SS வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்ரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்ரம்
வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்ரம்
வேங்கடேச கராவலம்ப ஸ்தோத்ரம்

ஸ்ரீசேஷ சைல சுநிகேதன திவ்யமூர்த்தே
நாராயணாச் யுத நளினாயதாக்ஷ
லீலா கடாக்ஷ பரிரக்ஷித ஸர்வலோக
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்

ஸ்ரீ சேஷாத்ரி நிலைய திவ்ய மங்கள ஸ்வரூபா! நாராயணா! அச்யுதா! தாமரைக் கண்ணா விளையாட்டுக் கண்ணோக்கால் எம்மை (எல்லா உலகையும்) நன்கு பரிபாலிக்கின்ற ஸ்ரீவேங்கடநாதனே! எனக்கு கை கொடுத்து உதவ வேண்டும்.

விவரணம்: சென்றால் குடையாம் என்று ஆழ்வாரால் மங்களாசாஸனம் பண்ணப்பட்ட ஆதிசேஷன் எம்பெருமான் எழுந்தருளுவதற்கு முன்னமேயே இங்கு எழுந்தருளி மலையாய் நின்றான் என்பது முனனவர் துணிபு. அந்த மலையில் தான் விரும்பி நல்லுறைவிடமாகக் கொண்டவன். அங்கு திருவேங்கடமுடையானாய் ஸேவை ஸாதிப்பவன் வேறு யாரு யாருமில்லை ஸாக்ஷாத் நாராயணனே. தன் அடியார்களை ஒரு பொழுதும் கை விடமாட்டான் என்று பொருள்படும்படியான அச்யுதன் என்று வழங்கப்பெறுபவனும், நமது பாபங்களைப் போக்குகின்ற ஹரியும் மென்மையான இதழ்களைக் கொண்ட தாமரை மலரைப் போன்ற கண்களை உடையவன் அவன். தன்னடியார்களைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தால், விளையாட்டாகவே காப்பாற்றுவான் அவன் தான் திருவேங்கடநாதன். அவனை வேண்டுகிறார் ஸ்வாமி அப்பா ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கும் நான் இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கோவிந்தா என்று அழைக்கிறேன். என் துயர்க் குரல் கேட்டு நீ கை கொடுத்துக் கரையேற்ற வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

(நீரில் மூழ்கும் ஒருவன் தன் கைகளை உயர்த்தி காப்பாற்றக் கேட்கும் பாணி நடைமுறை. நாம் கை தூக்கினால் அவன் கைபிடித்து கரையேற்றுவான்.)

ப்ரஹ்மாதிவந்தித பதாம்புஜ சங்கபாணே ஸ்ரீமத்
சுதர்சந ஸுசோபித திவ்ய ஹஸ்த
காருண்ய ஸாகர சரண்ய ஸுபுண்யமூர்த்தே
ஸ்ரீவேங்கடேச மமதேஹி கராவலம்பம்.

பிரம்மா முதலிய தேவர்கள் எல்லோராலும் வணங்கப்படுகின்ற திருவடித்தாமரையை உடைய, சங்கம் ஏந்திய திருக்கரங்களை உடையவனே! அழகு பொருந்திய திருவாழியினால் நன்கு ஸோபிக்கின்ற திருக்கரத்தானே! கருணையின் கடலே. அனைவராலும் பற்றத் தகுந்தவனான உயர் புண்ணியத்தின் திருவுருவே! ஸ்ரீவேங்கடநாதனே எனக்கு கைகொடுத்து உதவப் பிரார்த்திக்கிறேன்.

வேதாந்த வேத்ய பவஸாகர கர்ணதாரா
ஸ்ரீபத்மநாப கமலார்ச்சித பாதபத்ம
லோகைக பாவன பராத்பர பாபஹாரின்
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்

வேதங்கள், உபநிடதங்கள் இவைகளால் அறியப்படுபவனே. பிறவியெனும் கடலிலிருந்து எம்மை மீட்கும் மீகாமியே (கப்பலோட்டி) பத்மநாபா (தாமரை பூத்த நாபியை உடையவனே) பிராட்டியால் ஆராதிக்கப்பட்ட தாமரைத் திருவடி உடையவனே! உலகனைத்திற்கும் ஒரே காவலனான உயர்பொருளே! பாபங்களை நீக்குப்பவனே! ஸ்ரீதிருவேங்கடத்தானே எனக்குக் கை கொடுத்து ரக்ஷிக்க வேண்டும்.

லக்ஷ்மீபதே நிகமலக்ஷ்ய நிஜஸ்வரூப காமாதி
தோஷ பரிஹாரக போத தாயின்
தைத்யாதி மர்தன ஜனார்தன வாஸுதேவ
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்.

திருவின் நாயக! வேதங்கள் அடையாளம் கூறும் உண்மையான திருவுருவே. ஆசை முதலான அழுக்குகளைப் போக்கிட நல்லறிவு தரும் அண்ணலே! அரக்கர்களை அழிப்பவனே மக்களின் பிறவித் துயர் நீக்குபவனே! ஹே வாஸுதேவா! வெங்கடேசா! எனக்கு கை கொடுத்து உதவி கரையேற்ற வேண்டும்.

தாபத்ரயம் ஹர விபோ ரபஸா முராரே ஸம்ரக்ஷ
மாம் கருணயா ஸரஸீருஹாக்ஷ
மச்சிஷ்ய இத்யனுதினம் பரிரக்ஷ விஷ்ணோ
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்

மூன்று வகையான தாபங்களைப் போக்க வேண்டும் பெரியோனே! முராரி என்னை வேகமாக வந்து நன்கு காக்க வேண்டும். ஹே! தாமரைக் கண்ணா உனது கருணை ஒன்றினால் காக்க வேண்டும். என்னை உனது சிஷ்யன் என்று திருவுளம் கொள். தினமும் நன்கு காப்பாற்று ஹே! விஷ்ணுவே திருவேங்கடமுடையானே எனக்கு நீ தான் கை கொடுத்து உதவ வேண்டும்.

ஸ்ரீஜாதரூப நவரத்ன லஸத் கிரீட கஸ்தூரிகா
திலக சோபி லலாட தேச
ராகேந்துபிம்ப லபனாம்புஜ வாரிஜாக்ஷ
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்

உருக்கியெடுத்த பசும்பொன்னாலான நவரத்னங்கள் பதிக்கப்பெற்ற திருகீரீடத்தை உடையவனே. (திருமுடி) கஸ்தூரியினால் அமைந்த திலகத்தால் அழகு பொருந்திய நெற்றியை உடையவனே! பூரண நிலவின் ஒளி என்று சொல்லப்படும் தாமைரக் கண்களை உடையவனே (குளிரக் கடாக்ஷிப்பவனே), திருவேங்கடமுடையானான பகவானே நீ தான் எனக்கு கைகொடுத்து உதவ வேண்டும்.

வந்தாருலோக வரதான வசோவிலாஸ ரத்னாட்ய
ஹார பரிசோபித கம்புகண்ட
கேயூர ரத்ன ஸுவிபாஸி திகந்த ராளன
ஸ்ரீவேங்கடேச மமதேஹி கராவலம்பம்

வணங்குகின்ற பக்தர்கள் வேண்டும் வரங்களை அருளுகின்ற சொல்லழகு வாய்த்தவனே! ரத்னக்கற்கள் பதிக்கப்பட்ட ஹாரத்தால் நன்கு அழகு பொருந்திய சங்கு போன்ற திருக்கழுத்தை உடையவனே! கைவங்கிகளால் நன்கு ஒளிபரப்பி திசை முழுதும் நிறைக்கின்ற சோதியே! திருவேங்கடத்தானே நீதான்  எனக்கு கை கொடுத்து ரக்ஷிக்க வேண்டும்.

திவ்யாங்கதாஞ்சித புஜத்வய மங்களாத்மந் கேயூர
பூஷண ஸுசோபித தீர்க்கபாஹோ
நாகேந்த்ர கங்கண கரத்வய காமதாயின்
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்.

அழகிய கைவளை (அங்கதம் வங்கி) இரண்டு புயங்களிலும் தழுவி நிற்கும் எல்லா நலங்களையும் அருளும் இறைவா! அந்த வங்கிகளால் அழகு பெற்ற நீண்ட கைகளை உடையவனே! ஆதிசேஷனையே இரு கரங்களிலும் கங்கணமாய்க் கொண்ட (இரண்டு கைகளிலும்) கங்கணம் கட்டிக் கொண்டு. எம்மைக் காக்கத் துணியும்) விருப்பமெல்லாம் அருளவல்ல வேங்கட நாயகா! நீ தான் எனக்கு கை கொடுத்து உதவ வேண்டும்.

குறிப்பு: எம்பெருமான் திருக்கைகள் ரட்சிப்பவை. எனவே, அக்கைகள் தோள்பட்டை கங்கணம் இவைகளில் ஈடுபாடு தோன்ற மூன்று முறை அங்கதம். கேயூரம் ஆகிய சொற்கள் பயன்படுத்தியிருப்பதன் நோக்கம் அவன் ஒருவனே காப்பாற்றுபவன் அவன் தொழிலுக்குத் துனை நிற்கும். (தன்னை ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கரையேற வைக்கும்) கரங்களுக்கு எத்தனை அழகூட்டினாலும் தகும் என்று மும்முறை கூறியிருப்பதும் இந்த ஸ்தோத்ரத்திற்கு ஆணிவேரான செய்தி.

ஸ்வாமிந் ஜகத்தரண வாரிதி மத்யகதம்
மாமுத்தராத்ய க்ருபயா கருணா பயோதே
லக்ஷ்மீம்ச தேஹி விபுலாம் ருண வாரணாய
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்

உலகின் ஒப்பற்ற நாயகா! உலகைத் தாங்குபவனே! ஸம்ஸாரக் கடலின் இடையே மூழ்கிக் தவிக்கும் என்னை மேலே கொண்டு வா, கேவலம் உன் கருணை ஒன்றினாலேயே கைதூக்கிவிடு. நீயே பாற்கடல் பள்ளி கொண்ட கருணைக்கடல். எம்பெருமானே எனக்கு நிறைய செல்வத்தைக் கொடு. நான் கடன்களையெல்லாம் தீர்க்க வேண்டும். ஹே! திருவேங்கடமுடையானே! நீ தான் எல்லா நிலைகளிலும் எனக்குக் கை கொடுத்து உதவ வேண்டும்.

திவ்யாங்கராக பரிசர்சித கோமலாங்க
பீதாம்பராவ்ருத தனோ தருணார்க பாஸ,
ஸத் காஞ்ச்ய நாப பரிதான ஸுபுட்டபந்த
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்

அழகிய, வாசனைத் திரவியங்களால் நன்கு பூசப்பட்ட, திருமேனி அழகுடையவனே பீதாம்பரத்தால் (மஞ்சள்பட்டாடை) சூழப்பட்ட திருமேனியானே! அதனால் இளஞ்சூரியனைப் போன்ற அழகனே! நல்ல பொன்னினாலான இரும்பு பட்டையை அணிந்துள்ள (மேகலை) திருவேங்கடமுடையானே! நீதான் எனக்குக் கைகொடுத்து உதவ வேண்டும்.

ரத்னாட்யதாம ஸுநிபத்த கடிப்ரதேச மாணிக்ய
தர்பண ஸுஸந்நிப ஜானுதேச
ஜங்கா த்வயேந பரிமோஹித ஸர்வலோக
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்

இரத்னங்கள் பதித்த இடையைச் சுற்றி நன்கு இணைக்கப்பட்ட அரைஞாண் கயிற்றை உடைய தாமோதரா! மாணிக்கக் கண்ணாடியோ என்று நன்கமையப்பட்ட முழங்கால்கள் உடையவனே! இரு கணைக்கால்களால் உலகம் முழுதும் மோஹிக்கச் செய்பவனே! திருவேங்கடத்தானே! நீதான் எனக்குக் கைக் கொடுத்து உதவ வேண்டும்.

லோகைக பாலன லஸத் பரிசோபிதாங்கரே!
ஸ்ரீவேங்கடேச மமதேஹி கராவலம்பம்
ஹார்தம் தமச்ச ஸகலம் லயமாப பூமன்
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்

உலகனைத்தையும் காப்பாற்றுவதினால் பெருமையும் அழகும் பொருந்திய திருவடிகளை உடைய திருவேங்கடநாதனே! நீர்தான் எனக்குக் கை கொடுத்து உதவ வேண்டும். நெஞ்சைப் பற்றியுள்ள இருளனைத்தையும் போக்க வேண்டும் பெரியோனே. திருவேங்கடத்தானே நீர்தான் எனக்குக் கைகொடுத்து உதவ வேண்டும்.

காமாதி வைரி நிவஹோச்யுத மே ப்ரயாத:
தாரித்ரிய மப்யப கதம் ஸகலம் தயாளோ
தீனம் சமாம் ஸமவலோக்ய தயார்த்ர த்ருஷ்ட்யா
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்.

காமம் முதலிய (காமம், வெகுளி, மயக்கம்) பகைவர்களால் வயப்பட்டிருக்கும் என்னைப் பற்றியுள்ள ஏழ்மையையும் (ஞானத்தாலும், பொருளாலும்) நீக்கி விடுவாய் கருணைக் கடலே. எளியவனான என்னை நன்கு கருணை நிரம்பிய பார்வையால் கடாக்ஷிக்க வேண்டும். திருவேங்கடத்தானே நீதான் எனக்குக் கை கொடுத்து உதவ வேண்டும்.

ஸ்ரீவேங்கடேச பதபங்கஜ ஷட்பதேந ஸ்ரீமந்
ந்ருஸிம்ஹ யதினா ரசிதம் ஜகத்யாம்
ஏதத் படந்தி மனுஜா: புருஷோத்தமஸ்ய
தே ப்ராப்னுவந்தி பரமாம் பதவீம் முராரே.

திருவேங்கடமுடையான் திருவடித் தாமரையில் ஆழ்ந்த அம்சிறை வண்டாம் நருஸிம்ஹ பாரதி எனும் யதிவரனால் அருளப்பட்ட இந்த வெங்கடேச கராவலம் பத்தைப் படிப்பவர்கள் உலகில் எல்லா நலங்களையும் வளங்களையும் பெற்றுப் பின்னர் விஷ்ணு லோகத்திலும் உயர்நிலையடைந்து வாழ்வர்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar