SS கருப்பசாமி பாடல்கள்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கருப்பசாமி பாடல்கள்!
கருப்பசாமி பாடல்கள்!
கருப்பசாமி பாடல்கள்!

அய்யன் வாரார்
மெய்யன் வாரார்
அழகர்மலை விட்டிறங்கி
அழகுக் கருப்பன் வாரார் - நம்ம
பதினெட்டாம் படியோன் வாரார்
பட்டாடை பளபளக்க
பவளமணி கிலுகிலுக்க
வெட்டரிவாள் வீச்சோடு

வேகமாக இங்கே வாரார் - நம்ம
தட்டட்டி கருப்பன் வாரார்
சிறப்பான முட்செருப்பு
சிரிக்கின்ற கலகலப்பு
பறக்கின்ற குதிரையோடு
பாசமுடன் இங்கே வாரார் - நம்ம
குறட்டிக் கருப்பன் வாரார்
ஓங்கிய சவுக்கோடு
உருளுகின்ற வழியோடு
தீங்கான விடம்போக்க
திட்டாணி மன்னன் வாரார் - நம்ம
ராங்கியம் கருப்பன் வாரார்

பாட்டு முழங்கிடவே
பாற்சோறு மணந்திடவே
கேட்டதைக் கொடுப்பதற்கே
கீழிறங்கி இங்கே வாரார் -நம்ம
கோட்டூருக் கருப்பன் வாரார்
பித்தலாட்டப் பேய்களையும்
பில்லி சூன்யத்தை
கொத்தாக வேரறுத்து
குலம்காக்க இங்கே வாரார் - நம்ம
கொத்தரிக் கருப்பர் வாரார்
தலையினிலே கிரீடமுடன்

தாள்களிலே சலங்கையுடன்
குலவை முழக்கமுடன்
குதித்தாடி இங்கே வாரார் - நம்ம
இளங்குடிக் கருப்பன் வாரார்
சாம்பிராணி கமகமக்க
ஜவ்வாது மணமணக்க
தேம்பலைத் துடைப்பதற்கே
தொலையானூர் அய்யன் வாரார் - நம்ம
முலங்குடி கருப்பன் வாரார்

கத்துகின்ற கடலாக
கரைகாண அன்புடனே
நித்தம் நம்மைக் காப்பதற்கே
நேசமுடன் இங்கே வாரார் - நம்ம
கொத்தங்காட்டு கருப்பன் வாரார்
சுக்குமாந் தடியேந்தி
துடிக்கின்ற மீசையோடு
மக்களைக் காத்திடவே
மன்னவனாய் இங்கே வாரார் - நம்ம
வையக் கருப்பன் வாரார்

அந்திசந்தி நேரத்திலும்
ஆபத்து நேரயிலும்
வந்திங்கே காத்திடவே
மஞ்சனத்தி அழகன் வாரார் - நம்ம
மருதங்குடிக் கருப்பன் வாரார்
நோய்விரட்டி பேய்விரட்டி
தாய்போலச் சேய்காக்க
மாயவனின் தூயவனும்
வாழ்வளிக்க இங்கே வாரார் - நம்ம
நெய்வாச கருப்பன் வாரார்.

முன்னோடிக் கருப்பர் துதி...

காக்கும் தெய்வமே - எங்கள் கருப்ப தெய்வமே - நாங்கள்
நோக்கும் இடமெல்லாம் உந்தன் வீரத்தோற்றமே... (காக்கும்)

அள்ளிச் சொருகிய - மலர் அழகுக் கொண்டையும் - வளர்
துள்ளு மீசையும் - உந்தன் எழிலைக் கூட்டுதே  (காக்கும்)

பகையழித்திடும் - சிறந்த பரந்த தோள்களும் - நல்ல
கருத்த மேனியும் - உந்தன் வலிமை காட்டுதே...  (காக்கும்)

காடு வீடெல்லாம் - உந்தன் காவலில் உண்டு - உயர்
படி பதினெட்டும் - உந்தன் பார்வையிலுண்டு...  (காக்கும்)

ஜாதி மல்லிகை - உயர்சாந்து ஜவ்வாது மணக்கும்
சாம்பிராணியும் - உந்தன் வரவைக் கூறுதே... (காக்கும்)

சாய வேட்டியும் - உயர் ஜரிகைப் பட்டுமே - உந்தன்
மேனி அழகிலே - தவழ்ந்து மின்னச் ஜொலிக்குதே... (காக்கும்)

வெள்ளைக் குதிரையும் - உயர் வீச்சரிவாளும் - நல்ல
தண்டைகிண்கிணி முழங்க இங்கு வாருமே.... (காக்கும்)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar