SS புத்திச்சாலித்தனம் வளர! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> புத்திச்சாலித்தனம் வளர!
புத்திச்சாலித்தனம் வளர!
புத்திச்சாலித்தனம் வளர!

கிருஷ்ண ஜெயந்தியன்று, தங்கள் குழந்தைகள் புத்திசாலித்தனமாக வளரவும், படிப்பில் முன்னிலை பெறவும் இந்த 108 போற்றியைச் சொல்லலாம். இதைச் சொல்லும் போது, கிருஷ்ணர் படத்தின் முன் வெண்ணெய், நெய் பண்டங்கள் நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு பிரசாதமாகக் கொடுங்கள்.

ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி
ஓம் அரங்கமா நகருளானே போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் அச்சுதனே போற்றி
ஓம் அமரேறே போற்றி
ஓம் அரவிந்த லோசனா போற்றி
ஓம் அர்ஜுனன் தோழா போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
ஓம் ஆபத்சகாயனே போற்றி
ஓம் ஆலிலை பாலகா போற்றி
ஓம் ஆழ்வார் நாயகா போற்றி
ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி
ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் ஆனிரை காத்தவனே போற்றி
ஓம் இமையோர் தலைவா போற்றி
ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி
ஓம் உடுப்பி உறைபவனே போற்றி
ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி
ஓம் உலகம் உண்ட வாயா போற்றி
ஓம் ஊழி முதல்வனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி
ஓம் எண் குணத்தானே போற்றி
ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி
ஓம் எழில் மிகு தேவா போற்றி
ஓம் ஏழைப் பங்காளா போற்றி
ஓம் ஒளிமணிவண்ணா போற்றி
ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி
ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் கலியுக தெய்வமே போற்றி
ஓம் கண்கண்ட தேவா போற்றி
ஓம் கம்சனை அழித்தாய் போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
ஓம் கமலக் கண்ணனே போற்றி
ஓம் கஸ்துõரி திலகனே போற்றி
ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி
ஓம் கிரிதர கோபாலனே போற்றி
ஓம் கீதையின் நாயகனே போற்றி
ஓம் குசேலர் நண்பனே போற்றி
ஓம் குருவாயூர் அப்பனே போற்றி
ஓம் கோபியர் தலைவனே போற்றி
ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி
ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி
ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி
ஓம் கோகுல பாலகனே போற்றி
ஓம் கோவிந்த ராஜனே போற்றி
ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி
ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி
ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி
ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி
ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி
ஓம் சாந்த குண சீலனே போற்றி
ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி
ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி
ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி
ஓம் தாமரைக் கண்ணனே போற்றி
ஓம் திருமகள் மணாளனே போற்றி
ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி
ஓம் துவாரகை மன்னனே போற்றி
ஓம் தேவகி செல்வனே போற்றி
ஓம் நந்த கோபாலனே போற்றி
ஓம் நந்த கோபன் குமரனே போற்றி
ஓம் நப்பின்னை மணாளனே போற்றி
ஓம் நவநீத சோரனே போற்றி
ஓம் நான்மறை பிரியனே போற்றி
ஓம் நாராயண மூர்த்தியே போற்றி
ஓம் பரந்தாமனே போற்றி
ஓம் பக்த வத்சலனே போற்றி
ஓம் பலராமர் சோதரனே போற்றி
ஓம் பவள வாயனே போற்றி
ஓம் பத்ம நாபனே போற்றி
ஓம் பார்த்த சாரதியே போற்றி
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
ஓம் பாண்டவர் துõதனே போற்றி
ஓம் பாண்டு ரங்கனே போற்றி
ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி
ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி
ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி
ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி
ஓம் பூதனையை கொன்றவனே போற்றி
ஓம் மதுசூதனனே போற்றி
ஓம் மண்ணை உண்டவனே போற்றி
ஓம் மயிற்பீலி அழகனே போற்றி
ஓம் மாய கிருஷ்ணனே போற்றி
ஓம் மாயா வினோதனே போற்றி
ஓம் மீராவின் வாழ்வே போற்றி
ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி
ஓம் முழு மதி வதனா போற்றி
ஓம் யமுனைத் துறைவனே போற்றி
ஓம் யசோதை செய் தவமே போற்றி
ஓம் யதுகுலத் திலகமே போற்றி
ஓம் ராதையின் நாயகனே போற்றி
ஓம் வசுதேவர் புதல்வா போற்றி
ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி
ஓம் வெள்ளை மனத்தானே போற்றி
ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி
ஓம் வேதியர் வாழ்வே போற்றி
ஓம் வேணு கோபாலனே போற்றி
ஓம் வைகுண்ட வாசனே போற்றி
ஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar