SS நவகிரக மந்திரங்கள் - செவ்வாய் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நவகிரக மந்திரங்கள் - செவ்வாய்
நவகிரக மந்திரங்கள் - செவ்வாய்
நவகிரக மந்திரங்கள் - செவ்வாய்

(அங்காரகன்)

ஓம் பௌமாய நம:
(இவர் வீரபத்திரர் அம்சம். பாவபலன்களைக் கொடுக்கக் கூடிய குரூரர்.)

அங்காரக த்யான ஸ்லோகம்

ரக்த மால்யாம்பரதரம் ஹேமரூபம் சதுர்புஜம்
சக்திரூபம் கதாபத்மம் தாரயந்தம் கராம்புஜை

அங்காரக த்யான ஸ்லோகம் (வேறு வகை)

1. தரணி கர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் சமங்களம் ப்ரணமாம்யஹம்

2. ரக்த மால்யாம் பரதர: சக்தி சூலகதாரா:
சதுர்புஜோ மேஷகமோ வரத: ஸ்யாத் தாராஸுத:

3. மங்கலோ பூமி புத்ரஸ ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாகாய: சர்வகாக பலப்ரத:

4. லோஹிதோ லோஹிதாக்ஷஸ்சய ஸாமகாநாம் க்ருபாகர:
தராத்மஜ: குஜோ பௌமோ பூமிதோ பூமிநந்தன

5. அங்காரகோ யமஸ்சைவ சர்வ ரோஹாப ஹாரக:
விருஷ்டே: கர்த்தாச ஹர்த்தாம ஸர்வ தேவைஸ்ச பூஜித

6. நமாம் அங்காரகம் தேவம் ரக்தாங்கம் வர பூஷணம்
சதுர்புஜம் மேஷவாஹம் வரதம்ச வராக்ருதிம்:

7. சக்தி சூல கதாஹஸ்தம் ஜ்வாலா புஞ்ஜோர்த்வ கேஸகம்
மேரும் ப்ரதக்ஷிணம் யாந்தம் ஸர்வ தைவேஷ்டஸித்திதம்

வசனநல் தைரியம்தான் மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை

நிசமுடன் அவர் அவர்க்கு நீள்நிலம் தன்னில் நல்கும்
குசநில மகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி! போற்றி!

அங்காரக காயத்ரீ மந்திரம்

ஓம் வீர த்வஜாய வித்மஹே
விக்ந ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம: ப்ரசோதயாத்

அங்காரக ஸ்தோத்திரம்

அக்னிர்மூர்த்தா திவ: ககுத்பதி: ப்ருதிவ்யா அயம்
அபாகுங்ரேதாம்ஸி ஜின்வதி

அதிதேவதா மந்த்ரம்:

ஸ்யோனா ப்ருதிவி பவான்ருக்ஷரா நிவேஸனீ
யச்சா ந: ஸர்வ ஸப்ரதா:

ப்ரத்யதி தேவதா மந்த்ரம்:

÷க்ஷத்ரஸ்ய பதினா வயம் ஹிதேனேவ ஜயாமஸி
காமஸ்வம் போஷயித்னுவா ஸனோ தீருஸே
அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸமேத பகவதே அங்காரகாய நம:

அங்காரகக் கவசம்

நம்புமுழந் தாள்படுக்கும் இடக்கையும்
அபயநல நன்கு கொண்ட
வம்புபடு மலர்பொருவும் வலக்கையும்
நாற்புயமும் வான நாடும்
அம்புவியும் தொழுமேடம் உகைத்துவரும்
பேர் அழகும் அமையக் கொண்ட
செம்பொன் அணி பலபுனையும் செம்மேனிச்
சேய்உருவம் சிந்தித்து உய்வாம்!

நாட்டும் அங்காரகன்தான்
நயம்படு சென்னி காக்க
கூட்டும் வைதரணி மைந்தன்
குளிர்மதி முகம் புரக்க
கேட்டுஉணர் செவி இரண்டும்
கேழ்த்தசெந் துகிலோன் காக்க
நாட்டம்செங் கண்ணோன் காக்க
நாசிவேற் படையோன் காக்க!

நிலமகன் நோட்டம் காக்க
நெடும்புயம் அரத்த மாலை
நலமலி புயத்தோன் காக்க
நலம்படு கையி ரண்டும்
வலமலி வேலோன் காக்க
மனநான்கு புயத்தோன் காக்க
பலவுநோய் கடியும் ஈசன்
பருமணி உதரம் காக்க!

கடலுடைப் பூமி மைந்தன்
கடிதடம் புரக்க ஊரும்
மிடல்படு கதையோன் காக்க
வியன் முழந்தாழ் கணைக்கால்
படர்புகழ் குசன் புரக்க
பரவடி பௌமன் காக்க
உடல்படும் அங்கம் எல்லாம்
ஊறுதகர் ஊர்வோன் காக்க!

(வேறு)

படிக்கும் அங்காரக கவசம் பகை கடியும்
பூதமொடு பகர் பிரேதம்
இடிக்குரல் வெம்பிசாசம் அழித்திடும்
சித்தி எவ்வகையும் இசைய நல்கும்
முடிக்கவுரு நோய்முடிக்கும் செல்வமொடு
புத்திமுத்தி முழுதும் நல்கும்
பிடிக்கும் எழில் பாக்கியங்கள் பெருகுவிக்கும்
கடன்போக்கிப் பெருமை ஈட்டும்.

வகுக்கும் அங்காரக கவசம் ஓதுவோன்
வளர்குருதி வாரந் தன்னில்
தொக்குநிறஞ் சிவக்குமலர் செவ்
வொளிச்சந் தனக்கலவை தூபதீபம்
பகுக்கும்அக் காரம கலக்குநல் லடிசின்
முதல் பலவும் பயிலக் கொண்டு
மிகுக்குமனப் பக்தியொடு நிலமகன்
பூசனை மறைநூல் விதியால் செய்து

ஒருநால்வர் பன்னிருவர் என்மருள்தன்
பொருள் தகுதிக்கு உற்ற வற்றால்
பெருவாய்மை மறையவருக்கு ஊட்டிநில
மகன்விரதம் பேணிக் கொள்ளில்
கருநாகம் தேள் முதலாம் கொடியவற்றால்
வருந்துயரம் கழிந்து போகும்
திருஏறும் வினையகலும் நோய்ஒழியும்
உரைக்கு மொழி திண்ணம் திண்ணம்!

விண்ணோக்கு நெடும்சிகர மேருவரை
சூழ்ந்து உதய வெற்பின் ஏறி
மண்ணோக்கும் செங்கதிர்கண்டு ஒடுங்கிநலம்
முழுகழிந்து வடிவம் மாய்ந்து
கண்ணோக்கும் கழியிருளும் பொழிபனியும்
அழிந்து ஒழியும் காட்சி ஏய்ப்ப
வெண்ணோக்கும் பலபிறப்பில் ஈட்டுபெரும்
பவக்கூட்ட மெல்லாம் மாயும்.

அங்காரக ஸ்தோத்ரம்
(ஸ்காந்த புராணத்தில் உள்ளது)

(இதைப் படிப்பதால் கடன், கெட்ட பாக்யம், ஏழ்மை, ரத்தத்தில் உள்ள ரோகம், சொறி, சிரங்கு முதலியவைகள் விலகும். ஐச்வர்யம், உத்தம ஸ்த்ரீயை விவாஹம் செய்து கொள்ளுதல், உத்தம புத்திரன் முதலிய ÷க்ஷமங்களும் உண்டாகும். செவ்வாய்க் கிழமையன்று பலவித புஷ்பங்களால் அங்காரகனை அர்ச்சனை செய்தால் ஸர்வ பீடைகளும் விலகும்.)

1. அங்காரக: சக்திரோ லோஹிதாங்கோ தராஸுத:
குமாரோ மங்களோ பௌமோ மஹாகாயோ தனப்ரத:

2. ருணஹர்தா த்ருஷ்டிகர்தா ரோகக்ருத் ரோகநாசன:
வித்யுத்ப்ரபோ வ்ரணகர: காமதோ தனஹ்ருத்குஜ:

3. ஸாமகானப்ரியோ ரக்த வஸ்த்ரோ ரக்தாயதேக்ஷண:
லோஹிதோ ரக்தவர்ணஸ்ச ஸர்வகர்மாவபோதக:

4. ரக்தமால்யதரோ ஹேமகுண்டலீ க்ரஹநாயக:
நாமான் யேதானி பௌமஸ்ய ய: படேத் ஸததம் நர:

5. ருணம் தஸ்ய ச தௌர்பாக்யம் தாரித்தர்யம் ச விசந்யதி:
தனம் ப்ராப்னோதி விபுலம் ஸ்த்ரியம் சைவ மனோரமாம்:

6. வம்சோத்த்யோ தகரம் புத்ரம் லபதே நாத்ரஸம்சய:
யோர்சயேதஹ்னி பௌமஸ்ய மங்களம் பஹுபுஷ்பகை:

7. சர்வா நச்யதி பீடா தஸ்ய கர்ஹக்ருத த்ருவம்

அங்காரகன் (செவ்வாய்) ஸ்தோத்திரப் பாடல்

வசனநல் தைர்ய த்தோடு
மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள்
போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவர வர்க்கு
நீள்நிலம் தனில் அளிக்கும்
குசன் நிலமகனாம் செவ்வாய்
குரைகழல் போற்றி போற்றி!

(வேறு)

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரனே அவதிகள் நீக்கு!!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar