SS ஸ்ரீ நந்தநந்தன அஷ்டகம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஸ்ரீ நந்தநந்தன அஷ்டகம்!
ஸ்ரீ நந்தநந்தன அஷ்டகம்!
ஸ்ரீ நந்தநந்தன அஷ்டகம்!

ஸுசாரு வக்த்ர மண்டலம் சுகர்ண ரத்ன குண்டலம்
ஸுசர்சிதாங்க சந்தனம் நமாமி நந்த நந்தனம்
அழகிய வட்டமான திருமுகமும், மதிப்பு மிக்க ரத்ன குண்டலங்கள் காதுகளை அலங்கரிக்க, உடல் சந்தனச் சாந்தால் பூசப்பட்டு, அழகுடனும் வாசனையுடனும் மிளிரும் நந்தனின் குமாரனான ஸ்ரீகிருஷ்ண பகவானை வணங்குகிறேன்.

ஸுதீர்க நேத்ர பங்கஜம் சிகீ சிகண்ட மூர்தஜம்
அனந்தகோடி மோஹனம் நமாமி நந்த நந்தனம்
தாமரை போன்ற கண்களை உடையவரும், தலையில் மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டும், பல கோடி பக்தர்களை வசீகரித்துத் தன்பால் கவர்ந்தவருமான நந்தனின் மகன் ஆனந்த கிருஷ்ண பகவானை வணங்குகிறேன்.

ஸுனாஸிகாக்ர மௌக்திகம், ச்வச்ச தந்த பங்கித்கம்
நவாம்புதாங்க சிக்கணம், நமாமி நந்த நந்தனம்
மூக்கின்ற நுனியில் மின்னும் அழகிய முத்தும், பிரகாசிக்கும் வெண்மை நிறப் பல் வரிசைகளும், மிருதுவான கன்னங்களும் கொண்ட இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையான நாயகனும் நந்தனின் மகனுமான ஸ்ரீகிருஷ்ண பகவானை வணங்குகிறேன்.

கரேண வேணு ரஞ்சிதம் கதிகரீன்த்ரகஞ்ஜிதம்
து கூல பீத ஸுசோபனம் நமாமி நந்த நந்தனம்
மகிழ்ச்சி தரும் புல்லாங்குழலைக் கையில் ஏந்திய வரும். யானை போல் வசீகரிக்கும் நடையை உடையவரும், மஞ்சள்பட்டால் அலங்கரித்துள்ளவருமான நந்தனின் மகனான் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

த்ரிபங்க தேஹஸுந்தரம் நகத்யுதி சுதாகரம்
அமூல்ய ரத்ன பூஷணம் நமாமி நந்த நந்தனம்
கால், கழுத்து, இடுப்பு, இவற்றை மூன்று விதங்களில் வளைத்து நின்று புல்லாங்குழல் ஊதுபவனும், ஒளி வீசும் சந்திர கிரணங்கள் போன்ற நகங்களை உடையவனும், உயர் ரகக் கற்கள் பதிக்கப் பெற்ற விலைமதிப்பற்ற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும் நந்தனின் குமாரனுமாகிய ஸ்ரீகிருஷ்ண பகவானை வணங்குகிறேன்.

ஸுகந்த அங்க சௌரபம் உரோ விராஜி கௌஸ்துபம்
ஸ்புரிஜித் வத்ஸ லாஞ்சனம் நமாமி நந்த நந்தனம்
நறுமணத்துடன் கூடிய அவயவங்கள் அந்தச் சுகந்தத்தை வெளிவிட்டுக் கொண்டும், ஜொலிக்கும் கௌஸ்துப மணி மார்பை அலங்கரிக்கவும், ஒளி வீசும் முத்து மூக்கை அலங்கரிக்கவும் காட்சி தரும் நந்தனின் குமாரன் கிருஷ்ணனை வணங்குகிறேன்,

வ்ருந்தாவன ஸுநாகரம் விலாஸுநாக வாஸஸம்
ஸுரேந்த்ரகர்வ மோசனம் நமாமி நந்த நந்தனம்
தனது ஒவ்வொரு செயலாலும் கவர்ந்திழுக்கும் தன்மையை உடைய, பிருந்தாவனத்தில் உறையும் ஸ்ரீகிருஷ்ண பகவானும், கோவர்த்தன மலையைத் தூக்கி இந்திரனின் கர்வத்தை ஒழித்த நந்தனின் குமாரனுமான ஸ்ரீகிருஷ்ணனை வணங்குகிறேன்.

வ்ரஜாங்கனா சுனாயகம் ஸதா ஸுக ப்ரதாயகம்
ஜகன்மன ப்ரலோபனம் நமாமி நந்த நந்தனம்
கோபியர்களை ரட்சிப்பவரும் அவர்களால் போற்றப்படுபவரும், தன்னை மிகுந்த வேட்கையுடன் சரணடையும் எல்லா பக்தர்களுக்கும் அழிவற்ற இன்பத்தை அளிப்பவனுமாகிய நந்தனின் மகனாகிய ஸ்ரீகிருஷ்ணனை வணங்குகிறேன்.

ஸ்ரீ நந்தநந்தனாஷ்டகம் படேத் யஸ்ரத் தயான்வித
தரேத் பவாப்திம் துஸ்தரம் லபேத்தத ன்க்ரீ யுக்தகம்
கிருஷ்ணனின் புகழ் பாடும் இந்த எட்டு சுலோகங்களைச் சிரத்தையுடன் படிப்போர் கடக்க முடியாத சம்சாரக் கடலைக் கடந்து கண்ணனின் திருவடிகளை அடைவார்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar