SS நவகிரக மந்திரங்கள் - சூரியன் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நவகிரக மந்திரங்கள் - சூரியன்
நவகிரக மந்திரங்கள் - சூரியன்
நவகிரக மந்திரங்கள் - சூரியன்

ஓம் ஆதித்யாய நம:
காசிப முனிவரின் புத்திரர்
(நவக்கிரகங்களில் முதன்மை பெற்றவர்)

ஸ்ரீ சூர்ய த்யான ஸ்லோகம்

த்யாயேத் ஸூர்ய மநந்தகோடிகிரணம்
தேஜோமயம் பாஸ்கரம்
பக்தாநாம் அபயப்ரதம் திநகரம்
ஜோதிர்மயம் சங்கரம்
ஆதித்யம் ஜகதீசம் அச்யுதம் ஆஜம்
த்ரலோக்ய சூடாமணிம்
பக்தாபிஷ்ட வரப்ரதம் திநமணிம்
மார்தாண்ட மாத்யம் சுபம்

ஸ்ரீ சூர்ய த்யான ஸ்லோகம் (வேறு வகை)

1. ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோ ஸ்மி திவாகரம்

2. த்விபுஜம் பத்மஹஸ்தம் ச வரதம் முகுடாந்விதம்
த்யாயேத் திவாகரம் தேவம் ஸர்வா பீஷ்ட பலப்ரதம்

3. பத்மாஸன: பத்மகர: பத்மகர்ப்ப ஸமத்யுதி:
ஸப்தா ஸவரத ஸமஸ்தஸ்ஸ த்விபுஜ: ஸயாத் ஸ்தா ரவி

4. ஸோணாம் போருஹ ஸுஸ்திதம்
த்ரிநயனம் தேத்ரயீ விக்ரஹம்
தானாம் போஜயுகா பயாணீ தத்தம்
ஹஸ்தை: ப்ரவாலப்ரபம்
கேயூராங்கத ஹாரகங்கண தரம்
கர்ணோல்லஸத் குண்டலம்
லோகோத் பத் விபத்தி பாலனகரம்
ஸூர்யம் குணாப்திம் பஜே

காசினி இருளை நீக்கும்கதிர் ஒளி ஆகி எங்கும்
பூசுரர் உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா! எனை ரட்சிப்பாய்; செங்கதிரவனே போற்றி.

(வேறு வகை)

ஞாயிறு
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி! சுந்தரா போற்றி!
வீரியா போற்றி! வினைகள் களைவாய்!

ஸ்ரீ ஆதித்ய காயத்ரீ மந்திரம்

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸூர்ய: ப்ரசோதயாத்

ஸுர்ய ஸ்தோத்ரம்

(வேதம் அறிந்தவர் துணைகொண்டு, ஸ்வரத்துடன் கூற எடுத்த காரியம் சித்திக்கும். ஒவ்வொரு தினமும் இதைச் சொல்லி நமஸ்காரம் செய்யவும்.)

ஆஸத்யேன ரஜஸா வர்த்தமானோ நிவேஸயன்னம்ருதம் மர்த்யம் ச
ஹிரண்யயேன ஸவிதா ரதேனாதேவோயாதி புவனா விபஸ்யன்

அதிதேவதா மந்த்ரம் :

அக்னிம் தூதம் வ்ருணீமஹே ஹோதாரம்
விஸ்வவேதஸம் அஸ்ய யக்ஞஸ்ய ஸுக்ரதும்

ப்ரத்யதி தேவதா மந்த்ரம் :

யேஷா மீஸேபஸுபதி: பஸூனாம் சதுஷ்பதாமுதச த்விபதாம்
நிஷ்க்ரீதோயம்யக்ஞ்ஞியம் பாகமேது ராயஸ்போஷா யஜமானஸ்ய ஸந்து
அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸமேத பகவதே ஸூர்யாய நம:

சூர்ய கவசம்

காப்பு

அருமங்கை நெல்லி போன்று உள்ளகங்
கொண்டு விழைந்து செய்யும்
கருமங்கை கூடுமாறும் கலதி
கண்டு ஓடு மாறும்
திருமங்கை நாடுமாறும் திருந்து
மண்ணவர் விண்ணோர் யா
வருமங்கை எனக்கொள் வேழ
மாமுகன் மலர்த்தாள் போற்றி ! (வேறு)

அத்தர் அணிந்து ஆங்கு அறுகு மதிநதிபொற்
கடுக்கை முடிக்கு அன்று பூண்டார்
புத்தழகு படவிடமும் திருமிடற்றுள்
நின்று அணிந்தார் போலுமென்ன
மத்தகய முகத்தொழுகு மதநுகர்வண்டு
அகன்கழுத்து மருவி மொய்ப்பப்
பத்தர்பணி வரத்தலத்துள் அமர்ந்தாரை
எழுபிறப்பும் பரவி உய்வாம்.

முடிபுனைந்து அரும் பொற் பைம்பூண்
முயங்க மெய்ம் முழுதும்பூண்டு
வடியிசை மறை புகன்று
மாதவர் அங்கிஓம்பக்
கொடிஅணி நெடுந்தேர் ஏறிக்
குலம்படு கமல மங்கை
கடிமணஞ் செய்யத் தோன்றும்
கதிரவன் திருத்தாள் போற்றி!

திருவளர் தலைபுரக்கச்
சீர்மலி கிருணி யென்றும்
உருமலி நெற்றி காக்க
ஓங்கு சூரியன் ஆதித்தன்
குருமலி நயனம் காக்க
குழைச்செவி திவாகரன் தாள்
மருவினன் காக்க நாசி
வளர்ஒளிப் பானு காக்க!

மலர்முகம் இரவி காக்க
வளைகடல் உலகுக் கெல்லாம்
பலர்புகழ் விழியாய் நின்றோன்
பவளவாய் புரக்க கண்டர்
கலர்அறி வரிய செய்ய
கதிர் விபாவசு புரக்க
வலர்கிர கபதி கந்தம்
அகமகிழ்ந்து என்றும் காக்க!

அரும்பிர பாகரன் தான்
அமர்புயம் இரண்டும் காக்க
தரும்புகழ்க் கையி ரண்டும்
தழற்கதிர் புரந்து காக்க
வரும்பெரும் பானு மான்என்
மனநெறி வழாது காக்க
விரும்பும் ஏழ்பரி உகைப்போன்
மேவரு மருங்குல் காக்க!

விண்மணி நாபி காக்க
மேவுபன் னிருவர் ஆனோன்
நண்ணிய கடி புரக்க
நயம்படப் பொலியுஞ் சக்தி
எண்ணுறு சவிதாக் காக்க
எழிற்படு தொடை இரண்டும்
பண்ணவர் தலைவன் காக்க
பாற்கரன் முழந்தாள் காக்க!

நயம்படு சங்கம் காக்க
நயக்குமார்த் தாண்டச் செல்வன்
பயம்படு பரடு காக்க
பயில்உறு கோள்கட்கு ஈசன்
சயம்படு மடிகள் காக்க
சார்தின மணிச ரீரம்
வயம்படு மித்தி ரன்தான்
மனமகிழ்ந்து என்றும் காக்க!

(வேறு)

அறமாதி தருபானு கவசநூல்
வைகறையில் அமர்ந்து போற்றில்
திறமாகும் தேவரொடு மறிஞர்புக
ழப்படுவர் சித்தத் துள்ளே
உறமேவும் பொருள் பெறுவர்
கிரகபயம் ஒழிவர்உயில் உடல்நீங்கில்
பெறலாய கனலிபதம் பெற்று உய்வர்
அவனீமிசைப் பிறந்து ளோரே!

ஆண்டுஒன்று போற்றி செயின்
அறன்கடையும் கொடுநோயும் அரியகோளும்
மூண்டொன்றும் செயா தோட்டும்
முடிசூடி உலகம்ஒரு மூன்றும் காவல்
பூண்டொன்றும் அரசுசெய்யும் வாழ்வளிக்கும்
புகழ் அனைத்தும் பொருந்தக் கூட்டும்
காண்டகும்ஏழ் பரநெடுந்தேர் உகைத்து
உலவும் கதர்க்கடவுள் கவசக்கல்வி!

வேறுபடும் ஒளிபடைத்து விளங்கும்பல
மணியிழைத்து மேவும் பைம்பொன்
வீறுமணி பலபுனைந்து கற்பகம்போல்
பொலிவுஎய்தி விரவும் தண்தேன்
ஆறுபடு கடம்பமலர் நிகர்மேனிச்
செங்கதிரை அகத் திருத்தின்
ஊறுசெய வருநோய்கள் எவையும் அனல்
கொளும் பஞ்சின் ஒழிந்து போமே!

சூர்ய ஸ்தோத்திரப் பாடல்
காப்பு

மண்ணுள் உயிர்கட்கு அனைத்தும் மாறாது அளித்துநல
நண்ணு நவக்கிரக நண்பு சொலத் - தண்ணுலவு
திங்கள் அணி தங்கும்உயர் செஞ்சடையர் உள்மகிழ்செய்
கங்கைஅருள் ஐங்கரனார் காப்பு.

வெயில் கால நோய்கள், கண்வலி முதலியன தீர
ஸ்ரீ ஸூர்யாஷ்டகம்

1. ஆதி தேவ நமஸ் துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே

2. ஸப்தாச்வ ரதமாரூடம் ஸர்வ லோக பிதாமஹம்
ச்வேத பத்ம தாமதேவம் தம்ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

3. லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்
மஹா பாவஹரம் தேவம் தம்ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

4. த்ரைகுண்யம் ச மஹா சூரம் ப்ரும்மவிஷ்ணு மஹேச்வரம்
மஹா பாபஹரம் தேவம் தம்ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

5. ப்ரும்ஹிதம் தேஜ: புஞ்ஜஞ்ச வாயுகாச மேவச
ப்ரபுஸ்த்வம் ஸர்வலோகானாம் தம்ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

6. பந்தூக புஷ்ப ஸங்காஸம் ஹாரகுண்டல பூஷிதம்
ஏகசக்ர ரதம் தேவம் தம்ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

7. தம்ஸூர்யம் லோக கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபநம
மஹா பாபஹரம் தேவம் தம்ஸூர்யம் ப்ரணமாம்யஹம்

8. தம்ஸூர்யம் ஜகதாம் ஜாணப்ரகாச மோக்ஷதம்
மஹா பாபஹரம் தேவம் தம்ஸூர்யம் ப்ரணமாம்யஹம்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar