SS கண்ணன் பாடல்கள் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கண்ணன் பாடல்கள்
கண்ணன் பாடல்கள்
கண்ணன் பாடல்கள்

கிருஷ்ணன் துதி

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புரு÷ஷாத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கைமலர்த் தோட்டங்களே எங்கள்
மதுசூதனன் புகழ் தன்னை பாடுங்களேன் (புல்லாங்குழல்)

பன்னீர் மழை சொரியும் மேகங்களே எங்கள்
பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே எங்கள்
ஸ்ரீ கிருஷ்ணன் ஜெயந்தி புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ் கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் (புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ்காக்க தன்னை கொடுத்தான் - அந்தப்
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் நாம்
பாண்டவருக்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதை என்னும் பாடல் கொடுத்தான் (புல்லாங்குழல்)

1. குழந்தையாக மீண்டும் கண்ணன்...

குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா
புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானா
மாடு கன்று காட்டில் ஓட்டி மேய்க்க மாட்டானா
தினம் பாடி ஆடிஓடி என்னை சேர்க்க மாட்டானா (குழந்தை)

சின்னஞ்சிறு வாயை கொஞ்சம் திறக்க மாட்டானா
கண்ணில் இந்த உலகத்தையே காட்ட மாட்டானா
என்னை அவன் தோழனாக ஏற்க மாட்டானா
வெண்ணெயிலே பங்கு போட்டு நீட்டமாட்டானா (குழந்தை)

மலையை எடுத்து குடையை போல பிடிக்க மாட்டானா
என் தலையில் மழை விழுவதையே தடுக்க மாட்டானா
கீதை தன்னை திரும்பவுமே கூற மாட்டானா
அதை கேட்டு நாமும் சிறந்தவராய் மாற மாட்டோமா.

2. ஓடி வா கண்ணா...

ஓடி வா கண்ணா ஓடி வா வா
ஓங்கார நாத குழல் ஊதிக் கொண்டே அருகில்  (ஓடி)

1. உன் திரு நாமங்கள் ஓதி வந்தேனே
ஓயாமல் உன் பெருமை புகழ்ந்தேனே
உனதடியார் சேவை புரிந்தேனே
உனதடியார் மலரினை பணிந்தேனே

2. கருணை என் மேல் பொழிவாய் கமலக் கண்ணா
காம கோடி சுந்தரனே கார்முகில் வண்ணா
கனக நின்ற சோலையுடை யோனே
கான மயில் தோகையணி முடியோனே (ஓடி)

3. அன்பர் குலம் காக்க துணிந்தவனே
ஆடுமணி குண்டலங்கள் அணிந்தவனே
அஞ்சுதனே இங்கு வருவாயே
அற்புத காட்சி எனக்கு தந்தருள்வாயே  (ஓடி)

4. பொன்னடியில் தங்க சிலம்போசை
பொன்னறையில் தங்கரண கிங்கிணியோசை
புன்னகை திருவாயின் குழலோசை
பரிபூரணமாய் தந்தருள்வாய் எங்களாசை  (ஓடி)

3. குறையொன்றுமில்லை மறைமூர்த்தி...

குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா  (கு)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு (கு)

குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வெங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணி வண்ணா மறையப்பா கோவிந்தா கோவிந்தா

4. என்ன துதி செய்தாலும்....

என்னதுதி செய்தாலும் உனக்கோர் தயவில்லை
என்னை நீ தள்ளினாலும் உன்னை நான் விடுவதில்லை  (என்)

உன்னருள் பெறவேண்டி உன்பதம் நாடி வந்தேன்
உன்மலை ஏறிவந்தேன் உன்புகழ் பாடிவந்தேன்
கோவிந்தா, மாதவா, கேசவா, ரங்கா  (என்)

பல்லாண்டு காலம் உன்தலத்தில் வாழவேண்டும்
தொல்லையும் துன்பமும் தொலைவினில் செல்லவேண்டும்
எந்நேரமும் உந்தன் தரிசனம் கிடைக்க வேண்டும்
நாராயணா, மாதவா, மாயனே, அருள்வாய்  (என்)

5. கோவிந்த நாம...

கோவிந்த நாம ஸங்கீர்த்தனம் - பாடும்
கோபியர் மனமே பிருந்தாவனம்

கோபாலன் ஊதும் புல்லாங்குழல்
கோலமுடன் ஒலிக்கும் பக்தரின் குரல்

கிருஷ்ண ஹரி கிருஷ்ண ஹரி
கிருஷ்ண ஹரி கிருஷ்ண ஹரி கோவிந்தா

ராம ராம ஹரி ராம ராம ஹரி
ராம ராம ஹரி ராம ராம நாராயணா

1. நாவார பாடுவோம் ஹரி பஜனை
நாயகனாய்க் கொள்வோம் நாராயணனை
சேவகம் செய்வோம் அடியார்க்கு - நல்ல உயர்
திருப்பணிகள் செய்வோம் கோவில்களுக்கு கிருஷ்ணா... கிருஷ்ணா

2. தேவாதி தேவன் ஸ்ரீநிவாசன் - அந்த
திருப்பதி மலைவாசன் - வெங்கடேஸன்
பத்தாவதாரன் பரமதயாளன்
பக்த ஜனப்பரிபாலன் - பாண்டு ரெங்கன்

ரெங்க ரெங்க ஹரி ரெங்க ரெங்க ஹரி
விட்டல விட்டல ஹரி விட்டல ஹரி
கிருஷ்ண கிருஷ்ண ஹரி கோவிந்த
ராம ராம ஹரி நாராயணா

6. வைரம் வைடூரியம்...

வைரம் வைடூரியம் வைத்திழைத்த ஊஞ்சலில்
வைகுந்த நாதன் திரு மகளுடன் ஆடும்...... பொன்னூஞ்சல்

ரமணியமாய் ஒளிரும் ரத்னமணி ஊஞ்சலில்
ராதையுடன் கண்ணன் அனுராகத்துடன் ஆடும்... பொன்னூஞ்சல்

நீலம் கோமேதகம் நிலவுமிலும் ஊஞ்சலில்
நீலமுகில் வண்ணன் ஸ்ரீ கோதையுடன் ஆடும்... பொன்னூஞ்சல்

பத்ம ராகம் பதித்த பாங்கான ஊஞ்சலில்
பத்மாவதியுடன் திருவேங்கடவர் ஆடும்... பொன்னூஞ்சல்

நவரத்னமும் பதித்த நளினமிகு ஊஞ்சலில்
நானிலத்தில் கண்ணன் தன் ராதையுடன் ஆடும்... பொன்னூஞ்சல்

இத்தரணியோர் வாழ இன்பமெல்லாம் பெருக
நித்ய தம்பதியாடும் நெஞ்சமெனும் ஊஞ்சலில் பொன்னூஞ்சல்

7. மலர்களிலே பல நிறம்...

மலர்களிலே பல நிறம் கண்டேன் - திரு
மாலவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன்... அதில்
மாதவன் கருணை மனம் கண்டேன்
பச்சை நிறம் அவன் திருமேனி
பவள நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் முகம் அவன் தேவி முகம்
வெள்ளை நிறம் அவன் திரு உள்ளம்
பக்தி உள்ளம் என்னும் மலர்தொடுத்து
பாசமென்னும் சிறுநூலெடுத்து
சத்தியமென்னும் சரம் தொடுத்து - நான்
சாற்றுகின்றேன் உன் திருவடிக்கு  (மலர்)

நாநிலம் நாரணன் விளையாட்டு
நாயகன் பெயரில் திருபாட்டு
ஆயர்குல பிள்ளை விளையாட்டு... இந்த
அடியவர்க்கொன்றும் அருள் கூட்டு

8. திருமால் பெருமைக்கு....

திருமால் பெருமைக்கு நிகரேது... உந்தன்
திருவடி நிழலுக்கு இணையேது
பெருமானே உந்தன் திருநாமம் - பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்  (திருமால்)

கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனை
காப்பதற்கே கொண்ட அவதாரம் - மச்ச அவதாரம்

அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும்
எங்கள் அச்சுதனே உந்தன் அவதாரம் - கூர்ம அவதாரம்

பூமியை காத்திட ஒரு காலம் - நீ
புனைந்தது மற்றொரு அவதாரம் - வராக அவதாரம்

நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்... நரசிம்ம அவதாரம்

மாபலி சிரம் தன்னில் கால் வைத்து இந்த மண்ணும்
விண்ணும் அளந்த அவதாரம் - வாமன அவதாரம்

தாய் தந்தை சொல்லே உயர்வேதம்
என்று சாற்றியது ஒரு அவதாரம்... பரசுராம அவதாரம்

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம்
எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம் - ராம அவதாரம்

பின்பு யதுகுலம் கண்டது பலராமன் - பலராமன்
அரசு முறை வழிநெறி காக்க நீ
அடைந்தது இன்னொரு அவதாரம் - கண்ணன் அவதாரம்

விதி நடந்ததென மதிமுடிந்த தன
வினையில் பயனே உருவாக
நிலை மறந்தவரும் நெறி இழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக
இன்னல் ஒழிந்து புவிகாக்க.... நீ
எடுக்கவேண்டும் ஒரு அவதாரம் கல்கி அவதாரம் (திரு)

9. திருப்பாற்கடலில் பள்ளி...

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா... அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமன் நாராயணா (திருப்)

உலகினைப் பாய்போல் கொண்டவன் நீயே
ஸ்ரீமன் நாராயணா...அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே
ஸ்ரீமன் நாராயணா

இரணியன் அகந்தை அழித்தவன் நீயே
ஸ்ரீமன் நாராயணா....அன்று
இந்திரவில்லை முறித்தவன் நீயே
ஸ்ரீமன் நாராயணா (திருப்)

கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே
அறியாயோ நீயே - அவள்
கொடுமையை ஒழிக்க மறந்துவிட்டாயோ
ஸ்ரீமன் நாராயணா
தேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ
மறந்தாயோ நீயே...உன்
தெய்வமுனிவரைக் காப்பதற்கென்றே
வருவாயோ நீயே  (திருப்)

தோளிலந்த சாரங்கம் எடுத்து
வரவேண்டும் நீயே
தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை
அழித்திடுவாய் நீயே
அனந்தசயனத்தில் பள்ளி எழுந்து
வாராய் திருமாலே - உன்
அன்பரை எல்லாம் துன்பத்திலிருந்து
காப்பாய் பெருமாளே  (திருப்)

ரதங்கள் படைகள் என எழுந்து இன்று
வீருடன் வாருங்கள்
நாராயணனெனும் தலைவனின் துணையால்
போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடி படவும்
வேல்கொண்டு வாருங்கள்...இனி
வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம்
தேவர்கள் வாருங்கள்
ஸ்ரீமன் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா
வருவாய் திருமாலே... துணை தருவாய் பெருமாளே.

10. ஸ்ரீனிவாஸ கல்யாணப் பாடல்

1. ராகம் : கல்யாணி

கல்யாணம் திரு கல்யாணம் - திரு
வேங்கடத்தில் நடந்த கல்யாணம்  (க)

மங்கை அலமேலு தாயார்
மன்னன் திருவேங்கடத்தான் - தங்கி
நின்று தான் முடித்த கல்யாணம்

2. ராகம் : காவேரி சரணம்

தெய்வ மேளம் ஒலிக்க வேத கோஷம் முழங்கிட
யானை பரிவாரம் வைத்த கல்யாணம்
கோல மணி ஓசையுடன் வரிசங்கம் தான் முழங்க
பால கிருஷ்ணன் ருக்மணியின் கல்யாணம் (க)

3. ராகம் : தன்யாசி

கோதையும் மாலைதன்னை மாதவன் திருக்கழுத்தில்
மகிழ்வுடன் சூட்டிய கல்யாணம்
அங்கயற் கண்ணியும் அரனுடன் வந்திருந்து
ஆரத்தி சுழற்றிய கல்யாணம்  (க)

4. ராகம் : ஷண்முகப்பிரியா

கோவிந்தன் மலர்கரத்தை கோமாதா கைப்பிடித்து
கன்னூஞ்சல் ஆடும் தெய்வ கல்யாணம்
அருந்ததி லோபமுத்திரை நிறைகுடம் தீபம்மேந்தி
பச்சை திருஷ்டி சுற்றிப் போடும் கல்யாணம்

5. ராகம் : மோஹனம்

கமல முகம் சிவக்க தேவி கடைக் கண்ணால்
கண்ணனைக் கண்டு மகிழும் தெய்வக் கல்யாணம்
இதைக்கண்டு மகிழவென்று தேவரும் முனிவரும்
காத்திருந்து தரிசித்த கல்யாணம்

6. ராகம் : காபி

மங்கள ஹாரத்தி தீபங்கள் ஒளியிட
மாதவன்கோதை திருக்கல்யாணம்
ஸ்ரீனிவாசன் பொன் கரத்தால்
செங்கமலத் தாள் கழுத்தில் - தங்கமணி
மாங்கல்யம் கட்டும் கல்யாணம்.

7. ராகம் : பூபாளம்

சிரிப்புடன் வேங்கடத்தான் ஸ்ரீதேவி முகம் பார்க்க
நாணி அவன் மனம் குளிரும் கல்யாணம்
ஜனகரின் தவ செல்வி ஜானகி ராமனுக்கு
கனகமணி மாலை சூட்டும் கல்யாணம்

8. ராகம் : நீலாம்பரி

அக்னி தேவர் சாக்ஷியாக வைதேஹி ராமனும்
அம்மி மிதித்த திருக் கல்யாணம்
சீதா ராகவனும் சொர்ண தேங்காய் உருட்டி
தெய்வ நலுங்கு வைத்த கல்யாணம்

9. ராகம் : மத்தியமாவதி

தங்க மணி முத்திழைத்த நவரத்ன மஞ்சத்தில்
தெய்வ மலர் மணம் கமழும் கல்யாணம்
கங்கண ஒலி கேட்க கோதை அரங்கனுடன்
மகிழ்ந்து அமர்ந்திருந்த கல்யாணம்
சீதா ராம கல்யாண வைபவமே கிருஷ்ணா
ராதா கல்யாண வைபவமே
லக்ஷ்மி கல்யாண வைபவமே
பத்மாவதி கல்யாண வைபவமே
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
அலமேலு ஸ்ரீனிவாச ஜெய மங்களம்
நித்ய சுப மங்களம் நித்ய ஜெய மங்களம்

11. திருவருள் தரும் தெய்வம்...

திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்
தீராத வினையெல்லாம் தீர்த்திடும் தெய்வம் (திரு)

வரும் துயர் பகையாவும் மாற்றிடும் தெய்வம்
வாய் திறந்தே கேட்டால் வழங்கிடும் தெய்வம்  (திரு)

மன்னுபுகழ் கோசலைக்கு மைந்தனான...தெய்வம்
மண்மகளும் மலர்மகளும் மருவுகின்ற...தெய்வம்
தென் பொதிகை முனிவர் தொழும் திருவேங்கடதெய்வம்
ஸ்ரீநிவாசனாக நின்று சேவை தரும் தெய்வம்
கொண்டாடும் அன்பர் நெஞ்சில்
கோவில் கொண்ட தெய்வம்
கோவிந்தா என்றழைத்தால் குறைகள் தீர்க்கும் - தெய்வம்
சந்தமும் சங்கு சக்கரம் தாங்குகின்ற...தெய்வம்
சாரங்கபாணியென்ற பார்புகழும் தெய்வம்

12. அரவணையில் பள்ளி கொள்ளும்...

1. அரவணையில் பள்ளி கொள்ளும் அரங்கனடி ஏலேலோ
ஆய்ச்சியர் வீட்டில் பால் வெண்ணெய் திருடினானாம்

2. குன்று தன்னை குடையாய் பிடித்த குழந்தையடி ஏலேலோ
குருந்தை மரத்தில் குழலூதிக் கூவுவானடி

3. வைகரையில் யமுனாக்கரையில் வந்தானடி
வேகமாக எங்கள் துகிலைக் கொண்டு ஓடினானடி

4. அண்டிவர்க்கு அபயம் தரும் அச்சுதனடி
அவனிருக்க நமக்கு இனி அச்சமேதடி

5. குடும்பத்தவர் கேலி செய்தால் நமக்கென்னடி
கூடி கூடி கோலாகலமாய் கும்மியடிப்போம்

13. திருப்பதி மலைவாழும்....

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா
திருமகள் மனம் நாடும் ஸ்ரீனிவாசா

அன்பெனும் அகல் விளக்கை ஏற்றவைத்தேன் அதில்
ஆசையெனும் நெய்யை ஊற்றிவைத்தேன்
என்மனம் உருகிடவே பாடிவந்தேன் - உன்
ஏழுமலை ஏறி ஓடிவந்தேன்  (திருப்பதி)

நினைத்ததை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதையென்னும் தத்துவமே - அதை
உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே  (திருப்பதி)

14. திருப்பதி சென்று...

திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர்
திருப்பம் நேருமடா...உந்தன் விருப்பம் கூடுமடா - நீ
திறந்திட நினைக்கும் கதவுகளெல்லாம்
தானே திறக்குமடா - உன்னை தர்மம் அணைக்குமடா (திருப்பதி)

ஊருக்கு மறைக்கும் உண்மைகளெல்லாம்
வேங்கடம் அறியுமடா - அந்த வேங்கடம் அறியுமடா - நீ
உள்ளதைச் சொல்லி கருணையைக் கேட்டால்
உன் கடன் தீருமடா - செல்வம் உன்னிடம் சேருமடா (திருப்பதி)

எரிமலை போலே ஆசை வந்தாலும்
திருமலை தணிக்குமடா - நெஞ்சில் சமநிலை கிடைக்குமடா - உன்
எண்ணங்கள் மாறும் வண்ணங்கள் மாறும்
நன்மைகள் நடக்குமடா - உள்ளம் நல்லதேநினைக்குமடா
அஞ்சலென்ற கரம்ஒன்று காவல் தரும் வெங்கடேஸ்வரா
சங்கு கொண்ட கரம் மங்கலங்கள் தரும் வெங்கடேஸ்வரா
தஞ்சமென்றவர்கள் நெஞ்சில் அன்பு தரும்
வெங்கேடஸ்வரா வெங்கடேஸ்வரா (திருப்பதி)

15. திருப்பதி மலைவாசா...

திருப்பதி மலைவாசா...வெங்கடேசா
திருவடியருள் நேசா - ப்ரகாசா (திருப்பதி)

கோரிக்கை நிறைவேற்றி கொண்டாடும் தொண்டருக்கு
குறையில்லா வாழ்வு தரும் கோவிந்தா   (திருப்பதி)

அலர்மேல் மங்கை மகிழும் மணவாளா
அடியவர் இதயம் கமழும் குணசீலா
மலர்க் கமலபாதம் மறவா அருள் தீரா
மாதவனே ஸ்ரீனிவாசனே வருவாய்  (திருப்பதி)

16. காற்றினிலே வரும் கீதம்...

காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும்கீதம் கல்லும் கனியும் கீதம்
பட்டமரங்கள் தளிர்க்கும்கீதம் பண்ணொலிகாட்டும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுரமோஹனகீதம்
நெஞ்சினில் இன்பக்கனலை எழுப்பி நினைவளிக்கும் கீதம்
சுனைவண்டுடன் சோலைக்குயிலும் மனங்குவித்திடவும்
வானவெளிதனில்தாரகணங்கள் தயங்கிநின்றிடவும் - ஆ
என் சொல்வேன் மாயப்பிள்ளை வேய்ங்குழல்பொழிகீதம் (காற்)
நிலாமலர்ந்த இரவினிலே தென்றல் உலாவிடும் நதியில்
நீலநிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணிஉருகுமே என் உள்ளம்

17. பிருந்தாவனத்தில் கண்ணன்....

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
நந்தகுமாரன் விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ
அனைவரும் கூடி அவன் புகழ்பாடி நிர்மல யமுனா
நதியினில் ஆடி வனம் திரிந்து வரதனைத் தேடி
அனுதினம் அமுதனைத் தரிசனம் செய்த (அந்த)

மானினம் நாணிடும் மங்கையரோடு
தேனிலும் இனித்திடும் தீங்குழல் ஊதி
மானிடர் தேவரின் மேலிடச் செய்தான்  (அந்த)

கானகம் சென்று ஆனிரை கன்று
கருணை மாமுகில் மேய்த்திட அன்று
புனிதன் மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை விழைந்தது முண்டு  (அந்த)

போதமிலா ஒரு பேதை மீரா பிரபு கிரிதாரி இதய சஞ்சாரி
வேதம் வேதியர் விரிஞ்சனும் தேடும்
பாதமலர்கள் நோக நடந்த  (அந்த)

18. எந்தனுயிர்க் காதலன் கண்ணன்....

எந்தனுயிர்க் காதலன் கண்ணன் கண்ணன் - காணும்
எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்

இன்பகீதம் பொழிந்திடவே குழலூதுவான் - அதில்
தெய்வஞானம் வழிந்திடவே குழலூதுவான்
மாந்தரெல்லாம் மகிழ்ந்திடவே குழலூதுவான்
பண்ணாலே எல்லார்க்கும் அமுதூட்டுவான் - தெய்வ
பண்ணாலே எல்லார்க்கும் அமுதூட்டுவான்  (எந்த)

பாரோடு கோபாலன் விளையாடுவான்... இளம்
கோபியரும் களித்திடவே நடனமாடுவான்
முதியோரும் மகிழ்ந்திடவே விளையாடுவான்... அந்த
விளையாட்டில் வேதங்கள் நிலைநாட்டுவான்  (எந்த)

19. குருவாயூரப்பா திருவருள்...

குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா...உன்
கோவில் வாசலிலே தினமும் திருநாள் தானப்பா
திருநாள் தானப்பா
எங்கும் உந்தன் திருநாமம் எதிலும் நீயே ஆதாரம்
சங்கின் ஒலியேசங்கீதம் சரணம் சரணம் சரணம் உன்பாதம்
உலகம் என்னும் தேரினையே ஓடச் செய்யும் சாரதியே
காலம்என்னும் சக்கரமே - உன் கையில்சுழலும் அற்புதமே

20. கிரிதர கோபாலா...

கிரிதர கோபாலா நவநீதா
திருவடி அருள்தேவா நவநீதா (2)
கானவிலோலா நவநீதக் கிருஷ்ணா (2)
குறைவில்லா வாழ்வுதரும் நவநீதா... (கிரிதர)

ராதா ருக்மணி மகிழும் மணவாளா
அடியவர் இதயம் கமழும் குணசீலா
மலர்கமலப் பாதம் மறவா அருள்தா (2)
மாதவா ஸ்ரீநிவாசனே வருவாய்... (கிரிதர)

குருசாமி மக்கள் வணங்கும் குலதேவா
அடியவர் மகிழும் வரம்தரும் நவநீதா
வரம்தரும் உன்னை மறவா அருள்தா
யாதவா நவநீதக் கிருஷ்ணனே வருவாய்... (கிரிதர)

21. ஸ்ரீநிவாசா கோவிந்தா...

ஸ்ரீநிவாசா கோவிந்தா ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா (2)

புராண புருஷா கோவிந்தா
புண்டரி காட்சா கோவிந்தா
தசவித ரூப கோவிந்தா

கிருஷ்ணா ராமா கோவிந்தா
கிருஷ்ணா ராமா கோவிந்தா
ராம கிருஷ்ண கோவிந்தா (2)

சீதா ராமா கோவிந்தா, ராதா கிருஷ்ணா கோவிந்தா
நந்த குமாரா கோவிந்தா
நவநீதக் கிருஷ்ணா கோவிந்தா (ஸ்ரீநிவாசா கோவிந்தா)

22. ராதே ! ராதே !....

ராதே !ராதே !
ராதே ! ராதே ! ராதே !... கோவிந்தா
ப்ருந்தாவனச் சந்திரா
நந்தகுமாரா நவநீதச் சோரா
ராதே கோவிந்தா
பக்தவச்சலா, பகவதப்பிரியா ராதே கோவிந்தா
ராதே கோவிந்தா ப்ருந்தாவனச் சந்திரா
நந்த குமாரா நவநீதச் சோரா
ராதே கோவிந்தா !
அநாத நாத, தீனபந்தோ ராதே கோவிந்தா
ராதே கோவிந்தா ப்ருந்தாவனச் சந்திரா
நந்த குமாரா நவநீதச் சோரா
ராதே கோவிந்தா !
கானவிலோலா, விஜய கோபாலா ராதே கோவிந்தா
ராதே கோவிந்தா ப்ருந்தாவனச் சந்திரா
நந்த குமாரா நவநீதச் சோரா
ராதே கோவிந்தா !

23. ஆடுக ஊஞ்சல்...

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
கிருஷ்ணா உன் புகழ் பாடிடவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
நவநீத கிருஷ்ணா ஆடுகவே
ராதா ருக்மணி மணாளனே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அன்புடன் எங்களைக் காத்திடவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
மங்கள ஜோதியின் திருவிளக்கே
மலரும் மணமும் தந்தருள்வாய்
குங்குமப் பூவும் நிலைத்திருக்க
கோடி நமஸ்காரம் வேண்டுகிறோம்
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே !

24. ஏழுமலை மேல் இருப்பவராம்...

1. ஏழுமலை மேல் இருப்பவராம்
ஏழை துயர்தனைத் தீர்ப்பவராம்
என்றும் தரிசனம் தருபவராம்
ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளாம்  (ஏழு)

2. சங்கு சக்கரம் உடையவராம்
சாலைக்கிராமம் அணிந்தவராம்
துளசி மாலைத் தரித்தவராம்
பனிரெண்டு திருமேனிகள் உடையவராம்  (ஏழு)

3. கற்பூர தீப அலங்காரம்
கற்கண்டு நிவேத்தியப் பிரியராம்
சர்க்கரைப் பொங்கல் தயிர்சாதம்
தரும தரிசனம் தருபவராம் (ஏழு)

4. மகா லெட்சுமியை வரவேற்று
குபேரனிடத்தில் பொருள் பெற்று
பத்மா ஜானகியை மணம் புரிந்து
பக்தர்க்கு காட்சி அளித்தவராம் (ஏழு)

25. கண்ணனைப் பணி மனமே...

கண்ணனைப் பணி மனமே தினமே (3)
மண்ணில் யசோதை செய்புண்ய ஸ்வரூபனை (3)
மாதவனை நமது யாதவதீபனை  (கண்ணனை)

பாண்டவர் நேயனை பக்த சகாயனை (3)
பவளச் செவ்வாயனை பரமனை மாயனை (கண்ணனை)
மங்களமூலனை கோகுல பாலனை
மணமிகு துளசீமாலனை பாலனை (3) (கண்ணனை)

விண்ணவர் போற்றவே - மண்ணில்
வரும் வேத பண்ணனை ஸ்யாமள வண்ணனை
தாமரைக் கண்ணனை பணி மனமே
தினமே கண்ணனை பணி மனமே.

26. கோவிந்த கோவிந்த...

கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே
மதுசூதனா கோகுலேந்திரா
எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா
நந்த கோபிஜனா போதிசந்த்ரா  (கோவிந்த)

காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின்
கதியினை தேடத்தகாதே
அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில்
பாதியை கனவென்றுவிட்டு விடாதே  (கோவிந்த)

கண்ணால் அவன் உருநாடு - இரு
கண்ணால் அவன் உருநாடு - நல்ல
பண்ணால் அவன் புகழ்நாடு - இரு
கையாலே தாளங்கள் போடு - இரு
காலால் ஆடஒன்றி ஆடு - அந்த
காலன் வந்தால் என்ன நேரில் அவன்
கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)

நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்
என்றென்றும் புரியாது போபோ
நேரம் எனக்கேது இப்போ
எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்
பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ
நேரந்தரும் என்று சொல்லு இந்த
நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்
கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு
கோடி கொடுத்தாலும்
பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்
பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு  (கோவிந்த)

பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்
போடக் கிடைத்த கை இரண்டு
இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு
இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்
சொன்னால் கொள்ளை தான் போகாதே
ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)
கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்
சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே
அதை கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலங்கள் கோளங்கள் அவை
இவை என்று சொல்லி
காலனின் வசப்படாதே - கொடும்
காலனின் வசப்படாதே  (கோவிந்த)

பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு
பாடி கிடைந்திட்ட போதே
நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே
இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்
பலித்திட பாடிட வரும் தப்பாதே  (கோவிந்த)

காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்
காணக் கிடைக்காத தங்கம் - இங்கு
கண்டு களிப்பது சத்தங்கம்
இங்கு வேண்டிய அருள் பொங்கும்
நிகரில்லை என்றெங்கும் தங்கும்
கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
என்றாலும் கூட அருள் தானே பொங்கும்  (கோவிந்த)

பாடும் சுகம் ஒன்று போலே - இந்த
பாரில் இல்லை ஆதலாலே
நாடறியச் சொல்லு மேலே
நாமணக்க பாடும் போலே
கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்
கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)

27. சின்ன சின்ன கண்ணா...

(சின்ன சின்ன ரோஜா மெட்டு)

சின்ன சின்ன கண்ணா
சிங்கார கண்ணா
அன்ன நடை நடந்து - அழகாய்
ஆடி வா கண்ணா

1. சிறு பாத சதங்கை குலுங்கிடவே
நீ வர வேண்டும் - உன்
தித்திக்கும் வேணு கானம்
கேட்டிட வேண்டும்
திரு துளாய் மணமும் கமழ்ந்திட வேண்டும்
உன் திவ்ய ரூபதரிசனமும் கிடைத்திட வேண்டும் (சின்ன)

2. வெண்ணெய் உண்டு மண்ணை உண்டு
மாயை செய்தாயே
மலையை சிறு குடையாக பிடித்து நின்றாயே
அருமறைகள் தேடிடும்
அற்புதம் நீயே - ஆனந்த
ரூபனே அருள் தருவாயே (சின்ன)

3. பிறவாமை என்னும் அரும் மருந்தை
அருளிட வேண்டும்
மீண்டும் பிறந்தாலும் நான்
உனையே நினைந்திட வேண்டும்
கருணை மழையில் நனைந்திட வேண்டும்
உன் கருணைமழையில் நனைந்திட வேண்டும்
நான் காணும் இந்த கனவெல்லாம்
பலித்திட வேண்டும்  (சின்ன)

28. எத்தனையோ திருநாமங்கள்...
(பூவரையும் பூங்கொடியே மெட்டு)

எத்தனையோ திரு நாமங்கள்
அத்தனையும் வேதங்கள்
அதில் எந்த நாமம் சொன்னால்
என்னருகில் வருவாயோ (2)

1. கோபியர்கள் கூட்டத்திலே
கொஞ்சி ஆடி மகிழ்ந்தாயே
குழலூதி அனைவரையும்
மெய் மறக்கச் செய்தாயே - உன்
கான மழையில் நனைந்திடவே
வேணுகோபாலா என்றிடவா  (எத்தனையோ)

2. பாஞ்சாலிக்கருளிடவே
துயிலுடனே வந்தாயே
கண்ணா கண்ணா என்றழைக்க
கருணை மழை பொழிந்தாயே
அவ்வாறே நானழைத்தால்
விரைந்தருகில் வருவாயா  (எத்தனையோ)

3. கஜேந்திரனுக்கருளிடவே - கருட
வாகனத்தில் வந்தாயே
ஆதிமூலமே என்றழைத்தால்
அனுகிரகம் செய்வாயா
ஸகஸ்ரநாம நாயகனே
சங்குசக்ர பூஷணனே  (எத்தனையோ)

4. பார்த்தனுக்கு சாரதியாய்
பாண்டவர்க்கு வெற்றி தந்தாய்
பார்த்த சாரதியே என்றழைத்தால்
பக்கத்துணை வருவாயா
ராமாயண நாயகனே
ஸ்ரீராமா என்றழைத்திடவா (எத்தனையோ)

5. மாதவனே கேசவனே
மதுசூதனா கோவிந்தா
வாமனனே நாரணனே
திருவேங்கடனே வைகுந்தா
ஸ்ரீனிவாசா வேங்கடேசா
ஸ்ரீதரனே ஜெய் கிருஷ்ணா - என்று
என்ன சொல்லி அழைத்தாலும்
எங்கிருந்து நினைத்தாலும்
பக்தி ஒன்றே போதுமென்று
பரிவுடனே வந்திடுவான் (2)

29. குழலோசை கேட்குதே...
(உள்ளம் கொள்ளை போகுதே மெட்டு)

குழலோசை கேட்குதே
குதூகுலமாகுதே
உள்ளத்தில் அவன் நினைவு ஊஞ்சல் ஆடுதே (குழ)

1. தேனினும் இனிய கானங்கள் இசைப்பான்
தெவிட்டாத மோகன கீதங்கள் படிப்பான்
ஆசை மீறுதே கண்ணன்
அழகினை காணவே
என் கண்கள் தினம் தேடுதே  (குழ)

2. தாய்க்கு நல்ல பிள்ளையாக நடப்பான்
தெருவிலே பெண்களை வம்புக்கு இழுப்பான்
கோபியர் கொஞ்சும் ஆயனை மாயனை
என் கண்கள் தினம் தேடுதே (குழ)

3. கள்ளத்தனம் செய்தே வெண்ணெயை உண்பான்
காளிங்கன் சிரம்மீது நர்த்தனம் புரிவான்
லீலா வினோதனை ஆலிலைக் கண்ணனை
என் கண்கள் தினம் தேடுதே (குழ)

4. உள்ளம் கொள்ளை கொள்பவன்
உண்மை இன்பம் தருபவன்
பக்தி செய்தால் - முக்தி
தரும் பரந்தாமன்
கீதை சொல்லியே - நல்ல
பாதையைக் காட்டுவான் - அவனை
என் கண்கள் தினம் தேடுதே (குழ)

30. கருணை பொழியும்...
(அமுதைப் பொழியும் நிலவே மெட்டு)

கருணை பொழியும் கண்ணா
நீ அருகில் வராத தேனோ
அருகில் வராத தேனோ

1. அன்னை யசோதா அழைத்ததுமே - நீ
ஓடி வரவில்லையா
உன்னை அள்ளி எடுத்து
அகம் மகிழ்ந்தே அவள்
ஆனந்தப் படவில்லையா (2)

அருகில் வராத தேனோ
நீ அருகில் வராத தேனோ

2. ஆதிமூலமே என்றழைத்ததுமே
உன் அருளினைத் தந்தாயே
கருட வாகனத்தில் காட்சியளித்து
சூரிதனைக் காத்தாயே

அருகில் வராத தேனோ
நீ அருகில் வராத தேனோ

3. திரௌபதை மானம் காத்திட நீயும்
துயிலுடன் வந்தாயே
பாண்டவர் தமக்கு பக்கத்துணை இருந்து
வெற்றியைத் தந்தாயே
பாரத வெற்றியைத் தந்தாயே  (அருகில்)

31. கண்ணா வா மணிவண்ணா...
(பொன்னென்பேன் - மெட்டு)

கண்ணா வா மணி வண்ணா வா
கார்முகிலே ஆரமுதே வா (கண்ணா)

1. திருமுடியதனில் மாமயில் இறகும்
செவியோரத்தில் சுருண்ட கார்குழலும்
பிறைநுதல் தனில் நாமச் சிங்காரமும்
கருணை பொழியும் நயனங்களும்
செவிகுண்டலமும் சீரான நாசியும்
பவழச் செவ்வாயில் குருநகை புரிந்து  (கண்ணா)

2. நன்மணி பதித்த நவரத்ன சரங்களும்
நறுமணம் கமழும் திருத்துழாய் மாலையும்
துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்
குழலூதும் அழகும் திருக்கரங்களும்
இருதுடையழகும் இணைமுழங்காலும்
திருவடியதனில் சலங்கைகள் ஒலிக்க   (கண்ணா)

3. நான்மறை தேடும் நாயகன் நீயே
நானிலம் போற்றும் தெய்வமும் நீயே
உன்னையே நினைந்து துதிக்கும் பொழுது
என்னையே நானும் மறந்திருப்பேன்
கண்ணில் கலந்திடவே நெஞ்சில் நிறைந்திடவே
கருணைக் கடலே காத்தருள் செய்ய  (கண்ணா)

32. குழலூதி மனமெல்லாம்...

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டபின்னும்
குறையேதும் எனக்கேதடி ஸகீயே - மிக மிக
அழகான மயில் ஆடவும் - காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும்
அகமகிழ்ந்திலகும் நிலஒளி தனிலே
தனை மறந்து புள்ளினம் கூவ
மகர குண்டலம் ஆடவும்
அதற்கேற்ப மகுடம் ஒளி வீசவும்
மிகவும் எழிலாகவும் தென்றல் காற்றில்
மிளிரும் துகில் ஆடவும்
அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே
தனை மறந்து புள்ளினம் கூவ
அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்
நலம் காண ஒரு மனம் நாட
தகு திமி தகு என ஒரு பதம் பாட
தகிட ததிமி என நடம் ஆட
கன்று பசுவினமும் நின்று புடைசூழ
என்று மலருமுக இறைவன் கனிவோடு  (குழலூதி)

33. அலை பாயுதே கண்ணா...

அலை பாயுதே கண்ணா என் மனம் மிக
அலை பாயுதே உன் ஆனந்த மோகன வேணுகானமதில் (அலை)

நிலை பெயராத சிலை போலவே நின்ற
நேரமாவதறியாமலே மிக வினோதமான
முரளீதரா என் மனம் மிக (அலை)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல்
எரியுதே திக்கை நோக்கி - என்னிரு
புருவமும் நெறியுதே
கனிந்த உன் வேணுகானம் ஆ...ஆ...ஆ...
காற்றில் வருகுதே (3)
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கதித்த மனத்தில் இருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்ந்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கனைக்கடல் அலையினில்
கதிரவன் ஒளியென இணையிருகழலெனக் களித்தவா
கதறி மனமுருக நானழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவா
இது தகுமோ இது முறையோ
இது தருமந்தானோ (2)
குழல் ஊதிடும் பொழுது ஆடிடும் குழைகள்
போலவே மனது வேதனை மிகவொடு ஆ...ஆ...

34. குருவாயூருக்கு வாருங்கள்....

குருவாயூருக்கு வாருங்கள் ஒரு
குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
ஒருவாய் சோறு ஊட்டும் தாயின் முன்
உட்கார்ந்திருப்பதை பாருங்கள்

கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன் கண்களிரண்டும் வான்நீலம்
கடலும் வானும் அவனே என்பதை
காட்டும் குருவாயூர் கோலம் (குருவாயூர்)

சந்தியா காலத்தில் நீராடி அவன்
சன்னதி வருவார் ஒரு கோடி
நாராயண நாராயண ஹரிஹரி
மந்திரக் குழந்தைக்கு பாதை காட்டு
மாலைகளிடுவார் குறையோடி (குருவாயூர்)

உச்சிகாலத்தில் சிங்காரம் அவன்
ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சை குழந்தையை பார்க்கும்போதே
பாவையர் தாய்மையின் ரீங்காரம்

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண ஹரி ஹரி

மாலை நேரத்தில் சீர்வேலி அவன்
மாளிகை முழுவதும் நெய்வேலி
நெய்விளக்கை ஏற்றி பொன்னிருள்
அகற்று, நித்தம் தருவாள் ஸ்ரீதேவி
நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண ஹரி ஹரி

35. என்னதவம் செய்தனை...

என்னதவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ருமம் அம்மா என்றழைக்க - என்ன

ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட - என்ன

பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
உடலில் கட்டி வாய்பொத்தி கெஞ்ச
வைத்தாய் தாயே - என்ன

சனகாதி முனிவர்கள் தவம்செய்து சாதித்ததை
புனிதமாதே எளிதில் பெற - என்ன

36. ஆடுகின்றான் கண்ணன்...

ஆடுகின்றான் கண்ணன் பாடுகின்றான்
ஆனந்த ராதையுடன் கண்ணன்

ஆடுகிறான் மனவீடு நிறைந்தவன்
உச்சிக் கமலத்தில் சச்சிதானந்தமாய் - ஆடுகின்றான்

ஓடித்திருக்குதடி மோகினியே என்றான்
வேடிக்கை பல செய்து வம்புகள் பேசிடுவான்

வீடு புகுந்தே தயிர் வெண்ணெயினை திருடுவான்
ஓடி ஒளிந்திடுவான் ஆயர்குலத்திலகன்

கானக்குழல் ஊதி கன்றுகள் மேய்த்திடுவான்
காணுமிடமெல்லாம் காட்சி அளித்திடுவான்

ஞான ஒளிவீசு வேணுகோபாலவன்
வானில் ஒளிவீசும் சோலையிலே கண்ணன்

தாய்க்கு நல்லவன்போலே நடந்திடுவான்
இளம் - தோகையை பின்னின்று தொல்லையிழைப்பான்

சேய்களையே உந்தன் செங்கனிவாய் முத்தம்
தாபம் தழைத்திடுவான் கண்ணன் - ஆடுகின்றான்

37. ஆடாது அசங்காது...

1. ஆடாது அசங்காது வா கண்ணா உன்
ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்தாடுதே எனவே - ஆடாது

2. ஆடலைக் காண தில்லை அம்பலத் திறைவனும்
தன் ஆடலைவிட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறுயாதவனே ஒரு
மாமயில் இறகணி மாதவனே - நீ (ஆடாது)

3. சின்னஞ்சிறு பாதங்கள் சிலம் பொலித்திடுமே
அதை செவிமடுத்த பிறவி மனங்களித்திடுமே
பின்னிய சடைசற்றே வகை கலைந்திடுமே
மயில் பீலி அசைந்தசைந்து நிலைகலைத்திடுமே
பன்னிருகை இறைவன் ரூபனும் மயிலொன்னு
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே
குழல் ஊதிவரும் அழகா
உனைத் தேடி வரும் அடியாரெவராகினும்
கனகமணி அசையும் உனது திருநடனம்
கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப்போகும்

38. கோதை நாயகியே...

கோதை நாயகியே கோவிந்தன் மனமகிழும்
கோகிலமே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே
பேதை நான் உனது பெருமை சொல்லக் கூடுமோ
பெருமானையே மணந்து பெரும்பேறு
தான் பெற்றாய் - கோதை
பெரியாழ்வார் மனமகிழப்பெண்ணாய் அவதரித்தாய் - வட
பத்ர ஸயனனுக்குப் பணிவிடைகள் செய்தாய்
பெரிய தவம் எனவே பாவை நோன்பிருந்து (கோதை)
பேரருளானைப் பதியாய் அடைந்தாய் - தாயே
திருப்பாவை முதலான தெவிட்டாத அமுதையை
தெய்வீக யிடங்களால் தினமும் வழிபட்டு
திருப்பாற்க் கடல் தேவனின் திருக்கரம் பற்றிய
திருமகளே குருதாசன் துதித்திடும் அன்னையே (கோதை)

39. பல்லாண்டு பல்லாண்டு...
(புல்லாங்குழல் - மெட்டு)

பல்லாண்டு பல்லாண்டு பாடுங்களே - எங்கள்
பரந்தாமன் ஆலயத்தை நாடுங்களே
எந்நாளும் அவன் நாமங்கள் - சொல்லுங்களே
இல்லை இல்லையென் போரை வெல்லுங்களே (பல்)

இளவேனிற் காலத்து புஷ்பங்களே - எங்கள்
யமுனா நதிக்கண்ணன் நயனங்களே
தொடுவானில் தவழ்கின்ற மேகங்களே - எங்கள்
துவாரகை மாமன்னன் ரூபங்களே  (பல்)

பாம்பணையிற் பாற்கடலில் துயில்கின்றவன்
பக்தர்களின் குரல் கேட்டு எழுகின்றவன்
ஓர் நொடியும் உறங்காமல் உழைக்கின்றவன்
உலகத்தை போல் தினமும் சுழல்கின்றவன்  (பல்)

40. எங்கு எங்கு இன்பமென்று..

(காண வந்த காட்சி என்ன? - மெட்டு)

எங்கு எங்கு இன்பமென்று தேடும் மனமே
திரு வேங்கடனின் திருவடியை நாடு தினமே
ஓடியாடி ஓய்ந்ததென்ன எந்தன் மனமே
நீ ஓரிடத்தில் நின்றுவிடு எந்தன் மனமே
போற்றி போற்றி பாடும் போது பொங்கும் இன்பமே
நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் இனிக்கும் நாமமே

மாயையிலே உழலாதே எந்தன் உள்ளமே
வீண் மாயையிலே உழலாதே எந்தன் உள்ளமே
அந்த மாதவனின் நாமம் சொன்னால் கிடைக்கும் இன்பமே (எங்கு)

ஏழுமலையகள் சூழ்ந்திருக்கும் அழகு அல்லவா
எங்கும் அருள் நிறைந்திருக்கும் தலமுமல்லவா
சங்கோடு சக்கரமும் வினைகளைத் தீர்க்கும் - அந்த
சாரங்கன் நாமம் சொன்னால் நிம்மதி கிடைக்கும் (எங்கு)

கீதை என்னும் பாடம்சொன்ன கண்ணனல்லவா - தெய்வ
கீர்த்தனைகள் நமக்கு தந்த கிருஷ்ணனல்லவா (கீதை)

ஸ்ரீ ஆண்டாளுக்கருள் புரிந்த அரங்கனல்லவா - அவன்
அன்பாலே நம்மையாளும் தெய்வமல்லவா (எங்கு)

41. மாதவா கேசவா...
(குழந்தையும் தெய்வமும் - மெட்டு)

மாதவா கேசவா என்றால் போதும்
மறுகனமே அவன் அன்பு நம்மையாளும்
நெஞ்சுருக அவனை நாம் நினைத்தால் போதும்
நிம்மதியாய் வாழ ஒரு வழியுண்டாகும்  (மாதவா)

பூஜைகளும் விரதங்களும் தேவையில்லையே
புண்ணிய நீராடலும் தேவையில்லையே (பூஜை)
ஆச்சாரம் அனுஷ்டிக்க தேவையில்லையே
ஆடம்பரமும் அமர்களமும் தேவையில்லையே (மாதவா)

நாடு விட்டு காடு செல்ல வேண்டவே வேண்டாம்
காவியுடன் கமண்டலமும் வேண்டவே வேண்டாம்
பலிகொடுக்கும் உயிர்வதையும் வேண்டவே வேண்டாம்
பக்தியுடன் அவனை தினம் ஒருமுறையேனும் (மாதவா)

42. ஓடாதே...ஓடாதே..

(நீதானே என்னை அழைத்தது - மெட்டு)

ஓடாதே...ஓடாதே.... ஹே மாதவா
மதுசூதனனே மாயவா
ஓடாதே என் உள்ளத்தை விட்டு வெகு தூரமே (நீ ஓடாதே)

தாவி தாவியே தண்டைகள் குலுங்க
தத்தளிக்கும் என் மனதும் மயங்க

கோபமோ தாபமோ குறையேதும் உளதோ
ஏதுவானாலும் என் பிழை பொறுத்தருள்  (நீ ஓடாதே)

பாஞ்சாலி சபதம் நிறைவேறிப் போனதே
பாரதப் போரும் வெற்றியடைந்ததே
ராமாயணமும் இதிகாச மானதே
ஆனாலும் இனிஎங்கு ஓடுகின்றாயோ  (நீ ஓடாதே)

காளிங்க நர்த்தனம் ஆடி முடிந்ததே
கோவர்த்தன கிரியை குடையாக்கினாயே
உன் கான மழையில் உலகமே மகிழ
எந்தனை விட்டு போவது அழகோ   (நீ ஓடாதே)

43. நாராயணம் பஜே நாராயணம்...

நாராயணம் பஜே நாராயணம் - லக்ஷ்மி
நாராயணம் பஜே நாராயணம்

தினகர கராம்பரம் நாராயணம் - திவ்ய
கனக கங்கண தரம் நாராயணம்
பிருந்தா வனஸ்திதம் நாராயணம் - தேவ
பிருந்தா பஹுஸ்திதம் நாராயணம்  (நாரா)

பங்கஜ விலோசனம் நாராயணம் - பக்த
சங்கட விமோசனம் நாராயணம்
கருணா பயோநிதம நாராயணம் - பவ்ய
சரணா கதநிதம் நாராயணம் (நாரா)

ரக்ஷித ஜகத்ரயம் நாராயணம் - சக்ர
ஸக்ஷிதா சுரஸ்யம் நாராயணம்
அக்ஞான நாசகம் நாராயணம் - பக்த
விக்ஞான பாசகம் நாராயணம்  (நாரா)

ஸ்ரீவத்ஸ பூஷணம் நாராயணம் - நந்த
கோவத்ஸ போஷணம் நாராயணம்
ஸ்ருங்கார நாயகம் நாராயணம் - பத
கங்கா விதாயகம் நாராயணம் (நாரா)

ஸ்ரீகண்ட சராசரம் நாராயணம் - திவ்ய
வைகுண்ட புரசரம் நாராயணம்
கரிமுக்தி தாயகம் நாராயணம் - பத்ர
கிரிரத்ன நாயகம் நாராயணம் (நாரா)

44. அநாதி வேதமும்...

அநாதி வேதமும் புராணமும் சொல்லும்
அபூர்வ குண நாமம்
சதா என் நாவில் நிலாவியே எனை
விடாத ஹரி நாமம்

மாமுனி நாரதர் வீணையில் ஊறிய
மங்கல மய நாமம்
நானறி யாதெனை ஆண்டருள் தந்தெனை
விடாத ஹரி நாமம்  (அநாதி)

உத்தமன் இட்ட தலத்தினில் அக்கணம்
உதித்த திரு நாமம்
பக்தி இல்லா தெனக்கு இசைந்தெனை
விடாத ஹரிநாமம்

ஆதிமூல மெனும் மாமத யானையை
அருள வந்த நாமம்
ஏதுமிலாத என்இதய புகுந்தெனை
விடாத ஹரி நாமம்  (அநாதி)

சராசரங்களில் எல்லாம் நிறைந்துள்ள
மஹா புனித நாமம்
கெடாத வாரருள் நடாவியே எனை
விடாத ஹரி நாமம்

மஹா ஜெபம் செய்யும் நிஜானுபூதியில்
மனோ ரமண நாமம்
ஸரோஜமோஹன சொரூபமாய் எனை
விடாத ஹரி நாமம் (அநாதி வேதமும்)

45. புல்லினம் பாடுது புரு÷ஷாத்தமா...

புல்லினம் பாடுது புரு÷ஷாத்தமா
புலர்ந்தபின் துயில்கொள்ளல் அழகாகுமா  (புல்லி)

பள்ளிஎழும் காட்சியினை பார்க்கவே கண்கள்
பரந்தாமா உன்புகழை பாடவே பண்கள்
கிள்ளியிடும் துளசியினால் தேடிவரும் உன்னை
நல்லவனே நாயகனே நானுரைப்பேன் என்னே (புல்லி)

நீராட பன்னீரும் அத்தரும் உண்டு
நீயாடும் வேளை நான் அதனைக் கண்டு
பூவோடு நாராக புதுஉணர்வே கொண்டு
போற்றிடுவேன் புகழ்ந்திடுவேன் புலையனை போல்நின்று (புல்லி)

தருனியவள் சந்தனத்தை உன்னுடலில் பூச
தம்பியர்கள் கவரிமுடி சாமரம் வீச
நானிலமே பீடமாம்
நான்கு திசைகள் வடமாம்
ஆனிப்பொன் ஊஞ்சல் ஆட
ஆகாயம் விதானமாம் (புல்லினம்)

46. கோகுலத்துப் பசுக்களெல்லாம்..

கோகுலத்துப் பசுக் களெல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கரக்குது ராமாரி - அந்த
மோகனனின் பெயரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய்யிருக்குது கிருஷ்ணாரி அந்த மோகன...
ராமாரி ஹரி கிருஷ்ணாரி ஹரிஹரி ராமாரி ஹரே கிருஷ்ணாரி
கண்ணனவன் நடனமிட்டுகாளிதியை வென்றபின் தான்
கன்னிப் பாம்பின் நன்றி இல்லை ராமாரி - அவன்
கனியிதழில் பால் குடித்து பூஜதியை கொன்றபின் தான்
கன்னியர்க் கோர் வஞ்சமில்லை கிருஷ்ணாரி
ராமாரி ஹரி கிருஷ்ணாரி
ஹரிஹரி ராமாரி ஹரே கிருஷ்ணாரி (கோகு)

குலத்தில் முங்கி குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி
சேலை திருத்தும் போது அவன் பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகமிருக்குது கிருஷ்ணாரி
ராமாரி ஹரி கிருஷ்ணாரி
படிப் படியாய் மலையில்ஏறி பக்தி செய்தால் துன்பமெல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி ராமாரி - அடி
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி (கோகு)

47. ஹரிஓம் ஹரிஓம் நாராயணா...

ஹரிஓம் ஹரிஓம் நாராயணா
ஆலிலை வாசா நாராயணா

வேதம் நான்கைக் காத்திடவே
மீனாய் வந்தாய் நாராயணா

பாற்கடல் அமிர்தம் வழங்கிடவே
கூர்மமாய் நின்றாய் நாராயணா

வளமார் பூமி மீட்டிடவே
வராகம் ஆனாய் நாராயணா

இரணிய சம்ஹாரம் நாராயணா
நரசிம்மம் ஆனாய் நாராயணா

மாவலி செருக்கை மாய்த்திடவே
வாமனன் ஆனாய் நாராயணா

பாசத் தந்தை சொற்கேட்ட
பரசுராமா நாராயணா

இராவண சம்ஹாரம் செய்திடவே
இராமனாய் நின்றாய் நாராயணா

நலமாய் சோதரர் போற்றிடவே
பலராமர் ஆனாய் நாராயணா

கீதையால் வாதை போக்கிடவே
கிருஷ்ணன் ஆனாய் நாராயணா

கலியுகக் கொடுமை பெருகையிலே
கல்கியாய்த் தோன்றுவாய் நாராயணா

துன்பம் தொல்லை முற்றுகையில்
துடைக்க எழுகின்ற நாராயணா

48. ஹரிபஜனம்...

1. ஹரிபஜனம் ஹரிபஜனம் ஹரிபஜனம் ஒன்றே
கலியுகத்தில் ஒளஷதமாய் கருணை செய்யுமின்றே

2. பக்தரெல்லாம் பரவசமாய் பாடுகின்ற நாமம்
சித்தசுத்தி தந்தருளும் தெய்வமணி நாமம்

3. உடல்முழுதும் இன்பரசம் ஊட்டுகின்ற நாமம்
இடையறாமல் என்னுள்ளத்தே இலங்குகின்ற நாமம்

4. கமலமுகம் கருணைவிழி காட்டுகின்ற நாமம்
எமபயத்தை நீக்கவல்ல எம்பெருமான் நாமம்

5. பாற்கடலில் பாம்பணைமேல் பள்ளிகொண்ட நாமம்
ஆச்சரிய மாயையெல்லாம் அகற்றுகின்ற நாமம்

6. ஆதிசேஷ சயனநாமம் ஆதியான நாமம்
ஜோதியான நாமமிதே சுந்தரமான நாமம்

7. மாமுனிவர் காதலிலே வளர்ந்தஹரி நாமம்
பூ மகளின் திருவுளத்தே பொங்கிவரும் நாமம்

8. ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
உலகெல்லாம் முழங்க வேண்டும் ஓம் நமோ நாராயணா

9. நீலமேக வடிவழகை நித்தியமுங் காண்போம்
நேரமெல்லாம் பாடியாடி நிர்ப்பயமாய் வாழ்வோம்

10. ஹரிபஜனம் ஹரிபஜனம் ஹரிபஜனம் செய்வோம்
இடைவிடாமல் எண்ணி எண்ணி இப்பொழுதே செய்வோம்

49. காக்கைச் சிறகினிலே...

காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்று தையே நந்தலாலா

பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறந்தோன்றுதையே நந்தலால

கேட்கு மொழிக ளெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதடா நந்தலாலா

50. மதுராஷ்டகம்... அதரம் மதுரம் வதனம்..

1. அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்

2. வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் தலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்

3. வேணுர் மதுரோ ரேணுர் மதுர: பாணிர் மதுர: யாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்

4. கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்

5. கரணம் மதுரம் தரணம் மதுரம் ஹரணம் மதுரம் ரமணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்

6. குஞ்ஜா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீதீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்

7. கோபீ மதுரா லீலா மதுரா யுக்தம் மதுரம் முக்தம் மதுரம்
இஷ்டம் மதுரம் ஸிஷ்டம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்

8. கோபா மதுரா காவோ மதுரா யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம்

51. தசாவதார ஸ்தோத்ர மாலை

ஓம் நமோ நாராயணாய...

ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ

ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ.

ஆதியும் அனாதியாகி ஆதிமூலப் பொருளுமாகி
ஆலிலையில் பள்ளிகொண்ட ஆதிமூலமே
பக்தர்களைக் காக்கவேண்டி பத்துவித வேடங்கொண்டு
பலஉலாவும் லீலைசெய்த புண்ய மூர்த்தியே (ஓம்)

மச்சமாகி நீரில்மூழ்கி மறைகள் நான்கும் தூக்கிவந்து
மாபெரும் பணியைச் செய்த மாயமூர்த்தியே
மூழ்கிமறைந்த மந்தரகிரயை மத்தாக்கிக் கடல்கடைய
முங்கி முதுகில் சுமந்துநின்ற முரளீமோஹனா (ஓம்)

பன்றியாக ரூபம் கொண்டு பாதாளத்தில் புகுந்து சென்று
பூமிதனைத் தூக்கி வந்த புண்யமூர்த்தியே
சின்னஞ்சிறு பக்தன் வாக்கை சத்யமாக்கிக் காட்டவேண்டி
சபையில் தூணில் சாடிவந்த சத்யமூர்த்தியே (ஓம்)

அகிலாண்டம் அத்தனையும் அடியிரண்டால் அளந்தபின்பு
அரசன்தலையில் அடியை வைத்த ஆதிதெய்வமே
பரசுதனைக் கையில் கொண்டு பரமன்ராமன் எதிரில் வந்து
பத்மனாபன் தனுசைத்தந்த பார்க்கவராமா (ஓம்)

மமதை கொண்ட இராவணனை மூலமுடன் அழிக்க வேண்டி
மானிடனாய் அவதரித்த மாயமூர்த்தியே
அண்ணனாகிச் சேவை செய்ய ஆர்வமுடன் கலப்பை ஏந்தி
அரும்பணிகள் பலவும் செய்த ஆதிஜோதியே (ஓம்)

கர்வம் கொண்ட கம்ஸன் தன்னைக் கூட்டுடனே அழிக்க வேண்டி
க்ருஷ்ணாவதாரம் செய்த கருணாமூர்த்தியே
கலியுகத்தில் கஷ்டம் போக்க குதிரை மீதில் ஏறிக்கொண்டு
கல்கியாக வரப்போகும் காகுத்தராமா. (ஓம்)

கலியுகத்தில் மக்களுக்குக் கைவல்யம் கையில்தர
குருவாயூர் கோவில் கொண்ட கிருஷ்ணமூர்த்தியே
ஆணவத்தால் அறிவிழந்து அகந்தை கொண்ட எந்தனுக்கு
அறிவையூட்டி ஆதரிக்கும் ஆதிதெய்வமே. (ஓம்)

பண்ணும் பாட்டும் அறியாத பித்தன் என்னைப் பாடவைத்து
பக்தனாக்கப் பாடுபடும் புண்யமூர்த்தியே
நாமம் நம்பிச்சொல்பவர்க்கு நற்கதியைத்தருவேனென்று
நாமம் சொல்லிச் சத்யம் செய்த நிகம வேத்யனே. (ஓம்)

நாமம் சொல்லும் இடத்தினிலே நித்யவாசம் செய்வேனென்று
நாரதர்க்கு உறுதி தந்த நித்ய வஸ்துவே
பூர்ணாவதாரம் கொண்டு பதினாறு கலைகள் கொண்டு
பவுனபுரம் வந்தடைந்த பூர்ணாரூபனே. (ஓம்)

52. திருப்பதி மலைமேல்...

திருப்பதி மலைமேல் இருப்பவனே
தீராத வினைகளைத் தீர்ப்பவனே
ஸ்ரீநிவாஸா கோவிந்தா - ஹரே
ஸ்ரீவெங்கடேசா வைகுந்தா - திருப்பதி

ஏழுமலைமேல் இருப்பவனே
எல்லா வினைகளும் தீர்ப்பவனே
பாண்டுரெங்கா கோவிந்தா - ஹரே
பரம தயாளா வைகுந்தா - திருப்பதி

உளமெனும் கோவிலில் வசிப்பவனே
உலகோரை வாழவைக்க வந்தவனே
வெங்கடரமணா கோவிந்தா - ஹரே
சங்கட ஹரணா வைகுந்தா - திருப்பதி

திருப்பதி மலைமேல் இருப்பவனே
தீராத வினைகளைத் தீர்ப்பவனே
சங்கு சக்கரா கோவிந்தா - ஹரே
சாரங்க தாரா கோவிந்தா - திருப்பதி

ஏழுமலைமேல் இருப்பவனே
எல்லா வினைகளும் தீர்ப்பவனே
பக்த வத்ஸல கோவிந்தா - ஹரே
பாரதப்ரிய கோவிந்தா - திருப்பதி

உளமெனும் கோவிலில் வசிப்பவனே
உலகோரை வாழவைக்க வந்தவனே
பசுபால கிருஷ்ண கோவிந்தா - ஹரே
பாப விமோசன கோவிந்தா - திருப்பதி

அலர்மேலு நாதா கோவிந்தா
ஹரே ஆபத்பாந்தவா கோவிந்தா
திருப்பதி வாசா கோவிந்தா - ஹரே
திருமலை வாசா கோவிந்தா - திருப்பதி

53. ராதா மாதவ..

ராதா மாதவ கோவிந்தா
ராஜீவ லோசன கோவிந்தா
வேணு விலோலா கோவிந்தா
விஜய கோபாலா கோவிந்தா
நந்த குமாரா கோவிந்தா
நாராயண ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
கோபி மனோகர கோவிந்தா
மேகஸ் யாமா கோவிந்தா
முரளி மாதவ கோவிந்தா
பக்த ஜனப்ரிய கோவிந்தா
பரம தயாளோ கோவிந்தா
ஹரே ராமா கோவிந்தா 
வெங்கட் ராமா கோவிந்தா
சீதா ராமா கோவிந்தா
ஜெய ராமா கோவிந்தா
பல ராமா கோவிந்தா

54. ஆதிசேஷா அனந்தசயனா...

ஆதிசேஷா அனந்தசயனா
ஸ்ரீநிவாஸா ஸ்ரீ வெங்கடேசா
வைகுண்டநாதா வைதேகிப்ரியா
ஏழுமலை வாசா எங்களின் நேசா (ஆதி)
வேணுவிலோலனா விஜயகோபாலா
நீலமேக வண்ணா கார்மேகக் கண்ணா (ஆதி)
காளிங்க நர்த்தனா கமனீய கிருஷ்ணா
கோமள வாயனா குருவாயூரப்பனா (ஆதி)
ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பாடு
தீவினை யகல அவன் திருவடி தேடு (ஆதி)
பாவங்கள் போக்கப் பஜனைகள் செய்வோம்
பார்த்த சாரதியின் பாதம் பணிவோம் (ஆதி)
திருப்பதி மலையில் திருமுகம் காட்டும்
திருவேங்கடத்தான் திருவருள் பெறுவோம் (ஆதி)
ஸ்ரீரெங்கநாதன் பள்ளி கொண்டிருக்கும்
ஸ்ரீரெங்கம் சென்று திருவடி பணிவோம் (ஆதி)

56. தூணிலும் இருப்பான்....

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
தூயவன் ஜோதி நாராயணன் - அவன்
ஆணிலும் இருப்பான் பெண்ணிலும் இருப்பான்
ஆனந்த ஜோதி நாராயணன் (தூணிலும்)
காட்டிலும் இருப்பான் நாட்டிலும் இருப்பான்
காருண்ய மூர்த்தி நாராயணன்
கள்ளத் தனமாய் ஆயர்கள் வீட்டில்
வெண்ணெயை உண்டவன் நாராயணன்  (தூணிலும்)
பேசசிலும் இருப்பான் மூச்சிலும் இருப்பான்
மோகினி ரூபன் நாராயணன் 
பார்க்கின்ற பொருள்கள் அனைத்திலும் இருப்பான்
பக்தருக் கருளும் நாராயணன்  (தூணிலும்)
பார்த்திபனுக்கு ஒரு நாராயணன்
புல்லாங்குழலோன் நாராயணன்
கர்ணனுக்கும் அதே நாராயணன்
வைகுண்ட நாதன் நாராயணன்  (தூணிலும்)
நாராயணா ஹரி நாராயணா
நலமே அருள்வாய் நாராயணா
திருவருள் தருவாய் நாராயணா
ஊழ்வினை தீர்ப்பாய் நாராயணா  (தூணிலும்)

57. ஓம் நமோ நாராயணாய...

ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நமோ
ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நமோ.

ஸகல லோக ஸாக்ஷியாகி - ஸகல வேத ஸாரமாகி
ஸகல யோக ஸித்தியாகி - நின்ற மூர்த்தியே
ஸகல தத்துவங்களாகி - பரமஞான வித்தையாகி
ஸகல ஸப்த வடிவமாகி வந்த மூர்த்தியே (ஓம் நமோ)

அகுணஸகுண நிலையிலாகி - அசுரசுரவி - பாகமாகி
அதிலுமாகி இதிலுமாகி அமையும் மூர்த்தியே
அணுவுளே அகண்ட மாட அணுவினால் அனைத்துமாட
அமரநாத வடிவிலாடும் அருணமூர்த்தியே (ஓம் நமோ)

எனதுநான் எனச்செருக்கி மமதைஉற்றலைந்த - என்னை
இனியனாக்கி இணைய வைத்த இன்ப மூர்த்தியே
என துளத்தில் உனது நாமம் எழுதி வைத்து நடனமாடி
ஏகமாய் ஏனைக் கலந்த யோக மூர்த்தியே (ஓம் நமோ)

58. ஹரி நாராயண கோவிந்தா...

ஹரி நாராயண கோவிந்தா ஜெய நாராயணா கோவிந்தா
ஹரிநாராயண ஜெயநாராயண பஜ நாராயண கோவிந்தா
பக்த ஜனப்ரிய கோவிந்தா பங்கஜ லோசன கோவிந்தா
பக்த ஜனப்ரிய பங்கஜ லோசன பரமானந்தா கோவிந்தா

வாமன மூர்த்தே கோவிந்தா பாவன கீர்த்தே கோவிந்தா
வாமன மூர்த்தே பாவன கீர்த்தே மோஹன மூர்த்தே கோவிந்தா
தசரத நந்தன கோவிந்தா தசமுக மர்த்தன கோவிந்தா
தசரத நந்தன தசமுக மர்த்தன ஸதமஸேவித கோவிந்தா

கமல வல்லப கோவிந்தா கமல விலோசன கோவிந்தா
கமல வல்லப கமல விலோசன கமலவாசன கோவிந்தா
சீதா வல்லப கோவிந்தா ராதாவல்லப கோவிந்தா
சீதா வல்லப ராதா வல்லப பாமா வல்லப கோவிந்தா

உக்ர பராக்ரம கோவிந்தா விக்ரஹபூஷண கோவிந்தா
உக்ர பராக்ரம விக்ரஹபூஷண ஸுக்ரீவப்ரிய கோவிந்தா
கேசவ மாதவ கோவிந்தா மாதவ கேசவ கோவிந்தா
கேசவ மாதவ கேசவ காளிங்க நர்த்தன கோவிந்தா

ஹரமே துரிதம் கோவிந்தா குருமே குசலம் கோவிந்தா
ஹரமே துரிதம்குருமே குசலம் பவமேசரணம் கோவிந்தா
வெங்கடரமணா கோவிந்தா ஸங்கடஹரணா கோவிந்தா
வெங்கடரமணா ஸங்கட ரமணா லக்ஷ்மிரமணா கோவிந்தா

அநாத ரக்ஷக கோவிந்தா ஆபத்பாந்தவ கோவிந்தா
அநாத ரக்ஷக ஆபத்பாந்தவ ஆர்த்தி விபஞ்ஞன கோவிந்தா
தீனஸுபந்தோ கோவிந்தா பரமதயாளோ கோவிந்தா
தீனஸுபந்தோ பரமதயாளோ பக்தஸுவத்ஸல கோவிந்தா.

59. ரங்கா ரங்கா ஓடிவா...

ரங்கா ரங்கா ஓடிவா
பாண்டு ரங்கா ஓடிவா
பக்தியோடு பஜனை செய்வோம் வா - வா

நாங்கள் பக்தியோடு பஜனை செய்வோம் - வா - வா
இந்த ஏழைமீது கருணை கூர்ந்து - வா - வா
பண்டரிபுரத்திலிருக்கும் பாண்டுரங்கசுவாமியே
நீ எங்களைக் காக்கவே ஓடோடி ஓடி வா
திருப்பதி மேலிருக்கும் ஸ்ரீ நிவாஸப் பெருமாளே
நீ எங்களைக் காக்கவே ஓடோடி ஓடிவா
திருமலை மீதில் வாழும் திருமலை நம்பியே !
நீ எங்களைக் காக்கவே ஓடோடி ஓடிவா
திருமாலே ஓடிவா ! பெருமாளே ஓடிவா
திருவேங்கடத்தில் வாழும் வெங்கடேசப் பெருமாளே
நீ எங்களைக் காக்கவே ஓடோடி ஓடிவா

60. ஆவணி ரோகிணி...

1. ஆவணி ரோகிணி அஷ்டமி நாளினில்
தேவகி வயிற்றில் ஜெனித்தவனே
அக்கணமே வசுதேவரின் மூலம்
யசோதையின் வீட்டை அடைந்தவனே
பாவையாம் ரோகிணி பாலகனாம்
பலராமனின் பின்பு பிறந்தவனே
ஜெய ஜெயஹே குருவாயு புரீஸ்வர
தேவகி நந்தன கிருஷ்ண ஹரே.

2. அழகிய பெண்ணினைப்போல் உருமாறிய
அரக்கியாம் பூதனை வதைத்திடவே
குழந்தை உனக்கவள் கொங்கை தந்தே அதில்
கொடும் விஷப்பாலினை ஊட்டிடவே
அழகனே பாலுடன் கலந்தே அவள்
ஆவியைப் பானமும் செய்தவதென
ஜெய ஜெயஹே குருவாயு புரீஸ்வர
தேவகி நந்தன கிருஷ்ண ஹரே.

3. வளர்பிறை போல நீ தொட்டிலில் கிடந்து
கண் வளர்ந்திருக்கும் அந்த வேளையிலே
வஞ்சகன் சகடனும் உன்உயிர் கொன்றிட
வந்தனன் வண்டியின் உருவினிலே
முளரி மலர்ப்பாதம் கொண்டுதைத்தே அவன்
முறிந்து விழுந்திடச் செய்தவனே
ஜெய ஜெயஹே குருவாயு புரீஸ்வர
தேவகி நந்தன கிருஷ்ண ஹரே.

4. காற்றெனச் சீறிஎழுந்த த்ருணாவர்தன்
காலத்தை நொடியினில் முடித்தவனே
சீற்றம் கொண்டே பட்க்ஷிரூபத்தில் நின்ற
பகாசூரன் வாயைக் கிழித்தவனே
கூற்றமென ஒரு குதிரையைப்போல் வந்த
கேசியை மாய்த்திட்ட கேசவனே
ஜெய ஜெயஹே குருவாயு புரீஸ்வர
தேவகி நந்தன கிருஷ்ண ஹரே.

5. காளியன் பாம்பு வசிக்கும் தடாகத்தில்
கடும்விஷ ஜூவாலையும் வீசிடவே
கார்முகில் வண்ணனே பாரளந்த திருப்
பாதம் அவன்முடி மீது வைத்தே
தாளமுடன் நடமாடி அவன்தலை
வணங்கிடச் செய்த தயாநிதியே
ஜெய ஜெயஹே குருவாயு புரீஸ்வர
தேவகி நந்தன கிருஷ்ண ஹரே.

6. தேவர் தலைவனை வணங்கிடும் பூஜையைத்
தேவை இல்லை என நீக்கிவைத்தே
கோவர்தனம் என்னும் மலைதனைப் பூஜிக்க
கோபத்தினால் தேவேந்திரனும்
ஏவிய கடும்மழை தடுத்திட மலைதனைத்
குடையென விரல்தனில் பிடித்தவனே
ஜெய ஜெயஹே குருவாயு புரீஸ்வர
தேவகி நந்தன கிருஷ்ண ஹரே.

7. பவக்கடல் பந்த மறுத்திடும் பாவன
மூர்த்தியே உன்னை உரல்தனிலே
பாவை யசோதையும் பந்தனம் செய்திடப்
பார்த்திருந்தாய் தாமோதரனே
தவழ்ந்து வந்தே மனிக்ரீவனுடன்
நளகூபரன் சாபத்தைத் தீர்த்தவனே
ஜெய ஜெயஹே குருவாயு புரீஸ்வர
தேவகி நந்தன கிருஷ்ண ஹரே.

8. வெண்ணெயுடன் தயிர் பாற்குடங்கள் பல
வேண்டிய மட்டும் நிறைந்திருக்க
மண்ணை அள்ளி உந்தன் சின்னஞ்சிறு குமிழ்
வாயினில் போட்டதன் மாயமென்ன
அன்னை யசோதைமுன் வாய்திறந்தே பல
அண்டங்கள் காட்டிய விந்தை என்ன
ஜெய ஜெயஹே குருவாயு புரீஸ்வர
தேவகி நந்தன கிருஷ்ண ஹரே.

9. தேவரும் முனிவரும் தேடித் தவம்செய்யும்
திருவடி புழுதியில் படிந்திடவே
ஆவினம் மேய்த்திட நடந்த ப்ருந்தாவனம்
முளைத்த புல்லாகவும் ஆகிலனே
பாவி நான் ஆயர்கள் பாடியில் அன்று
பிறந்திடும் பாக்கியமும் செய்திலனே
ஜெய ஜெயஹே குருவாயு புரீஸ்வர
தேவகி நந்தன கிருஷ்ண ஹரே.

10. யானைகள் அரசன் கஜேந்திரன் காலினை
அன்றொரு முதலை இழுத்திடவே
ஆதிமுதல்வனே அபயமென்று அந்த
யானையும் அலறி அழைத்திடவே
தீன சரண்யனே முதலையைக் கொன்று அந்த
யானையின் உயிர்தனைக் காத்தவனே
ஜெய ஜெயஹே குருவாயு புரீஸ்வர
தேவகி நந்தன கிருஷ்ண ஹரே.

11. கோவிந்த கோவிந்த கோகுல நந்தன
கோவிந்த கோவிந்த நாமஹரே
கோடிஜென்மாந்திர பாபங்கள் தீர்த்திட
கோயில் கொண்டாய் கோபால ஹரே
பாவிகளும் உந்தன் நாமம் உரைத்திடில்
பரமபதம் தரும் ராமஹரே
ஜெய ஜெயஹே குருவாயு புரீஸ்வர
தேவகி நந்தன கிருஷ்ண ஹரே.

61. பச்சைமா மலைபோல் மேனி....

பச்சைமா மலைபோல் மேனிபவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா ! அமரர் ஏறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே (பாடல் 2)

இனிதிரைத் திவலை மோத எறியும்தண் பரவை மீதே
தனிகிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனியரும் புதிரு மாலோ என்செய்கேன் பாவி யேனே  (பாடல் 18)

பாயுநீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும் மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ்ப் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககலலாமோ.  (பாடல் 20)

கங்கையில் புனிதம் ஆய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்
எங்கள்மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்துவாழ்கேன் ஏழையேன் ஏழை யேனே.  (பாடல் 23)

ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவர் இல்லை
பாரில்நின் பாதமூலம் பற்றினேன் பரம மூர்த்தி
காரெளி வண்ணனே (என்) கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா ! அரங்கமா நகரு ளானே.  (பாடல் 29)

மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன்வாளா
புனத்துழாய் மாலையானே பொன்னிசூழ் திருவ ரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே.  (பாடல் 30)

பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள்
இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்களாகில்
தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்றுநின்னோடும் நிக்க
வழிபட அருளி னாய்போல் மதிள்திரு அரங்கத் தானே.  (பாடல் 42)

62. ஸ்ரீ கோவிந்த நாளாவளி

ஸ்ரீநிவாஸ கோவிந்த
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்த
பக்தவத்ஸல கோவிந்த
பாகவதப்பிரிய கோவிந்த
நித்யநிர்மல கோவிந்த
நீலமேகச்யாமள கோவிந்த
புராணபுருஷ கோவிந்த
புண்டரீகாக்ஷ கோவிந்த
நந்தமுகுந்த கோவிந்த
நவநீத சோர கோவிந்த
கோவிந்த ஹரி கோவிந்த
கோகுலநந்தன கோவிந்த
பசுபாலகிருஷ்ண கோவிந்த
பாப விமோசன கோவிந்த
துஷ்ட ஸம்ஹாரக கோவிந்த
துரித நிவாரண கோவிந்த
சிஷ்ட பரிபாலக கோவிந்த
கஷ்டநிர்த்தூத கோவிந்த
பாலகபோஷக கோவிந்த
பாஹி மாம் ரக்ஷக கோவிந்த
கோபிஜனலோல கோவிந்த
கோவர்த்தனோத்தர  கோவிந்த
ஸீதாரக்ஷக கோவிந்த
தசரதநந்தன கோவிந்த
தசமுக மர்த்தன
பக்ஷிவாஹன கோவிந்த
பாண்டவப்ரிய கோவிந்த
மத்ஸ்ய கூர்ம கோவிந்த
வராஹ நரஸிம்ஹ கோவிந்த
வாமந பார்கவ கோவிந்த
ராம கிருஷ்ண கோவிந்த
பௌத்த கல்கி கோவிந்த
வேணுகோபால கோவிந்த
வேங்கட விட்டல கோவிந்த
கோவிந்தஹரி கோவிந்த
கோகுலநந்தன கோவிந்த
தரித்ரஜனபரீக்ஷக கோவிந்த
தர்ம ஸம்பாதித கோவிந்த
அனாதரக்ஷக கோவிந்த
ஆபத்பாந்தவ கோவிந்த
சரணாகதவத்ஸல கோவிந்த
கருணா ஸமுத்திர கோவிந்த
கமலதளாக்ஷ கோவிந்த
காமிதபலதாயக கோவிந்த
பாபநாசக கோவிந்த
சேஷசாயி கோவிந்த
ஸ்ரீ முத்ராங்கித கோவிந்த
மஹோத்ஸவதேவ கோவிந்த
கோவிந்தஹரி கோவிந்த
கோகுலநந்தன கோவிந்த
ஸ்ரீநிவாஸ கோவிந்த
ஸ்ரீ வேங்கடேச கோவிந்த
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே - கலிஸந்தரண உபநிஷத்

63. ஆயர்பாடி மாளிகையில்...

ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகிறான் தாலேலோ
அவன் - வாய்நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தை காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகிறான் தாலேலோ
ஓய்வெடுத்து தூங்குகிறான் தாலேலோ  (ஆயர்)

பின்னலிட்ட கோபியரின்
கன்னத்திலே கன்னம் வைத்து
மன்னனவன் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவன் உறங்க
மயக்கத்திலே இவள் உறங்க
மண்டலமே உறங்கு தம்மா தாலேலோ
மண்டலமே உறங்கு தம்மா தாலேலோ (ஆயர்)

நாதபழம் மீதில் அவன்
நர்த்தனங்கள் ஆடியபின்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
அவன் மோகநிலை கூட ஒரு
யோக நிலை போலிருக்கும்
யாவரை தூங்கவிட்டார் தாலேலோ
யாவரை தூங்கவிட்டார் தாலேலோ (ஆயர்)

கண்ணன் அவன் தூங்கி விட்டால்
காசியிலே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகை பார்ப்பதற்கும்
போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்)

64. ஹரிகுண மாலை...

நாராயணா ஸ்ரீமத் நாராயணா
பத்ரி நாராயணா ஹரி நாராயணா
நாராயணா ஸத்ய நாராயணா
சூர்ய நாராயணா லக்ஷ்மி நாராயணா

நொந்துடலும் கிழமாகித் தளர்ந்தபின்
நோயில் நடுங்கிடும் போது - ஜீவ
நாடிகள் நைந்திடும் போது - மனம்
எண்ணிடுமோ தெரியாது - இன்று
கசிந்துன்னைக் கூவுகின்றேன் அருள்
செய்திடுவாய் ஹரி நாராயணா

நீடு கபம் கோழை ஈழை நெருக்கி - என்
நெஞ்சை அடைத்திடும் போது
நாவும் குழறியபோது - மனம்உன்னை
எண்ணிடுமோ தெரியாது - நான்
அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை
ஆண்டருள்வாய் ஹரி நாராயணா

ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும்
ஆடி அடங்கிடும் போது - எந்தன்
ஆவி பிரிந்திடும்போது - மனம்
எண்ணிடுமோ தெரியாது - இன்று
நம்பி உனைத் தொழுதே அழைத்தேன்
ஜகன் நாயகனே ஹரி நாராயணா.

உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றமும்
ஒவென்று நின்றழும்போது - உயிர்
ஓசைகள் ஓய்ந்திடும்போது - மனம்
எண்ணிடுமோ தெரியாது - இன்று
பற்றி உனைப் பணிந்தே அழைத்தேன் - ஆபத்
பாந்தவனே ஹரி நாராயணா
என்பொருள் என்மனை என்றதெல்லாம் இனி
இல்லை என்றாகிடும் போது - மனம்
எண்ணிடுமோ தெரியாது - நீ
அன்று வரும் பொருட்டின்றழைத்தேன் அருள்
அச்சுதனே ஹரி நாராயணா
வந்தமெதூர் வளைத்து பிரித்தெனை
வாவென்றிழுத்திடும் போது - மனம்
எண்ணிடுமோ தெரியாது - அந்த
அந்தியம் நீ வர இன்றழைத்தேன்
ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா

65. நாராயண நாராயண....

1. நாராயண நாராயண நாராயண ஓம்
நாராயண நாராயண நாராயண ஓம்

2. நாவினிக்க மனமினிக்க நாமினிக்க நாடினிக்க
நாளெல்லாம் மறந்திருந்து பாடுவோம்
நாத யோக தேகமாகி நாத நாத நாத வென்று
நாகராஜனைப் பணிந்து பாடுவோம்

3. பரிணமித்த பிரணவத்தின் ஒலி எழுந்து பயபழிக்கும்
பாஞ்ச ஜன்னியத்தை இன்று பாடுவோம்
தபன ஆயிரங்கஅ ஏக ரேகையான கரஸகஸ்ர
சக்ரமூர்த்தியைப் புகழ்ந்து பாடுவோம்.

4. கனக கோடி சிகரமேரு குமழெனக் கனத்து நின்ற
கதையினைப் பணிந்து நின்றுபாடுவோம்
கரஸரோஜம் மலருகின்றஜலஸரோஸமாண்புசார்ங்க
கட்க சக்தியும் தெரிந்து பாடுவோம்.

5. கடும் விஷம் தணிக்கும் கண்கள் காண்பார்க்கைகுவியும்
கருட மூர்த்தியைப் பணிந்து பாடுவோம்
ஜகமெல்லாம் அடக்கிவைக்கும் உதரஉந்திமுளரிபூத்த
சதுர்முகன் பதம் பணிந்து பாடுவோம்.

6. தேவர்போற்றமுனிவர்போற்றயோகமாயையிற்கலந்த
தேவ தேவனைப் பணிந்து பாடுவோம்
திருமடத்தை நிலமடந்தை இருமருங்கு மகிழ வந்த
ஸ்ரீநிவாசனைப் பணிந்து பாடுவோம்.

66. குழந்தையாக கண்ணன்...

1. குழந்தையாக கண்ணன் மீண்டும் பிறக்க மாட்டானா
நந்தகோபன் பிள்ளையாக பிறக்க மாட்டானா
சின்ன சின்ன வாயதனை திறக்க மாட்டானா
புல்லாங்குழலை எடுத்து மீண்டும் இசைக்க மாட்டானா

2. காட்டினிலே மாடுகன்னு மேய்க்க மாட்டனா
என்னை அவன் தோழனாக ஏற்க மாட்டானா
கோபியரின் உள்ளத்தையே மயக்க மாட்டானா
அவன் நவநீத கண்ணனாக இருக்க மாட்டானா

3. பாண்டவர்க்கு தூதனாக செல்ல மாட்டானா
பார்த்தனுக்கு சாரதியாய் இருக்க மாட்டானா
அந்த கீதையைத்தான் மறுபடியும் இசைக்க மாட்டானா

4. அன்புடனே எங்களிடம் பேசமாட்டானா
அரவணைத்து எங்களையும் ஆளமாட்டானா
ராதைக்கேற்ற கண்ணனாக இருக்க மாட்டானா
காட்சிதந்து, எங்களையும் காக்கமாட்டானா

67. ஆதிமூலமே குழந்தாய்...

ஆதிமூலமே குழந்தாய் வாடா வாடா
எங்கள் அனைவருக்கும் துணையிருப்பாய் நீயே வாடா
அகண்டநாம தத்துவ நீஜ பாத நலினாவாடா
மங்கையை மார்பிட மேந்தும் மாதவனே வாடா
யாதவர் உள்ளத்தில் தங்கும் மகிமையே வாடா

பூதகி சனத்தை உண்ட புண்ணியனே வாடா
யசோதை அணைத்த கயிற்றால் கட்டுண்ட பாலனே வாடா
அண்ட முண்ட அமல ரூபா அனாதியே வாடா
பலபோதர்க்கு அருள்புரிகின்ற போகியே வாடா
எங்கள் அனைவருக்கும் துணையிருப்பாய் நீயே வாடா

68. கமலா வல்லப...

கமலா வல்லப கோவிந்தமாம்
பாகிகல்யாண கிருஷ்ணா கோவிந்தா
கணகாம்பர தர  கோவிந்தமாம்
பாகி கல்யாண கிருஷ்ணா  கோவிந்தா
ராதா லோலா கோவிந்தமாம்
பாகி கல்யாண கிருஷ்ணா  கோவிந்தா
ருக்மணி வல்லப  கோவிந்தமாம்
பாகி கல்யாண கிருஷ்ணா கோவிந்தா
பக்த வத்சல கோவிந்தமாம்
பாகி கல்யாண கிருஷ்ணா கோவிந்தா

69. கண்ணங் கருத்த...(கிளி - மெட்டு)

1. கண்ணங் கருத்த கண்ணன்
கட்டழகு மேனி கண்ணன்
அன்னநடை போட்டானடி
அவன் அன்னநடை போட்டானடி

2. பாம்பில் படுத்த கண்ணன்
பாசாங்கு செய்யும் கண்ணன்
பால்தயிர் குடிக்கும் கண்ணன்
அவன் குறும்புகார பாலகண்ணனடி

3. மாடுகன்று மேய்க்கும் கண்ணன்
மலையோரம் நின்ற கண்ணன்
மறைந்து மறைந்து போனானடி
அவன் மாயமாய் போனானடி

4. புல்லாங்குழல் ஊதும் கண்ணன்
பூமியிலே நின்ற கண்ணன்
புடவை திருடி போனானடி
அவன் புன்னை மரம் ஏறினானடி

5. கனிவுடனே கண்ணா என்றால்
கருணையுடன் காட்சி தந்திடுவான்
வஞ்சமில்லா உள்ளமடி அவன் உள்ளம்
அவன் என் நெஞ்சமெல்லாம் நிறைந்தானடி.

70. பவனி வருகிறார் கண்ணன்...

1. பவனி வருகிறார் கண்ணன் பவனி வருகிறார்
அவர் பஜனைகேட்டு மகிழ்வுடனே பவனி வருகிறார்
ஆனந்தமாய் ஆடிப்பாடி பவனி வருகிறார்
அவன் அடியார்கள் இதயந்தன்னில் பவனி வருகிறார்

2. துளசி மாலை அணிந்துகொண்டு பவனி வருகிறார்
அவர் பக்தர்களின் துயர் துடைக்க பவனி வருகிறார்
கஸ்தூரி திலகம் அணிந்து பவனி வருகிறார்
அவர் கலியுகத்தின் தெய்வமாக பவனி வருகிறார்

3. காளிங்கனின் சர்பத்தின்மேல் பவனி வருகிறார்
அவர்கருணை என்னும் கண்திறந்து பவனி வருகிறார்
கீதையின் நாயகனாய் பவனி வருகிறார்
கிருபை செய்ய மகிழ்வுடனே பவனி வருகிறார்

4. திருமலை தெய்வமாக பவனி வருகிறார்
அவர் தர்மத்தை காத்திடவே பவனி வருகிறார்
பக்தர்களின் நாவினிலே பவனி வருகிறார்
அவர் மங்களமாய் வாழ்வளிக்க பவனி வருகிறார்

71. நீலவண்ண கண்ணா...

நீலவண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா  (நீல)
வானம்பாடி கானம் கேட்டு
வசந்த்கால தென்றல் காற்றில்
தேன்மலர்கள் சிரிக்கும் காட்டில்
மாடுகன்று மேய்த்தவன் நீயே (நீல)
தங்கநிறம் உந்தன் அங்கம்
அன்புமுகம் உந்தன் பிம்பம்
கண்ணா உன்னைக் கண்டால்போதும்
கவலை எல்லாம் மறந்தேபோகும் (நீல)

72. தீராத விளையாட்டு...

தீராத விளையாட்டு பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை -
தீராத விளையாட்டுப் பிள்ளை

தின்னப் பழங்கொண்டு தருவான் - கண்ணன்
தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னைய்யன் என்றால் - அதனை
எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான் (தீராத)

அழகுள்ள மலர்க்கொண்டு வந்தே - கண்ணன்
அழகுள்ள மலர்க்கொண்டு வந்தே
என்னை அழ அழச்செய்தபின் - கண்ணன்
மூடிக்கொள் குழலிலே சூட்டுவேன் என்பான்
என்னை குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான் (தீராத)

பின்னலைப் பின்னின்றிழுப்பான் - கண்ணன்
பின்னலைப் பின்னின்றிழுப்பான்
தலைபின்னே திரும்பும்முன்னே சென்று மறைவான்
வண்ணப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்தி குழைப்பான் (தீராத)

புல்லாங்குழல் கொண்டு வருவான் - கண்ணன்
புல்லாங்குழல் கொண்டு வருவான்
அமுது பொங்கித் ததும்பும் புனர்க் கீதம் படிப்பான்
கள்ளால் மயங்குவதைப் போலே - அதைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம் (தீராத)

அன்னார்ந்திருக்கும் வாய்தனிலே - கண்ணன்
ஆரேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான் (தீராத)

73. பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ  (பிருந்தா)

புல்லாங் குழலிசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லெனத் துள்ளாதா
ராகத்திலே அனுராக மேவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா  (பிருந்தா)

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திடச் செய்யாதோ
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார் தான் அழகால் மயங்காதவரோ  (பிருந்தா)

74. ஆனந்தம் பரமானந்தம்...

ஆனந்தம் பரமானந்தம் பாலகிருஷ்ணனின்
லீலையை உணர்ந்த பக்த கோடிக்கே பரமானந்தம் (ஆனந்தம்)

யமுனா கரைதனில் கோபியர் அனைவரும்
கிருஷ்ணனைத் தேடுதல் ஆனந்தம்
யாருக்கும் அரிதெனும் முரளீதரனும்
ராதைக்குக் கிடைப்பது பரமானந்தம்  (ஆனந்தம்)

வேணு கானத்தால் சிசுக்களும் பசுக்களும்
தன்னையே மறந்தது ஆனந்தம்
கிருஷ்ணனின் நினைவால் உலகையே மறந்த
ராதையின் தரிசனம் பரமானந்தம் (ஆனந்தம்)

75. ஹரி ஓம் ஹரி...(சிவா விஷ்ணு பாடல்)

ஹரி ஓம் ஹரி ஓம் நாராயணா
ஹர ஹர ஓம் சதாசிவா
லக்ஷ்மி ரமணா நாராயணா
பார்வதி ரமணா சதாசிவா
வைகுண்ட வாசா நாராயணா
கைலாச வாசா சதாசிவா
நாராயணா சதாசிவா
கருட வாகனா நாராயணா
ரிஷப வாகனா சதாசிவா
அலங்கார ப்ரியனே நாராயணா
அபிஷேக ப்ரியனே சதாசிவா (நாராயணா)

நீலமேக சியாமளா நாராயணா
ஸ்ரீ நீலகண்டனே சதாசிவா
அம்புஜ நயனா நாராயணா
சம்போ சங்கர சதாசிவா
குருவாயூரப்பனே நாராயணா
வைக்கத்து அப்பனே சதாசிவா
நாராயணா சதாசிவா.

76. கண்ணன் மங்களப் பாட்டு

ஸ்ரீ ராமச் சந்திரனுக்கு ஜெய மங்களம்
நல்ல திவ்ய முகச் சந்திரனுக்கு
ஜெய மங்களம் நித்ய சுப மங்களம்

தசரத பாலனுக்கு சக்ரவர்த்தி ராமனுக்கு
தசாவதாரனுக்கு சங்கு சக்ர பூஷனுக்கு
ஜெய மங்களம் நித்ய சுப மங்களம்

மாராபிராமனுக்கு மண்ணு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு நவிகுல ஸோமனுக்கு
ஜெய மங்களம் நித்ய சுப மங்களம்

கொண்டல் மணிவண்ணனுக்கு
கோகுலத்து மன்னனுக்கு
கோதை மகிழ ரெங்கனுக்கு
குழலூதும் கண்ணனுக்கு
ஜெய மங்களம் நித்ய சுப மங்களம்

ஸ்ரீராமர் பாடல்கள்

1. ராம ஜெயம்...

ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ராகவ தியானமே லோக மயம் (2)
ராம சீதாபதி ராகவ மந்திரம்
ரம்ய பகுணகண சேவ நிரந்தரம்
ராம தயாபர பவுன பவித்ரம்
ரவி குல தசரத சுரமுர ஹர ஜெய்  (ஸ்ரீராம ஜெயம்)

2. என்பாடல் இதுவைய்யா ராமா...

என்பாடல் இதுவைய்யா ராமா - இதில்
எதுகையும் மோனையும் எதிர்பார்க்கலாமா (என் பாடல்)

கம்பன் எழுதிய கவிதை ஈதல்ல
ஸ்ரீ தியாகராஜரின் கீர்த்தனையல்ல
இயற்கை யாவும் என்னுள் இயங்கி
உயிராய்த் தோன்றி உணர்வாய் பிறந்த (என் பாடல்)

காரண காரியம் அறியேன் அய்யா - நல்ல
கவிதைகள் கருத்துக்கள் புரியாதைய்யா
ஸ்ருதி லயமேளங்கள் அறியேன் அய்யா - உன்
சுந்தரரூபத்தின் நாமத்தில் பிறந்த  (என் பாடல்)

கண்கள்மூடி காணும் காட்சிகள்
ஒலி இல்லாமல் ஒளிரும் ஓசைகள்
தவழும் மழலை குழந்தையைப் போலே
தாய் உன் மடியில் தளிராய் கிடக்கும்  (என் பாடல்)

3. ராமன் எத்தனை ராமனடி...

ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன் (ரா)

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாணராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்தமன்னன் ராஜாராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன்
தாயே என் தெய்வம் என்ற கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெயராமன்
வம்சத்திற்கு ஒருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்தராமன்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ராமனின் கைகளில் நான் அபயம்
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராமன் எத்தனை ராமனடி

4. ராமன் பிறந்தது...

1. ராமன் பிறந்தது நவமியிலே
நட்ட நடுபகல் வேளையிலே
கண்ணன் பிறந்தது அஷ்டமியிலே
காரிருள் நடுநிசி வேளையிலே

ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்

2. ராமன் பிறந்தது அரண்மனையில்
நன்றாய் பார்த்தனர் மக்களெல்லாம்
கண்ணன் பிறந்தது கடுஞ்சிறையில்
கண்டவர் தாயும் தந்தையுமே  (ஸ்ரீராம்)

3. சூரிய குலத்தில் ராமனுமே
தோன்றினன் பெருமை தந்திடவே
சந்திர குலத்தில் கண்ணனுமே
வளர்ந்தனன் பெருமை சேர்த்திடவே (ஸ்ரீராம்)

4. மனிதர் போல இவ்வுலகில்
வாழ்ந்து காட்டியவன் ராமனுமே
மாயா ஜாலம் பல புரிந்து
வாழ்ந்தவன் நீல கண்ணனுமே (ஸ்ரீராம்)

5. ராமன் பெற்ற குணங்களெல்லாம்
நாமும் பெற்று மகிழ்ந்திடவே
கண்ணன் கீதையில் கூறியதைக்
கருத்தினில் கொண்டு உயர்ந்திடுவோம் (ஸ்ரீராம்)

6. வாழ்ந்து காட்டிய ராமனையும்
வழியை காட்டிய கண்ணனையும்
வாழ்வில் என்றும் மறவோமே
மறவோம் மறவோம் மறவோமே

ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்

5. ஸ்ரீ ராமஜெயம் ஸ்தோத்திரம்
(ஒவ்வொரு அடி முடிவிலும் ராமஜெயம் என்று கூட்டிச் செல்லவும்)

அன்பர்கள் இடரை அகற்றிடவேண்டி அயோத்தியில் வந்தது
அசுரரை அழித்து அறந்தழைத்தோங்க அமைதி அளித்தது
ஆதவன் மரபில் அழகிய உருக்கொண்டு அவதரித்தது
ஆரணம் கமழும் வேதமாமுனிவன் அருளைப் பெற்றது
இருள் வடிவான அலகையைக் கொன்று மருள் ஒழித்தது
இருடியின் மகத்தை இலக்குவனோடு இமைபோல் காத்தது
ஈசனை யொத்த கௌதமன் இல்லாள் இடரை ஒழித்தது
ஈசனோடு இந்திரன் இமையவர் எவரும் ஏத்த நின்றது
உண்மையின் வடிவாம் பீஜாக்ஷரத்தை ஓர்வாய் என்றது
உறுதியைக் கொடுத்தது மறதியைக் கெடுத்து உலகத்தைக் காப்பது
ஊனமில் உடலும் உயரியபொருளும் உடனே தருவது
ஊமைபோன்ற உயிர்களும் பேசும் உயர்வை அளிப்பது
என்றும் நமக்கு இன்பம் அளித்து இங்கே இருப்பது
எமக்கு இது சாது பிறர்க்கு இது தீது என்பது அற்றது
ஏதுமற்று ஏங்கி நிற்போர் தமக்கு ஏற்றம் தருவது
ஏன உருகொண்ட வனியை ஏந்தி இருக்கையில் வைத்தது
ஐம்பூதங்களை அடிமையாய்க் கொண்டஅனுமன் உரைத்தது
ஐம்முகத்தவனும் பங்கயத்தவனும் அமரரும் உரைப்பது
ஒருவழி நில்லாது அலையுறு  மனத்தை ஒரு வழிப்படுத்தும்
ஒருவனும் யான் எனநினை என்று உண்மை உணர்த்தும்
ஓங்காரப் பொருளே உண்மையின் வடிவாம் ஓர்வாய் என்பது
ஓவியம்தனிலும் காவியம்தனிலும் ஊக்கமளிப்பது
ஒளவையைப்போன்று அருணகிரிக்கும் அறத்தை உரைப்பது
ஒளடதம்போன்று படிப்போர்தமக்கு அனைத்தும் அளிப்பது

6. ராமா ராமா...

ராமா ராமா ராமா வென்று நாமம் சொல்லி
பார்க்கணும் நாமம் சொல்லி பார்க்கணும்
நாமம் சொல்லித் தெரியாவிட்டால் நல்லவரோடுசேரணும்
எண்ணி எண்ணிப் பார்க்கணும் ஏகாந்தமாய் இருக்கணும்
என்றுமவன் சொரூபத்தில் ஈடுபட்டே இருக்கணும்
மூலப்பொருளே முதல்வா என்று குட்டிக்கொண்டு
குட்டிக்கொண்டு பாடணும்  (பாடணும்)
கோபுர வாசல் தரிசனம் தந்த குருவை என்றும் போற்றணும்
அம்மா அம்மா அம்மா என்று அன்பால் உருகி பாடணும்
அன்பை நாடி பாடணும்
அன்பை நாடத் தெரியாவிட்டால் அடியார்களோடு சேரணும்
அப்பா அப்பா அப்பா என்று அருளை வேண்டி பாடணும்
அருளை வேண்டி பாடணும்
அருளை நாடத் தெரியாவிட்டால் குருவை எண்ணி பாடணும்
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று பஜனை பண்ணி பார்க்கணும்
பஜனை எண்ணி பார்க்கணும்
பஜனை பண்ணத் தெரியாவிட்டால் பக்தர்களோடு சேரணும்
விட்டல் விட்டல் விட்டல் என்று கையைத் தட்டி பாடணும்
கையைத் தட்டி பாடணும்
கையைத் தட்டத் தெரியாவிட்டால் கவனம் வைத்து
கந்தா முருகா குகனே என்று  (பாடணும்)
நெஞ்சம் உருகப் பாடணும்
நெஞ்சம் உருகப் பாடணும்
நெஞ்சம் உருகப்பாடி ஆடி செந்தில் முருகனை சேரணும்
முருகா முருகா முருகா என்று முழக்கமிட்டு பாடணும்
முழக்கமிட்டு பாடணும்
முழக்கமிடத் தெரியாவிட்டால் முன்னால் வந்து கேட்கணும்
கருணை நிறைந்த கடலே எங்கள் கவலைகள் யாவும்
எங்கள் கவலைகள் யாவும் தீரணும் (தீரணும்)
கவலைகள் தீர வழி தெரியாமல் காலத்தை வீணாய் போக்கினாம்

7. ஸ்ரீராம நவமி...

ஸ்ரீராம நவமி நாளை கொண்டாடுங்கள்
அவன் திருநாமம் கோடி எழுதி
அருள் தேடுங்கள் - கடவுள்
மனிதனாகி மனிதனே கடவுளாகி
கடமைகள் ஆற்றுவதை
கண்ணெதிரே காட்ட வந்த  (ஸ்ரீராம)
பாசத்திலே கௌசல்யா
தசரதர்க்கு கண்ணவன்
பரதன், லட்சுமணன், சத்ருக்னன்
மூவருக்கும் முன்னவன்
ஜனகனின் புதல்வியான
ஜானகிக்கு மன்னவன்
ஜெபலட்சு மைந்தனுக்கு தவநிலையைச் சொன்னவன் (ஸ்ரீராம)

கல்லை பெண்ணாக்கிய
கால்வண்ணம் அவனது - சிவ
வில்லை இரண்டாக்கிய கைவண்ணம் அவனது
அண்ணலும் பார்த்தான்
அவளும் பார்த்தனள் - அப்பார்வை
பொருள் வண்ணம் யார் என்ன சொல்வது  (ஸ்ரீராம)

மானாக வந்தவனின் மமதையை தூளாக்கினான்
மாருதியே தெய்வமாக மனதினிலே போற்றினான்
சுக்ரீவனின் சொல்லை தன் வில்லால் நிறைவேற்றினான்
வீரன் பாராயண ராமாயணத்தை நாட்டினான் (ஸ்ரீராம)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar