SS சாயி கவசம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சாயி கவசம்
சாயி கவசம்
சாயி கவசம்

சற்குரு துணை

ஓம் சாயி நமோ நம!
ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெயஜெய சாயி நமோ நம!
சற்குரு சாயி நமோ நம!
ஆதி குருவாய் வந்தவரே!
அடியவர் துயரம் களைபவரே!
சோதி வடிவம் ஆனவரே!
சுந்தரச் சுடரே சாயீஸ்வரா! (ஓம்)

அன்பே சிவமாய் ஆனவரே!
அன்னை வடிவே அருள்நிதியே!
இன்ப(ம்) துன்பம் கடந்தவரே!
எங்கள் குருவே சாயீஸ்வரா! (ஓம்)

இருளாம் துயரை தீர்ப்பவரே!
அருளும் ஒளியைத் தருபவரே!
மருளும் மனதை மீட்பவரே!
மகிமை மிக்க சாயீஸ்வரா! (ஓம்
ஆதி அந்தம் அற்றவரே!
அடியார் போற்றும் அற்புதமே!
வேதவடிவாய் ஆனவரே!
வெற்றி அருள்வீர் சாயீஸ்வரா! (ஓம்)

இருவினைத் துயரப் பிணிநீக்கி,
மும்மலத் தடைகள் தனைப்போக்கி,
நானிலம் போற்ற எமக்கருளி
நன்மைகள் தருவீர் சாயீஸ்வரா! (ஓம்)

ஐந்தாம் சூட்சுமம் தனைவென்று
ஆறும்ஆறு நிலை கடந்து
எழுகடல் பிறவிக் கரையேற
எமக்கு அருள்வீர் சாயீஸ்வரா! (ஓம்)

எண்குணம் கடந்த பூரணமே!
எங்களை ஆளும் நாயகமே!
ஒன்பது வாசல் ஆலயத்துள்
ஒளிரும் ஜோதி சாயீஸ்வரா! (ஓம்)

தூலம் சூட்சுமம் இவைகடந்து
துவாரக ஒளியாய் வாழ்பவரே!
காலம் அளவு இவைகடந்த
கருணைக் கடலே சாயீஸ்வரா! (ஓம்)

சமயம் கடந்த தத்துவமே!
இமயம் வாழும் அற்புதமே!
சமயம் இதுஎமைக் காப்பீரே
சத்திய வடிவே சாயீஸ்வரா! (ஓம்)

சாயி கவசம்

சீரடி வாழும் சாயி நாதா!
சேவடி பணிந்தோர்க் கருளும் ஈசா!
துவாரகமாயி ஆன சுடரே!
துனியில் விளையும் தூய உதியே!
ஆலம் அமர்ந்த தெட்சிண குருவாய்
வேலம் அமர்ந்த வித்தக வடிவே!
சாவடி என்ற தங்கு மிடத்தில்
சேவடி சாற்றிச் சிறப்புச் செய்தாய்!
பாவடி புனைந்த பக்தர்க் கெல்லாம்
பரம பதத்தைப் பரிவுடன் தந்தாய்!     

அணையா தீபம் ஆன்ம சொரூபம்
அருளை வழங்கும் லெண்டி தீபம்!
பூட்டி மந்திர் புண்ணிய வாசம்
புத்தொளி அருளும் சத்திய நேசம்!
தாணு மாலயன் சேர்ந்த கோலம்
தத்தர் என்னும் சித்தர் வடிவம்!
குருவே அன்னை! குருவே தந்தை!
குருவே தெய்வம்! குருவே யாவும்!
குருவே ஒளியாம்! குருவே வழியாம்!
குருவைப் பணிவோம்! அருளைப் பெறுவோம்!

சாயி பாதம் என்றும் பணியும்
சேயாம் என்னைச் சாயி காக்க!
தூலம் சூட்சுமம் இருநிலை காக்க!
வாழும் பிராண வாசியைக் காக்க!
கோசம் ஐந்தும் சாயி காக்க!
கொற்றவன் எந்தன் உயிரைக் காக்க!
காரண காரிய இயல்பைக் காக்க!
பூரண ஞானப் புலன்கள் காக்க!
நாடிகள் மூன்றையும் நாயகன் காக்க!
ஊடிடும் சக்கரம் யாவையும் காக்க!

உச்சியில் என்றும் உன்னடி இருக்க!
மெச்சும் மேனியை மெய்யன் காக்க!
எ<லும்புத் தசைகளை இயல்புடன் காக்க!
இயங்கும் நரம்பு மண்டலம் காக்க!
வாதம் பித்தமம் சிலேட்டுமம் என்னும்
வகைகள் மூன்றையும் வசமாய்க் காக்க!
எந்த நோயும் வாரா தென்னை
எந்தன் சாயி என்றும் காக்க!
உச்சி முதலாய் பாதம் வரையில்
மெச்சி என்னை பாபா காக்க!                                                                          

முன்னர் பின்னர் வினைகள் நீக்கி
என்னை சாயி என்றும் காக்க!
இல்லற வாழ்வில் எல்லா நலமும்
இறைவா தந்து எம்மைக் காக்க!
தேடும் மேன்மை யாவும் தந்து
தீர்க்க முடனே சாயி காக்க!
நாடும் பிள்ளைச் செல்வம் முதலாய்
நலங்கள் யாவும் தந்து காக்க!
எண்ணிரு செல்வம், இசைந்த வாழ்வு,
புண்ணிய நலங்கள், பொலிவுடன் அருள்க!

தந்திரம், மந்திரம், தம்பனம், மாரணம்
சிந்தை மயக்கும் மோகனம், வசீகரம்,
துன்பம் அளிக்கும் ஆரணம், கருடணம்,
வம்பை வளர்க்கும் சாடனம், பேதனம்,
எந்த வடிவில் எவ்வா றாயினும்,
எதுவும் என்னை அணுகா திருக்க,
உந்தன் நாமம் உருகியே சொல்ல
வந்த வினையை வாட்டியே ஒழிப்பாய்!
துட்ட தேவதை, தொடரும் பிசாசு,
கெட்ட மிருகம், கெடுக்கும் உறவு,

இட்ட ஏவல், எமபதை யாவையும்,
சுட்டு எரித்து என்னை காப்பாய்!
அஸ்திரம் சஸ்த்திரம் எதுவே ஆயினும்
அடங்கா ஊழிப் பெரும்பகை ஆயினும்
கத்தும் கடலாய்க் கொடுமை சூழினும்
சத்திய சாயி நித்தம் காக்க!
எண்ணும் போதும் இயங்கும் போதும்
உண்ணும் போதும் உறங்கும்போதும்
பண்ணும் செயல்கள் யாவிலு< மிருந்து
பலமுடன் பாபா பாங்குடன் காக்க!

சுழலும் கோள்கள் செயலால் என்னைச்
சூழும் துயரம் நீக்கி அருள்க!
பழகும் காலம் எதுவே ஆயினும்
பரிவுடன் சாயி என்னைக் காக்க!
கசிந்து உருகிக் கன்னித் தமிழில்
கடவுள் மீது கவிகள் பாட
இசைந்து சாயி தமிழாம் அமுதை
இயல்பாய் எனக்கு என்றும் அருள்க!
பிறந்த கடனை முழுமை செய்யச்
சிறந்த குருஉன் பாதம் பணிந்தேன்!

நிறைந்த வாழ்வு யாது ஆயின்
நிறைவு செய்யும் கடமை ஆகும்!
செய்ய வேண்டிய கடமை யாவும்
செம்மை யாகச் செய்ய அருள்வீர்!
மங்கல நலன்கள் யாவும் தந்து
மனையறம் விளங்க மாயி அருள்வீர்!
உங்கள் அருளால் கவசம் பாடி
உங்கள் அருளை யாசிக் கின்றேன்!
உற்ற வழிகள் யாவும் அருளிச்
சத்திய சாயி எம்மைக் காப்பீர்!

பூட்டி மந்திர் வாசா போற்றி!
புண்ணியம் அருளும் நேசா போற்றி!
வாட்டும் துயரம் தீர்ப்பாய் போற்றி!
வளங்கள் நலங்கள் அருள்வாய் போற்றி!
அன்னை தந்தை ஆனாய் போற்றி!
அன்புக் குருவே உன்பதம் போற்றி!
உருகும் பக்தர் உணர்வே போற்றி!
உண்மை ஞான ஒளியே போற்றி!
திருவாம் உன்பதம் போற்றி! போற்றி!
தெய்வ வடிவே போற்றி! போற்றி!

சற்குரு நாதா சரணம்! சரணம்!     
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!

ஸ்ரீ ஸாயிபாபாவின் பதினொரு உபதேச பொன்மொழிகள்

1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கின்றானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகரியத்தை அடைகின்றான்.

2. துவாரகா மாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைகிறார்கள்.

3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.

4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்..

5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.

6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மகிவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.

7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கின்றேன்.

8. நீ என்னை அடைந்தால் நான் உன்னைக் கடாக்ஷிக்கிறேன்.

9. நீ என் பேரில் உன் பளுவைச் சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.

10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.

11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar