SS திருக்கயிலை போற்றி! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> திருக்கயிலை போற்றி!
திருக்கயிலை போற்றி!
திருக்கயிலை போற்றி!

ஓம் வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
ஓம் மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஓம் ஊற்றாகி யுள்ளே ஒளித்தாய் போற்றி
ஓம் ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஓம் ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆறங்கம் நால்வதே மானாய் போற்றி
ஓம் காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி
ஓம் பிறவி அறுக்கும் பிரானே போற்றி

ஓம் வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
ஓம் மருவி யென்சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
ஓம் போகாது என்சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
ஓம் மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
ஓம் உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி

ஓம் திருவாகி நின்ற திறமே போற்றி
ஓம் தேசம் பரவப் படுவாய் போற்றி
ஓம் கருவாகி யோடும் முகிலே போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
ஓம் வந்து என்தன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓம் ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
ஓம் தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
ஓம் தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி

ஓம் கானத்தீயாடல் உகந்தாய் போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் ஊராகி நின்ற உலகே போற்றி
ஓம் ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
ஓம் பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
ஓம் பெயராது என்சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் நீராவியான நிழலே போற்றி
ஓம் நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
ஓம் காராகி நின்ற முகிலே போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி

ஓம் சில்லுறுவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
ஓம் தேவர் அறியாத தேவே போற்றி
ஓம் புல்லுயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி
ஓம் போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
ஓம் பற்றி உலகை விடாதாய் போற்றி
ஓம் கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
ஓம் பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி

ஓம் எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
ஓம் என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
ஓம் விண்ணும் நிலனும் தீ ஆனயாய் போற்றி
ஓம் மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
ஓம் கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் இமையாது உயிராது இருந்தாய் போற்றி
ஓம் என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
ஓம் உமையான மாது அணைத்தாய் போற்றி
ஓம் ஊழி ஏழான ஒருவர் போற்றி

ஓம் அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி
ஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
ஓம் சுமையாகி நின்ற கனலே போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
ஓம் முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
ஓம் தேவாதி தேவர் தொழும் தேவே போற்றி
ஓம் சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஓம் ஆவா அடி யேனுக் கெல்லாம் போற்றி
ஓம் அல்லம்நலிய அலைந்தேன் போற்றி

ஓம் காவாய் கனகத் திரளே போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
ஓம் நீள அகலம் உடையாய் போற்றி
ஓம் அடியும் முடியும் இகழிப் போற்றி
ஓம் அங்கும் ஒன்று அறியாமை நின்றாய் போற்றி
ஓம் கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
ஓம் கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
ஓம் கடிய உருமொடு மின்னே போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி

ஓம் உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி
ஓம் ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
ஓம் எண்ணா இலங்கைக்கோன் தன்னைப்போற்றி
ஓம் இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
ஓம் பண்ணார் இசையின் சொல்கேட்டாய் போற்றி
ஓம் பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் கண்ணாய் உலகிற்கு நின்றாய் போற்றி
ஓம் விண்ணும் மண்ணும் ஆனோய் போற்றி
ஓம் வானோர் வணங்கப் படுவாய் போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி

ஓம் அயன்மாலும் காணாத அரனே போற்றி
ஓம் ஆலவாய் அமர்ந்த அண்ணலே போற்றி
ஓம் வையகம் காக்கும் ஐயனே போற்றி
ஓம் படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
ஓம் அண்ணா மலையெம் அண்ணல் போற்றி
ஓம்  மருவிய கருணை மலையே போற்றி போற்றி
ஓம் எல்லாஞ் சிவனென நின்றாய் போற்றி போற்றி
ஓம் வேண்டுவ யாவும் தருவாய் போற்றி போற்றி
ஓம் திசையனைத்தும் நிறைந்த செல்வ போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி

ஓம் தென்னாடு உடைய சிவனே போற்றி
ஓம் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் சூட்டான திங்கள் முடியாய் போற்றி
ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி
ஓம் பிரதோஷ லிங்கமே போற்றி
ஓம் பிரம்மாண்ட லிங்கமே போற்றி
ஓம் பிரகாச லிங்கமே போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar