SS உதய காலத்தில் உள்ளம் அமைதி பெற.. - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> உதய காலத்தில் உள்ளம் அமைதி பெற..
உதய காலத்தில் உள்ளம் அமைதி பெற..
உதய காலத்தில் உள்ளம் அமைதி பெற..

பக்தாள் முக்தாள் மூவர்தேவர்களின் ஸ்தோத்திரம்

1. ஆதிகணபதி ஆறுமுகரை அம்பிகைமணவாளரை
காலபைரவர் நந்திகேஸ்வரர் வீரபத்திர தக்ஷிணாமூர்த்தியை தியானித்தெழுந்தேன்

2. சேஷகிரிவளர் வெங்கடேசரைத் திருமகள் அலமேலுவை
தேவி சரஸ்வதி சதுர்முகப் பிரம்மா ஸ்ரீ பூமிதேவியம்மனை

3. பிராண தாரகமாக விளங்கிடும் பரிபூர்ண காவேரியம்மனை
ஆதிகங்கையை அறுபத்தாறுகோடி அகிலபுவனத்தின் தீர்த்தத்தை

4. மத்ஸ்ய கூர்ம வராக நரசிங்க வாமனாவதார மூர்த்தியை
வீரபரசுராம பலபத்திர ஸ்ரீராமக்ருஷ்ண பௌத்தரை

5. ஸ்ரீ ஹரி திருமார்பில் விளங்கிடும் ஸ்ரீதுளஸி மஹாதேவியை
ஜனகன் திருமகள் பிராண நாதரை ஸ்ரீபரத லக்ஷ்மண சத்துருக்கினரை

6. ஆதிசக்திதய லக்ஷúமி சரஸ்வதி ஸாவித்திரி காயத்திரியம்மனை
அகலி துரோபதை சீதை தாரையை மண்டோதரி ஐந்துபேர்களை

7. தேவகி குந்தி சுபத்திரை ருக்மணி சப்த ரிஷிகளின் தேவியை
தசரதர் தேவி கௌஸல்யையுடன் சிறந்த உத்தமிமார்களை

8. அயிராணியுடன் ஸுரகன்னிகளை ஐராவதம் உச்சைசிரவம்
அருமையாகிய காமதேனுவை அடர்ந்த கற்பகச் சோலையை

9. அஷ்டதிக்குப்பாலர் அவர்கள் தேவியை அஷ்ட வஸுஅஷ்டகஜங்களை
சித்தர் கின்னரர் கிம்புருடரை சிறந்த வித்யாதரர்களை

10. வசிஷ்டர் வாமதேவர் காச்யபர் அகஸ்தியர் அத்ரி ஆங்கீரஸை
புலஸ்தியர்கிரது புலகர் முதலான தவசிலாக்ய மகான்களை

11. வேதவியாசரை மார்க்கண்டேயரை வீணாகான நாரதரை
சூதர்சவுநகர் துர்வாசமுனி ஜடபரதர் ஜரத்காருவை

12. மதங்கமாமுனி ரிச்யசிருங்கரை மகரிஷி சரபங்கரை
பிருகுமகாமுனி கொளதம ரிஷி பேர் பெற்ற விஸ்வாமித்ரரை

13. ஸனகாதிகளை ஜனகராஜரை சுகருடன் சதானந்தரை
வைஸம்பாயனர் சுமந்து ஜைமினி பைலவர் ஜாபாலியை

14. கபிலரிஷியுடன் தத்தாத்திரேயரை கற்கிபாரத்துவாஜரை
ஹயக்கிரீவரைப் பிரகஸ்பதி குரு ஆதி சங்கரா சாரியை

15. பத்மபாதரை அஷ்டகோணரை புகழ்பெற்ற ராமானுஜரை
ஸ்ரீதளாசாரி ஸ்ரீ கோவிந்தரை சிறந்த மத்வாசாரியை

16. அகிலபுவனத்தை காத்துரக்ஷிக்கும் அஷ்டலக்ஷúமி நாதரை
அனுமார் பெரிய திருவடியுடன் ஆழ்வார்கள் பன்னிருவரை

17. பரமபக்தனாம் ருக்மாங்கதன் துருவன் பக்தனாம் பிரகலாதணை
பக்திசெய்திட்ட குலேசர் அம்பரிஷன் பீஷ்மர் விதுரர் பாஞ்சாலியை

18. ஆதிமூலத்தைக் கூவியழைத்திட்ட அறிவுமிகுந்த கஜேந்திரனை
ஹரனைத் துதிசெய்த பாணராவண பிருங்கிசண்டி கேசபக்தரை

19. அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர் அறுபத்துமூவர் தங்களை
ஜயதேவருடன் துளசிதாஸரை ஹரிசிறந்த பக்திமான்களை

20. பக்தர் குழாங்களை பகவான் மூவரை பாரிலுள்ள புண்யநதிகளை
ஏற்றித்தொழுதிட்டேன் ஹிருதயசுத்தியுடன் போற்றினேன் புகழ் பாடினேன்

21. உதயகாலத்தில் உள்ளம் தெளிந்து நான் ஹிருதயத்தில் பரதேவியின்
பாத கமலத்தை தியானம் பண்ணிய பவக்கடல் கடந்தேறினேன் தியானித்தெழுந்தேன்

ஓம் தத் ஸத் பிரம்மார்ப்பிதம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar