SS நவகிரக மந்திரங்கள்- ராகு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> நவகிரக மந்திரங்கள்- ராகு
நவகிரக மந்திரங்கள்- ராகு
நவகிரக மந்திரங்கள்- ராகு

(இவர் அசுரத்தலையும், நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர், கருநாகம் என்று அழைக்கப்படுபவர்.)

ராகு த்யான ஸ்லோகம்

கராள வதநம் கட்க சர்ம சூல வரான்விதம்
நீல ஸிம்ஹாஸநஸ்தஞ்ச த்யாயேத் ராஹும் ப்ரசாந்தயே

ராகு த்யான ஸ்லோகம் (வேறு வகை)

1. அர்த்த காயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம்
விம்ஹிகா கர்பஸம்பூதம் ராஹும் ப்ரணமாம்யஹம்

2. ப்ரணமாமி சதா ராகும் ஸர்ப்பாகாரம் கிரீடினம்
ஸைம்ஹி கேயம் கராலாஸ்யம் பக்தாநாம பயப்ரதம்

3. ராகும் சதுர்புஜம் சர்ம சூல கட்கவராங்கிதம்
க்ருஷ்ண மால்யாம் பரதாம் க்ருஷ்ண கந்தாநுலேபனம்

4. கோமேதக விபூஷம் ச விசித்ர முகுடான்விதம்
கிருஷ்ண ஸிம்ஹரதம் மேரு யாந்தம் சைவா ப்ரதக்ஷிணம்

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈய
ஏகி நீ நடுவிருக்க இருசிரம் அற்று வெய்ய

பாகுசேர் மொழியாள் பங்கன் பரன் கையில் சிரமே பெற்ற
ராகுவே! உனைத் துதித்தேன்! ரட்சிப்பாய்! ரட்சிப்பாய்!

ராகு காயத்ரீ மந்திரம்

ஓம் நக த்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராஹு : ப்ரசோதயாத்

ராகு ஸ்தோத்ரம்

கயானஸ்சித்ர ஆபுவதூதீ ஸதாவ்ருதஸ்ஸகா
கயா ஸசிஷ்டயா வ்ருதா:

அதிதேவதா மந்த்ரம்:

ஆயம் கௌ: ப்ருஸ்னிரக்ரமீ தஸனந் மாதரம் புன:
பிதரம்ச ப்ரயன்த்ஸுவ:
யத்தே தேவீ நிருருதிராபபந்த தாமக்ரீவாஸ்வவி சாத்யம்
இதந்தே தத்விஷ்யாம்யாயுöஷா நமத்யா ததாஜீவ: பிது மத்திப்ரமுக்த:
(இந்த மந்த்ரம் அனுபவத்தில் இருந்து வருகிறது)

ப்ரத்யதி தேவதா மந்த்ரம்:

நமோ அஸ்து ஸர்பேப்யோ யே கேச ப்ருதி வீமனு
யே அந்திரி÷க்ஷயே திவி தேப்யஸ்ஸர் பேப்யோ நம:
அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸமேத பகவதே ராஹவே நம:

ராகு அஷ்டோத்தரசத நாமாவளி

ஓம் ராஹவே நம:
ஓம் ஸைம்ஹிகேயாய நம:
ஓம் விதுந்துதாய நம:
ஓம் ஸுரசத்ரவே நம:
ஓம் தமஸே நம:
ஓம் பணிநே நம:
ஓம் கார்க்யாயநாய நம:
ஓம் ஸுராரயே நம:
ஓம் நீலஜீமுதஸங்காசாய நம:
ஓம் சதுர்ப்புஜாய நம:

ஓம் கட்க கேடகதாரிணே நம:
ஓம் வரதாயகஹஸ்தாய நம:
ஓம் சூலாயுதாய நம:
ஓம் மேகவர்ணாய நம:
ஓம் க்ருஷ்ணத்வஜபதாகவதே நம:
ஓம் தக்ஷிணாசாமுகாதாய நம:
ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ரா கராளகாய நம:
ஓம் சூர்பாகாராஸநஸ்த்தாய நம:
ஓம் கோமேதாபரணப்ரியாய நம:
ஓம் மாஷப்ரியாய நம:

ஓம் காச்யபர்ஷிநந்தநாய நம:
ஓம் புஜகேச்வராய நம:
ஓம் உல்காபாதயித்ரே நம:
ஓம் ஸூலிநே நம:
ஓம் நிதிபாய நம:
ஓம் க்ருஷ்ணஸர்பராஜே நம:
ஓம் விஷஜ்வாலாவ்ருதாஸ்யாய நம:
ஓம் அர்த்தசரீராய நம:
ஓம் சாத்ரவப்ரதாய நம:
ஓம் ரவீந்துபீகராய நம:

ஓம் சாயாஸ்வரூபிணே நம:
ஓம் கடிநாங்ககாய நம:
ஓம் த்விஷச்சக்ரச்சேதகாய நம:
ஓம் கராளாஸ்யாய நம:
ஓம் பயங்கராய நம:
ஓம் க்ரூரகர்மணே நம:
ஓம் தமோரூபாய நம:
ஓம் ச்யாமாத்மநே நம:
ஓம் நீலலோஹிதாய நம:
ஓம் கிரீடிநே நம:

ஓம் நீலவஸநாய நம:
ஓம் சநிஸாமந்தவர்த்மகாய நம:
ஓம் சண்டாலவர்ணாய நம:
ஓம் அச்வய்ருக்ஷபவாய நம:
ஓம் மேஷபவாய நம:
ஓம் சநிவத்பலதாய நம:
ஓம் சூராய நம:
ஓம் அபஸவ்யகதயே நம:
ஓம் உபராககராய நம:
ஓம் ஸோமஸுர்யச்சவி விமர்தகாய நம:

ஓம் நீலபுஷ்பவிஹாராய நம:
ஓம் க்ரஹச்ரேஷ்டாய நம:
ஓம் அஷ்டமக்ரஹாய நம:
ஓம் கபந்தமாத்ரதேஹாய நம:
ஓம் யாதுதாநகுலோத் பவாய நம:
ஓம் கோவிந்தவரபாத்ராய நம:
ஓம் தேவஜாதிப்ரவிஷ்டகாய நம:
ஓம் க்ரூராய நம:
ஓம் கோராய நம:
ஓம் சநேர்மித்ராய நம:

ஓம் சுக்ரமித்ராய நம:
ஓம் அகோசராய நம:
ஓம் மாநே கங்காஸ்நாநதாத்ரே நம:
ஓம் ஸ்வக்ருஹே ப்ரபலாட்யதாய நம:
ஓம் ஸத்க்ருஹேந்யபலத்ருதே நம:
ஓம் சதுர்த்தே மாத்ருநாசகாய நம:
ஓம் சந்த்ரயுக்தே சண்டாலஜாதிஸுசகாய நம:
ஓம் ஸிம்ஹஜந்மநே நம:
ஓம் ராஜ்யதாத்ரே நம:
ஓம் மஹாகாளாய நம:

ஓம் ஜந்மகர்த்ரே நம:
ஓம் விதுரிபவே நம:
ஓம் மாதகாஜ்ஞாநதாய நம:
ஓம் ஜந்மகந்யாராஜ்யதாத்ரே நம:
ஓம் ஜந்மஹாநிதாய நம:
ஓம் நவமே பித்ருஹ்ந்த்ரே நம:
ஓம் பஞ்சமே சோகதாயகாய நம:
ஓம் த்யூநேகளத்ரஹந்த்ரே நம:
ஓம் ஸப்தமேகலஹப்ரதாய நம:
ஓம் ஷஷ்டேவித்ததாத்ரே நம:

ஓம் சதுர்த்தேவைர தாயகாய நம:
ஓம் நவமே பாபதாத்ரே நம:
ஓம் தசமே சோகதாயகாய நம:
ஓம் ஆதௌ யச: ப்ரதாத்ரே நம:ஓம் அந்தே வைரப்ரதாயகாய நம:
ஓம் காலாத்மநே நம:
ஓம் கோசரசராய நம:
ஓம் தநே ககுத்ப்ரதாய நம:
ஓம் பஞ்சமேதிஷணா ச்ருங்கதாய நம:
ஓம் ஸ்வர்பாநவே நம:

ஓம் பலிநே நம:
ஓம் மஹா ஸெளக்யப்ரதாயிநே நம:
ஓம் சந்த்ரவைரிணே நம:
ஓம் சாச்வதாய நம:
ஓம் ஸுரசத்ரவே நம:
ஓம் பாபக்ரஹாய நம:
ஓம் சாம்பவாய நம:
ஓம் பூஜ்யகாய நம:
ஓம் பாடீரபூரணாய நம:
ஓம் பைடீநஸகுலோத்பவாய நம:

ஓம் பக்தரக்ஷõய நம:
ஓம் ராஹுமூர்த்தயே நம:
ஓம் ஸர்வாபீஷ்டபலப்ரதாய நம:
ஓம் தீர்க்காய நம:
ஓம் க்ருஷ்ணாய நம:
ஓம் அதநவே நம:
ஓம் விஷ்ணுநேத்ராரயே நம:
ஓம் தேவாய நம:
ஓம் தாநவாய நம:

ராகு கவசம்

வெம்கடு உமிழ்முகம் விளங்கு பாம்புஉருப்
பொங்கொளி மணிமுடி பூண்ட பொற்சிரம்
அங்குஅமை வடிவொடும் அன்பர் போற்றிசெய்
சிங்கிகை அளித்திடு சேயைப் போற்றுவோம்.

(வேறு)

பொலியு நீலாம்ப ரத்தோன்
பொற்புஉறு சிரம் புரக்க
நலிவுறும் உலகம் போற்றும்
நாயகன் நெற்றி காக்க
மலிபுகழ் இராகு நாட்டம்
வரம்படக் புரக்க கன்னம்
மெலிவறும் பாதி மேனி
வித்தகன் மேவிக் காக்க.

நஞ்சுஉமிழ் பவள வாயான்
நாசிகை புரக்க கண்டம்
விஞ்சு எழில் சூலபாணி
விழைவொடு புரக்க, செவ்வாய்
வஞ்சிசிங் கிகைதன் மைந்தன்
மருவினன் புரக்க, கண்டம்
துஞ்சுஉறு கண்டம் உண்போன்
தொலைவறப் புறந்து காக்க.

பொன்பொலி புயங்க நாதன்
புயவரை புரக்க; பூங்கை
மின்பொலி நீலமாலை
வித்தகன் புரக்க, மார்பம்
மன்பொலி தவமே என்றும்
வடிவுஎனக் கொள்வோன் காக்க
தென்பொலி உந்தி என்றும்
செழுமதி உண்போன் காக்க.

நயம்படு விகடச் செல்வன்
நற்கடி தடம் புரக்க
பயம்படு வானோர் போற்றும்
பண்ணவன் தொடை புரக்க
வயம்படு முழந்தாள் கோல
மலிசுவர்ப் பானு காக்க
சயம்படு நாக வேந்தன்
தளர்வறு கணைக்கால் காக்க.

விண்ணெழு கிரக னாதன்
விளங்கு ஒளிப் பரடு காக்க
மன்னறு மடி இரண்டும்
மலிபுகழ்க் கோர ரூபன்
நண்ணினன் புரந்து காக்க
நயக்குமென் அங்கமெல்லாம்
தண்ணிய நீலச் சாந்தம்
தரிப்பவன் புரந்து காக்க.

(வேறு)

தண்ணமரும் புனலாடிச் சந்திமுதல்
கடல்அனைத்தும் தவறாது ஓம்பி
விண்ணமரும் மதிவிழுங்கும் இராகு கவசம்
புகல்வோன் விரும்பும் உள்ளத்து
எண்ணம்வரும் அவை பெறுவன் புகழ்பெறுவன்
செல்வம் எலாம் எய்தி வாழ்வன்
மண்ணமரு நோய் அகன்று வளர்ந்து ஏறும்
பேராயுள் மருவி வாழ்வன்.

ராகு ஸ்தோத்ரம்

(ஸ்காந்த புராணத்தில் உள்ளது)

(இதைப் படிப்பதால் மஹத்தான பீடை, விஷஉபாதை முதலிய கஷ்டங்கள் விலகுவதோடு ஆரோக்கியம், புத்திர லாபம், அளவற்ற ஐச்வர்யம், தான்யம், பசுக்கள் முதலிய ஸம்பத்துக்களும் உண்டாகும். இதை எப்பொழுதும் படிப்பவன் நீண்ட காலம் ஜீவித்திருப்பான்.)

1. ராஹுர்தானவமந்த்ரீ ஸிம்ஹிகாசித்தநந்தன:
அர்த்தகாய: ஸதா க்ரோதீ சந்த்ரா தித்யவிமர்த்தன:

2. ரௌத்ரோ ருத்ரப்ரியோ தைத்ய: ஸ்வர்பானுர்பானு பீதித:
க்ரஹராஜ ஸுதாபாயீ ராகாதித்ய பிலாஷுக:

3. காலத்ருஷ்டி: காலரூப: ஸ்ரீகண்டஹ்ருதயாச்ரய:
விதுந்தத: ஸிம்ஹிகேயோ கோரரூபோ மஹாபல:

4. க்ரஹபீடாகரோ தம்ஷ்ட்ரீ ரக்தநேத்ரோ மஹோதர:
பஞ்சவிம்சதி நாமானி ஸ்ம்ருத்வா ராஹும் ஸதாநர:

5. ய: படேன் மஹதீ பீடா தஸ்ய நச்யதி கேவலம்
ஆரோக்யம் புத்ரமதுலாம் ச்ரியம் தான்யம் பசும்ஸ்ததா

6. ததாதி ராஹுதஸ்மை ய: படேத் ஸ்தோத்ரமுத்தமம்
ஸததம் படதே யஸ்து ஜீவேத் வர்ஷசதம் நர:

ராகு ஸ்தோத்திரப் பாடல்

வாகுசேர் நெடுமான் முன்னம்
வானவர்க்கு அமுதம் ஈயப்
போகும் அக்காலை உன்றன்
புணர்ப்பினால் சிரமே அற்றுப்
பாகுசேர் மொழியாள் பங்கன்
பரன் கையில் மீண்டு பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேன்
ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!

(வேறு)

அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி!
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக் கனியே ரம்யா போற்றி!!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar