திருமார்பினன்.
615. ஸ்ரீநிதி: பிராட்டியை நிதியாக உடையவன்.
616. ஸ்ரீவிபாவந: பிராட்டியினால் புகழ் பெருகியவன்.
617. ஸ்ரீதர: பிராட்டியைத் தரித்திருப்பவன்.
618. ஸ்ரீகர: தன்னைப் பின்பற்றுமாறு பிராட்டியைச் செய்பவன்.
619. ச்ரேய: எல்லாராலும் வழிபடப்பெறும் பிராட்டியை உடையவன்.
620. லோகத்ரயாச்ரய: மூவுலகத்தாருக்கும் அடைக் கலப் பொருளாக இருப்பவன்.

66. ஸ்வக்ஷஸ் ஸ்வங்கஸ் ஸதாநந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர:
விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திஸ் சிந்ந ஸம்ஸய:

621. ஸ்வக்ஷ: அழகிய கண்களை உடையவன்.
622. ஸ்வங்க: மங்களமான திருமேனியை யுடையவன்.
623. சதாநந்த: எப்பொழுதும் அளவற்ற ஆனந்தம் உடையவன்.
624. நந்தி: ஆனந்திப்பவன்.
625. ஜ்யோதிர் கணேச்வர: ஒளிநிறைந்தவர்களும், குற்றமற்றவர்களுமாகிய நித்ய சூரிகளுக்குத் தலைவன்.
626. விஜிதாத்மா: பக்தர்களால் வெல்லப்பட்ட ஆத்மவடிவினன்.
627. விதேயாத்மா: பக்தர்களுக்குக் கட்டுப்பட்டவன்.
628. ஸத்கீர்த்தி: நிகரில் புகழாளன்.
629. சிந்நஸம்சாய: ஐயத்துக்கிடமின்றி அணுகுதற்கெளியன்.

67. உதீர்ணஸ் ஸர்வதஸ் சக்ஷúர் அநீஸஸ் ஸாஸ்வத ஸ்திர:
பூஷயோ பூஷணோ பூதி ரசோகஸ் சோகநாஸந :

630. உதீர்ண: (தன் திருமேனியை) நன்றாக வெளிப்படுத்துபவன்.
631. ஸர்வதச்சக்ஷú: யாவரும் தன் கண்ணால் காணும் படியானவன்.
632. அநீச: தலைவனாயில்லாதவன். (பரதந்த்ரன்)
633. சாச்வதஸ்திர: எப்பொழுதும் நிலையாய் இருப்பவன்.
634. பூசய: பூமியில் சயனித்து அருள் புரிபவன்.
635, 636. பூதி: நிதியாக உள்ளவன்.
637. விசோக: (அசோக)- சோகமில்லாதவன்.
638. சோகநாசந: சோகத்தை ஒழிப்பவன்.

68. அர்ச்சிஷ்மா நர்ச்சித : கும்போ விசுத்தாத்மா விஸோதந:
அநிருத்தோ அப்ரதிரத : ப்ரத்யும்நோ அமித விக்ரம :

639. அர்ச்சிஷ்மாந்: பேரொளியை உடையவன்.
640. அர்ச்சித: அர்ச்சிக்கப் படுபவன் (அர்ச்சாரூபி)
641. கும்ப: திவ்ய தேசங்களில் விளங்குபவன்.
642. விசுத்தாத்மா: தன்னையே அருள்புரியும் இயல்பினன்.
643. விசோதந: அமலன், (சுத்தியைத் தருபவன்)
644. அநிருத்த: வியூஹமூர்த்தி. (பாற்கடலில் பள்ளி கொள்பவன்.)
645. அப்ரதிரத: ஒப்பற்றவன்.
646. ப்ரத்யும்ந: எல்லாவற்றையும் ஒளிரச் செய்பவன்.
647. அமித விக்ரம: அளவற்ற திருவடிகளை உடையவன். (அளவற்ற ஆற்றல், ஒளி உடையவன்.)

69. கால நேமிநிஹா வீர ஸெளரிஸ் ஸுர ஜநேஸ்வர:
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ : கேஸவ : கேஸிஹா ஹரி:

648. காலநேமிநிஹா: கலியுகக் கொடுமைகளை அழிப்பவன்.
649. சௌரி: சௌரி பெருமாள்.
650. சூர: எதிரிகளை அழிப்பவன்.
651. சூரஜநேச்வர: சூரர்களுக்குத் தலைவன்.
652. த்ரிலோகாத்மா: மூவுலங்களிலும் சஞ்சரிப்பவன்.
653. த்ரிலோகேச: மூவுலகங்களுக்கும் ஈசன்.
654. கேசவ: துக்கங்களை அழிப்பவன்.
655. கேசிஹா: கேசி என்னும் அசுரனைக் கொன்றவன்.
656. ஹரி: பச்சை வண்ணன்.

70. காமதேவ : காமபால : காமீ காந்த: க்ருதாகம :
அநிர் தேஸ்ய வபுர் விஷ்ணுர் வீரோ அநந்தோ தநஞ்ஜய :

657. காமதேவ: விரும்பினவற்றை யெல்லாம் அளிப்பவன்.
658. காமபால: கொடுத்ததைக் காப்பவன்.
659. காமீ: விரும்பத்தக்கன யாவும் நிறைந்துள்ளவன்.
660. காந்த: யாவராலும் விரும்பத்தக்கவன்.
661. க்ருதாகம: ஆகமங்களைத் தோற்றுவிப்பவன்.
662. அநிர்தேச்யவபு: சொல்லித் தலைக்கட்ட முடியாத திருமேனிகளை உடையவன்.
663. விஷ்ணு: எங்கும் நிறைந்திருப்பவன்.
664. வீர: வீரன்.
665. அநந்த: எல்லையற்றவன்: முடிவில்லாதவன்.
666. தநஞ்ஜய: உலக ஐஸ்வர்யங்களைவிட மேலானவன்.

71. ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா
ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தந :
பரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ
ப்ரஹ்மஞோ ப்ராஹ்மண ப்ரிய:

668. ப்ரஹ்மக்ருதப்ரஹ்மா: பிரமனைப் படைக்கும் பெரியவன்.
669. ப்ரஹ்ம: பரமாத்மா. (மேலானவன்)
670. ப்ரஹ்மவிவர்த்தந: தருமத்தை வளரச் செய்பவன்.
671. ப்ரஹ்மவித்: வேதங்களை உள்ளபடி அறிந்த வித்தகன்.
672. ப்ராஹ்மண: வேதங்களைக் கற்பிப்பவன்.
673. ப்ரஹ்மீ: பிரம்மாவை (பிரமாண, பிரமேயங்களை) உடையவன்.
674. ப்ரஹ்மஜ்ஞ: வேதங்களை உணர்ந்தவன்.
675. ப்ராஹ்மணப்ரிய: வேதம் வல்ல பிராமணர்களை நேசிப்பவன்.

72. மஹா க்ரமோ மஹா கர்மா மஹா தேஜா மஹோரக:
மஹா க்ரதுர் மஹா யஜ்வா மஹா யஜ்ஞோ மஹா ஹவி:

676. மஹாக்ரம: அறிவுடையாரைப் படிப்படியாக வாழ்விப்பவன்.
677. மஹாகர்மா: சிறந்த செயலை உடையவன்.
678. மஹாதேஜ: மேலான சிறந்த ஒளியை உடையவன்.
679. மஹாரக: உட்புகும் பெரியோன்.
680. மஹாக்ரது: வழிபாட்டிற்கு எளியவன்.
681. மஹாயஜ்வா: பகவானை மட்டுமே வழிபடுவோரைச் சிறப்பு செய்பவன்.
682. மஹாயஜ்ஞ: உயர்ந்த வழிபாட்டுக்கு உரியவன்.
683. மஹாஹவி: சிறந்த அவியுணவைப் பெறுபவன்.

73. ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதிஸ் ஸ்தோதா ரணப்ரிய:
பூர்ண: பூரயிதா புண்ய: புண்ய கீர்த்தி ரநாமய:

684. ஸ்தவ்ய: வணங்கத் தகுந்தவன்.
685. ஸ்தவப்ரிய: வணக்கத்தை (வழிபாட்டை) அன்புடன் ஏற்பவன்.
686. ஸ்தோத்ரம்: வழிபாடாக (துதியாக) இருப்பவன்.
687. ஸ்துத: வழிபடப்படுபவன். (துதிக்கப்படுபவன்)
688. ஸ்தோதா: தன்னைப் துதிப்பவரைப் புகழ்பவன்.
689. ரணப்ரிய: போர் செய்வதில் ஆர்வமுடையவன்.
690. பூர்ண: நிறைவானவன்.
691. பூரயிதா: நிறைவிப்பவன்.
692. புண்ய: புண்ணியன் (புனிதன் ஆக்குபவன்)
693. புண்யகீர்த்தி: புண்ணியமான கீர்த்தனத்துக்குரியவன்.
694. அநாமய: பெரும் பிணியைப் (பிறவிப் பிணியைப்) போக்குபவன்.

74. மநோ ஜவஸ் தீர்த்த கரோ வசு ரேதா வசு ப்ரத:
வசுப்ரதோ வாஸுதேவோ வஸுர் வசுமநாஹவி:

695. மநோஜவ: மனோபாவத்தில் செயல்படுபவன்.
696. தீர்த்தகர: தூய்மைப் படுத்துபவன்.
697. வஸுரேதா: ஒளியையே கருவாகப் பெற்றிருப்பவன்.
698. வஸுப்ரத: நிதியாக உள்ள தன்னையே தருபவன்.
699. வஸுப்ரத: பெருமதிப்பை அளிப்பவன்.
700. வாஸுதேவ: வசுதேவனுடைய மகன்.

(ஏழாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)
701. வாஸு: வசிப்பவன்.
702. வஸுமநா: வசுதேவரிடத்தில் மனம் வைத்தவன்.
703. ஹவி: பெற்றுக் கொள்ளப்பட்டவன்.

75. ஸத்கதிஸ் ஸத் க்ருதிஸ் ஸத்தா ஸத் பூதிஸ் ஸத் பராயண:
ஸூர ஸேநோ யது ஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸஸ் கயாமுந :

704. ஸத்கதி: சாதுகளுக்குப் புகலிடமாயிருந்து காப்பவன்.
705. ஸத்க்ருதி: விந்தையான செயல்களைச் செய்பவன்.
706. ஸத்தா: உலகம் உளதாவதற்குக் காரணமானவன்.
707. ஸத்பூதி: சாதுக்களுக்கு ஐஸ்வர்யமாக உள்ளவன்.
708. ஸத்பராயண: சாதுக்களைத் தனக்கு உயிராக உள்ளவன்.
709. ஸூரஸேந: சூரர்களைச் சேனையாக உடையவன்.
710. யதுஸ்ரேஷ்ட: யதுகுலதிலகன்.
711. ஸந்நிவாஸ: சாதுக்களுக்கு இருப்பிடமாக உள்ளவன்.
712. ஸுயாமுந: யமுனைத் துறைவன்.

76. பூதா வாஸோ வாசுதேவஸ் ஸர்வாசு நிலயோ அநல :
தர்ப்பஹா தர்ப்பதோ அத்ருப்தோ துர்தரோ அதா அபராஜித:

713. பூதாவாஸ: எல்லா உயிரினங்களுக்கும் இருப்பிடமானவன்.
714. வாஸுதேவ: வியூஹ வாசுதேவன்.
715. ஸர்வாஸுநிலய: எல்லாப் பொருள்களும் இருக்கும் இடமாக உள்ளவன்.
716. அநல: (அடியார்கட்கு அருள்புரிவதில்) மனநிறைவு பெறாதவன்.
717. தர்ப்பஹா: ஆணவத்தை அடக்குபவன்.
718. தர்ப்பத: மதத்தைத் (ஆணவத்தை) தருபவன்.
719. அத்ருப்த: கர்வமற்றவன்.
720. துர்த்தர: அடக்கமுடியாத ஆற்றலுடையவன்.
721. அபராஜித: வெல்ல முடியாதவன்.

77. விஸ்வ மூர்த்திர் மஹா மூர்த்திர் தீப்த மூர்த்திர் அமூர்த்திமாந்
அநேக மூர்த்தி ரவ்யக்தஸ் ஸத மூர்த்திஸ் ஸதாநந:

722. விச்வமூர்த்தி: உலகத்தைச் சரீரமாக உடையவன்.
723. மஹாமூர்த்தி: பெரிய உருவம் படைத்தவன்.
724. தீப்த மூர்த்தி: ஒளிமயமான உருவம் படைத்தவன்.
725. அமூர்த்திமாந்: நுட்பமான உருவம் உடையவன்.
726. அநேக மூர்த்தி: பல உருவங்களை உடையவன்.
727. அவ்யக்த: காணமுடியாதவன்.
728. சதமூர்த்தி: நூற்றுக்கணக்கான உருவத்தை உடையவன்.
729. சதாநந: அநேக முகங்களை உடையவன்.

78. ஏகோ நைகஸ் ஸவ : க : கிம் யத்தத் பத மநுத்தமம்
லோக பந்துர் லோக நாதோ மாதவோ பக்த வத்ஸல:

730. ஏக: ஒருவன் (தனிப்பெருமை உடையவன்)
731. நைக: பலராக இருப்பவன்.
732. ஸ: அவன். (அறிவைப் பரப்புபவன்)
733. வ: வசிப்பவன்.
734. க: ஒளிர்பவன்.
735. கிம்: எது பரம்பொருள் என்று ஆராயத்தக்கவனாய் இருப்பவன்.
736. யத்: (நம்மைக் காப்பதில்) முயற்சியை உடையவன்.
737. தத்: தூண்டிவிடுபவன்.
738. பதம் அநுத்தமம்: மேலான அடையத்தக்க பொருளாக இருப்பவன்.
739. லோக பந்து: உலகினர் அனைவர்க்கும் உறவினன்.
740. லோகநாத: உலகத்துக்குத் தலைவன்.
741. மாதவ: இலட்சுமிக்கு அன்பன்.
742. பக்தவத்ஸல: அடியார்களிடம் அன்புடையவன்.

79. ஸுவர்ண வர்ணோ ஹேமாங்கோ வராங்கஸ் சந்தநாங் கதீ
வீரஹா விஷமஸ் ஸுந்யோ த்ருதாஸீரஸ் சலஸ்சல:

743. ஸுவர்ணவர்ண: பொன் வண்ணன்.
744. ஹேமாங்க: பொன் மேனியன்.
745. வராங்க: சிறந்த அழகான திருமேனியை உடையவன்.
746. சந்தநாங்கதீ: அழகிய சிறந்த திவ்யாபரணங்களை அணிந்தவன்.
747. வீரஹா: வீரர்களை மாய்த்த பெருவீரன்.
748. விஷம: வேறுபட்ட செயல்களைச் செய்பவன்.
749. சூந்ய: தோஷமில்லாதவன்.
750. க்ருதாசி: எல்லாரையும் செழிப்புறச் செய்பவன்.
751. அசல: அசைக்க முடியாதவன்.
752. சல: மாறுபவன்.

80. அமாநீ மாநதோ மாந்யோ லோகஸ்வாமீ த்ரிலோக த்ருத்
சுமேதா மேதஜோ தந்யஸ் ஸத்ய மேதா தராதர:

753. அமாநீ: மானமில்லாதவன்.
754. மாநத: கௌரவம் அளிப்பவன்.
755. மாந்ய: பரிசளிக்கத் தக்கவன். (பக்தர்களிடம் பரிவுள்ளவன்.)
756. லோகஸ்வாமீ: உலகங்களுக்கெல்லாம் தலைவன்.
757. த்ரிலோகத்ருத்: மூவுலகங்களையும் தரிப்பவன்.
758. ஸூமேதா: நல்ல எண்ணம் உடையவன்.
759. மேதஜ: நோன்பு இருப்பதன் பயனாகப் பிறப்பவன்.
760. தந்ய: பாக்கியவான்.
761. ஸத்யமேதா: உண்மையான எண்ணமுடையவன்.
762. தராதர: குன்றம் ஏந்தியவன்.

81. தேஜோ வ்ரு÷ஷா த்யுதி தரஸ் ஸர்வ ஸஸ்த்ர ப்ருதாம் வர:
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைக ஸ்ருங்கோ கதாக்ரஜ

763. தேஜோவ்ருஷ: ஒளியைப் பொழிபவன்.
764. த்யுதிதர: ஒளிவீசும் அங்கங்களை உடையவன்.
765. ஸர்வச் ஸ்த்ரப்ருதாம்வர: ஆயுத பாணிகளில் மிகவும் சிறந்தவன்.
766. பரக்ரஹ: அடக்கி நடத்துபவன்.
767. நிக்ரஹ: எதிரிகளை மாளச்செய்பவன்.
768. வ்யக்ர: பகைவரை அழிப்பதில் பரபரப்புள்ளவன்.
769. நைகச்ருங்க: பல்வேறு உபாயங்களால் பகைவரை அழித்தவன்.
770. கதாக்ரஜன்: கதன் என்பவனுக்கு முன் பிறந்தவன்.

82. சதுர் மூர்த்திஸ் சதுர் பாஹுஸ் சதுர் வ்யூஹஸ் சதுர் கதி:
சதுராத்மா சதுர் பாவஸ் சதுர் வேத விதேகபாத்

771. சதுர்மூர்த்தி: மூர்த்திகள் நான்காக விளங்குபவன்.
772. சதுர்பாஹு: தோள்கள் நான்கினை உடையவன்.
773. சதுர்வ்யூஹ: வியூஹங்கள் நான்கினையுடையவன்.
774. சதுர்கதி: பலன்கள் நான்கினைத் தருபவன்.
775. சதுர் ஆத்மா: ஜாக்ரத, ஸ்வப்ந, ஸுஷுப்தி, துரியம் ஆகிய நான்கு விதமாகத் தன்னைக் காட்டுபவன்.
776. சதுர்பாவ: நான்கு பயன்களை (படைத்தல், இருத்தல், காத்தல், நெறி வழங்குதல்) வெளிப்படுத்துபவன்.
777. சதுர்வேதவித்: நான்கு வேதங்களையும் அறிந்தவர்களுக்கு ஞானப் பொருளாய் இருப்பவன்.
778. ஏகபாத்: ஒரு பகுதியாக அவதரித்தவன்.

83. ஸமா வர்த்தோ நிவ்ருத் தாத்மா துர்ஜயோ துரதி க்ரம:
துர்லபோ துர்கமோ துர்கோ துரா வாஸோ துராரிஹா

779. ஸமாவர்த்த: திரும்பத்திரும்ப அவதரிப்பவன்.
780. நிவ்ருத்தாத்மா: ஒன்றிலும் சேராத தனித்த (திருப்பப்பட்ட) மனதையுடையவன்.
781. துர்ஜய: வெற்றி கொள்ள முடியாதவன்.
782. துரதிக்ரம: மீற முடியாதவன்.
783. துர்லப: அடைவதற்கு அரியவன்.
784. துர்கம: நெருங்க முடியாத ஒளியையுடையவன்.
785. துர்க: அடைய முடியாதவன்.
786. துராவாஸ: நெருங்க முடியாத இருப்பிடத்தை உடையவன்.
787. துராரிஹா: தன்னை அடைய ஓட்டாமல் தீயவரை விலக்கி வைப்பவன்.

84. சுபாங்கோ லோக ஸாரங்க: சுதந்துஸ் தந்து வாத்தந:
இந்த்ர கர்மா மஹா கர்மா க்ருத கர்மா க்ருதாகம:

788. சுபாங்க: மங்களகரமான அழகிய உடலை உடையவன்.
789. லோக ஸாரங்க: உலகுக்கு வேண்டிய சாரமான பொருளைப் பேசுபவன்.
790. ஸுதந்து: கெட்டியான நூல்வலையை உடையவன்.
791. தந்து வர்த்தந: நூல்களான கயிற்றைப் பலப்படுத்தியவன். (பிரபஞ்சத்தை விருத்தி செய்பவர்.)
792. இந்த்ர கர்மா: இந்திரனுக்காகச் செயல்பட்டவன்.
793. மஹாகர்மா: பெருமைக்குரிய சிறப்பான செயல்களைச் செய்பவன்.
794. க்ருதகர்மா: செயல்பட்டவன்.
795. க்ருதாகம: ஆகம நூல்களை வெளியிட்டவன்.

85. உத்பவஸ் சுந்தரஸ் சுந்தோ ரத்ந நாபஸ் சுலோசந:
அர்க்கோ வாஜஸநஸ் ஸ்ருங்கீ ஜயந்தஸ் ஸர்வ விஜ்ஜயீ

796. உத்பவ: உயர்ந்தவன்.
797. ஸுந்தர: அழகியவன்.
798. ஸுந்த: உருகச் செய்பவன்.
799. ரத்நநாப: மணிபோலும் அழகிய நாபியை உடையவன்.
800. ஸுலோசந: அழகிய பார்வையை உடையவன்..

(எட்டாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)
801. அர்க்க: துதிக்கப்படுபவன்.
802. வாஜஸந: நிறைந்த அளவில் அன்னம் உண்ணச் சொல்பவன்.
803. ச்ருங்கீ: கொம்புடையவன்.
804. ஜயந்த: வென்றவன்.
805. ஸர்வ: விஜ்ஜயீ: சிறந்த அறிவாளிகளையும் வென்றவன்.

86. சுவர்ண பிந்து ர÷க்ஷõப்யஸ் ஸர்வ வாகீஸ் வரேஸ்வர:
மஹா ஹ்ரதோ மஹா கர்த்தோ மஹா பூதோ மஹாநிதி:

806. ஸுவர்ணபிந்து: கேட்பவர் மயங்கும்படி மிகவும் இனிமையாகப் பேசுபவன்.
807. அ÷க்ஷõப்ய: கலக்க முடியாதவன்.
808. ஸர்வவாகீச்வரேச்வர: வல்லமையாகப் பேசுபவர்கள்-அனைவருக்கும் மேலானவன்.
809. மஹாஹ்ரத: ஆழ்ந்த மடுவாக இருப்பவன்.
810. மஹாகர்த்த: படுகுழியாக இருப்பவன்.
811. மஹாபூத: மகான்களைத் தன் உறவினராகக் கொண்டவன்.
812. மஹாநிதி: மகான்களைப் பெருஞ்செல்பவமாக உடையவன்.

87. குமுத : குந்தர : குந்த : பர்ஜந்ய : பாவநோ நில :
அம்ருதாஸோ அம்ருத வபுஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வதோ முக :

813. குமுத: பூமண்டலத்தின் ஆனந்தமாக இருப்பவன்.
814. குந்தர: பரதத்துவத்தைப் பற்றிய ஞானத்தை அளிப்பவன்.
815. குந்த: பாபத்தைப் போக்கிப் படிப்படியாக ஞானமளிப்பவன்.
816. பர்ஜந்ய: தாபத்தைப் போக்கும் மேகமாக இருப்பவன்.
817. பவந: தானே பக்தர்களிடம் செல்பவன்.
818. அநில: (தூண்டுதலின்றி) தானே பக்தர்களுக்கு அருள் புரிபவன்.
819. அம்ருதாச: அமுதூட்டுபவன்.
820. அம்ருதவபு: அமுதம் போன்ற திருமேனியை உடையவன்.
821. ஸர்வஜ்ஞ: முற்றும் உணர்ந்தவன்.
822. ஸர்வதோமுக: எளிதில் வசீகரிக்கக் கூடியவன்.

88. கலபஸ் சுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச் சத்ரு தாபந:
ந்யக்ரோதோ தும்பரோ அஸ்வத்தஸ் சாணூராந்த்ர நிஷூதந:

823. ஸுலப: அடியவர்க்கெளியவன்.
824. ஸுவ்ரத: (சரணம் என்று வந்தவரைக் கட்டாயம் காப்பேன் என்னும்) விரதம் உடையவன்.
825. ஸித்த: (முயற்சியின்றியே) தானாகவே அடையக்கூடியவனாக இருப்பவன்.
826. சத்ருஜித்சத்ருதாபந: பகைவரை வென்றவர் மூலம் பகைவர்க்குத் துன்பம் தருபவன்.
827. ந்யக் ரோதாதும்பர: தான் உயர்ந்தவனாயினும், தாழ்ந்த நிலையிலுள்ள அடியார்கட்குக் கட்டுப்படுபவன்.
828. அச்வத்த: தேவர்கள் மூலமாக உலகங்களை நியமித்து ஆள்பவன்.
829. சாணூராந்த்ர நிஷூதந: (இந்திரனுக்குப் பகைவனான) சாணூரன் என்னும் பெயருடைய மல் லனைக் கொன்றவன்.

89. ஸஹஸ்ரார்ச்சிஸ் ஸப்த ஜிஹ்வஸ் ஸப்தைதாஸ் ஸப்த வாஹந:
அமூர்த்தி ரநகோ அசிந்த்யோ : ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந:

830. ஸஹஸ்ரார்ச்சி: ஆயிரக் கணக்கான கிரணங்களை உடையவன்.
831. ஸப்தஜிஹ்வ: ஏழு நாக்குகளை உடைய அக்னி வடிவமாக இருப்பவன்.
832. ஸப்தைதா: ஏழுவகை சமித்துகளால் ஒளிவிடுபவன்.
833. ஸப்தவாஹந: ஏழுவாகனங்களை உடையவன்.
834. அமூர்த்தி: பருவடிவம் அல்லாதவன் (நுட்பமான உருவினன்)
835. அநக: பாபம் அற்றவன். (தூயவன்)
836. அசிந்த்ய: சிந்தனைக்கு எட்டாதவன்.
837. பயக்ருத்: பயத்தை உண்டு பண்ணுபவன்.
838. பயநாசந: பயத்தைப் போக்குபவன்.

90. அணுர்ப்ருஹத் க்ருஸஸ் ஸ்தூலோ
குணப்ருந்நிர் குணோ மஹாந்
அத்ருதஸ் ஸ்வத்ருதஸ் ஸ்வாஸ்ய:
ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந:

839. அணு: மிகவும் நுண்ணியன்.
840. ப்ருஹத்: பெரியதிலும் பெரியவன்.
841. க்ருச: இலேசானவன்.
842. ஸ்தூல: பருத்தவன்.
843. குணப்ருத்: எல்லாப் பொருள்களையும் தன்னுடைய குணம் போலத்தரிப்பவன்.
844. நிர்க்குண: முக்குணக் கலப்பற்றவன். (குணமே இல்லாதவன் என்று பொருள் கொள்ளக்கூடாது.)
845. மஹான்: மிகச்சிறந்தவன். (தடையின்றிச் செய்யும் ஆற்றலான்.)
846. அத்ருத: அடக்கமுடியாத ஆற்றலான்.
847. ஸ்வத்ருத: தன்னைத் தானே அடக்கிக் கொள்பவன்.
848. ஸ்வாஸ்ய: இயல்பாகவே மேலான நிலையை உடையவன்.
849. ப்ராக்வம்ச: நித்ய சூரிகளுக்கு வம்ச மூலமாக உள்ளவன்.
850. வம்சவர்த்தந: நித்ய சூரிகளைப் பெருகச் செய்பவன்.

91. பாரப்ருத் கதிதோ யோகீ யோகீஸஸ் ஸர்வ காமத:
ஆஸ்ரமஸ் ஸ்ரமண: க்ஷõமஸ் சுபர்ணோ வாயு வாஹந:

851. பாரப்ருத்: பாரத்தைத் (சுமையைத்) தாங்குபவன்.
852. கதித: (வேதங்களால்) சொல்லப்பட்டவன்.
853. யோகீ: சாமர்த்தியம் படைத்தவன்.
854. யோகீச: யோகியர் தலைவன்.
855. ஸர்வகாமத: எல்லா விருப்பங்களையும் தருபவன்.
856. ஆச்ரம: (அடியார்களின் நினைவு பிறவிதோறும்) தொடர்ந்து இருந்து வருமாறு செய்பவன்.
857. ச்ரமண: (யோகத்தின் நினைவு பிறவிதோறும்) தொடர்ந்து இருந்து வருமாறு செய்பவன்.
858. க்ஷõம: திறமையுள்ளவனாகச் செய்பவன்.
859. சுபர்ண: தாண்ட உதவுபவன்.
860. வாயுவாஹந: மேல் எழச்செய்பவன். (வாயுவை இயக்குவிப்பவன்)

92. தநுர்த் தரோ தநுர் வேதோ தண்டோ தமயிதா அதம:
அபராஜிதஸ் ஸர்வ ஸஹோ நியந்தா நியமோயம:

861. தநுர்த்தர: சாரங்கம் என்னும் வில்லைத் தரித்திருப்பவன்.
862. தநுர்வேத: வில்வித்தையைக் கற்பிப்பவன்.
863. தண்ட: துஷ்டர்களைத் தண்டிப்பவன்.
864. தமயிதா: (நேராக அவதரித்துத் தீயவர்களை) அடக்குபவன்.
865. அதம: யாராலும் அடக்க முடியாதவன்.
866. அபராஜித: வெல்ல முடியாதவன், (எல்லாம் வல்லவன்.)
867. ஸர்வஸஹ: அனைவரையும் தாங்குபவன்.
868. நியந்த: நியமித்து நடத்துபவன்.
869. நியம: நியமிப்பவன் (நிச்சயிப்பவன்.)
870. யம: (தேவதை பலரை நியமித்து) நடத்துபவன்.

93. ஸத்வவாந் ஸாத்விகஸ் ஸத்யஸ் ஸத்ய தர்ம பராயண:
அபிப்ராய : ப்ரியார்ஹோஹ ப்ரியக்ருத் ப்ரீதி வர்த்தந:

871. ஸத்வவாந்: சுத்த சத்வ மயமாய் இருப்பவன்.
872. ஸாத்விக: சத்வ குணம் உடையவன்.
873. ஸத்ய: மெய்யனாய் இருப்பவன்.
874. ஸத்யதர்ம பராயண: உண்மையான தர்மங்களைக் கடைப்பிடிப்பதனால் மகிழ்பவன்.
875. அபிப்ராய: மேலான உபேயமாக நினைக்கப்படுகிறவன்.
876, 877. அர்ஹ: அன்பு செய்யத்தகுந்தவன்.
878. ப்ரியக்ருத்: அன்புக்குரியவன்.
879. ப்ரீத வர்த்தந: பக்தியை மேலும் மேலும் வளர்ப்பவன்.

94. விஹாய ஸகதிர் ஜ்யோதிஸ் சுருசிர் ஹுதபுக் விபு:
ரவிர் விரோசநஸ் ஸூர்யஸ் ஸவிதா ரவி லோசந:

880. விஹாயஸகதி: பரம பதத்தை அடைவிப்பவன்.
881. ஜ்யோதி: ஒளி மயமாய் இருப்பவன்.
882. ஸுருசி: அழகாக ஒளிர்பவன்.
883. ஸுதபுக்விபு: சுக்கில பட்சமாய் இருப்பவன். (அக்னியில் அவியாகச் சேர்க்கப்பட்டதை உண்பவன்.)
884. ரவி: (உத்தராயணமாகக் கொண்டாடப்படும்) சூரியன்.
885. விரோசந: ஒளி தருபவன்.
886. ஸூர்ய: வாயு லோகமாக இருப்பவன் (சூரியன் - வாயு லோகம்)
887. ஸவிதா: உண்டாக்குபவன்.
888. ரவிலோசந: (சூரிய கிரணங்களின் மூலம் சந்திரன் முதலானோரை ஒளிரச் செய்பவன்.)

95. அநந்தோ ஹுதபுக் போக்தா
சுகதோ நைகதோ அக்ரஜ:
அநிர் விண்ணஸ் ஸதா மர்ஷீ
லோகாதிஷ்டாந மத்புத:

889. அநந்தஹுத புக்போக்தா: மிகவும் மகிமையுள்ள இந்திரனையும், பிரமனையும் உடையவன்.
890. ஸுகத: சுகத்தை அளிப்பவன்.
891. நைகத: ஒன்று மட்டும் கொடாதவன் (பலவும் தருபவன்.)
892. அக்ரஜ: (அடியார்க்கு) முன்பாக விளங்குபவன்.
893. அநிர்விண்ண: துயர் அற்றவன்.
894. ஸதமர்ஷீ: பொறுமையுள்ளவன்.
895. லோகாதிஷ்டாந: உலகங்களைத் தாங்குபவனாய் இருப்பவன்.
896. அத்புத: அற்புதமாய் உள்ளவன்.

96. ஸநாத் ஸநாதந தம: கபில : கபிரவ்யய :
ஸ்வஸ்திதஸ் ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண:

897. ஸநாத்: அநுபவிக்கப்படுபவன்.
898. ஸநாதநதம: மிகப் பழமையானவன்.
899. கபில: விளக்கம் உற்றவன்.
900. கபிரவ்யய: அழிவில்லா ஆனந்தத்தை அனுபவிப்பவன்.

(ஒன்பதாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.)
901. ஸ்வஸ்தித: மகத்தான மங்களத்தைக் கொடுப்பவன்.
902. ஸ்வஸ்திக்ருத்: மகத்தான மங்களத்தைச் செய்பவன்.
903. ஸ்வஸ்தி: தானே மங்கள வடிவமாயிருப்பவன்.
904. ஸ்வஸ்திபுக்: மங்களத்தைப் பரிபாலிப்பவன்.
905. ஸ்வஸ்திதக்ஷிண: இந்த மங்களத்தை யாக தக்ஷிணையாகத் தருபவன்.

97. அரௌத்ர : குண்டலீ சக்ரீ விக்ரம் யூர்ஜித ஸாஸந:
ஸப்தாதிகஸ் ஸப்த ஸஹ : ஸிஸிரஸ் ஸர்வரீ கர:

906. அரௌத்ர: கடுமையில்லாமல் குளிர்ந்திருப்பவன்.
907. குண்டலீ: காதணிகளை அணிந்திருப்பவன்.
908. சக்ரீ: சக்ராயுதத்தைத் தரித்திருப்பவன்.
909. விக்ரமீ: பராக்ரமம் உள்ளவன்.
910. ஊர்ஜிதசாஸந: பிறரால் கடக்க முடியாத கட்டளையைப் பிறப்பிப்பவன்.
911. ஸப்தாதிக: சொல்லுக்கெட்டாதவன்.
912. ஸ்ப்தஸஹ: அடியார்களின் கூப்பீட்டைச் சுமப்பவன்.
913. சிசிர: வேகமாகச் செல்பவன்.
914. ஸர்வரீகர: பிளக்கும் ஆயுதங்களைக் கையில் ஏந்தியவன்.

98. அக்ரூர: பேஸலோ த÷க்ஷõ தக்ஷிண க்ஷமிணாம் வர:
வித்வத்தமோ வீதபய: புண்ய ஸ்வரண கீர்த்தந:

915. அக்ரூர: குரூரம் இல்லாதவன்.
916. பேசல: அழகன்.
917. தக்ஷ: வேகம் உள்ளவன்.
918. தக்ஷிண: இனிய இயல்புடையவன்.
919. க்ஷமினாம்வர: பொறுமையுள்ளவரில் சிறந்தவன்.
920. வித்வத்தம: செயல் அறிவில் சிறந்தவன்.
921. வீதபய: யானையின் பயத்தைப் போக்கியவன்.
922. புண்யச்ரவண கீர்த்தந: (கஜேந்திரனின் சரிதத்தைக் கேட்பது) மிகவும் புண்ணியம் என்று அருளியவன்.

99. உத்தாரணோ துஷ் க்ருதிஹா புண்யோ துஸ்வப்ந நாஸந:
வீரஹா ரக்ஷணஸ் ஸந்தோ ஜீவந: பர்ய வஸ்தித:

923. உத்தாரண: கரை ஏற்றுபவன்.
924. துஷ்க்ருதிஹா: தீமை செய்பவரைத் தொலைப்பவன்.
925. புண்ய: பாபங்களைப் போக்குபவன். (புண்ணியவன்)
926. துஸ்ஸ்வப்நநாசந: கெட்ட கனவுகளைப் போக்குபவன்.
927. வீரஹா: பாசங்களை (தளைகளை) விடுவிப்பவன்.
928. ரக்ஷண: காப்பாற்றுபவன்.
929. ஸந்த: வளரச் செய்பவன்.
930. ஜீவந: உயிரைக் கொடுப்பவன்.
931. பர்யவஸ்தித: சூழ நின்றவன்.

100. அநந்த ருபோ அநந்தஸ்ரீ: ஜிதமந்யுர் பயாபஹ:
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸ:

932. அநந்தரூப: எண்ணிறந்த உருவங்களை உடையவன்.
933. அநந்தஸ்ரீ: அளவற்ற செல்வமுள்ளவன்.
934. ஜிதமந்யு: கோபத்தை வென்றவன்.
935. பயாபஹ: அடியவர் பயத்தைப் போக்குபவன்.
936. சதுரச்ர: அடியவர் வேண்டுதல்களை உடனே செய்து வைப்பதில் சமர்த்தன்.
937. கபீராத்மா: ஆழங்காண முடியாதவன்.
938. விதிச: அனைவருக்கும் மேலானவன்.
939. வ்யாதிச: பதவிகளைத் தருபவன்.
940. திச: நியமிப்பவன்.

101. அநாதிர் பூர்புவோ லக்ஷ்மீஸ் சுவீரோ ருசிராங்கத:
ஜநநோ ஜந ஜந்மாதிர் பீமோ பீம பராக்ரம:

941. அநாதி: (பிரமன், ருத்ரன் முதலானோரால்) பகவான் அறியப்படாதவர்.
942. பூர்புவ: உண்மையாக வாழ்பவர் உள்ளத்து இருப்பிடமாக உள்ளவன்.
943. லக்ஷ்மீ: தானே எல்லாவிதச் செல்வமாக உள்ளவன்.
944. ஸுவீர: சிறந்த வீரம் உள்ளவன்.
945. ருசிராங்கத: தனது அழகான திருமேனியை அநுபவிக்குமாறு அடியார்களுக்குத் தருபவன்.
946. ஜநந: பிறப்பிப்பவன்.
947. ஜநஜந்மாதி: பிறவிப்பயனாக உள்ளவன்.
948. பீம: பயங்கரன்.
949. பீமபராக்ரம: பயங்கரமான பராக்ரமம் உடையவன்.

102. ஆதார நிலயோ தாதா புஷ்ப ஹாஸ: ப்ரஜாகர:
ஊர்த்வகஸ் ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண:

950. ஆதாரநிலய: சாதுக்களுக்கு இருப்பிடமானவன்.
951. தாதா: தர்மத்தை உபதேசிப்பவன்.
952. புஷ்பஹாஸ: மலர்கின்ற மலரைப் போலும் இனியவன்.
953. ப்ரஜாகர: விழித்திருப்பவன்.
954. ஊர்த்வக: மிகவும் உயர்ந்தவன்.
955. ஸத்பதாசார: பிறரை நல்வழிப்படுத்துபவன்.
956. ப்ராணத: உயிரளிப்பவன்.
957. ப்ரணவ: தனது திருவடிகளைத் தொழுது எழச் செய்பவன்.
958. பண: நிலை மாற்றம் செய்பவன். (தலைவனாக உள்ள தான் அடியவனாக இருந்து மகிழ்பவன்.)

103. ப்ரமாணம் ப்ராண நிலய:
ப்ராண த்ருத் ப்ராண ஜீவந:
தத்வம் தத்வ விதேகாத்மா
ஜந்ம ம்ருத்யு ஜராதிக:

959. ப்ரமாணம்: பிரமாணமாய் இருப்பவன்.
960. ப்ராணநிலய: அனைத்து ஆன்மாக்களுக்கும் வாழ்விடமானவன்.
961. ப்ராணத்ருத்: உயிரினங்களைத் தரிப்பவன்.
962. ப்ராண ஜீவந: உயிரினங்களுக்கு வாழ்வாக இருப்பவன்.
963. தத்வம்: சாரமாக (தத்துவமாக) உள்ளவன்.
964. தத்வவித்: தத்துவத்தை அறிந்தவன்.
965. ஏகாத்மா: உலகங்கட்கெல்லாம் ஓருயிராய் இருப்பவன்.
966. ஜந்மம் ருத் ருஜராதிக: பிறப்பு, இறப்பு, மூப்புகட்கு அப்பாற்பட்டவன்.

104. பூர்புவ: ஸ்வஸ்த ருஸ்தாரஸ் ஸவிதா ப்ரபிதா மஹ:
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா
யஜ்ஞாங்கோ யஞ்ஞ வாஹந:

967. பூர்புவஸ்வஸ்தரு: மூவுலக உயிரினங்களும் தங்குவதற்குரிய மரமாக உள்ளவன்.
968. தார: (உலக வாழ்க்கை என்னும் கடலைத் தாண்டுவதற்குரிய) கப்பலாக இருப்பவன்.
969. ஸ்விதா: உண்டாக்குபவன்.
970. ப்ரபிதாமஹ: பிரமனைப் படைத்த தந்தையாய் இருப்பவன்.
971. யஜ்ஞ: தானே வேள்வியாக இருப்பவன்.
972. யஜ்ஞபதி: வேள்விகளுக்குத் தலைவன்.
973. யஜ்வா: பிறர் செய்யும் வேள்விகளைத் தான் செய்வதற்கு அங்கமாக உள்ளவன்.
974. யஜ்ஞாங்க: பிறர் செய்யும் வேள்விகளைத் தனதாக உள்ளவன்.
975. யஜ்ஞவாஹந: வேள்வியை நடத்தித் தருபவன்.

105. யஜ்ஞ ப்ருத் யஜ்ஞ க்ருத் யஜ்ஞி
யஜ்ஞ புக் யஜ்ஞ ஸாத ந:
யஜ்ஞாந்த க்ருத் யஜ்ஞ குஹ்யம்
அந்ந மந்நாத ஏவ ச

976. யஜ்ஞப்ருத்: யாகங்களை நிறைவிப்பவன்.
977. யஜ்ஞக்ருத்: யாகங்களை உண்டாக்கியவன்.
978. யஜ்ஞீ: வேள்விகளால் ஆராதிக்கப்படுபவன்.
979. யஜ்ஞபுக்: வேள்விகளை அநுபவிப்பவன்.
980. யஜ்ஞஸாதந: வேள்விகளை உபாயமாக்குபவன்.
981. யஜ்ஞாந்தக்ருத்: வேள்வியின் பலனை உண்டாக்குபவன்.
982. யஜ்ஞகுஹ்யம்: வேள்விகளின் அடிப்படை ரகசியமாக உள்ளவன்.
983. அந்நம்: உண்ணும் சுவை அமுதாக உள்ளவன்.
984. அந்நாத: தன்னை அநுபவிப்பவனைத்தான் இனிதாக அநுபவிப்பவன்.

106. ஆத்ம யோநிஸ் ஸ்வயஞ் ஜாதோ
வைகாநஸ் ஸாம காயந:
தேவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டா க்ஷிதீஸ:
பாப நாஸந:

985. ஆத்மயோநி: (அடியார்களைத் தன்னுடன்) ஒரே தன்மையாகக் கலக்கச் செய்பவன்.
986. ஸ்வயம் ஜாத: தான்தோன்றி (தானே அவதாரம் செய்பவன்.)
987. வைகாந: வேரோடு பெயர்ப்பவன். (துக்கங்களைக் களைபவன்.)
988. ஸாமகாயந: சாமகானம் செய்யக் கேட்டிருப்பவன்.
989. தேவகீநந்தந: தேவகியின் மைந்தன்.
990. ஸ்ரஷ்டா: படைப்பவன்.
991. க்ஷிதீச: பூமியை ஆள்பவன்.
992. பாபநாசந: பாபங்களை அழிப்பவன்.

107. ஸங்கப்ருந் நந்தகீ சக்ரீ ஸார்ங்க தந்வா கதாதர:
ரதாங்க பாணி ர÷க்ஷõப்யஸ் ஸர்வ ப்ரஹரணாயுத:

ஸ்ரீ ஸர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி

993. சங்கப்ருத்: வனமாலையைத் தரிப்பவன்.
994. நந்தகீ: நந்தகம் என்னும் வாளைத் திவ்ய ஆயுதமாக உடையவன்.
995. சக்ரீ: திருவாழியை (சக்ராயுதத்தை) உடையவன்.
996. ஸார்ங்கதந்வா: ஸ்ரீசார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவன்.
997. கதாதர: கௌமேதகீ என்றழைக்கப்படும் கதாயுதத்தை உடையவன்.
998. ரதாங்கபாணி: சக்கரத்தைக் கையில் கொண்டவன்.
999. அ÷க்ஷõப்ய: அசைக்க முடியாதவன்.
1000. ஸர்வப்ரஹரணாயுத: எல்லாத் திவ்ய ஆயுதங்களையும் உடையவன்.

ஓம் நம இதி ஸர்வப் ரஹரணாயுத என்பதுடன் 1000 திருநாமங்கள் நிறைவுறும். மூலத்தில் இதுவரை உள்ளது.

ஸர்வப்ரஹரணாயுத என்னும் திருநாமத்தை இருமுறை ஓதி ஓம் நம என்று முடிப்பது முறை.


108. வநமாலீ கதீ ஸார்ங்கீ ஸங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீமாந் நாரயணோ விஷ்ணுர் வாசுதேவோ பிரக்ஷது

வைஜயந்தி எனப்படும் வாடாத வநமாலையை அணிந்தவரும், சங்கு சக்கரம் சாரங்கம் கதை நந்தகம் ஆகியவற்றைத் திவ்யாயுதங்களாக உடையவரும், விஷ்ணு என்றும், வாசுதேவன் என்றும் பெயர் கொண்டவரும், பிராட்டியாரோடு கூடியவருமான நாராயணன் நம்மைக் காப்பாராக!

(இந்தச் சுலோகம் மகாபாரதத்தில் இல்லை. எனினும் காலங்காலமாக நடைமுறையில் பாராயணம் செய்யப்படுகிறது. இந்தச் சுலோகத்தை மூன்று முறை சொல்வது வழக்கம்.)

********

உத்தரபாகம்
(பிற்பகுதி) பலச்ருதி: (பயன் கூறுவது)

1. இதீதம் கீர்த்த நீயஸ்ய கேஸவஸ்ய
மஹாத்மந:
நாம் நாம் ஸஹஸ்ரம் திவ்யாநாம்
அஸேஷேண ப்ரகீர்த்திதம்

மகிமை பொருந்தியவரும் போற்றத்தக்கவருமான கேசவருடைய திவ்ய நாமங்கள் ஆயிரமும் ஒன்று விடாமல் (சந்தந மகாராஜாவின் குமாரரான பீஷ்மரால், குந்தி மகனான தருமபுத்திரருக்கு) கூறப்பட்டன.

2. ய இதம் ஸ்ருணுயாந் நித்யம் யஸ்சாபி
பரி கீர்த்தயேத்
நாசுபம் ப்ராப்நுயாத் கிஞ்சித்
ஸோஅமுத்ரேஹ ச மாநவ:

இதைத் தினந்தோறும் கேட்பவனும், கீர்த்தனம் செய்பவனும் இம்மையிலும் மறுமையிலும் யாதொரு கெடுதலையும் அடையான்.

3. வேதாந்தகோ ப்ராஹ்மணஸ் ஸ்யாத்
க்ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தநஸம்ருத்தஸ் ஸ்யாத்
ஸுத்ரஸ் சுக மவாப்நுயாத்

(இதைப் பாராயணம் செய்வதால்) பிராமணன் வேதாந்த ஞானம் பெறுவான். க்ஷத்திரியன் வெற்றி பெறுவான். வைசியன் செல்வம் நிரம்பப் பெறுவான். சூத்திரன் சுகம் பெறுவான்.

4. தர்மார்த்தீ ப்ராப்நுயாத் தர்மம்
அர்த்தார்த்தீ சார்த்த மாப்நுயாத்
காமா நவாப் நுயாத் காமீ ப்ரஜார்தீ
ப்ராப்நுயாத் ப்ரஜா:

தருமத்தை விரும்புபவன் தருமத்தை அடைவான். பொருளை விரும்புபவன் பொருளை அடைவான். இன்பங்களை விரும்புகிறவன் இன்பங்களை அடைவான். மக்களை விரும்புகிறவன் மக்களை அடைவான்.

(112 முதல் 115 வரையான சுலோகங்கள் ஆயிரம் திருநாமங்களைப் பக்தியுன் இசைப்பவனுக்கு எல்லாச் செல்வங்களும் வரும், எல்லாத் துக்கங்களும் விலகும் என்கிறது.)

5. பக்திமாந் யஸ் ஸதோத்தாய சுசிஸ்
தத்கத மாநஸ:
ஸஹஸ்ரம் வாசுதேவஸ்ய
நாம்நா மேதத் ப்ரகீர்த்தயேத்

6. யஸ: ப்ராப்நோதி விபுலம் யாதி
ப்ராதாந்ய மேவ ச
அசலாம் ஸ்ரிய மாப்நோதி ஸ்ரேய:
ப்ராப்நோத் யநுத்தமம்

7. ந பயம் க்வசி தாப்நோதி வீர்யம்
தேஜஸ்ச விந்ததி
பவத்ய ரோகோ த்யுதிமாந்
பலரூப குணாந்வித:

8. ரோகார்த்தோ முச்யதே ரோகாத்
பத்தோ முச்யேத பந்தநாத்
பயாந் முச்யேத பீதஸ்து
முச்யே தாபந்ந ஆபத:

எவன் ஒருவன் நாள்தோறும் காலையில் எழுந்ததும் கடன்களை முடித்து விட்டுத் தூய மனதுடன் வாசுதேவரிடத்தில் மனதைச் செலுத்தி, ஆயிரம் திருநாமங்களையும் இசைக்கிறானோ, அவன் பெரும் புகழைப் பெறுவான்; சுற்றத்தாரிடையே நன்மதிப்பைப் பெறுவான்; அழிவற்ற செல்வத்தை அடைவான்; மேலுலக இன்பத்தையும் (முத்தியையும்) பெறுவான்.

அவன் எங்கும் அச்சத்தை அடையான்; சிறந்த அதிகாரங்களையும் உற்சாகத்தையும் அடைவான்; நோய் அணுகப்பெறான்; ஒளி, வல்லமை, அழகு, குணநலன்கள் ஆகியவை பெறுவான்.

பிணியால் பீடிக்கப்பட்டவன் பிணியிலிருந்தும் விடுபடுவான்; பந்தங்களில் சிக்கியவன் பந்தங்களிலிருந்தும் விடுபடுவான்; பயந்தவன் பயத்தினின்றும் விடுபடுவான்; ஆபத்தில் அகப்பட்டவன் அந்த ஆபத்திலிருந்து நீங்கப் பெறுவான். (கஷ்டங்கள் நீங்கப் பெறுவான்.) (5-8)

9. துர்காண் யதிதரத்யாசு புருஷ :
புரு÷ஷாத்தமம்
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண நித்யம்
பக்தி ஸமந்வித:

இந்த ஆயிரம் திருநாமங்களையும் எவனொருவன் பக்தியுடன் புரு÷ஷாத்தமனைக் குறித்துத் துதிக்கின்றானோ, அவன் கடத்தற்கரிய கஷ்டங்களையும் வெகு விரைவில் கடந்து விடுவான்.

(பகவத் ப்ராப்தி)
இரண்டு சுலோகங்கள்.

10. வாஸுதேவா ஸ்ரயோ மர்த்யோ
வாஸுதேவ பராயண:
ஸர்வ பாப விசுத் தாத்மா யாதி ப்ரஹ்ம
ஸநாதநம்:

11. ந வாஸுதேவ பக்தாநாம் அசுபம்
வித்யதே க்வசித்
ஜந்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம்
நைவோப ஜாயதே

(117,118 ஸ்லோகங்கள் பகவானை அடையத்தக்க பொருளாக நம்பிப் பற்றுபவன் பெறும் பலன்களைச் சொல்லும்.)

வாசுதேவனை அடையப் பெற்றவன், அவரையே புகலிடமாகப் பெற்றதால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டுத் தூயவனாய், எப்பொழுதும் நிலைத்திருக்கும் தன்மையுடைய பிரம்மத்தை அடைகிறான். மேலும், வாசுதேவ பக்தர்களுக்கு எல்லாக்காலத்தும் அசுபங்கள் நேர்வதில்லை. இறப்பு முதலானவற்றிலிருந்து விடுபடுகிறான். (10-11)

(வழிபடுபவன் பெறும் பலன்கள்)

12. இமம் ஸ்தவ மதீயாந: ஸ்ரத்தா பக்தி
ஸமந்வித:
யுஜ்யே தாத்ம ஸுகக்ஷõந்தி ஸ்ரீ த்ருதி
ஸ்ம்ருதி கீர்த்திபி:

பக்தியுடன் கூடிய ஆவலுடன் இந்த ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்பவன் ஆத்ம சுகம், பொறுமை, செல்வம், நிலையான மனநிலை, நல்ல நினைவாற்றல், மிகுந்த புகழ் ஆகியவற்றை அடைவான்.

(பக்தியின் பயன்)

13. ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம்
ந லோபோ நாசுபா மதி:
பவந்தி க்ருத புண்யாநாம் பக்தாநாம்
புரு÷ஷாத்தமே

புரு÷ஷாத்தமனிடம் பக்தி செய்பவனுக்குக் கோபம், பொறாமை, பேராசை, கெட்ட எண்ணம் ஆகிய எதுவும் இராது. இவை தாமாகவே விலகிப் போகும்.

(பகவானுடைய பெருமை)

14. த்யௌஸ் ஸசந்த்ரார்க்க நக்ஷத்ரா
கம் திஸோ பூர் மஹோததி
வாஸுதேவஸ்ய வீர்யேண
வித்ருதாநி மஹாத்மந:

15. ஸசுராசு ரகந்தர்வம்
ஸய÷க்ஷõரக ராக்ஷஸம்
ஜகத் வஸே வர்த்ததேதம்
க்ருஷ்ணஸ்ய ஸசராசரம்

சந்திரன், சூரியன், நட்சத்திரங்களுடன் கூடிய ஆகாயமும், திசைகளும், பூமியும், கடல்களும் ஆகிய அனைத்தும் அளவற்ற பெருமை படைத்த வாசுதேவனுடைய திவ்ய சக்தியால் தாங்கப்படுகின்றன. எல்லாமே பகவானின் வசத்தில் உள்ளன.

தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள், நாகர்கள், அரக்கர்கள் மற்றுமுள்ள சராசரங்கள் ஆகிய யாவுமே பகவான் கிருஷ்ணனின் வசத்திலேயே உள்ளன. (14-15)

(சரீர ஆத்ம சம்பந்தத்தின் விளைவு)

16. இந்த்ரியாணி மநோ புத்திஸ்
ஸத்வம் தேஜோ பலம் த்ருதி:
வாஸுதேவாத் மகாந்யாஹு :
÷க்ஷத்ரம் ÷க்ஷத்ரஜ்ஞ ஏவ ச

இந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம், கூர்மை, பலம், தைரியம், தேகம், ஆத்மா ஆகிய யாவுமே வாசுதேவனை ஆத்மாவாக உடையன. அனைத்தும் வாசுதேவமயமே!

(தர்மத்திற்குப் பிரபு அச்சுதனே!

17. ஸர்வா கமாநாமாசார : ப்ரதமம் பரிகல்பதே :
ஆசார ப்ரதமோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுத :

ஆசாரமே சாத்திரங்கள் அனைத்துக்கும் முதன்மையானது. ஆசாரமே அகத்தூய்மையும், புறத்தூய்மையும் தரும். ஆசாரத்திலிருந்து உண்டானதே தருமம். இந்தத் தருமத்திற்குப் பிரபு அச்சுதன் ஒருவனே!

(அனைத்தும் பகவானிடத்திலிருந்தே உண்டாகும்.)

18. ரிஷய : பிதரோ தேவா மஹா பூதாநி தாதவ :
ஜங்கமா ஜங்கமஞ் சேதம் ஜகந் நாராயணோத்பவம்

ரிஷிகள், பிதிரர்கள், தேவர்கள், ஐம்பெரும் பூதங்கள், போக போக்கியங்கள், நிலையான பொருள்கள், தாவரங்கள் ஆகிய இவை அனைத்தும் பகவானிடமிருந்தே உண்டாயின.

(ஞானத்திற்குக் காரணம் பகவானே)

19. யோகோ ஞாநம் ததா ஸாங்க்யம்
வித்யாஸ் ஸில்பாதிகர்ம ச
வேதாஸ் ஸாஸ்த்ராணி விஞ்ஞாநம்
ஏதத் ஸர்வம் ஜநார்தநாத்

கர்மயோகம்; பக்தியோகம்; ஞானம், ஸாங்க்யம் எனப்படும் ஞானயோகம்; தர்க்கம், வியாகரணம் முதலான வித்தைகள்; சிற்பம் முதலான தொழில்கள் (கலைகள்); வேதங்கள்; சாத்திரங்கள்; இதிகாச புராணங்கள்; விஞ்ஞானம் ஆகிய அனைத்துமே பகவான் ஜனார்த்தனனிடமிருந்தே தோன்றின.

(நிர்வாகச் சிறப்பு)

20. ஏகோ விஷணுர் மஹத்பூதம் ப்ருதக்
பூதாந் யநேகஸ:
த்ரீந் லோகாந் வ்யாப்ய பூதாத்மா
புங்க்தே விஸ்வ புகவ்யய:

பெரிய பொருளாக இருப்பவர் விஷ்ணு. அவர், ஒருவரே! அவரே பலப்பல விதங்களாகப் பார்க்கப்படுகிற ஐம்பெரும் பூதங்கள், மூன்று வித சேதநர்கள் (பக்தர், முக்தர், நித்யர்), மூவுலகங்கள் ஆகியவற்றில் வியாபித்து நிற்கிறார். அந்தராத்மாவாகவும், காப்பவராகவும் இருக்கிறார். அழிவும், மாறுபடும் இல்லாதவராக இருந்து ஆனந்தத்தை அநுபவித்து நிர்வகித்து வருகிறார்.

(மணியான துதி)

21. இமம் ஸ்தவம் பகவதோ
விஷ்ணோர் வ்யாஸேந கீர்த்திதம்
படேத்ய இச்சேத் புருஷ : ஸ்ரேய :
ப்ராப்தும் சுகாநி ச

(இந்த தோத்திரத்துக்குப் பொருள் அளவற்ற பெருமைக்குரிய பகவான் மகாவிஷ்ணு. விஷ்ணுவின் அவதாரமான சொல்லின் செல்வர், மஹாஞானி வியாச பகவான் இத்தோத்திரத்தை அருளினார். இவ்விருவரின் மங்களமான மகிமைகள் இத்தோத்திரத்தில் உள்ளன. எனவே, இது இம்மை மறுமை நலன் கருதுவோர் அனைவர்க்கும் ஏற்ற மணியான துதி.)

உயர்வையும் சுகத்தையும் அடைய விரும்பும் எந்த மனிதனும் வியாசபகவானால் கீர்த்தநம் செய்யப்பெற்ற விஷ்ணுவினுடைய இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பானாக.

(மேலான தெய்வத்தை வணங்குகிறேன்)

22. விஸ்வேஸ்வர மஜம் தேவம் ஜகத : ப்ரபுமவ்யயம்
பஜந்தி யே புஷ்கராக்ஷம் ந தே யாந்தி பராபவம்
ந தே யாந்தி பராபவம் ஓம் நம இதி

ஸ்ரீ விஷ்ணு திவ்யநாம ஸ்தோத்ரம் உத்தர பாகம் சம்பூர்ணம்.

அனைத்துலகுக்கும் ஆண்டவனும், பிறப்பற்றவரும், மேலான ஆனந்த வடிவினரும் உலகின் தலைவரும், மாறுபாடு இல்லாதவருமாகிய தாமரைக் கண்ணனை வழிபடுகிறவர்கள் நிச்சயமாக எந்நாளும் தோல்வி அடையமாட்டார்கள்; தோல்வி அடையவே மாட்டார்கள்.

ஓம் நம: என்று கூறி, எல்லா நன்மைகளும் உண்டாகப் பரம புருஷனை மனம் மொழி மெய்களால் வணங்கி நிற்கிறேன்.

ஸ்ரீஸஹஸ்ர நாம அத்யாயம் முடிவுற்றது.

********

அர்ஜுந உவாச -

23. பத்மபத்ர விஸாலாக்ஷ பத்மநாப ஸுரோத்தம
உவாச - பக்தாநா மநுரக்தாநாம் த்ராதா பவ ஜநார்தந

ஸ்ரீ பகவாநுவாச -

24. யோ மாம் நாம ஸஹஸ்ரேண ஸ்தோது மிச்சதி பாண்டவ
ஸோஹ மேகேந ஸ்லோகேந ஸ்துத ஏவ ந ஸம்ஸய:
ஸ்துத ஏவ ந ஸம்ஸய ஓம் நம இதி

வ்யாஸ உவாச -

25. வாஸாநாத் வாஸுதேவஸ்ய வாஸிதம் புவனத்ரயம்
உவாச - ஸர்வபூத நிவாஸோ அஸி வாஸுதேவ நமோஸது தே

ஸ்ரீ வாஸுதேவ நாமேஅஸ்து த ஓம் நம இதி

பார்வத்யுவாச -

26. கேநோ பாயேந லகுநா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம்
பட்யதே பண்டிதைர் நித்யம் ஸ்ரோது மிச்சாம் யஹம் ப்ரபோ

ஈஸ்வர உவாச -

27. ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநநே

ஸ்ரீ ராமநாம வராநந ஓம் நம இதி

ப்ரஹ்மோவாச -

28. நமோஸ்த் வநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே
ஸஹஸ்ர பாதா க்ஷிஸிரோரு பாஹவே
ஸஹஸ்ர நாம்நே புருஷாய ஸாஸ்வதே
ஸஹஸ்ர கோடி யுகதாரிணே நம:

ஸ்ரீ ஸஹஸ்ரகோடி யுகதாரிண ஓம் நம இதி

ஸஞ்ஜய உவாச -

29. யத்ர யோகேஸ்வர : க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர்தர:
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி : த்ருவா நீதிர் மதிர் மம

ஸ்ரீ பகவாந் உவாச -

30. அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா : பர்யு பாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தாநாம் யோக ÷க்ஷமம் வஹாம் பஹம்

31. பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

32. ஆர்த்தா விஷண்ணாஸ் ஸிதிலாஸ்ச பீதா :
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமாநா :
ஸங்கீர்த்ய நாராயண ஸப்த மாத்ரம்
விமுக்த துக்காஸ் சுகிநோ பவந்து

33. காயேனவாசாமனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமந்நாராயணாயேதி சமர்ப்பயாமி.

34. இதி ஸ்ரீ மஹாபாரதே ஸதஸாஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயாம்
வையாஸிக்யாம் ஆநுஸாஸநிக பர்வாந்தர்கத தாநதர்ம
பர்வணி ஸ்ரீபீஷ்மயுதிஷ்டிரஸம்வாதே

ஸ்ரீவிஷ்ணோர் திவ்யஸஹஸ்ரநாம
ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar