SS சிவன் துதி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சிவன் துதி
சிவன் துதி
சிவன் துதி

நமாமி சங்கர பவானி சங்கர
உமாமகேஸ்வர தவ சரணம் (நமாமி)

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்பா
அர்த்தனாரீஸ்வர தவ சரணம் (நமாமி)

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஸ்ரீ சைலேஸ்வரா தவ சரணம்

நந்தி வாஹனா நாக பூஷனா
சந்திர சேகரா ஜடாதரா

சூலாதார ஜோதி ப்ரகாசா
விபூதி சுந்தர விஸ்வேசா (நமாமி)

கால கால காம தஹனா
காசி விஸ்வேசா தவ சரணம் (நமாமி)

பம்பம் பம்பம் பமருக நாதா
டம்டம் டம்டம் டமருக நாதா
பம்பம் டம்பம் பமருக நாதா
ஸ்மசான வாசா தவ சரணம்

கிரிஜா ரமணா தவ சரணம்
ஹரே பசுபதே தவ சரணம் (நமாமி)

சிவபெருமான் பாடல்கள்

1. சரணம் ஈஸ்வரா... (ஹரிவராசனம் மெட்டு)

சரணம் ஈஸ்வரா ஸ்வாமி சரணம் ஈஸ்வரா
சரணம் ஈஸ்வரா ஸ்வாமி சரணம் ஈஸ்வரா

உலகம் படைப்பவர் ஈசன் உயிர்கள் காப்பவர்
உட்பகை அழிப்பவர் ஈசன் உண்மையானவர்

நலங்கள் தருபவர் ஈசன் நமது நாயகர்
நடன சுந்தரர் ஈசன் நாத ரூபமே

கங்கை கொண்டவர் ஈசன் கைலை வாசனே
கருணை மிக்கவர் ஈசன் கவலை தீர்ப்பவர்

மங்கை பாகனே மூன்று கண்ணனே
மதனை அழித்தவர் ஈசன் மௌன மூர்த்தியே  (சா)

நமசிவாயமே ஈசன் நந்தி வாகனர்
நீறணிந்தவர் ஈசன் நீலகண்டரே

அமிர்தலிங்கமே ஈசன் அம்மையப்பனே
அன்பு வடிவமே ஈசன் அம்மையப்பனே  (சரணம்)

2. பவனி வருகிறார் ஈசன்...

பவனி வருகிறார் ஈசன் பவனி வருகிறார்
பக்தர் நம்மை காப்பதற்கு பவனி வருகிறார்
வருகிறார் வருகிறார் வருகிறார்

1. உலகமெல்லாம் காக்கும் ஈசன் பவனி வருகிறார்
லோகமாதா பராசக்தி கூட வருகிறார்
நலங்களெல்லாம் தந்தருள பவனி வருகிறார்
நந்தி வாகனத்திலேறி பவனி வருகிறார்  (பவனி)

2. எங்குமுள்ள ஈசனிங்கு பவனி வருகிறார்
எட்டு திக்கும் புகழ்ந்து பாட பவனி வருகிறார்
தங்க தேரில் அமர்ந்து கொண்டு பவனி வருகிறார்
தம்மை மக்கள் நேரில் காண பவனி வருகிறார் (பவனி)

3. ப்ரம்மா விஷ்ணு தேவரெல்லாம் சூழ்ந்து வருகிறார்
சிவ கணங்கள் பூதமெல்லாம் தொடர்ந்து வருகிறார்
வரம் கொடுத்து வாழ்வருள ஈசர் வருகிறார்
வலிய பகை அழித் தொழிக்க பவனி வருகிறார் (பவனி)

4. மகாலெக்ஷ்மி அருமையாகப் பாடி வருகிறார்
சரஸ்வதியார் வீணையிலே நாதம் தருகிறார்
மகா நந்தி மிருதங்கத்தில் தாளமிடுகிறார்
தேவலோகப் பெண்களெல்லாம் ஆடி வருகிறார் (பவனி)

5. முனிவர் ரிஷி ஞானியர்கள் வேதம் சொல்கிறார்
தேவரெல்லாம் ஈசனுக்கு போற்றி சொல்கிறார்
கனிந்த கருணை உள்ளத்தோடு ஈசன் வருகிறார்
கண்டு வணங்கிப் பயன்பெறவே மக்கள் திரள்கிறார் (பவனி)

6. கண்ணை எட்டும் தூரம் வரைக்கும் பவனி வருகிறார்
காவடியாட்டம் கரகத்தாட்டம் முன்னால் வருகுது
விண்ணை முட்டும் அதிர்வேட்டு வெடிகள் முழங்குது
பம்பை மேளம் தவில் சப்தம் நம்மை அழைக்குது (பவனி)

7. அன்பர்களே தாய்மாரே விரைந்து வாருங்கள்
அம்மையப்பன் பவனி காண ஒன்று கூடுங்கள்
நல்லவை என்றும் நடை பெற வேண்டுங்கள்
நன்றியோடு என்றும் ஈசன் புகழைப்பாடுங்கள் (பவனி)

8. வீதியெங்கும் தோரணங்கள் வளைவுகள்கட்டுங்கள்
வீடுதோறும் கோலமிட்டு விளக்கு ஏற்றுங்கள்
மாதரெல்லாம் ஒன்று சேர்ந்து நாமம் கூறுங்கள்
மகத்தான நன்மைகள் எல்லாம் வந்து சேரும் (பவனி)

9. பக்தரெல்லாம் ஒன்று கூடி பஜனை செய்யுங்கள்
பாபமெல்லாம் தீரும் மனம் உருகிப் பாடுங்கள்
சக்தி உமை நாயகனை சரணம் அடையுங்கள்
சர்வேஸ்வரன் பவனி கண்டு சுகமாய் வாழுங்கள் (பவனி)

3. சந்திர சேகர சம்பு...
(அயிகிரி நந்தினி மெட்டு)

சந்திர சேகர சம்பு மகேஸ்வர சாம்ப சதாசிவ சங்கரனே !
சுந்தர சொக்கனே சச்சிதானந்தனே ஜோதி பிரபாகர சற்குருரே !
பரமனே பார்வதி நேசனே பைரவா தூய பஞ்சாட்சரனே !
ஹர ஹர சங்கர ஜெயஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
கங்கஜடாதர கௌரி மனோஹர கல்யாணி மனமகிழ் கருணாகரா !
குங்கும மேனியே கணங்களின்நாதனே குற்றங்கள் பொறுத்தருள் குணநிதியே !
அம்பிகை பாகனே அம்பலவாணனே அரவினையணிந்தவனே !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
சிதம்பர நாதனே தீனதயாளனே சாமகானப் ரியனே !
மதியணி விமலனே மன்மத தகனனே மௌன முக்கண்ண மகேஸ்வரனே !
இறைவனே முதல்வனே ஏழைபங்காளனே எழில் நீலகண்ட ஏகாம்பரனே !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
தில்லையில் ஆடிடும் வேதம் பாடிடும் தேவர்கள் போற்றிடும் நடராஜா !
எல்லையில் கணங்களும் விஷ்ணுவும் பிரமனும் துதித்திடும் சிவராஜா !
திரிபுர சுந்தரா ராமலிங்கேஸ்வரா தாயுமான பரமேஸ்வரனே !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
அம்மையே அப்பனே அமிர்தகடேஸ்வர ஆனந்த மூர்த்தியே பசுபதியே !
உம்மையே நம்பினேன் உனதடி வணங்கினேன் ஓங்காரநாத உமாபதியே !
அருள்தரும் நந்திமேல் அமர்ந்துடன் வருகவே ஆதியே போற்றி போற்றி
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !

4. ஒன்றானவன் உருவில்...

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நம சிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்கு ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சிந்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனை பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
ஆணாகி பெண்ணாகி நின்றானவன்
அனையொன்று தானென்று சொன்னானவன்
தான்பாதி உமைபாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்
காற்றானவன் - ஒளியானவன்
நீரானவன் - நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையானவன்
ஊற்றாகி நின்றானவன் - அன்பின்
ஒளியாகி நின்றானவன்

5. சித்தமெல்லாம் எனக்கு....

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா - உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே (சித்தமெல்லாம்

அப்பனில்லாமல் ஒரு அம்மை இல்லை - அந்த
அம்மையில்லாமல் இந்த பிள்ளை யில்லை (சித்த

பக்திப் பெருக்கில் எந்தன் ஊர் உருக - அந்த
பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக எந்தன்
சந்ததியே உந்தனுக்கு அடிபணிய இறைவா  (சித்த

கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே ... கோவில்
கதவை திறந்தழைத்த திருவருளே
வெண்ணைநல்லூர் உறையும் அருட்கடலே வந்து
என்னை என்றும் ஆளுகின்ற பரம் பொருளே இறைவா (சித்தமெல்லாம்

6. ஆதிசிவன் தாள் பணிந்து...

ஆதிசிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே - எங்கள்
ஆதிசக்தி நாயகியின் துணை பெறுவோமே
வேதங்கள் தத்துவத்தை நாடிடுவோமே - திரு
வெண்ணீறும் குங்குமமும் சூடிடுவோமே
அஞ்செழுத்தைக் காலமெல்லாம் நெஞ்சில் வைப்போமே - அவன்
அடியார்க்கும் அன்பருக்கும் தொண்டுசெய்வோமே (ஆதி

நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா
நாதத்திற்கே பெருமை தந்த ஜீவனல்லவா
பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தையல்லவா ... அதை
பிள்ளைத் தமிழ் என்று சொன்ன அன்னையல்லவா  (ஆதி

7. தாள் திறவாய் மணிக்கதவே...

தாள் திறவாய் மணிக்கதவே தாள் திறவாய்
ஆலய மணிக்கதவே தாள் திறவாய் ... மறை
நாயகன் முகம் காண தாள் திறவாய் மறை  (ஆலய

ஆ.... ஆ.... மனக்கதவைத் திறந்த பரம் பொருளே
திருக்கதவும் திறக்க வர திருவருளே ஆ..ஆ..ஆ..
சிவமயமாய் மலர தாள் திறவாய்  (ஆலய

ஆடுந்திருவடி கோலமறிந்திட அரனே தாள் திறவாய்
அன்னையின் மார்பினில் பொன்மணிக் கண்டிட
சிவனே தாள் திறவாய்
அருள்நெறி தெளிவுற திருமறை புகழ்பெற
அன்பே தாள் திறவாய்
ஒருமுறை இருமுறை கேட்டேன் ஒளியே தாள் திறவாய்
இறைவா தாள் திறவாய் என் தலைவா தாள் திறவாய்
இறைவா தாள் திறவாய் என் தலைவா தாள் திறவாய்
கதவே தாள் திறவாய் தாள் திறவாய்

8. அறிவே நிறைவே... (ஜனனீ ஜனனீ - மெட்டு)

அறிவே நிறைவே அருளே பொருளே
அழகானந்தனே நடராஜனே
அர்த்தநாரீசனே சர்வேஸ்வரனே
திரிலோகேசனே பிரகதீஸ்வரனே
நந்திவாகனனே சுந்தரேஸ்வரனே (அறி)

நால் வேதங்களும் பிரம்ம தேவருடன்
மால் ஓதுவதும் நமச்சிவாய மன்றோ
சுபயோகங்களும் தவயோகங்களும்
இவை வேண்டுவதும் சிவபோக மன்றோ  (அறி)

உலகாதியும் நீ வளர் ஜோதியும் நீ
இன்பம் ஓங்கிடவும் துன்பம் நீங்கிடவும்
எந்தன் நெஞ்சில் நாதம் கொஞ்சிடவே
உந்தன் தஞ்ச மலர்ப்பாதம் தஞ்சமய்யா
ஆலமுண்டவனே நீலகண்டேசனே  (அறி)

9. ஆடுகின்றானடி தில்லையிலே...

ஆடுகின்றானடி தில்லையிலே - அதைப்
பாடவந்தேன் அவன் எல்லையிலே
திங்களும் ஆட சூலமும் ஆட
விரிசடை மீதொரு கங்கையும் ஆட
உலகெனும் மாபெரும் மேடையிட்டான்... அதில்
உயிர்களை எல்லாம் ஆடவிட்டான்
அசைந்திடும் மரம் செடி கொடிகளிலே - அந்த
அம்பலத்தரசன் ஆடுகின்றான் (ஆடு)

தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான்... ஒரு
தந்தையும் தாயும் அவனுக்கில்லை
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
ஆடிய ஆட்டம் முடியவில்லை
புட்டுக்கு ஏனோ ஆசை கொண்டான் - அவன்
பிரம்படித் தனையே தாங்கிக் கொண்டான்
மண்ணைப் படைத்தவன் மண்சுமந்தான் அது
மதுரையில் ஆடிய ஆட்டமன்றோ  (ஆடு)

10. சிவபெருமானே எங்கள்...
(தீனரட்சகி - மெட்டு)

1. சிவபெருமானே எங்கள் சிவபெருமானே
சிந்தையில் குடிகொண்டவனே சிவபெருமானே - உன்
சீர்பாத சேவை செய்ய சிவபெருமானே
சீக்கிரமே வந்திடுவாய் சிவபெருமானே

2. பாம்பு தனை கழுத்தில் அணிந்த சிவபெருமானே
பார்வதியை இடத்தில் வைத்த சிவபெருமானே
பாங்காக நாங்கள் வாழ சிவபெருமானே
பாலமாக அமைந்திடுவாய் சிவபெருமானே

3. கங்கை தனை தலையில் வைத்த சிவபெருமானே
கண்ணப்பருக்கு அருள் செய்த சிவபெருமானே
கணபதியை எமக்களித்த சிவபெருமானே
கந்தனையும் சேர்த்தளித்த சிவபெருமானே

4. சந்திரனுக்கு அபயமளித்த சிவபெருமானே
சக்திசிவன் ஆனவனே சிவபெருமானே
சர்வலோக நாயகனே சிவபெருமானே
சகல பாக்கியம் அளிப்பவனே சிவபெருமானே

5. மண்டையோடு மாலையணிந்த சிவபெருமானே
மங்காத புகழ் வாய்ந்த சிவபெருமானே
மங்களங்கள் தருபவனே சிவபெருமானே
மக்கள் குறை தீர்ப்பவனே சிவபெருமானே

11. சிவனுக்கிசைந்தது....

சிவனுக்கிசைந்தது சிவராத்திரி
அவன் தேவி புகன்றது நவராத்திரி
அவளின் துணையே ஒரு சக்தி
இந்த அகிலம் காண்பது நவசக்தி  (சிவ)

தவத்தில் நிலைக்கும் ஒரு பாதி
தன் சந்ததி காக்கும் மறுபாதி
விதைக்கும் உழவன் சிவனென்றால்
அதன் விளைவை சுமப்பவள் உமையன்றோ  (சிவ)

இரவில் ஒரு நாள் அது மலரும்
என்றோ ஒரு நாள் அது உலரும்
இடையில் மடியில் இருத்தி வைத்து
எம்மை வளர்ப்பாள் அம்மையன்றோ  (சிவ)

தாயாய் வந்தாள் ஒரு சக்தி தாகம் தீர்த்தாள் ஒரு சக்தி
ஆயகலைகள் அருள் பவளாய்
ஆக்கம் தந்தாள் ஒரு சக்தி
செல்வம் தந்தென்னை சீராட்டி
செழிக்கச் செய்தாள் ஒரு சக்தி
அல்லும் பகலும் அருகிருந்தே
ஆற்றல் கொடுத்தாள் ஒருசக்தி
உடன் பிறந்தவள் ஒரு சக்தி
உள்ளம் நிறைந்தவள் ஒரு சக்தி
தோள் தவழ்ந்தவள் ஒரு சக்தி
வாழ்வு முழுவதும் சிவசக்தி
என்பதும் ஓர் உருவாய் நின்றதும் ஆணவம் சென்றதுவே
ஒன்பது இரவுகள் அவள் நினைவாய்
ஒளிவிளக்கு ஏற்றுவோம் வாரீரோ.

சிவ நாமாவளிகள்

1. ஸம்போ புராரே ஸங்கர புராரே
ஸூலதர பணிவர கங்கண புராரே

2. மறாதேவ ஸிவ ஸங்கர ஸம்போ
உமாகாந்த ஹர த்ருபுராரே
ம்ருத்யுஞ்ஜெய வ்ருஷபத்வஜ சூலின்
கங்காதர ஹர மதனாரே

3. ஸிவ ஸங்கர பரமேஸ தயாளோ
கருணாகர ஸுரநாயக காமிதபலவர தாயக  (ஸி)
ஸுத்தஸ்படிக ஸம்காஸ ஸுப்ர கைலாஸநிவெஸ (ஸி)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar