SS குஹபஞ்சரத்னம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> குஹபஞ்சரத்னம்
குஹபஞ்சரத்னம்
குஹபஞ்சரத்னம்

ஓம்காரநகரஸ்த்தம் தம் நிகமாந்த வனேச்வரம்
நித்யமேகம் சிவம் சாந்தம்
வந்தே குஹம் உமாஸுதம்

ஓம்கார நகரத்தில் வசிப்பவனும், வேதாந்த வனத்திற்கு ஈசுவரனும் என்றும் உள்ளவனும், ஒன்றேயானவனும், மங்களகரனும், சாந்தவடி வினனும், உமாதேவியின் புத்திரனுமான குஹனை நமஸ்கரிக்கிறேன்.

வாசாமகோசரம் ஸ்கந்தம்
சிதுத்யான விஹாரிணம்
குருமூர்த்திம் மஹேசானம்
வந்தே குஹம் உமாஸுதம்

வாக்கிற்கு எட்டாதவனும், சிவனிடமிருந்து துள்ளி வெளிப்பட்டவனும், சித்தாகிற தோட்டத்தில் ரமிக்கின்றவனும், குருமூர்த்தியும்,  மகேசுவரனும், உமாதேவியின் புத்திரனுமான குஹனை நமஸ்கரிக்கிறேன்.

ஸச்சிதானந்த ரூபேசம்
ஸம்ஸார த்வாந்த தீபகம்
ஸுப்ரஹ்மண்யம் அனாத்யந்தம்
வந்தே குஹம் உமாஸுதம்

சச்சிதானந்த வடிவினனும், சம்சார இருளுக்குத் தீபமானவனும், ஸ்ரீசுப்ரமண்யனும், ஆதி அந்தம் இல்லாதவனும் உமாதேவியின் புத்திரனுமான குஹனை நமஸ்கரிக்கிறேன்.

ஸ்வாமிநாதம் தயாஸிந்தும்
பவாப்தே தாரகம் ப்ரபும்
நிஷ்களங்கம் குணாதீதம்
வந்தே குஹம் உமாஸுதம்

சுவாமிநாதனும், கருணைக் கடலானவனும், சம்ஸார சாகரத்தைத் தாண்ட வைப்பவனும், பிரபுவும், களங்கமற்றவனும், (ஸத்வ, ரஜஸ், தமோ) குணங்களுக்கு அப்பால் உள்ளவனும், உமாதேவியின் புத்திரனுமான குஹனை நமஸ்கரிக்கிறேன்.

நிராகாரம் நிராதாரம் நிர்விகாரம் நிராமயம்
நிர்த்வந்த்வம் ச நிராலம்பம்
வந்தே குஹம் உமாஸுதம்

உருவமில்லாதவனும், எதனாலும் தாங்கப் படாதவனும் ஆனால் அனைத்திற்கும் ஆதாரமானவனும், மாற்றமில்லாதவனும், அழிவற்றவனும், இரண்டாவதாக எதுவும் இல்லாதவனும் (ஏகனும்) பற்றற்றவனும், உமாதேவியின் மைந்தனுமான குஹனை நமஸ்கரிக்கிறேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar