SS வருவாய் வருவாய் கோவிந்தா - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வருவாய் வருவாய் கோவிந்தா
வருவாய் வருவாய் கோவிந்தா
வருவாய் வருவாய் கோவிந்தா

வருவாய் வருவாய் கோவிந்தா
வரணும் வரணும் கோவிந்தா    (வருவாய்)

நலமே செய்ய கோவிந்தா
வளமே தந்திட கோவிந்தா    (வருவாய்)

அறமே வளர்க்க கோவிந்தா
தர்மம் நிலைக்க கோவிந்தா    (வருவாய்)

பண்பை பெருக்க கோவிந்தா
அன்பை பெருக்க கோவிந்தா    (வருவாய்)

சொல்வளம் தந்திட கோவிந்தா
செல்வமும் நல்கிட கோவிந்தா     (வருவாய்)

மனநலம் காத்திட கோவிந்தா
உடல் நலம் பேணிட கோவிந்தா    (வருவாய்)

மழைவளம் சிறக்க கோவிந்தா
பயிர் வளம் தழைக்க கோவிந்தா    (வருவாய்)

நல்லவை செய்யவே கோவிந்தா
அல்லவை போக்கவே கோவிந்தா     (வருவாய்)

வல்லமை தந்திட கோவிந்தா
புலமை அருளிட கோவிந்தா    (வருவாய்)

பொய்மை அகற்றிட கோவிந்தா
உண்மை நிலைத்திட கோவிந்தா    (வருவாய்)

வறுமை நீங்கவே கோவிந்தா
ஏழ்மை அகற்றவே கோவிந்தா    (வருவாய்)

கல்வியை தந்திட கோவிந்தா
கலையும் அருளிட கோவிந்தா    (வருவாய்)

கூப்பிட்ட குரலுக்கு கோவிந்தா
கும்பிட்ட பக்தனுக்கு கோவிந்தா    (வருவாய்)

கலங்காத நெஞ்சம் தர கோவிந்தா
கலங்கரை விளக்கமாய் கோவிந்தா (வருவாய்)

ஞானம் அருளிட கோவிந்தா
அஞ்ஞானம் நீங்கிட கோவிந்தா  (வருவாய்)

ஒற்றுமை வளர்ந்திட கோவிந்தா
வேற்றுமை மறந்திட கோவிந்தா (வருவாய்)

அபயக் கரமே கோவிந்தா
பாதமே தொழுதேன் கோவிந்தா (வருவாய்)

மலரின் மணமே கோவிந்தா
கனியின் சுவையே கோவிந்தா (வருவாய்)

தேனினும் சுவையே கோவிந்தா
தெவிட்டாத அமுதமே கோவிந்தா (வருவாய்)

இன்மொழி பேசி கோவிந்தா
நல்லாசி நல்கும் கோவிந்தா (வருவாய்)

தாயும் தந்தையும் கோவிந்தா
எல்லாம் நீயே கோவிந்தா (வருவாய்)

நாமங்கள் சொல்லிட கோவிந்தா
பாவங்கள் விலகுமே கோவிந்தா (வருவாய்)

நெடியவனே திருமாலே கோவிந்தா
அடியோரை வாழ்த்திடும் கோவிந்தா (வருவாய்)

கீதையைத் தந்தவனே கோவிந்தா
கோதை நாயகனே கோவிந்தா (வருவாய்)

திருமலை வேங்கடவா கோவிந்தா
திருவருள் புரிவாய் கோவிந்தா (வருவாய்)

ராமசந்திரா கோவிந்தா
சீதா ராமா கோவிந்தா
ராதா கிருஷ்ணா கோவிந்தா
ராமா கிருஷ்ணா கோவிந்தா (வருவாய்)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar