SS வேற் குழவி வேட்கை - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வேற் குழவி வேட்கை
வேற் குழவி வேட்கை
வேற் குழவி வேட்கை

முருகப்பெருமானின் திரு அருளையும் உபதேசத்தையும் பெற்ற ஸ்ரீமன் பாம்பன் சுவாமிகள் அருளியது வேற்குழவி வேட்கை. காலை மாலை முருகனை வணங்கி, இத்தோத்திரப் பாடலை பக்தியுடன் பாடுபவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கி மகப்பேறு உடன் கிட்டும்.

1. பதின்ஏழு ஒன்றும் விழைசெய்ய பாதம் ஓலிட நன்
மதிபோல் மாமை முகமண்டலம் பகுக்க நகும்
கதியே வேற் குழவி நின்னை காதலால் தழுவ
நிதியே வாராயோ கைகள் நீளுகின்றனவே

2. சீவி முடித்த சிகை செம்பொன் சுட்டி நன்குழைகள்
மேவும் உறுப்பு நிழல் செய்ய வாகும் வேற்குழவி
ஏவல் கொடுத்து அருள எண்ணிஎன் முன்வாராயோ
கூவை வெறுத்த கண்கள் இச்சை கொள்ளுகின்றனவே

3. பாவேறுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற் குழவி
சேவேறு உன் பவளத் தெய்வ வாயையே திறந்து
தூவேறு இன் கரைகள் இங்கு சொல்லவாராயோ
கோவே என் செவிகள் இச்சை கொள்ளுகின்றனவே

4. பொன்னார் கண்ட சரம் நன்கு பூண்ட தங்க ஒளிக்கு
ஒன்னார் வேற் குழவி நல்ல கொவ்வைநின் இதழை
என்னார் வந்து தீர இங்கு நல்கவாராயோ
உன்னார் உண்ணிலையும் வாயும் ஊறுகின்றனவே

5. எண்ஏறும் பல்இல் என்ற வேல் பிடித்து அசையும்
கண்ணே செங் குழவி என்றன் கண்கண் ஆட அழகே
தண் ஏறும் வதனம் முத்தம் தாராயோ சிறிது
நண்ணா என் உளந்தான் நின்னை நாடுகின்றதரோ

6. முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்து ஆரம் புனைந்து என்முன்னே வாராயோ உழலும்
சித்தார் வேற்குழவி உச்சி செவ்வன் மோந்து கொள்ள
வித்தே என் மூக்கின் இச்சை மீறுகின்றதரோ

7. ஐயார் நல் அரையில் பொன் வடங்கள் ஆட உழல்
வையார் வேற் குழவி இங்கு வாராயோ கால்கள்
மையார் கண்மலர்கள் இன்ப மல்க மோந்து கொள்ள
மெய்யாஎன் மூக்கில் இச்சை மீறுகின்றதரோ

8. பொன் போல் மேனியிலே நல்ல பூமணம் கமழும்
இன்பே வேற் குழவி இங்கு வாராயோ விரியா
அன்பார் புன்முறுவல் செய்யு மார்பில் பல் அழகென்
துன்பிர் அம்பு எனவே நெஞ்சம் துள்ளுகின்றதரோ

9. கள்ளார் செங்கரும்பே கண்டுதேனே இன்அமுது உண்
கிள்ளாய் வேற்குழவி அன்பர் கேளே மாது உமையாள்
பிள்ளாய் கண்ணி ஒன்று நல்லபெட்பின் நான் தருவேன்
தள்ளாதே கொளற்க என் முன்னர் வாராயோ தகையே

10. மாண்பார் சந்தமுனி இன்ப வாழ்வேநின் எழிலைக்
காண்பார் வேறு அழகும் இங்கு காண்பார்கொல்லோ நான்
ஊண் பாட அஞ்சி உனை நன்கு காண்பான் நின்று வந்தேன்
வீண் போகாதபடி இங்ஙன் வாராய் வேற்குழவி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar