SS ரகுவீரஸ்தவம் (நீலகண்டதீக்ஷிதர்) - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ரகுவீரஸ்தவம் (நீலகண்டதீக்ஷிதர்)
ரகுவீரஸ்தவம் (நீலகண்டதீக்ஷிதர்)
ரகுவீரஸ்தவம் (நீலகண்டதீக்ஷிதர்)

அப் ஜைவ ஸா ப்ரத மதோ
த ரணேஸ்ததோபூ த்
ஜாதா ததோ ஜ்வலனதோ
அபி யதஸ்ததூ ஹே
ஸர்வாக மாந்தபரிகு ஷ்ட
ஸதாக் யமூர்த்த
பூ தஸ்த்ரயாவதரணாத்
அப வத்ஸதீதி

விளக்கவுரை: முன்னர் நீரஜா, ஜலஜா க்ஷீரஸாகரகன்யகா என்றெல்லாம் அழைக்கப்படும் மகாலட்சுமி நீரில் தோன்றினாள். அதன்பின் சீதாதேவி, பூமிசீதாவாக நிலத்திலிருந்து தோன்றினாள். பின்னர் அக்னிபரீட்சைக்குப் பிறகு நெருப்பிலிருந்து தோன்றினாள். அப்போதே இவள் உபநிஷத்துக்களாலே பெரிதும் போற்றப்படும் சதாசிவ (சதாக்ய) தத்துவத்தை விளக்கும் சதியின் (பராசக்தியின்) அவதாரம் என்று ஊகிக்கிறேன். இவ்வாறு விளக்கம் அளிக்கிறார் மகாகவி நீலகண்டர்.

சிவதத்துவம் மிக ரகசியமானது. விளக்குவதற்கும் புரிந்து கொள்ளவும் மிகவும் கடினமானது. மகான்கள் பலர் பலகோணங்களில் சிவதத்துவத்தையும், மற்றும் சிவசக்தி ஐக்கியம் பற்றி விளக்கி உள்ளார்கள். பகவான் ஆதிசங்கரர் அருளிய சிவானந்தலகரியிலும் மற்றும் சவுந்தர்யலகரியிலும், சமயகுரவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோர் அருளிச்செய்த தேவாரத்திலும் திருவாசகத்திலும் பல அற்புதமான விளக்கங்கள் உள்ளன. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரின் அபயாம்பா ஜகதாம்பா முதலிய கீர்த்தனங்களில் இந்த தத்துவம் ஒரு கோணத்தில் மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. மகாகவி நீலகண்டர் அருளிச்செய்த சிவதத்வரஹஸ்யம் என்ற நூல் சிவ அஷ்டோத்தரசதநாமாவளிக்கு (பரமேசனின் நூற்றெட்டு திருநாமங்களுக்கு) விரிவுறை அல்லது வியாக்யானமான ஒரு அற்புதப் படைப்பாகும். அஷ்டமூர்த்தி, தத்வத்தில் பவன், ஸர்வன், ஈஸானன், பஸீபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹாதேவன் ஆகிய எட்டு அங்கங்களாக அஷ்டமூர்த்தி என்று பரமேஸ்வரன் ஆராதிக்கப்படுகிறார்.

ஈசனின் எட்டு அங்கங்களும் அவர் லிங்கவடிவில் முறையே அருள்பாலிக்கும் ஸ்தலங்களும் இங்கு தரப்பட்டுள்ளன.

ஸர்வன் - நிலம் - காஞ்சிபுரம்
பவன் - நீர் - திருவானைக்காவல்
ருத்ரன் - அக்னி - திருவண்ணாமலை
உக்ரன் - வாயு - காளஹஸ்தி
பீமன் - ஆகாயம் - சிதம்பரம்
பஸுபதி - ஆத்மா - காட்மண்டு நேபால்
மஹாதேவன் - சந்திரன் - மேற்கு வங்காளம்
ஈசானன் - சூரியன்-கொனாரக் - ஒரிஸா.
சந்திரன்- சூரியன்-அக்னி மூன்று கண்கள்

அஷ்டமூர்த்தி அன்னை பராசக்தியின் திருநாமங்களிலும் ஒன்றாகும். இது சிவசக்தி ஐக்கியத்தை குறிக்கும்.

த த்தாம் புரைவ ஜனஸம்ஸதி
பாது காயை
ராஜ்யஸ்ரியம் புனருபேத்ய
யத க் ரஹீஸ்த்வம்
த த்தாபஹாரரஸிகேன
ததஸ்த்வயைஷா
த த்தாபி தே ஹிஷு ம்ருஷைவ
ரகூ த் வஹ ஸ்ரீ :

விளக்கவுரை: முன்னர், பிரஜைகளின் முன்னிலையில் பரதனுக்கு உன் பாதுகைகளை (ராஜ்ய லட்சுமியையும்) அளித்தாய். பின்னர் திரும்ப வந்து அதை பெற்றுக்கொண்டாய். ரகுகுலதிலகனே! நீ அளிப்பது போல் இருப்பினும், உன் பக்தர் அதை உனக்கே திரும்ப அர்ப்பணிக்கிறார்கள். வால்மீகிராமாயணம் யுத்தகாண்டம் பட்டாபிஷேக ஸர்கத்தில்

என் தாயின் கட்டளையை சிரமேற்கொண்டு இந்த ராஜ்யத்தை எனக்களித்தாய். எந்த நிலையில் அதை எனக்களித்தாயோ அப்படியே உனக்கு திரும்ப அளிக்கிறேன். அன்பு கூர்ந்து ஏற்றுக் கொள்வாயாக என்று பரதன் பல சுலோகங்கள் மூலமாக வேண்டுகிறான்.

பரதனின் வார்த்தைகளை கேட்ட வெற்றி வீரனான ஸ்ரீராமன் அப்படியே ஆகுக என்று கூறி மங்களகரமான ஆசனத்தில் அமர்ந்தான். பாதுகைகளையும், ராமனின் வனவாச காலத்தில் ராஜ்யபாரத்தையும் ஏற்றுக் கொண்ட பரதன் ராஜயலட்சுமி தன் தமயனுக்கே உரித்தானவள் என்று மனதில் கொண்டு, ஆஸிதாராவிரதம் என்ற கடுமையான விரதத்தை அனுஷ்டிப்பவன் போல் வாழ்ந்தான்.

ஒரே படுக்கையில் நடுவில் ஓர் கூரிய கத்தியை வைத்துவிட்டு, ஒரு ஆடவனும், ஸ்திரீயும் (மனோவாக்குகாயங்களால்) பிரம்ம சர்ய விரதத்தை அனுஷ்டித்து உறங்குகிறார்களோ அது ஆஸிதாரவிரதம் எனப்படுகிறது. மகாகவி காளிதாசர் தம் ரகுவம்ச மகாகாவியத்தில் கூறுகிறார்.

ராஜ்யஸ்ரீயை ஏற்றுக்கொள்வதால் தமயனுக்கு முன் தம்பி திருமணம் புரிந்து கொள்ளும் பரிவேத்தா என்ற பாபியாவேன் என்று பரதன் எண்ணினான். நம் தர்ம சாத்திரங்களில் மூத்தவனுக்கு முன் இளையவன் மணம் புரிவது பெரிய பாபமாக கருதப்படுகிறது.

தா தா ப பூ வித கபீந்த் ர
விபீ ஷணாப் யாம்
ஸ்வம் ஸ்வம் பத ம் த்வமனுமத்ய
யதஸ்ததோஹம்
மஹ்யம் மதீ யமபி
தாத்த்விகமேவ ரூபம்
கிஞ்சித் ப்ரதர்ஸ்ய ப ஜ கீர்த்திம்
இதி ஸ்துவதே த்வாம்

விளக்கவுரை: வானரர் தலைவன் சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தையையும், ராவணனின் சகோதரன் விபீஷணனுக்கு லங்காபுரியையும் (இவர்கள் உனக்காற்றிய தொண்டினால் மகிழ்ந்து) அளித்தாய். சர்வாந்தர்யாமியான நீ என்னுள் உறைந்துள்ளாய் என்ற ஆத்ம தத்துவத்தை அறிந்துகொள்ள அருள உன்னை பிரார்த்திக்கிறேன். பரம்பொருளான ஸ்ரீராமனை தனக்கு ஆத்ம-நிஷ்டையையே (முக்தியையே) அருள பிரார்த்திக்கிறார் நீலகண்டர்.

மித் யாபவாத கலயாபி
விஹாய ஸுத் த
ஸத் ய ப்ரியாம் ஸுத் ருடம்
ஆத்மனி ஸம்ப்ரரூடே
ஸ்வாமின் ஜக த ஜ்ஜனயித்ருத்வ
ம்ருஷாபவாதே
ஸ்வரம் ப்ரவர்தயஸி கிம்
ப வமீத் ருஸாம் ந:

விளக்கவுரை: பிரஜைகளில் ஒரு சிலர், பேசிய பொய்யான அபவாத வார்த்தைகளைக் கேட்டு உன் பிரிய மனைவியை துறந்து காட்டுக்கு அனுப்பி விட்டாய். ஜீவன்களின் மறுபிறவியும், அவர்கள் அனுபவிக்கும் சுக-துக்கங்களும் முன்வினைப் பயனாய் ஏற்படினும் சிருஷ்டி கர்த்தாவையே அவற்றிற்கு காரணமாக கூறுகின்றனர். அதற்கென்ன பதில் சொல்லமுடியும்? உத்தரகாண்டம் 43-45வது சர்கங்களில் சீதாபிராட்டி வனத்திற்கு அனுப்பப்பட்ட விருத்தாந்தம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. ராவணவதத்திற்குப்பின், அக்னிபரீட்சைக்கு பிறகு, அக்னிதேவன் தோன்றி சீதாதேவி பரமபவித்திரமானவள் என்று எல்லா உலகும் அறிய பிரகடனம் செய்கிறார். ராம ராஜ்ஜியத்தில் பல ஆண்டுகள் ஜனங்கள் எல்லா சுகபோகங்களுடன் வாழ்கின்றனர். ராமபிரானால் பணிக்கப்பட்ட பத்ரன் என்ற ஒற்றன் ஒரு நாள் பெரும்பாலான மக்கள் ஸ்ரீராமனின் புகழையே பாடுகிறார்கள் என்றும், ஒரு சிலர் மட்டும் ராவணனின் இல்லத்தில் பல மாதங்களில் வசித்த சீதாதேவியை எப்படி ஸ்ரீராமன் வெறுக்காமல் இருக்கிறார்? என்றும் பேசுவதை அறிவிக்கிறான். இது ஒரு பொய்யான குற்றச்சாட்டே! ஸ்ரீராமனின் ஆணைப்படி இலக்குவன். சீதாதேவியை வனத்திற்கு அழைத்துச் சென்று, வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் விட்டுவிடுகிறான். அனைத்து சம்பவங்களும் பகவானின் சங்கல்பமே. ராமாவதார லட்சியம் நிறைவுற்ற பின், திருமால் திருமகளுடன் வைகுண்டம் திரும்ப திருவுள்ளம் கொண்டார். தத்வாதிகனான ஸ்ரீராமனை எவர் தான் புரிந்துகொள்ள இயலும்?

லங்காரணோபஹ்ருதராக்ஷஸ
ராஜகோ அஸெள
விப்ரார்ப கம் து கமபி
த்வயி லிப்ஸமானே
ப்ராதிஸ்விகம் ப்ரதிநிதிம்
புனராசகாங்க்ஷ
காலஸ்தபஸ்வினமஹோ
வ்ருஷலம் கடோ ர:

விளக்கவுரை: இலங்கைப் போரில் அரக்கர்கோன் ராவணன் முதலிய எண்ணற்ற அரக்கர்களை நீ காலனுக்கு எதையும் எதிர் பார்க்காது சமர்ப்பித்தாய். ஆனால் அந்த காலன் ஒரு அந்தணனின் பாலகனின் உயிரை நீ கேட்டபோது, அதற்கு பதிலாக கடுமையான தபத்தில் ஈடுபட்டிருந்த ஒரு அதமனின் உயிரை பெற்றுக் கொண்டான் அன்றோ? வால்மீகி ராமாயணம் உத்தரகாண்டம் 73-76 சர்கங்களில் சம்பூக வதம் விவரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராமனின் ஆட்சியில் ஓர் சமயம், அந்தணன் ஒருவன் துக்கம் மேலிட்டவனாக ராமனிடம் வந்து அழுதுகொண்டே பிரலாபித்தான். எனது பாலகன் சிறு பிராயத்திலேயே அகால மரணமடைந்து விட்டான். ஒரு செங்கோல் மன்னனின் ஆட்சியில் இது போல் நடப்பதில்லை. யமன் வசமாகிவிட்ட என் மகனின் உயிரை நீ தான் மீட்டுத் தரவேண்டும் என்று பலவாராக முறையிட்டான். பெருங்கவலை கொண்ட ஸ்ரீராமன் வசிஷ்டர், வாமதேவர் முதலிய மகரிஷிகளை அழைத்து அவர்கள் யோசனையை கேட்கிறான். அப்போது அங்கு எழுந்தருளிய தேவரிஷி நாரதர் பின்வருமாறு கூறுகிறார்.

அரசரில் சிறந்தவனே! தாழ்ந்த குளத்தில் பிறந்த ஒருவன் கடுமையான தவத்தை மேற்கொண்டுள்ளான். இந்த யுகத்தில் நான்காம் வர்ணத்தில் பிறந்தவனுக்கு அது பரம அதர்மம். அப்படிப்பட்ட பாபி, உன் நாட்டிற்குள் இப்போது கடுமையான தவத்தைச் செய்கிறான். அதுவே இந்த பாலகனின் அகால மரணத்திற்கு காரணம். புஷ்பகவிமானித்திலேறி ராமபிரான் தேசமெங்கும் தேடி சைவலம் எனும் மலைச் சாரலில் ஒருவன் தலைகீழாய் இருந்து கொண்டு கடும் தவம் புரிவதைக் கண்டு யாரென்று வினவ, அவன் பதில் அளிக்கிறான். புகழ் மிக்கவனே! தாழ்ந்த குலத்தில் ஜனித்த நான், சம்பூகன் எனும் பெயருடையவன். இந்த பூத உடலோடு சுவர்கம் செல்ல விரும்புகிறேன். ஸ்ரீராமன் உடனே தன் வாளால் அவனைச் சிரச்சேதம் செய்து வதம் செய்கிறார். அகால மரணமடைந்த அந்தணச்சிறுவன் உயிர் பெற்று எழுகிறான். ஸ்ரீராமனால் வதம் செய்யப்பட்டதாலும், மரணத் தருவாயில் ராமன் தரிசனம் கிட்டியதாலும் சம்பூகன் மேலான சுவர்கலோகத்தை அடைந்தான். (நாம ராமாயணம்)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar