SS குறையொன்றுமில்லை கோவிந்தா - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> குறையொன்றுமில்லை கோவிந்தா
குறையொன்றுமில்லை கோவிந்தா
குறையொன்றுமில்லை கோவிந்தா

அலர்மேல் மங்கை உறைமார்பா அலைமகள் மணாளா கோவிந்தா
அடியேனை அடிமை கொள்வதற்கு ஐயுறவேண்டாம் கோவிந்தா
அனாதை நானென்று உன்னடி தொழுதால் கோவிந்தா
சுடராழி எடுத்து தூயரலை துடைப்பாய் கோவிந்தா

அன்று ஞாலம் அளந்த பிரான் கோவிந்தா
ஆவினம் மேய்த்தவனே கோவிந்தா ஹரி கோவிந்தா
ஆயர்கள் ஏற்றினை அச்சுதன் முகுந்தா கோவிந்தா
இலக்குமி வல்லப அபிடேகப் பிரியா கோவிந்தா

ஈதல் புரியும் இதயத் தெய்வமே கோவிந்தா
உலகம் உண்ட பெருவாயா முகுந்தா கோவிந்தா
உலப்பில் கீர்த்தி அம்மானே ரமணா கோவிந்தா
ஊழி முதல்வன் உருவம்போல் பெய்கருத்த கோவிந்தா

என்றும் எனக்கு இனிய தெய்வமே கோவிந்தா
ஏலார் குழல் மன்னவன் மாயவன் கோவிந்தா
ஐய ஆயர்கள் போரேறே ஆடுக கோவிந்தா
ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா கோவிந்தா

ஓராதான் பொன்முடி பத்தையும் சாய்த்தவனே கோவிந்தா
கடியார் பொழிலணி வேங்கடவா! கரும்போரேறே கோவிந்தா
குடமாடு கூத்தனே நல்லருள் தருவாய் கோவிந்தா
குறையொன்றும் இல்லை கோவிந்தா என் கோவிந்தா

குன்றம் ஏந்தி குளிர்மலை காத்தவனே கோவிந்தா
சென்று சேர்வோம் திருவேங்கட மலை கோவிந்தா
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே கோவிந்தா
வேதப் பொருள் வித்தகனே என் வேங்கடவா கோவிந்தா

திருமலை வேங்கட ரமணா முகுந்தா கோவிந்தா
வேண்டுபவர்க்கு வேண்டுபவை விருப்பமுடன் அளிப்பவனே கோவிந்தா
வெயிலில் வெந்துருகும் அடியவனுக்கு கோவிந்தா
சேவடி சேவிக்க திருவருள் புரியும் கோவிந்தா

மேயான் வேங்கடம் காயா மலர்வண்ணா கோவிந்தா
சேறார் சுனைத்தாமரை செந்தீமலரும் தேவா கோவிந்தா
சீமகள் தேடிய சீனிவாசன் மலை கோவிந்தா
நாமகள் நாதனுக்கருளிய நன் மலை கோவிந்தா

வேங்கடம் தீர்ப்பதால் வேங்கட கிரியாம் கோவிந்தா
வேங்கடத் தானுறை வேங்கடாத் திரியாம் கோவிந்தா
தேனார் பூஞ்சோலை திருவேங்கட மலை கோவிந்தா
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவிப்போம் கோவிந்தா

வங்கக் கடல் கடைந்த மாதவா கோவிந்தா
தினகர தேவா தரணி நாயகா கோவிந்தா
புனத்துழாய் மாலையோனே தேன்சுனை வேங்கடவா கோவிந்தா
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே கோவிந்தா
அனைவருக்கும் அருள் ஈந்து காப்பாய் கோவிந்தா


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar