SS நவகிரக மந்திரங்கள்- சந்திரன் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நவகிரக மந்திரங்கள்- சந்திரன்
நவகிரக மந்திரங்கள்- சந்திரன்
நவகிரக மந்திரங்கள்- சந்திரன்

ஓம் சந்த்ராய நம:

(பாற்கடலிலே தோன்றியவர். வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்)

சந்த்ர த்யான ஸ்லோகம்

ச்வேதாம்பரான்வித வபும் வரசுப்ரவர்ணம்
ச்வேதாச்வ யுக்த ரதகம் ஸர ஸேவிதாங்க்ரீம்
தோர்ப்யாம் த்ருதாபயகரம் வரதம் ஸுதாம்சும்
ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி சந்த்ரம்

சந்த்ர த்யான ஸ்லோகம் (வேறு வகை)

1. ததிசங்க துஷாராபம் க்ஷிரோ தார்ணவ ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம் சம்போர் மகுட பூஷணம்

2. ஸ்வேத: ஸ்வேதாம்பரதரோ தஸாச்வ: ஸ்வேத பூஷண:
கதாபாணிர் த்விபாஹுஸ்ச கர்த்தவ்யோ வரத ஸஸீ:

3. ஸோமம் த்விபுஜம் ச முக்தாபரண பூஷணம்
ஸ்வேதாஸ வரத மாரூடாம் மேரூம் யாந்தம் பிரதஷிணம்

4.சுப்ரம் சதுர்புஜம் தேவம் கேயூர முகுடோஜ்வலம்
வாசு தேவஸ்ய நயனம் சங்கரஸ்யச பூஷணம்

ஸ்வேதாம் பரோஜ்வல தனும்
ஸிதமால்ய கந்தம்
ஸ்வேதாஸ்வ யுக்தரதகம்
ஸுர ஸேவிதாங்க்ரிம்
தோர்ப்பயாம் த்ருதாபயகதம்
வரதம் ஸுதாம்சும்
ஸ்ரீவத்ஸ மௌக்திகதரம்
ப்ரணமாமி சந்தரம்

அலைகடல் அமுதம் தன்னில் அன்று வந்து உதித்து மிக்க
கலைவளர் திங்கள் ஆகிக் கடவுளோர்க்கு அமுதம் ஈயும்
சிலைநுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய்! மேரு
மலை வலமாக வந்த மதியமே! போற்றி! போற்றி!

சந்த்ர காயத்ரீ மந்திரம்

ஓம் பத்ம த்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்

சந்த்ர ஸ்தோத்ரம்

(வேதம் அறிந்தவர் துணைகொண்டு, ஸ்வரத்துடன் கூற எடுத்த காரியம் சித்திக்கும். ஒவ்வொரு தினமும் இதைச் சொல்லி நமஸ்காரம் செய்யவும்.)

ஆப்யாயஸ்வ ஸமேதுதே விஸ்வத: ஸோமவ்ருஷ்ணியம்
பவா வாஜஸ்ய ஸங்கதே:

அதிதேவதா மந்த்ரம் :

அப்ஸுமே ஸோமோ அப்ரவீதன் தர்விஸ்வானி பேஷஜா
அக்னிஸ்ச விஸ்வசம்புவமாபஸ்ச விஸ்வ பேஷஜீ:

ப்ரத்யதி தேவதா மந்த்ரம்:

கௌரீ மிமாய ஸலி லானி தக்ஷத்யேகபதீ த்விபதீ ஸாசதுஷ்பதீ
அஷ்டாபதீ நவபதீ பபூவுஷீ ஸஹஸ்ராக்ஷரா பரமே வ்யோமன்
அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸமேத பகவதே சந்த்ராய நம:

சந்திர கவசம்

நஞ்சமும் அமுதமா நயக்கு நாயகன்
செஞ்சடைக் கானகம் செறியும் அம்புலி
விஞ்சிடு பண்ணவர் விருந்து அருந்துறும்
தஞ்சமாம் தானவன் தாள் வழுத்துவாம்!

(வேறு)

நலம்படு சென்னி காக்க
நயம்படு மோட தீசன்
வலம்படு நெற்றி காக்க
வளர்கலா நிதிவாழ் நோக்கம்
தலம்படு நெடிய கீர்த்திச்
சந்திர மன் புரக்க
புலம்படு செவி இரண்டும்
பொலிகலா நிதி புரக்க!

ஆங்கமை சபாக ரன்தான்
அமர்தரு நாசி காக்க
தேன்கமழ் குமுத நண்பன்
திருமுகம் புரக்க செங்கை
ஓங்கு சோமன் புரக்க
உயர்சுதா கரன்தான் தந்த
நீங்குறா தென்றும் காக்க
நிசாகரன் கடி புரக்க!

வளர்ச்சி தொடை புரக்க
மான்படு மதியப் புத்தேன்
தளர்வறு முழந்தாள் காக்க
சார்துவி சாதி பன்தான்
கிளர்சங்கம் காக்க என் சொற்
கேட்டிம கிரணச் செல்வன்
உளர்தரு மடி புரக்க
உடலம்சந் திரன் புரக்க!

(வேறு)

பூவேறு மணிமகுடம் கேயூரம்
அழகு ஒழுகப் பூண்டமூர்த்தி
சேவேறு சிவன் சடைமேல்
சென்றுஏறும் ஆபரணம் திருமால் செங்கண்
மாவேறு நான்று புயம் உடையன் என
மதி உருவம் மனதில் எண்ணிப்
பாவேறு கவசமுறை படிப்பவர் கேட்
பவர்வெற்றிப் பயன் கொள் வாரே.

சந்த்ர ஸ்தோத்ரம்

(இதைப் படிப்பதால் ஸர்வ துக்கங்களும் விலகும். ஜாதகத்தில் சந்திரன் நீசனாகவோ, தோஷமுள்ளவனாகவோ இருந்தால் ஜன்மாந்தரத்தில் ஸுமங்கலி சாபம் முதலிய தோஷங்கள் இருக்கக்கூடும். அதனால் க்ஷயரோகம், சித்தப்ரமம், மனக்கவலை முதலியவைகள் ஏற்படும். இதைப் படிப்பதால் மேற்கூறிய தோஷங்கள் விலகும்.)

1. சந்த்ரஸ்ய ச்ருணு நாமானி சுபதானி மஹீபதே
யானி ச்ருத்வா நரோ துக்கான் முச்யதே நாத்ர ஸம்சய

2. ஸுதாகரோவிது: ஸோமோ க்லௌரப்ஜ: குமுதப்ரிய:
லோகப்ரிய: சுப்ரபானுஸ் சந்த்ரமா ரோஹிணீபதி:

3. சசீ ஹிமகரோ ராஜா த்விஜராஜோ நிசாகர:
ஆத்ரேய இந்து: சீதாம்சுரோஷதீச: கலாநிதி:

4. ஜைவாத்ருகோ ரமாப்ராதா க்ஷீரோ தார்ணவஸம்பவ:
நக்ஷத்ரநாயக: சம்புசிரஸ் சூடாமணிர்விபு:

5. தபாஹர்தா நபோதீபோ நாமான்யேதானிய: படேத்:
ப்ரத்யஹம் பக்திஸம்யுக்த: ஸ்தஸ்ய பீடா விநச்யதி:

6. தத்தினே ச படேத்யஸ்து லபேத்ஸர்வம் ஸமீஹிதம்:
க்ரஹாதீனாம் ச ஸர்வேஷாம் பவேச்சந்த்ரபலம் ஸதா:

சந்திர ஸ்தோத்திரப் பாடல்

அலைகடல் அதனில் நின்றும்
அன்று வந்து உதித்தபோது
கலைவளர் திங்களாகிக்
கடவுளர் எவரும் ஏத்தும்
சிலைமுதல் உமையாள் பங்கன்
செஞ்சடைப் பிறையாய் மேரு
மலை வலமாக வந்த
மதியமே போற்றி போற்றி!

(வேறு)

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி, திருவருள் தருவாய்
சந்திரா போற்றி, சத்குரு போற்றி
சங்கடந் தீர்க்கும் சதுரா போற்றி!!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar