SS தியாகராஜ ஸ்வாமிகளின் தசாவதாரக் கீர்த்தனை! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தியாகராஜ ஸ்வாமிகளின் தசாவதாரக் கீர்த்தனை!
தியாகராஜ ஸ்வாமிகளின் தசாவதாரக் கீர்த்தனை!
தியாகராஜ ஸ்வாமிகளின் தசாவதாரக் கீர்த்தனை!

தீனஜனாவன- கஷ்டத்தால் பீடிக்கப்பட்ட ஜனங்களைக் காப்பாற்றும் ஸ்ரீராமா!

தானவஹரண-அசுரர்களை அழிப்பவரே.

மீனசரீர- மத்ஸ்யாவதாரம் எடுத்தவரே.

நிர்மலஹ்ருதய- களங்கமற்ற இதயமுடையவரே.

கார்முகபாணே- சார்ங்கம் என்ற வில்லைத் தரித்தவரே.

கர்மபலப்ரத- அண்டினோருக்கு நன்மையைப் பயனாகக் கொடுக்கிறவரே!

கூர்மாவதார- கூர்மாவதாரம் எடுத்தவரே!

ஸ்ரீகர ஸூகுண- லக்ஷ்மி கடாக்ஷம் தருபவரே!

ஸ்ரீகரலாலித- லக்ஷ்மியின் திருக்கைகளால் உபசரிக்கப்பட்டவரே!

ஸ்ரீகருணார்ணவ- கருணைக் கடலே ஸ்ரீராமா!

ஸுகரரூப- வராஹ அவதார ஸ்ரீராமா!

ஸரஸிஜநயன- செந்தாமரைக்கண்ணா ஸ்ரீராமா!

ஸுரபதினுத- இந்திரனால் துதிக்கப்பட்டவரே!

நரவரவேஷ- நரோத்தமனின் ரூபத்தை எடுத்தவரே!

நரஹரிரூப- நரசிம்மாவதாரா!

காமிதபலதா- எண்ணிய வரங்களைத் தருபவரே!

பாமர துர- அக்ஞானிகளுக்கு எட்டாதவரே!

ஸாமஜவரத- கஜேந்திரனை ரக்ஷித்தவரே!

வாமனரூப- வாமனாவதாரம் எடுத்தவரே!

அகதிமிர ஆதித்ய- பாவம் என்ற இருளைப் போக்கும் பகலவனே!

விகளித மோஹ- மோகமற்றவரே!

ரகுகுல திலக- ரகு குலத்திற்குத் திலகமானரே!

பிருகு ஸுதரூப- பரசுராமாவதாரம் எடுத்தவரே!

குசலவ ஜனக- குசலவர்களுக்குப் பிதாவே!

குசலத சதுர- நன்மை செய்வதில் ஸமர்த்தரே!

தசமுகமர்த்தன- ராவணனை ஸம்ஹரித்தவரே!

தசரததனய- சக்ரவர்த்தி திருமகனான ராம!

கலிமல ஹரண- கலிபுருஷவால் நேரும் கெடுதியை நீக்குபவரே!

ஜலஜபவார்ச்சித- பிரம்மாவால் போற்றப்பட்டவரே!

ஸலலித வசன- அழகாகப் பேசுகிறவரே!

ஹலதரரூப- பலராமாவதாரம் எடுத்தவரே!

ஸித்தஜன ப்ரிய- ஞானஸித்தி அடைந்தவர்களுக்குப் பிரியமானவரே!

ப்ரஸித்த சரித்ர - உலகமெங்கும் பரவிய சரித்திரத்தை உடையவரே!

பத்தஸுவஸன- ஆடைகளை அழகாகத் தரித்தவரே!

புத்தாவதார - புத்தாவதாரம் எடுத்தவரே!

ஜயகர நாம- ஜயத்தைக் கொடுக்கும் மகிமையையுடைய (திவ்ய நாமத்தால்) விளங்குகிறவரே.

விஜய ரத ஸாரதே- அர்ஜுனனின் ரதத்தை நடத்தினவரே!

பயநாசன ஹரே- பயத்தைத் தீர்ப்பவரே ஹரியே!

ஹயமுக ரூப- குதிரையின் முகத்தையுடைய ஹயக்ரீவ அவதாரம் எடுத்தவரே!

பாகவதப்ரிய- பாகவதர்களிடம் பிரியமுள்ளவரே!

ஆகம மூல - வேத ஆகமங்களுக்கெல்லாம் மூலாதாரமே!

நாகஸுசயன- ஆதிசேஷன் மேல் சுகமாகப் பள்ளி கொண்டவரே!

த்யாகராஜார்ச்சித- தியாகராஜரால் அர்ச்சிக்கப்பட்டவரே!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar