SS மஹாலக்ஷ்மி போற்றி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மஹாலக்ஷ்மி போற்றி
மஹாலக்ஷ்மி போற்றி
மஹாலக்ஷ்மி போற்றி

ஓம் அலர்மேல் அமர்ந்த அன்னையே போற்றி!
ஓம் அழகுடைய தெய்வமானவளே போற்றி!
ஓம் அழிவிலாச் செல்வம் அளிப்பவளே போற்றி
ஓம் அன்புரு கொண்டு திகழ்பவளே போற்றி!
ஓம் அருள் வடிவான அம்பிகையே போற்றி!
ஓம் அரங்கன் திருமார்பில் இருப்பவளே போற்றி
ஓம் அன்பர் தமக்கருள் ஆதிசக்தியே போற்றி!
ஓம் அஞ்சாத நெஞ்சம் கொண்டவளே போற்றி!
ஓம் அரும்பொருள் அனைத்தும் அளிப்பாய் போற்றி
ஓம் அந்தமில்லாப் பரம்பொருள் ஆனவளே போற்றி
ஓம் அங்கமதில் அமர்ந்தருள் செய்பவளே போற்றி
ஓம் அலர்மேல் மங்கை தாயே போற்றி!
ஓம் அன்புடையார் இல்லம் இருப்பாய் போற்றி!
ஓம் ஆனந்த நிலையத்தில் அமர்ந்தவளே போற்றி!
ஓம் ஆகமங்கள் போற்றும் அம்பிகையே போற்றி!
ஓம்  ஆதவன் தொழுதேற்றும் தேவியே போற்றி!
ஓம் ஆம்பலில் வாழுகின்ற அன்னையே போற்றி!
ஓம் ஆலவாய் எமக்காதரவு தருவாய் போற்றி!
ஓம் ஆதாரமான தெய்வம் ஆனாய் போற்றி!
ஓம் ஆணவமகற்றி அருள்தரும் அன்னையே போற்றி!
ஓம் ஆறுதலை அளிக்க வல்ல அஞ்சுகமே போற்றி!
ஓம் ஆலகாலத்தை அமுதமாக்கி அருளியவளே போற்றி!
ஓம்  ஆழியில் துயின்ற அன்னையே போற்றி!
ஓம் ஆவாரம் பூச்சூடி மகிழ்வாய் போற்றி!
ஓம் ஆக்கலும் அழிவின்றிக் காப்பவளே போற்றி!
ஓம் ஆனந்த வாழ்வருள் தேவி போற்றி!
ஓம் இன்பம் பலவாய் இருப்பாய் போற்றி
ஓம் லக்ஷ்மியே போற்றி!
ஓம் இல்லமெங்கும் இருந்து அருள்பவளே போற்றி!
ஓம் இதமாய் இன்பம் அளிப்பாய் போற்றி!
ஓம் இன்னல் அகற்றிடும் இன்பவல்லியே போற்றி!
ஓம் இவ்வுலகாளும் பேரானந்த அரசியே போற்றி!
ஓம் இறைவன் இதயத்தில் அமர்ந்தவளே போற்றி!
ஓம் இம்மையிலும் மறுமையிலும் துணையாவாய் போற்றி!
ஓம் இகவாழ்வில் இன்பம் அளிப்பவளே போற்றி!
ஓம் இன்முகத்துடன் காட்சி தருவாய் போற்றி!
ஓம் இன்னிசையால் பாட்டையீவாய் போற்றி!
ஓம் இசைகவி தனை எனக்குத் தருபவளே போற்றி!
ஓம் ஈயும் பண்பினை உடையவளே போற்றி!
ஓம் ஈரேழு உலகிற்கும் முதல்வி போற்றி!
ஓம் ஈனமிகு பிறவியை தவிர்ப்போப் போற்றி!
ஓம் ஈசவதற்கென்றே பிறந்தாய் போற்றி
ஓம் ஈரமுள்ள நெஞ்சுடைய நாயகியே போற்றி!
ஓம் ஈவார் இல்லம் அமர்ந்தாய் போற்றி!
ஓம் ஈரெட்டில் பலனை யீவாய் போற்றி!
ஓம் ஈன்றெடுத்த எமது தாயே போற்றி!
ஓம் உலகத்தில் செல்வம் அளிப்பாய் போற்றி!
ஓம் உகந்து வரமளிக்கும் உத்தமியே போற்றி!
ஓம் உயிர்களில் உயிராய் இருப்பவளே போற்றி!
ஓம் உசிதமாய் திருமலையில் உதித்தாய் போற்றி!
ஓம் உதயமாய் உதிக்கின்ற உன்னதமானவனே போற்றி!
ஓம் உண்மையின் உறைவிட மானவளே போற்றி!
ஓம் உந்தியத்தோன் மார்பில் உறைபவளே போற்றி!
ஓம் உலகெலாம் தொழுதிடும் உத்தமியே போற்றி!
ஓம் ஊக்கம் எமக்களிக்கும் உத்தமியே போற்றி!
ஓம் ஊட்டியே அமுதால் வளர்த்தவளே போற்றி!
ஓம் ஊண் உடை உலகுக்கு அளிப்பாய் போற்றி!
ஓம் ஊர்நடுவில் அமர்ந்திட்ட உகந்தவளே போற்றி!
ஓம் ஊழ்வினை மாற்றிடும் வல்லவளே போற்றி!
ஓம் ஊழியம் செய்யத்தூண்டிய உத்பவியே போற்றி!
ஓம் ஊருணியாய் ஊர்நடுவே இருப்பாய் போற்றி!
ஓம் ஊக்கமும் ஆக்கமும் தருவாய் போற்றி!
ஓம் ஊரறிய எம்மைக் காக்கும் தாயே போற்றி!
ஓம் எக்காலத்திலும் இருக்கும் என் அன்னையே போற்றி!
ஓம் எள்ளளவும் குறையில்லாது காப்பாய் போற்றி!
ஓம் எல்லோரும் வணங்கிடும் தெய்வமே போற்றி!
ஓம் எல்லையில்லா இன்பம் தருபவளே போற்றி!
ஓம் என்றும் எம்முள்ளத்தில் இருப்பாய் போற்றி!
ஓம் எண்ணத்தில் நிறைந்து எம்மைக்காப்பாய் போற்றி!
ஓம் ஏகசக்கராதிபதியான என்தாயே போற்றி!
ஓம் ஏக்கம் அகற்றிடும் அன்னையே போற்றி!
ஓம் ஏணியாய் இருந்தென்னை ஏற்றுவாய் போற்றி!
ஓம் ஏற்றமதை அளித்திடவே வந்தருள்வாய் போற்றி!
ஓம் ஏதிலார் குற்றங்களைந்தருள்வாய் போற்றி!
ஓம் ஏழுலகாளும் என் அன்னை ஆனவளே போற்றி!
ஓம் ஏரம்பனை மருகனாய் கொண்டவளே போற்றி!
ஓம் ஐயம் அகற்றி அருள்கின்ற தாயே போற்றி!
ஓம் ஐங்கரனுக்கு உகந்து வரம் அளித்தாய் போற்றி!
ஓம் ஐம்பொறியாய் திகழும் அன்னையே போற்றி!
ஓம் ஐயமில்லா வாழ்வை அருள்விடுவாய் போற்றி!
ஓம் ஐசுவரியம் ஈயும் அம்பிகையே போற்றி!
ஓம் ஐயப்பாடறியாத அன்னை ஆனவளே போற்றி!
ஓம் ஒப்புவமை மில்லா ஒருவளே போற்றி!
ஓம் ஒருங்குசேர் நற்கவியை நல்குவாய் போற்றி!
ஓம் ஒயிலாய் பக்தர் மனம் அமர்ந்தாய் போற்றி!
ஓம் ஒருமை மகளாய் இருப்பவளே போற்றி!
ஓம் ஒவிர்வு நிறையுடைய உத்தமியே போற்றி!
ஓம் ஒற்றுமை குலையாமல் காத்திடுவாய் போற்றி!
ஓம் ஒறுத்தல் அறியாத ஒருவளே போற்றி!
ஓம் ஓம் என்னும் சொல்லில் உதித்தவளே போற்றி!
ஓம் ஓயாத கவலையை ஒழிப்பாய் போற்றி!
ஓம் ஓரெட்டு லட்சுமியாய் திகழ்வாய் போற்றி!
ஓம் ஓர் குறையுமில்லா வரமளிப்பாய் போற்றி!
ஓம் ஓயாமல் பக்தர் குறைகளைவாய் போற்றி!
ஓம் ஓதிய வழியில் நின்றிட அருள்வாய் போற்றி!
ஓம் ஓடம் போன்று வாழ்வை சீர் அமைப்பாய் போற்றி!
ஓம் ஓதும் வேதமதை எனக்கு உரைப்பாய் போற்றி!
ஓம் ஓதாது உணர்ந்திடவே செய்வாய் போற்றி!
ஓம் ஓதவக் கடலினில் உறங்குவாய் போற்றி!
ஓம் ஓமம் செய்திடவே உதவிடுவாய் போற்றி!
ஓம் ஓதியகவியனைத்தும் உலகறியச் செய்வாய் போற்றி!
ஓம் ஓய்வின்றி உழைத்திடும் உத்தமியே போற்றி!
ஓம் ஒச்சமெனும் கீர்த்திதனை அளிப்பாய் போற்றி!
ஓம் ஔடதமாய் இருந்து நோய்தீர்ப்பாய் போற்றி!
ஓம் ஔவையைப்போல் அமர்ந்தருள்கின்றாய் போற்றி!
ஓம் ஔபாசனம் செய்ய அருளுவாய் போற்றி!
ஓம் ஔவையின் பொன் மொழிபோல் வாழ்த்துவாய் போற்றி!
ஓம் ஔவியம் அகற்றும் அலைமகளே போற்றி!

அகத்தியர் இயற்றிய அலைமகள் துதி!

மூவுலகும் இடரியற்றும் அடலவுணர்
உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவை உறழ் திருமேனி
அருட் கடவுள்

அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர் உலகினும் விளங்கும்
புகழ்க்கொல்லா
புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவை இருதாள்தொழுது
பழமறைதேர்
குறுமுனிவன் பழிச்சுகின்றான்.

கொழுதியிசை அளிமுரலும்
தாமரைமென்
பொகுட்டிலுறை கொள்கைபோல
மழையுறழுந் திருமேனி மணிவண்ணன்

இதயமலர் வைகுமானே
முழுதுலகும் இனிதீன்ற
அருட்கொம்பே
கரகமலம் முகிழ்ந்தெந்நாளுங்
கழிபெருங் காதலில்தொழுவோர்
வினைதீர
அருள்கொழிக்குங் கமலக் கண்ணாய்.

கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி
செழுங்கமலக் கையால் செய்ய
விமலை பசுங்கழைகுழைக்கும் வேவிலான்
தனையீன்ற விந்தை தூய
அமுதகும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலுள்

அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரம் அகன்றிடவொளிரும்
செழுஞ்சுடரே
எனவணக்கஞ் செய்வான் மன்னோ.
மடற்கமல நறும்பொகுட்டில்
அரசிருக்கும்

செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ
மணிவண்ணன்
உலகமெலாங் காவல் பூண்டாள்
படைத்தனன் நான்முகக்கிழவன்
பசுங்குழவி
மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன் நின் பெருங் கீர்த்தி
எம்மனோரால்
எடுத்துச் சொல்லற் பாற்றோ.

மல்லல்நெடும் புவியனைத்தும்
பொதுநீக்கித்
தனிபுரக்கும் மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில்
கட்டழகில்.
நிகரில்லாக் காட்சியோரும்
வெல்படையில் பகைதுரந்து
வெஞ்சமரில்.

வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும்
அணியிழைநின்
அருள்நோக்கம் அடைந்துளாரே.
செங்கமலப் பொலந்தாதில்
திகழ்தொளிரும்
எழின்மேனித் திருவே வேலை.

அங்கண் உலகிருள் துரக்கும் அலர்கதிராய்
வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
நெடுங்காவில் பொருப்பில் மண்ணில்
எங்குளைநீ அவண் அன்றோ
மல்லல்வளம்
சிறந்தோங்கி இருப்ப தம்மா.

இலக்குமி தோத்திரப் பலன்

என்று தமிழ்க் குறுமுனிவன்
பன்னியொடும்
இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
நன்றுனது துதிமகிழ்ந்தோம்
நான்மறையோய்
இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்யோகம்
நுகர்ந்திடுவர்
ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின்
வறுமைதரு
தவ்வை அவண் மருவல் செய்யாள்.

பொன்மழை பொழிக (கனகதாரா துதி தமிழில்)

மங்களப் பொன்னி மாலோன்
மார்பினில் மகிழ்வு மாந்தி
தங்கப்பெண் வண்டுக் கண்ணால்
தார் அணிப் பச்சை வண்ணன்
அங்கமே சிலிர்க்க நாணி
அனந்தனைப் பார்க்கச் செல்வம்
பொங்கிடும் கடைக்கண் தேவி
பூரித்தே மைக்கே தாராய்!

கருவிழி புரளும் பூக்கும்
காதலில் ஊடும் கூடும்
திருவினை எண்ண மெல்லச்
சிறுநகை வெட்கம் செய்ய
கரும்புத்தேன் கடைக்கண் வீச்சைக்
கவித்துமால் சுவைக்கும் செல்வம்
விரும்பினோம் விழியின் ஆட்டம்
வனப்பினை மைக்குக் காட்டாய்!
நிலை இமை விழிமுகத்தில்
நீந்திய பார்வை தாவும்
அலை அரவணைப்பான் மார்பில்
வாழும் கௌஸ்துபத்தின் மீதும்
அலைந்து அப்பிக் கோணல்
ஆயினும் அரைக்கண் வீச்சே
மலை மலையாகக் கோத்து
வளர்த்திட்ட மாலை ஆகும்.

கார்கில் மார்பில் இந்திர
கருமணி சேர்க்கக் கப்பும்
பேர் இருள் கிழிக்கும் மின்னல்
பார்வை நீ தேவி பாய்ச்ச
சேர்த்தானோ காதல் பித்தை
திருமாலே பெற்ற காமன்
வார்த்தருள் கடைக்கண் ஆட்சி
மாட்சிமை எமக்குத் தாராய்!

அரக்கனாம் மதுவை வென்ற
அரி அவன் மார்பில் மேகத்
திரட்சியில் தெறித்த மின்னல்
தேவி பாற்கடல் உதித்தோய்!
பிருகுசார் பெண்ணே கண்ணால்
பேரொளிப் பார்வை நல்கப்
பெருகிடும் செல்வம் தாயே!
பொன்மழை பொழி எமக்கே!

கைடபர் மதுவெல் மார்போன்!
காமனைத் தோற்கடித்தோன்
ஐயகோ மதனும் உய்ய அரைக்
கண்ணால் முகுந்தான் தன்னை
மைவிழிக் கண்ணால் ஒற்றி
மயக்கினாய் மைந்தன் காமன்
உய்வழிப் பார்வை எம்பால்
ஒளிபெறப் பெருகுமாதோ!

ஈடிலா லீலை செய்ய
இந்திரன் பதவி மீட்டான்
ஊடிடும் அருளும் சந்திர
ஒளி மலர்த்தாய் உன் பார்வை
கோடியாய் மணியும் பொன்னும்
கொட்டுமே மழையாய் அஃதே
தேடினேனே கமலத் தாயே!
சிறியனுக்(கு) அருள் செய்வாயே!

ஞானமும் தவமும் சாந்தி
நற்கதி கிடைப்பதற்கு
வானத்தில் மண்ணில் உள்ளோர்
வாழ்வெல்லாம் முயன்று தோற்பர்
ஆனாலும் கமலக்கண்ணன்
அருள் மழை ஆழநோக்குக்
கோணினும் கோடிச் செல்வம்
முக்தியும் கணத்தில் கொட்டும்!

அன்னே உன் தயவுக் காற்று
அகல் விழி மேகம் முந்த
பொன்னே பொன் மழையைக் கொட்டும்
பூவை நாரணனார் காதல்
கண்ணே உன் கருணைவெள்ளல்
குடிக்கும் புள்சாதகம் நான்
மின்பார்வை பட்டென் பாவம்
விடியப் பொன் மழை பெய்யட்டும்!

வாக்கினில் வாணி, வற்றா
வனப்பினில் செல்வி நீயே!
போக்கிடப் பழைமை தன்னைப்
புதுப்பிக்கும் துர்க்கை லீலை
ஆக்கலும் அளித்தல் மற்று
அழித்தலும் பிறையை நெற்றி
தேக்குவாய் உமையாய் காக்கும்
திரிபுவன தேவி ஆவாய்!

வேதமே வேத வித்வே
வினைப்பயன் விளைவே போற்றி
போதுக்கும் குணமாய் ஆழிப்
புகழ்ஒலி ரதியே போற்றி
சீதளக் கமல வல்லி
சக்தி ரூபிணியே போற்றி
நாதன்மால் வல்லபத்தின்
நனிவடிவானோய் போற்றி!

பங்கய முகத்தாய் போற்றி
பாற்கடல் உதித்தாய் போற்றி
திங்கள் வான் அமுதத்தோடு
தோன்றிய தேவி போற்றி
மங்களன் மார்பில் வாழும்
மாலோன் காதலியாள் போற்றி
எங்களுக்கு அருள வேண்டி
இறைஞ்சினோம் தேவி போற்றி!

தங்கத் தாமரையின் வாசி
தாரணித் தலைவி தேவர்
தங்கட்கும் கருணை காட்டும்
தயாபரி லட்சுமி தேவி
மங்கல வில்சார்ங்கம்
வலியதோள் தாங்கும் ரங்கன்
நங்கைநாயகியாள் பாதம்
நாள் எல்லாம் போற்றுவோமே!

பிருகுமா முனிவர் பெற்ற
பெண்மணி தேவி போற்றி
திருமாலின் இதயம் வாழும்
தெய்வமே வணங்குகின்றேன்
நறுமலர்க் கமலம் வாழும்
நாயகி வணங்குகிறேன்
கருங்கடல் வண்ணன் கண்ணன்
காதல் போற்றி போற்றி!

கமலப்பூ காந்தக் கண்கள்
கதிர் ஒளி வடிவே போற்றி
அமைந்த பல்உலகம் ஈன்ற
அனுபூதிச் செல்வி போற்றி
இமைத்திடா தேவர் மற்றோர்
ஏற்றிடும் இறைவி போற்றி
எமையருள் நந்த மைந்தர்க்கு
இனியளே போற்றி போற்றி!

பொறிபுலன் செல்வம் தந்தாய்
போற்றினேன் கமலக் கண்ணி
வறியவர் வாட்டம் நீக்கல்
வான்பதும் இந்திர போகம்
பெருமகிழ் ராஜ போகம்
பெற்றிடும் ஆசை நாசம்
திருவருள் நல்கும் உன்னைத்
துதிக்கவும் அருள் தா தாயே!

முரஹரி மாயோன் எங்கள்
முகுந்தனின் இதயம் வாழும்
தெரிவையே தேகம் வாக்குத்
திரிமனம் அடக்கிப் போற்றும்
திறமருள் கடைக்கண் பார்வை
திசைஎல்லாம் வீசும் தெய்வ
நறுமணக் கமல வல்லி
நான் உனைத் தொழச் செய்வாயே!

வெண்புட்டுச் சாந்தும் மல்லி
மாலையும் அணிந்து கையில்
தண்பட்ட தாமரைப் பூத்
தாங்கி ஒளிர் கமலவாசி
விண்பட்ட ஹரியின் தேவி
மோதினி மூன்றும் செல்வம்
பண்பட்டுக் கொழிக்க உள்ளம்
பகவதி கவர்ந்தாய் காப்பாய்!

மங்கள லோக மாதா
மாதவன் மனைவி வானக்
கங்கைநீர் ஆட்டத் தங்கக்
கலசங்கள் நிரப்பி யானை
எங்கணும் திசைகள் நான்கில்
எழுந்திட விடியற்காலை
அங்ககம் குளிர்ந்தாள் பாடி
அலைமகள் தொழுவோம் நாமே!

திருவருள் வெள்ளம் பொங்கித்
திசை அலை வீச இப்போ
கருணைசெய் கமலக்கண்ணன்
காதலி கடைக்கண் காட்டாய்!
வறுமைக்கு முதல்வன் என்று
வாழ்ந்தனேன் மாறும் வண்ணம்
பெருகிடச் செல்வம் தாயே
பொன்மழை பொழிவாய் நீயே!

உருகிட உள்ளம் நாளும்
உயர்கவி இதனைப் பாட
திரிபுவி மாதா வேதா!
சித்திசெய் குணமும் செல்வம்
தெரிந்துனைப் பாட வித்வம்
திண்ணமாய்ச் சேரும் எங்கள்
அரியணை ரமையே! இற்றே
ஆணிப்பெண் மழை பெய்வாயே!

திருமகள் துதி!

திருமிகு பீடம் தன்னில்
திகழ்ந்திடும் திருவே உந்தன்
திருக்கரம் அபயம் மற்றும்
திருவினை வரதம் நல்கும்
மருமலி மற்றைக் கைகள்
மாண்புடைச் சங்கு சக்ரம்
மறுவரு கதையும் கொள்ளும்
மகாலக்ஷ்மி போற்றி போற்றி!

அனைத்துல கெல்லாம் ஈன்றாள்
அதனை எல்லாம் அறிந்தாள்
அனைத்துள வரங்கள் யாவும்
அளித்திட வல்லாள் அன்னை
அடங்கிடாத் துட்டர் தம்மை
அலமறச் செய்யும் சக்தி
ஆன்றவை நல்கும் அன்னை
மகாலக்ஷ்மி போற்றி போற்றி!

மகத்துவ மிக்க தாகி
மன்னிடும் சித்தி புத்தி
இகத்தினில் போக பாக்யம்
இனியன தருத லோடே
முகமலர்ந் தின்ப மாக
முக்தியும் ஈயும் அன்னை
மகாமந்ர ரூப சக்தி
மகாலக்ஷ்மி போற்றி போற்றி!

தேவியின் பீடம் பத்மம்
திருப்பரம் பொருவின் ரூபம்
தேவியே உலகின் தாயாம்
தேன்பர மேஸ்வரியாம்
ஆவிநேர் அவளை நந்தம்
அகமெலாம் உறையும் நண்பை
மாமலர்த் தூபம் கொண்டே
மகாலக்ஷ்மி போற்றி செய்வோம்.

தூய செம் பட்டின் ஆடை
தூயவள் தாயும் பூண்டாள்
ஆயபல் லாபர ணங்கள்
அலங்கார மாகப் பெற்றாள்
பூவதின் இருப்பும் தாயே
பூமியின் விருப்பும் தாயே
மாமலர்த் தேனைப் போன்ற
மகாலக்ஷ்மி போற்றி போற்றி!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar