SS திருமாலின் ஆயிரம் திருநாமங்கள்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> திருமாலின் ஆயிரம் திருநாமங்கள்!
திருமாலின் ஆயிரம் திருநாமங்கள்!
திருமாலின் ஆயிரம் திருநாமங்கள்!

ஓம் அயர்வறும் அமரர்கள் அதிபதி போற்றி
ஓம் உயர்வற உயர்நலம் உடையவ போற்றி
ஓம் மயர்வற மதிநலம் அருளினாய் போற்றி
ஓம் பயிலும் சுடரொளி மூர்த்தி போற்றி
ஓம் பூமகள் நாயக போற்றி
ஓம் ஓடை மாமத யானை உதைத்தவ போற்றி
ஓம் அண்டக் குலத்துக்கு அதிபதி போற்றி
ஓம் பிண்டமாய் நின்ற பிரானே போற்றி
ஓம் அத்தா போற்றி
ஓம் அரியோ போற்றி

ஓம் பத்துடை அடியவர்க்கு எளியாய் போற்றி
ஓம் அகவுயிர்க்கு அமுதே போற்றி
ஓம் மாயச் சகடம் உதைத்தாய் போற்றி
ஓம் ஞானச் சுடரே போற்றி
ஓம் சொல் உளாய் போற்றி
ஓம் உடையாய் போற்றி
ஓம் உத்தமா போற்றி
ஓம் அதிர்குரல் சங்கத்து அழகா போற்றி
ஓம் கதியே போற்றி
ஓம் கரியாய் போற்றி

ஓம் குறளாய் போற்றி
ஓம் குருமணி போற்றி
ஓம் மறையாய் போற்றி
ஓம் மாதவா போற்றி
ஓம் அந்தணர் வணங்கும் தன்மைய போற்றி
ஓம் சிந்தனைக்கு இனியாய் போற்றி
ஓம் சிற்றாயர் சிங்கமே போற்றி
ஓம் சேயோய் போற்றி
ஓம் அங்கதிர் அடியாய் போற்றி
ஓம் அசுரர்கள் நஞ்சே போற்றி

ஓம் நாதா போற்றி
ஓம் பஞ்சவர் தூதா போற்றி
ஓம் பாரிடம் கீண்டவ போற்றி
ஓம் கேசவா போற்றி
ஓம் நீண்டாய் போற்றி
ஓம் நிமலா போற்றி
ஓம் முதல்வா போற்றி
ஓம் முத்தா போற்றி
ஓம் அழகா போற்றி
ஓம் அமுதே போற்றி
ஓம் கஞ்சனைக் காய்ந்த காளாய் போற்றி

ஒம் அஞ்சனக்குன்றே போற்றி
ஓம் அஞ்சன வண்ணா போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் அண்ணா போற்றி
ஓம் அண்ணலே போற்றி
ஓம் அச்சுதா போற்றி
ஓம் அச்சனே போற்றி
ஓம் அச்சுவைக் கட்டியே போற்றி
ஓம் அந்தணர் சிந்தையாய் போற்றி
ஓம் சீதரா போற்றி

ஓம் அந்த முதல்வா போற்றி
ஓம் அந்தரம் ஆனாய் போற்றி
ஓம் அருவா போற்றி
ஓம் வானே தருவாய் போற்றி
ஓம் வேதப் பிரானே போற்றி
ஓம் பிறப்பிலி போற்றி
ஓம் இராமா போற்றி
ஓம் இறைவா போற்றி
ஓம் வக்கரன் வாய்முன் கீண்டவ போற்றி
ஓம் அக்காரக் கனி போற்றி

ஓம் அங்கண் நாயக போற்றி
ஓம் நம்பீ போற்றி
ஓம் காய்சின வேந்தே போற்றி
ஓம் அங்கை ஆழி கொண்டவனே போற்றி
ஓம் அந்தமில் ஊழியாய் போற்றி
ஓம் உலப்பு இலாய் போற்றி
ஓம் காரணா போற்றி
ஓம் கள்வா போற்றி
ஓம் சீரணா போற்றி
ஓம் சேவகா போற்றி

ஓம் உரையார் தொல்புகழ் உத்தம போற்றி
ஓம் அரையா போற்றி
ஓம் அண்டா போற்றி
ஓம் அந்தமில் ஆதியம் பகவனே போற்றி
ஓம் அந்தணர் அமுதே போற்றி
ஓம் ஆநிரை காத்தாய் போற்றி
ஓம் கருமணி போற்றி
ஓம் கூத்தாய் போற்றி
ஓம் குறும்பா போற்றி
ஓம் ஆவல் அன்பு உடையார் மனத்தாய் போற்றி

ஓம் மூவர் காரியமும் திருத்துவாய் போற்றி
ஓம் மூதறிவாளனே போற்றி
ஓம் முதுவேத கீதனே போற்றி
ஓம் கேடு இலி போற்றி
ஓம் அடர்பொன் முடியாய் போற்றி
ஓம் மென்தளிர் அடியாய் போற்றி
ஓம் அமலா போற்றி
ஓம் அடிமூன்று இரந்து அவன் கொண்டாய் போற்றி
ஓம் கடவுளே போற்றி
ஓம் கண் ஆவாய் போற்றி

ஓம் அரவப்பகை ஊர்பவனே போற்றி
ஓம் குரவை கோத்த குழகா போற்றி
ஓம் அலரே போற்றி
ஓம் அரும்பே போற்றி
ஓம் நலங்கொள் நாத போற்றி
ஓம் நான்மறை தேடி ஓடும் செல்வா போற்றி
ஓம் ஆடரவு அமளியில் துயில்வோய் போற்றி
ஓம் மூன்றெழுத்தாய முதல்வா போற்றி
ஓம் தோன்றாய் போற்றி
ஓம் துப்பனே போற்றி

ஓம் அலமும் ஆழியும் உடையாய் போற்றி
ஓம் கலந்தவர்க்கு அருளும் கருத்தாய் போற்றி
ஓம் அணிவரை மார்ப போற்றி
ஓம் அரிகுலம் பணி கொண்டு அலைகடல் அடைத்தாய் போற்றி
ஓம் அரிமுக போற்றி
ஓம் அந்தணா போற்றி
ஓம் உரக மெல்லணையாய் போற்றி
ஓம் உலகம் தாயவ போற்றி
ஓம் தக்காய் போற்றி
ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி

ஓம் யார்க்கும் அரியவ போற்றி
ஓம் அப்பனே போற்றி
ஓம் கர நான்கு உடையாய் போற்றி
ஓம் கற்பகக் காவன நற்பல தோளாய் போற்றி
ஓம் ஆவினை மேய்க்கும் வல்லாயா போற்றி
ஓம் ஆலநீள் கரும்பே போற்றி
ஓம் அலையார் வேலை வேவ வில் வளைத்தாய் போற்றி
ஓம் அப்பிலார் அயலாய் நின்றாய் போற்றி
ஓம் செப்பம் அது உடையாய் போற்றி
ஓம் சேர்ந்தார் தீவினைகட்கு அருநஞ்சே போற்றி

ஓம் காவல போற்றி
ஓம் கற்கீ போற்றி
ஓம் குன்றால் மாரி தடுத்தவ போற்றி
ஓம் நன்றெழில் நாரண போற்றி
ஓம் நந்தா விளக்கே போற்றி
ஓம் வேதியா போற்றி
ஓம் அளப்பரு வேலையை அடைத்தாய் போற்றி
ஓம் சீலா போற்றி
ஓம் செல்வா போற்றி
ஓம் பாலாலிலையில் துயின்றாய் போற்றி

ஓம் மிக்காய் போற்றி
ஓம் மெய்யா போற்றி
ஓம் சக்கரச் செல்வா போற்றி
ஓம் நலனுடை ஒருவா போற்றி
ஓம் ஒண்சுடர் போற்றி
ஓம் அருமறை தந்தாய் போற்றி
ஓம் ஆணிச் செம்பொன் மேனி எந்தாய் போற்றி
ஓம் எம்பிரான் போற்றி
ஓம் எங்கோன் போற்றி

ஓம் உறவு சுற்றம் ஒன்று இலாய் போற்றி
ஓம் பிறர்களுக்கு அரிய வித்தகா போற்றி
ஓம் பரமா போற்றி
ஓம் பதியே போற்றி
ஓம் மரகத வண்ணா போற்றி
ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
ஓம் மன்றில் குரவை பிணைந்த மாலே போற்றி
ஓம் போதலர் நெடுமுடிப் புண்ணிய போற்றி
ஓம் மாது உகந்த மார்பா போற்றி
ஓம் முனிவரர் விழுங்கும் கோதில் இன்கனியே போற்றி

ஓம் அழக்கொடி அட்டாய் போற்றி
ஓம் அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினாய் போற்றி
ஓம் அமரர்க்கு அமுதம் ஈந்தோய் போற்றி
ஓம் ஆதியஞ் சோதி போற்றி
ஓம் ஆதி பூதனே போற்றி
ஓம் புராண போற்றி
ஓம் புனிதா போற்றி
ஓம் புலவா போற்றி
ஓம் தனியா போற்றி
ஓம் தத்துவா போற்றி

ஓம் நச்சுவார் உச்சிமேல் நிற்பாய் போற்றி
ஓம் நிச்சம் நினைவார்க்கு அருள்வாய் போற்றி
ஓம் ஆளரி போற்றி
ஓம் ஆண்டாய் போற்றி
ஓம் வாள் அரக்கருக்கு நஞ்சே போற்றி
ஓம் விகிர்தா போற்றி
ஓம் வித்தகா போற்றி
ஓம் உகங்கள் தொறும் உயிர் காப்பாய் போற்றி
ஓம் மல்லா போற்றி
ஓம் மணாளா போற்றி

ஓம் எல்லாப் பொருளும் விரித்தாய் போற்றி
ஓம் வையம் தொழு முனி போற்றி
ஓம் சக்கரக் கையனே போற்றி
ஓம் கண்ணா போற்றி
ஓம் குணப்பரா போற்றி
ஓம் கோளரி போற்றி
ஓம் அணைப்பவர் கருத்தாய் போற்றி
ஓம் கற்பே போற்றி
ஓம் கற்பகம் போற்றி
ஓம் அற்புதா போற்றி

ஓம் அற்றவர்கட்கு அருமருந்தே போற்றி
ஓம் மருத்துவ போற்றி
ஓம் இருங்கை மதகளிறு ஈர்த்தாய் போற்றி
ஓம் உள்ளுவார் உள்ளத்து உறைவாய் போற்றி
ஓம் தெள்ளியார் கைதொழும் தேவனே போற்றி
ஓம் வாமா போற்றி
ஓம் வாமனா போற்றி
ஓம் ஆம் ஆறு அறியும் பிரானே போற்றி
ஓம் ஓரெழுத்து ஓருரு ஆனவ போற்றி
ஓம் ஆரெழில் வண்ண போற்றி

ஓம் ஆரா அமுதே போற்றி
ஓம் ஆதி போற்றி
ஓம் கமலத் தடம் பெரும் கண்ணா போற்றி
ஓம் நண்ணல் அரிய பிரானே போற்றி
ஓம் கண்ணுதல் கூடிய அருத்தா போற்றி
ஓம் தொல்லையஞ் சோதி போற்றி
ஓம் ஞானம் எல்லை இலாதா போற்றி
ஓம் கவிக்கு நிறை பொருள் போற்றி
ஓம் நீதியே போற்றி
ஓம் அறம் தானாகித் திரிவாய் போற்றி

ஓம் புறம் தொழுவார்க்குப் பொய்யன் வாழ்க
ஓம் மறை மலர்ச் சுடர் வாழ்க
ஓம் மறையோர் கண்ணான் வாழ்க
ஓம் கவியுள்ளான் வாழ்க
ஓம் பண் உளான் வாழ்க
ஓம் பண்பன் வாழ்க
ஓம் மண்மகள் கேள்வன் வாழ்க
ஓம் மாக விண்முதல் நாயகன் வாழ்க
ஓம் வித்தகப் பிள்ளை வாழ்க
ஓம் பித்தன் வாழ்க

ஓம் ஒள்ளியான் வாழ்க
ஓம் உயர்ந்தான் வாழ்க
ஓம் மண்பகர் கொண்டான் வாழ்க
ஓம் நறுவிய தண்துழாய் வேதியன் வாழ்க
ஓம் மண்புரை வையம் இடந்த வராகன் வாழ்க
ஓம் அய்யன் வாழ்க
ஓம் ஆத்தன் வாழ்க
ஓம் பரிவாய் கீண்ட சீரான் வாழ்க
ஓம் கரிய முகில் புரை மேனியன் வாழ்க
ஓம் கலையார் சொற்பொருள் வாழ்க

ஓம் தெய்வத் தலைவன் வாழ்க
ஓம் தஞ்சன் வாழ்க
ஓம் பண்புடை வேதம் பயந்தான் வாழ்க
ஓம் வெண்புரி நூலுடை மார்பன் வாழ்க
ஓம் தனி மாத் தெய்வம் வாழ்க
ஓம் அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனி வாழ்க
ஓம் ஏலு மறைப் பொருள் வாழ்க
ஓம் இறப்பு எதிர்காலக் கழிவும் ஆனவன் வாழ்க
ஓம் இன்பன் வாழ்க
ஓம் ஈசன் வாழ்க

ஓம் அன்பன் வாழ்க
ஓம் அறவன் வாழ்க
ஓம் அறமுயலாழிப் படையவன் வாழ்க
ஓம் உறியார் வெண்ணெய் உண்டு உகந்தான் வாழ்க
ஓம் செந்தமிழ் பாடுவார் தேவன் வாழ்க
ஓம் சுந்தரன் வாழ்க
ஓம் சூழச்சி ஞானச் சுடரொளி வாழ்க
ஓம் சோதீ வாழ்க
ஓம் உடன்மிசை உயிரெனக் கரந்தோன் வாழ்க
ஓம் ஆடற் பறவையன் வாழ்க

ஓம் எடுப்பும் ஈடுமில் ஈசன் வாழ்க
ஓம் உட்குடை அசுரர் உயிரெலாம் உண்டவன் வாழ்க
ஓம் பசுநிரை தொலைவு தவிர்த்தான் வாழ்க
ஓம் எண்ணம் புகுந்து திதிப்போன் வாழ்க
ஓம் எண்ணன் வாழ்க
ஓம் எண்ணுவார் இடரைக் களைவான் வாழ்க
ஓம் கற்றாயன் வாழ்க
ஓம் கிளரொளி மாயன் வாழ்க
ஓம் காள மேகம் வாழ்க
ஓம் மெய்மை வாழ்க

ஓம் நாக நடுக்கம் தீர்த்தான் வாழ்க
ஓம் வேதன் வாழ்க
ஓம் வீடு உடையான் வாழ்க
ஓம் போதகம் வீழப் பொருதான் வாழ்க
ஓம் வைய முதல்வன் வாழ்க
ஓம் ஆண்டளக்கும் ஐயன் வாழ்க
ஓம் அரங்கன் வாழ்க
ஓம் ஆற்ற நல்வகை காட்டுவோன் வாழ்க
ஓம் ஊற்றம் உடையான் வாழ்க
ஓம் செங்கட் கருமுகில் வாழ்க

ஓம் காரணம் கிரிசை கரும முதல்வன் வாழ்க
ஓம் கன்னலின் கட்டியே வாழ்க
ஓம் கரிய குழலுடைக் குட்டன் வாழ்க
ஓம் கூற்றம் வாழ்க
ஓம் கருவினை வண்ணன் வாழ்க
ஓம் கருமமும் கரும பலனும் ஆவோன் வாழ்க
ஓம் தேவர் விருத்தன் வாழ்க
ஓம் தேவர்க்கும் தேவன் வாழ்க
ஓம் தெய்வம் மூவரில் முதல்வன் வாழ்க
ஓம் முகுந்தன் வாழ்க

ஓம் சதிரன் வாழ்க
ஓம் சந்தோகன் வாழ்க
ஓம் சுடர்கொள் சோதீ வாழ்க
ஓம் கடலுள் கிடந்தவன் வாழ்க
ஓம் கேழல் வாழ்க
ஓம் பவித்திரன் வாழ்க
ஓம் பரபரன் வாழ்க
ஓம் திவத்தை அருள்பவன் வாழ்க
ஓம் கணக்கறு நலத்தினன் வாழ்க
ஓம் நம்பன் வாழ்க

ஓம் நிலத்திடைக் கீண்ட அம்மான் வாழ்க
ஓம் பீதக ஆடையன் வாழ்க
ஓம் வேள்வியும் வேதமும் ஆனான் வாழ்க
ஓம் வேண்டிற்று எல்லாம் தருபவன் வாழ்க
ஓம் யார்க்கும் நல்லான் வாழ்க
ஓம் நம்பிரான் வாழ்க
ஓம் கூடாரை வெலும் சீர்க் கோவிந்தன் வாழ்க
ஓம் ஓடாப் படையான் வாழ்க
ஓம் கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டவன் வாழ்க
ஓம் நிறம் கிளர் சோதி நெடுந்தகை வாழ்க

ஓம் பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் வாழ்க
ஓம் மறைப்பொருள் வாழ்க
ஓம் மாயன் வாழ்க
ஓம் மன்று அமரக் கூத்தாடினான் வாழ்க
ஓம் என்றும் அறியான் வாழ்க
ஓம் ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் வாழ்க
ஓம் வென்றிநீர் மழுவன் வாழ்க
ஓம் வினைதீர் மருந்தே வாழ்க
ஓம் மணியே வாழ்க
ஓம் அருந்தேவன் வாழ்க

ஓம் அழகன் வாழ்க
ஓம் அன்னமாய் அருமறை பயந்தான் வாழ்க
ஓம் தன்னடியார் மனத்து என்றும் தேன் வாழ்க
ஓம் மனத்துக்கு இனியான் வாழ்க
ஓம் மாசு அற்றார் மனத்து உளான் வாழ்க
ஓம் மணிக்குன்று வாழ்க
ஓம் மதிகோள் விடுத்த தேவன் வாழ்க
ஓம் மதியில் நீசர் சென்று அடையான் வாழ்க
ஓம் முடிகள் ஆயிரத்தான் வாழ்க
ஓம் அவனி அடிமூன்று இரந்து கொண்டவன் வாழ்க

ஓம் அமுதம் கொண்டான் வாழ்க
ஓம் அமரர்தம் அமுதே வாழ்க
ஓம் அறிவன் வாழ்க
ஓம் ஆயிரம் பேருடை அம்மான் வாழ்க
ஓம் ஆயன் வாழ்க
ஓம் ஆதியான் வாழ்க
ஓம் பணிலம் வாய் வைத்தான் வாழ்க
ஓம் கன்று குணிலா எறிந்தான் வாழ்க
ஓம் கொள்ளக் குறைவிலன் வாழ்க
ஓம் கோவலன் வாழ்க

ஓம் மறுகல் இல் ஈசன் வாழ்க
ஓம் மறைநான்கும் ஓதினான் வாழ்க
ஓம் ஊழி வாழ்க
ஓம் ஆதியம் புருடன் வாழ்க
ஓம் ஆயர்க்கு அதிபதி வாழ்க
ஓம் ஆளன் வாழ்க
ஓம் நிதியன் வாழ்க
ஓம் நெடுமால் வாழ்க
ஓம் படிவானம் இறந்த பரமன் வாழ்க
ஓம் தடவரைத் தோளன் வாழ்க

ஓம் தூய பெருநீர் யமுனைத் துறைவன் வாழ்க
ஓம் எரி நீர் வளி வான் மண்ணான் வாழ்க
ஓம் கல்விநாதன் வாழ்க
ஓம் பயில்நூல் நல்யாழ் நரம்பின் முதிர்சுவை வாழ்க
ஓம் பூவன் வாழ்க
ஓம் பூவணை மேவிய தேவி மணாளன் வாழ்க
ஓம் மை தோய் சோதி வாழ்க
ஓம் தூயான் வாழ்க
ஓம் ஆதி வராகமும் ஆனான் வாழ்க
ஓம் ஆழியங் கையில் கொண்டான் வாழ்க

ஓம் வேழப் போதகம் வாழ்க
ஓம் அசுரரைத் துணிப்பான் வாழ்க
ஓம் துயக்கன் வாழ்க
ஓம் கணக்கு இல் கீர்த்தியான் வாழ்க
ஓம் அடியார்க்கு அருள்பவன் வாழ்க
ஓம் அண்டம் ஊடுருவப் பெருந்திசை நிமிர்ந்தான் வாழ்க
ஓம் அஞ்சன மேனியன் வாழ்க
ஓம் வெள்ளை மூர்த்தி ஆனவன் வாழ்க
ஓம் அருங்கல உருவின் ஆயர் பெருமகன் வாழ்க
ஓம் தலைகண் ஆயிரம் உடையான் வாழ்க

ஓம் அடியார்க்கு மெய்யன் வாழ்க
ஓம் மின்னும் ஆழியங் கையன் வாழ்க
ஓம் காலிகள் மேய்க்க வல்லவன் வாழ்க
ஓம் வல்லான் வாழ்க
ஓம் அல்லிக் கமலக் கண்ணன் வாழ்க
ஓம் எய்ப்பினில் வைப்பே வாழ்க
ஓம் அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயன்  வாழ்க
ஓம் அணிகொள் மரகதம் வாழ்க
ஓம் தாள் அடைந்தார்க்கு அணியன் வாழ்க
ஓம் அனந்தன் வாழ்க

ஓம் அமுதினும் ஆற்ற இனியான் வாழ்க
ஓம் தமர்கட்கு எளியான் வாழ்க
ஓம் தேவகி சிறுவன் வாழ்க
ஓம் சிட்டன் வாழ்க
ஓம் அறிவுப்பயன் வாழ்க
ஓம் ஆவி வாழ்க
ஓம் வானோர் நாயகன் வாழ்க
ஓம் தனக்குத் தானே உவமன் வாழ்க
ஓம் தேடற்கு அரியவன் வாழ்க
ஓம் ஆட்கொள்ள வல்ல பெருமான் வாழ்க

ஓம் பெருந்தகை வாழ்க
ஓம் பேதியா இன்ப வெள்ளம் வாழ்க
ஓம் வேதநல் விளக்கே வாழ்க
ஓம் வேதப் புனிதன் வாழ்க
ஓம் புணைவன் வாழ்க
ஓம் கனிவார் வீட்டு இன்பம் வாழ்க
ஓம் கங்கை போதரக் கால்நிமிர்ந்தான் வாழ்க
ஓம் நங்கள் வைப்பும் வாழ்வும் வாழ்க
ஓம் யாதவன் வாழ்க
ஓம் யாழிசை வாழ்க

ஓம் ஆதியம் பெருமான் வாழ்க
ஓம் வேதம் கண்டான் வாழ்க
ஓம் கைம்மா துன்பம் விண்டான் வாழ்க
ஓம் விண்ணாளி வாழ்க
ஓம் வில்லான் வாழ்க
ஓம் விபீடணற்கு நல்லான் வாழ்க
ஓம் நர நாரணணாய் அறநூல் விரித்தான் வாழ்க
ஓம் வேள்வியில் குறளாய் நிமிர்ந்த வஞ்சகன் வாழ்க
ஓம் அஞ்சிறைப் புள்ளின் பாகன் வாழ்க
ஓம் கஞ்சனை வஞ்சனை செய்தான் வாழ்க

ஓம் அமரர் கோமான் வாழ்க
ஓம் என்றும் இமையவர்க்கு அரியான் வாழ்க
ஓம் இமையவர் குலமுதல் வாழ்க
ஓம் குலக்குமரன் வாழ்க
ஓம் அலைகடல் வண்ணன் வாழ்க
ஓம் அலைகடல் பள்ளியான் வாழ்க
ஓம் பரமேட்டி வாழ்க
ஓம் வெள்ளத்து அரவில் துயின்றான் வாழ்க
ஓம் குன்றாரும் திறல் தோளன் வாழ்க
ஓம் கன்றால் விளவெறிந்த காளை வாழ்க

ஓம் மதகளிறு அன்னான் வெல்க
ஓம் மதுரைப் பதியினன் வெல்க
ஓம் பத்தர் ஆவி வெல்க
ஓம் அசுரர் கூற்றம் வெல்க
ஓம் மணித்தேர் விசயற்கு ஊர்ந்தான் வாழ்க
ஓம் யசோதை தன் சிங்கம் வெல்க
ஓம் சிலையாளன் வெல்க
ஓம் செங்கதிர் முடியான் வெல்க
ஓம் அடல் ஆழிப் பிரான் வெல்க
ஓம் பீடுடையான் வெல்க

ஓம் இராவணாந்தகன் வெல்க
ஓம் அந்தமில் புகழான் வெல்க
ஓம் புனலுருவன் வெல்க
ஓம் திகழும் பவளத்து ஒளியான் வெல்க
ஓம் அந்தமிழ் இன்பப் பாவினன் வெல்க
ஓம் இந்திரன் சிறுவன்தேர் முன் நின்றான் வெல்க
ஓம் ஆநிரை மேய்த்தான் வெல்க
ஓம் வைத்த மாநிதி வெல்க
ஓம் மண் இரந்தான் வெல்க
ஓம் மத்த மாமலை தாங்கீ வெல்க

ஓம் சித்திரத் தேர் வலான் வெல்க
ஓம் சீற்றம் இல்லவன் வெல்க
ஓம் இழுதுண்டான் வெல்க
ஓம் மல்லரை அட்டான் வெல்க
ஓம் மாசறு சோதீ வெல்க
ஓம் சுடர்விடு கமலப் பாதன் வெல்க
ஓம் பகலாளன் வெல்க
ஓம் படிக் கேழில்லாப் பெருமான் வெல்க
ஓம் இடிக்குரல் இன விடை அடர்த்தான் வெல்க
ஓம் அரட்டன் வெல்க

ஓம் அரியுருவன் வெல்க
ஓம் இரட்டை மருதம் இறுத்தான் வெல்க
ஓம் வாணன் தடந்தோள் துணித்தான் வெல்க
ஓம் ஓணத்தான் வெல்க
ஓம் உந்தியில் அயனைப் படைத்தான் வெல்க
ஓம் பருவரையால் கடலை அடைத்தான் வெல்க
ஓம் ஆழி சங்கு வாள் வில் தண்டு ஆதிப் பல் படையான் வெல்க
ஓம் அண்டமொடு அகலிடம் அளந்தான் வெல்க
ஓம் அரியுரு வாகி அந்தியம் போதில் அரியை அழித்தவன் வெல்க
ஓம் அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையன் வெல்க

ஓம் மதியுடை அரற்கும் மலர்மகள் தனக்கும் கூறுகொடுத்தருள் உடம்பன் வெல்க
ஓம் ஏறும் இருஞ்சிறைப் புட்கொடியான் வெல்க
ஓம் ஒத்தார் மிக்கார் இல்லவன் வெல்க
ஓம் பத்திராகாரன் வெல்க
ஓம் பழமறை தேடியும் காணாச் செல்வன் வெல்க
ஓம் ஆடும் கருடக் கொடியான் வெல்க
ஓம் அடைந்தார்க்கு அணியன் வெல்க
ஓம் கடலைக் கடைந்தான் வெல்க
ஓம் கட்கு இனியான் வெல்க
ஓம் காண்டற்கு அரியவன் வெல்க

ஓம் புள்வாய் கீண்டான் வெல்க
ஓம் கேடிலான் வெல்க
ஓம் கையில் நீள் உகிர்ப் படையான் வெல்க
ஓம் வையம் அளந்தான் வெல்க
ஓம் யாவையும் ஆனான் வெல்க
ஓம் அமுது உண்டான் வெல்க
ஓம் ஊனார் ஆழிசங்கு உத்தமன் வெல்க
ஓம் அவலம் களைவான் வெல்க
ஓம் என்றானும் அவுணர்க்கு இரக்கம் இலாதான் வெல்க
ஓம் அறவ நாயகன் வெல்க

ஓம் மனத்து அறம் உடையோர் கதி வெல்க
ஓம் அறுசுவை அடிசில் வெல்க
ஓம் ஆதிப்பிரான் வெல்க
ஓம் வடிசங்கு கொண்டான் வெல்க
ஓம் வண்புகழ் நாரணன் வெல்க
ஓம் நாயகன் வெல்க
ஓம் ஆர மார்பன் வெல்க
ஓம் அண்டர் தம் கோன் வெல்க
ஓம் தம்பிரான் வெல்க
ஓம் சங்கம் இடத்தான் வெல்க

ஓம் சனகன் மருமகன் வெல்க
ஓம் மதுசூதன் வெல்க
ஓம் உருவு கரிய ஒளி வணன் வெல்க
ஓம் எங்கும் பரந்த தனிமுகில் வெல்க
ஓம் நங்கள் நாதன் வெல்க
ஓம் நல்வினைக்கு இன்னமுது வெல்க
ஓம் ஏழிசை வெல்க
ஓம் பின்னை மணாளன் வெல்க
ஓம் வலத்துப் பிறைச் சடையானை வைத்தவன் வெல்க
ஓம் நிறைஞானத்தொரு மூர்த்தி வெல்க

ஓம் அலைகடல் கரை வீற்றிருந்தான் வெல்க
ஓம் சிலையால் மராமரம் சிதைத்தான் வெல்க
ஓம் அனந்த சயனன் வெல்க
ஓம் இலங்கையைச் சினம் தனால் செற்ற கோமகன் வெல்க
ஓம் ஆய்ப்பாடி நம்பி வெல்க
ஓம் நஞ்சுகால் பாம்பணைப் பள்ளி மேவினான் வெல்க
ஓம் உலகு அளிப்பான் அடி நிமிர்த்தான் வெல்க
ஓம் உலக மூன்று உடையான் வெல்க
ஓம் உறங்குவான் போல யோகுசெய் பெருமான் வெல்க
ஓம் கால சக்கரத்தான் வெல்க

ஓம் காலநேமி காலன் வெல்க
ஓம் காமரூபி வெல்க
ஓம் பால்மதிக்கு இடர் தீர்த்தவன் வெல்க
ஓம் பிறப்பு அறுக்கும் பிரான் வெல்க
ஓம் மறைப் பெரும்பொருள் வெல்க
ஓம் மனன் உணர் அளவிலன் வெல்க
ஓம் அண்டவாணன் வெல்க
ஓம் வளரொளி ஈசன் வெல்க
ஓம் வருநல் தொல்கதி வெல்க
ஓம் தூமொழியான் வெல்க

ஓம் செல்வமல்கு சீரான் வெல்க
ஓம் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் வெல்க
ஓம் வைப்பே வெல்க
ஓம் மருந்தே வெல்க
ஓம் வியல் இடம் உண்டான் வெல்க
ஓம் நமன் தமர்க்கு அயரவாம் கருநஞ்சன் வெல்க
ஓம் ஆய்மகள் அன்பன் வெல்க
ஓம் வஞ்சப் பேய்மகள் துஞ்ச நஞ்சுண்டான் வெல்க
ஓம் அழகியான் வெல்க
ஓம் அலங்காரன் வெல்க

ஓம் தழல் ஐந்தோம்பி வெல்க
ஓம் தக்கணைக்கு மிக்கான் வெல்க
ஓம் விண்ணவர்கோன் வெல்க
ஓம் திக்குநிறை புகழான் வெல்க
ஓம் திருவாழ் மார்பன் வெல்க
ஓம் மதுரவாறு வெல்க
ஓம் கார்மலி வண்ணன் வெல்க
ஓம் குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதி வெல்க
ஓம் சீர்கெழு நான்மறை ஆனவன் வெல்க
ஓம் செங்கமல நாபன் வெல்க

ஓம் நரங்கலந்த சிங்கம் வெல்க
ஓம் சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே வெல்க
ஓம் தேங்கு ஓத நீர் உருவன் வெல்க
ஓம் பிள்ளையரசு வெல்க
ஓம் பிள்ளைப் பிரான் வெல்க
ஓம் வெள்ளியான் வெல்க
ஓம் வேதமயன் வெல்க
ஓம் வேல்வேந்தர் பகை கடிந்தோன் வெல்க
ஓம் ஆல்மேல் வளர்ந்தான் வெல்க
ஓம் ஆழி வலவன் வெல்க

ஓம் வாயழகன் வெல்க
ஓம் நிலமுனம் இடந்தான் வெல்க
ஓம் நீலச் சுடர்விடு மேனி அம்மான் வெல்க
ஓம் அடியார்க்கு என்னை ஆட்படுத்தோன் வெல்க
ஓம் பாரதம் பொருதோன் வெல்க
ஓம் பாரளந்த பேரரசு வெல்க
ஓம் பெற்றம் ஆளி வெல்க
ஓம் காளையாய்க் கன்று மேய்த்தான் வெல்க
ஓம் கேள் இணை ஒன்றும் இலாதான் வெல்க
ஓம் வேதத்து அமுதமும் பயனும் வெல்க

ஓம் வேத முதல்வன் வெல்க
ஓம் வேதத்தின் சுவைப் பயன் வெல்க
ஓம் சுடரான் வெல்க
ஓம் நவின்றேத்த வல்லார் நாதன் வெல்க
ஓம் ஆதி மூர்த்தி வெல்க
ஓம் அந்தியம் போதில் அவுணன் உடல் பிளந்தான் வெல்க
ஓம் ஆமையும் ஆனவன் வெல்க
ஓம் துளவுசேர் தாம நீள் முடியன் வெல்க
ஓம் தனிப்பெரு மூர்த்தி வெல்க
ஓம் முண்டியான் சாபம் தீர்த்தான் வெல்க

ஓம் தெய்வம் வெல்க
ஓம் வளைவணற்கு இளையவன் வெல்க
ஓம் தயிரொடு அளை வெணெய் உண்டான் வெல்க
ஓம் மெய்ந்நலம் தருவான் வெல்க
ஓம் சாம மாமேனி உருவான் வெல்க
ஓம் உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறன் வெல்க
ஓம் அண்டமாய் எண் திசைக்கும் ஆதி வெல்க
ஓம் அண்டம் ஆண்டிருப்பான் வெல்க
ஓம் இருங்கைம்மாவின் மருப்பு ஒசித்திட்டான் வெல்க
ஓம் மரம் எய்த திறலான் வெல்க

ஓம் தீமனத்து அரக்கர் திறலை அழித்தான் வெல்க
ஓம் திருவின் மணாளன் வெல்க
ஓம் மண்ணுயிர்க்கு எல்லாம் கணாளன் வெல்க
ஓம் கண்ணழகன் வெல்க
ஓம் கையொடு கால்செய்ய பிரான் வெல்க
ஓம் வைகுந்த நாதன் வெல்க
ஓம் வைகுந்தச் செல்வன் வெல்க
ஓம் செங்கணான் வெல்க
ஓம் தொல்வினைத் துயரைத் துடைப்பான் வெல்க
ஓம் கூரார் ஆழிப் படையவன் வெல்க

ஓம் காரேழ் கடலேழ் மலையேழ் உலகும் உண்டும் ஆராத வயிற்றன் வெல்க
ஓம் தொண்டர் நெஞ்சில் உறைவான் வெல்க
ஓம் கொடைபுகழ் எல்லை இலாதான் வெல்க
ஓம் குடமாடு கூத்தன் வெல்க
ஓம் குவளை மலர்வணன் வெல்க
ஓம் மண்கொண்டான் வெல்க
ஓம் புலம்புசீர்ப் பூமி அளந்தவன் வெல்க
ஓம் உலகு உண்ட வாயன் வெல்க
ஓம் ஊழியேழ் உலகு உண்டு உமிழ்ந்த ஒருவன் வெல்க
ஓம் முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே வெல்க

ஓம் கடல்படா அமுதே வெல்க
ஓம் அம்பொனின் சுடரே வெல்க
ஓம் நற்சோதீ வெல்க
ஓம் அமரர் முழுமுதல் வெல்க
ஓம் அமரர்க்கு அமுதம் ஊட்டிய அப்பன் வெல்க
ஓம் அமரர்க்கு அரியான் வெல்க
ஓம் பொதிசுவை அமுதம் வெல்க
ஓம் அற முதல்வன் வெல்க
ஓம் அயனை ஈன்றவன் வெல்க
ஓம் ஆலின் இலைத் துயின்றவன் வெல்க

ஓம் துவரைக் கோன் வெல்க
ஓம் அரக்கன் உயிர்க்கு அழல் இட்டவன் வெல்க
ஓம் இருக்கினில் இன்னிசை ஆனான் வெல்க
ஓம் விழுக்கையாளன் வெல்க
ஓம் துளவம் தழைக்கும் மார்பன் வெல்க
ஓம் அளத்தற்கு அரியவன் வெல்க
ஓம் அயோத்தி உளார்க்கு உரியவன் வெல்க
ஓம் உயிர் அளிப்பான் வெல்க
ஓம் ஏழுலகுக்கு உயிர் வெல்க
ஓம் ஆற்றல் ஆழியங்கை அமர் பெருமான் வெல்க


ஓம் திருமகளார் தனிக் கேள்வன் அருள்க
ஓம் பெருநிலம் விழுங்கிய வாயன் அருள்க
ஓம் ஆலின் இலைப் பெருமானே அருள்க
ஓம் மால்விடை ஏழ் செற்றவனே அருள்க
ஓம் தெள்ளிய சிங்கம் அருள்க
ஓம் கொள்ளைக் கொள்ளிக் குறும்பன் அருள்க
ஓம் யார்க்கும் அறிவரு மாயன் அருள்க
ஓம் ஏழேழ் பிறவி அறுப்பான் அருள்க
ஓம் இமையவர் தந்தையாய் அருள்க
ஓம் தவமுனி அருள்க

ஓம் எந்தையே அருள்க
ஓம் ஏற்பரன் அருள்க
ஓம் ஒடியா இன்பப் பெருமையன் அருள்க
ஓம் படுகடல் அமுதே அருள்க
ஓம் பக்தர்கள் நுகர் கனி அருள்க
ஓம் நூல் மார்ப அருள்க
ஓம் பகல் கரந்த சுடர் ஆழியான் அருள்க
ஓம் ஆயர்பாடி விளக்கே அருள்க
ஓம் வாய்முதல் அப்பன் அருள்க
ஓம் வானவர் புகலிடம் அருள்க

ஓம் புள் வலான் அருள்க
ஓம் வகையால் அவனி இரந்தான் அருள்க
ஓம் எங்கள் செல் சார்வே அருள்க
ஓம் வடிவார் சங்கம் கொண்டான் அருள்க
ஓம் உலகு உய்ய நின்றான் அருள்க
ஓம் நெடியான் அருள்க
ஓம் குன்றே குடையா எடுத்தான் அருள்க
ஓம் மழுவியல் படையான் அருள்க
ஓம் வேதாந்த விழுமிய பொருளான் அருள்க
ஓம் வேத முதற்பொருள் அருள்க

ஓம் முனிவன் அருள்க
ஓம் மதனன் தன்னுயிர்த் தாதை அருள்க
ஓம் வானவர் கொழுந்தே அருள்க
ஓம் மூவா வானவன் அருள்க
ஓம் வாசுதேவன் அருள்க
ஓம் வண்ணம் அழகிய நம்பி அருள்க
ஓம் எண்ணில் மூர்த்தி அருள்க
ஓம் என்னுயிர்க் காவலன் அருள்க
ஓம் காகுத்தன் அருள்க
ஓம் கோவிந்தன் அருள்க

ஓம் கோவர்த்தன் அருள்க
ஓம் சாம வேதியன் அருள்க
ஓம் செய்ய தாமரைக் கண்ணன் அருள்க
ஓம் தாமரைத் தாளன் அருள்க
ஓம் தாசரதி அருள்க
ஓம் தோளா மாமணி அருள்க
ஓம் தொண்டர்க்கு இனியான் அருள்க
ஓம் இருடிகேசன் அருள்க
ஓம் பனிமலராள் வலம் கொண்டான் அருள்க
ஓம் கோல வராகன் அருள்க

ஓம் கருமுகில் போலும் உருவன் அருள்க
ஓம் தொழுவார் சிந்தை பிரியான் அருள்க
ஒம் சேது பந்தம் திருத்தினான் அருள்க
ஓம் பக்தர்க்கு அமுதே அருள்க
ஓம் அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருளும் விளக்கே அருள்க
ஓம் நரனே அருள்க
ஓம் நந்தகோபன் இளவரசே அருள்க
ஓம் ஐம்பொல் ஓதியை ஆகத்து இருத்தினான் அருள்க
ஓம் கடலுள் நாகம் ஏந்தித் துயின்றான் அருள்க
ஓம் நாந்தகம் ஏந்திய நம்பி அருள்க

ஓம் கூந்தலார் மகிழ் கோவலன் அருள்க
ஓம் குறியமாண் எம்மான் அருள்க
ஓம் கூந்தல் வாய் நெறியக் கீண்டான் அருள்க
ஓம் நெறிமையால் நினைய வல்லார் கதி அருள்க
ஓம் தன் அடியார்க்கு இனியான் அருள்க
ஓம் எனக்கரசு அருள்க
ஓம் துத்திசேர் நாகத்து அனையான் அருள்க
ஓம் அத்தம் அடுத்த பத்தாம் நாளில் தோன்றினான் அருள்க
ஓம் மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்று உருவானான் அருள்க
ஓம் பாற்கடல் வண்ணன் அருள்க

ஓம் சங்கு ஓதப் பாற்கடல் சேர்ப்பன் அருள்க
ஓம் சார்ங்கவில் கையன் அருள்க
ஓம் கன்னல் அருள்க
ஓம் வெய்யவாள் தண்டு சங்கு சக்கரம் வில்லும் ஏந்துவோன் அருள்க
ஓம் வீயா மல்லலஞ் செல்வக் கண்ணன் அருள்க
ஓம் ஞானப் பிராஅன் அருள்க
ஓம் பரிமுகமாய் ஞானக் கலைப்பொருள் அருளினான் அருள்க
ஓம் வெற்றிக் கருடக் கொடியான் அருள்க
ஓம் கற்றைக் குழலான் அருள்க
ஓம் விடமுடைப் பாம்பின்மேல் நடம் பயின்றான் அருள்க

ஓம் ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்ப்பான் அருள்க
ஓம் மும்மை மூர்த்தி அருள்க
ஓம் இவ்வுலகில் எம்மாண்பும் ஆனான் அருள்க
ஓம் என்னுடை நாயகன் அருள்க
ஓம் நான்மூர்த்தி அருள்க
ஓம் வேய்ங்குழல் ஊதும் வித்தகன் அருள்க
ஓம் ஆழி ஒன்று ஏந்திய கூற்றே அருள்க
ஓம் ஊழி பெயர்த்தான் அருள்க
ஓம் ஒருநல் சுற்றம் அருள்க
ஓம் கற்று நின்றகலா உற்றார் இல்லாத மாயவன் அருள்க

ஓம் உவணப் புள்ளேறி ஊர்வான் அருள்க
ஓம் அவுணன் உடலைப் பிளந்தவன் அருள்க
ஓம் அறிவினுக்கு அரிய பிரான் அருள்க
ஓம் குறிய மாண் உருக் கூத்தன் அருள்க
ஓம் ஆதியும் அந்தமும் இல்லவன் அருள்க
ஓம் ஓதம் போல் கிளர் வேதநீரன் அருள்க
ஓம் ஆவிக்கு ஒரு கொள்கொம்பே அருள்க
ஓம் கோவி நாயகன் அருள்க
ஓம் கூரார் ஆழி பணி கொண்டவன் அருள்க
ஓம் பிறவிகள் ஏழும் அறுக்கும் சொல்லான் அருள்க

ஓம் தோற்றக் கேடு அவை இல்லவன் அருள்க
ஓம் ஆற்றல் மிகுந்த ஆற்றலான் அருள்க
ஓம் இம்மைக்கும் இனி ஏழேழ் பிறவி அம்மைக்கும் கதியாவான் அருள்க
ஓம் இம்மையோர்க்கு அரிய அப்பன் அருள்க
ஓம் இமையோர் நாயகன் அருள்க
ஓம் இமையோர் பெருமான் அருள்க
ஓம் பெரியான் அருள்க
ஓம் அரு மாமறைப் பண்ணகத்தான் அருள்க
ஓம் இலங்கு சோதியன் அருள்க
ஓம் மதிள்நீர் இலங்கை மாநகர் பொடித்தான் அருள்க

ஓம் இருளன மேனியான் அருள்க
ஓம் சகடம் உருள உதைத்தான் அருள்க
ஓம் இன்னமுத வெள்ளம் அருள்க
ஓம் விமலன் அருள்க
ஓம் பள்ளிமா மாயவன் அருள்க
ஓம் பற்றிலார் பற்ற நின்றவன் அருள்க
ஓம் மூவுலகும் முற்ற விரிசுடர் முடியன் அருள்க
ஓம் இன்பப் பா அருள்க
ஓம் இன்ப ஆறு அருள்க
ஓம் பொன்பெயரோன் நெஞ்சம் கீண்டான் அருள்க

ஓம் ஈட்டிய வெண்ணெய் உண்டவன் அருள்க
ஓம் தேட்டரும் திறல் தேனே அருள்க
ஓம் உணர்வினுக்கு அரியான் அருள்க
ஓம் அணி நெடுந்தோள் புணர்ந்தவனே அருள்க
ஓம் உலகு செய்பவன் அருள்க
ஓம் ஏழுசேர் உலகம் ஆண்டவன் அருள்க
ஓம் உலகேழும் புகக் கரந்திரு வயிற்றான் அருள்க
ஓம் மகர நெடுங்குழைக் காதன் அருள்க
ஓம் எண்ணிற்கு அரியான் அருள்க
ஓம் கருமுகில் வண்ணன் அருள்க

ஓம் வரம்புக்கு அடங்கா கீர்த்தியான் அருள்க
ஓம் கேடிலா உணர்வின் மூர்த்தியான் அருள்க
ஓம் முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்தான் அருள்க
ஓம் ஏவரி வெஞ்சிலை வலவன் அருள்க
ஓம் உயர்வினையே தரும் ஒண்சுடர் அருள்க
ஓம் உயர நின்றதோர் சோதீ அருள்க
ஓம் எளிவரும் இயல்வினன் அருள்க
ஓம் ஞாலம் அளந்து இடந்து உண்ட அண்ணல் அருள்க
ஓம் ஞாலம் தத்தும் பாதன் அருள்க
ஓம் ஞாலம் உண்டு உமிழ்ந்த மாஅல் அருள்க

ஓம் உம்பர் கோமான் அருள்க
ஓம் துழாய்முடி நம் பெருமானே அருள்க
ஓம் இலனது உடையன் இதுவென நினைவு அரியான் அருள்க
ஓம் விடையேழ் வீயப் பொருதாள் அருள்க
ஓம் மாகத்து இளமதி சேர் சடையானைப் பாகத்து வைத்தான் அருள்க
ஓம் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள்வான் அருள்க
ஓம் நாகத்து அணையான் அருள்க
ஓம் நற்பல தாமரை நாண்மறைக் கையவன் அருள்க
ஓம் தாமரை மின்னிடை நாயகன் அருள்க
ஓம் என்றும் இனியான் அருள்க

ஓம் பலவென ஒன்றென அறிவரும் வடிவினன் அருள்க
ஓம் என்னுடைச் சுற்றம் அருள்க
ஓம் தொண்டர்க்கு இன்னருள் புரிவோன் அருள்க
ஓம் எந்நின்ற யோனியுமாகிப் பிறந்தவன் அருள்க
ஓம் ஞானத்தின் ஒளி உருவன் அருள்க
ஓம் ஏறு சேவகன் அருள்க
ஓம் அன்று இலங்கை நீறு செய்த வீரன் அருள்க
ஓம் எல்லாப் பொருட்கும் சேயான் அருள்க
ஓம் நல்லன நமக்கே தருவான் அருள்க
ஓம் எண்ணில் தொல் புகழ் ஈசன் அருள்க

ஓம் நண்ணுவார் சிந்தை பிரியான் அருள்க
ஓம் குரங்கை ஆளுகந்த கோமான் அருள்க
ஓம் விரிந்த புகழான் அருள்க
ஓம் நேமியான் அருள்க
ஓம் நேசன் அருள்க
ஓம் மாமணி கண்ணன் அருள்க
ஓம் சோத்தம் பிரான் அருள்க
ஓம் பெம்மான் அருள்க
ஓம் சராசரத்தை வீடேற்றினான் அருள்க
ஓம் எழிலேறு அருள்க

ஓம் ஏகமூர்த்தி அருள்க
ஓம் தொழுவார் வினைகளைத் துடைப்பான் அருள்க
ஓம் முனிவர்க்கு அருள் தம் தவமே அருள்க
ஓம் தனியேன் வாழ்முதல் அருள்க
ஓம் வானுளார் அறியலாகா வானவன் அருள்க
ஓம் நிறை மூவுலகுக்கும் நாயகன் அருள்க
ஓம் எள்கல் இராகம் இலாதான் அருள்க
ஓம் உள் கலந்தார்க்கு ஓர் அமுதே அருள்க
ஓம் கொள்கை கொளாமை இலாதான் அருள்க
ஓம் அளி நன்கு உடையான் அருள்க

ஓம் எண் மீது இயன்ற புற அண்டத்தான் அருள்க
ஓம் மயங்கச் சங்கம் வாய் வைத்தான் அருள்க
ஓம் என் குல தெய்வம் அருள்க
ஓம் அசுரர் வன்குலம் வேர் மருங்கு அறுத்தான் அருள்க
ஓம் கூனேறு சங்கம் இடத்தான் அருள்க
ஓம் கூனே சிதைய வில் தெரித்தான் அருள்க
ஓம் கோமளப் பிள்ளை அருள்க
ஓம் அந்தணர் ஓமம் ஆனான் அருள்க
ஓம் ஓமத்து உச்சியான் அருள்க
ஓம் உயிராளன் அருள்க

ஓம் பச்சை மாமலைபோல் மேனியன் அருள்க
ஓம் அனைத்துலகும் விளக்கும் சோதீ அருள்க
ஓம் புனத்துழாய் மாலையான் அருள்க
ஓம் பொறியுணர்வு அவை இலான் அருள்க
ஓம் ஐவர் தூதனாய்ச் சவையில் சென்ற மாயனே அருள்க
ஓம் துற்றி ஏழுலகு உண்டவன் அருள்க
ஓம் கொற்றவன் அருள்க
ஓம் குழல் அழகன் அருள்க
ஓம் கொடிமன்னு புள்ளுடை அண்ணல் அருள்க
ஓம் படியிது எனலாம் படியலான் அருள்க

ஓம் வீவில் சீராய் ஜெயஜெய
ஓம் மன்னரை மூவெழு கால் கொன்ற தேவே ஜெயஜெய
ஓம் மன்னு பெரும்புகழ் மாதவ ஜெயஜெய
ஓம் என்னமர் பெருமா ஜெயஜெய
ஓம் என்றும் தேனும் பாலும் அமுதும் ஆவாய் ஜெயஜெய
ஓம் வானவர் சென்னி மணிச்சுடரே ஜெயஜெய
ஓம் எல்லா உயிர்க்கும் தாயோய் ஜெயஜெய
ஓம் நல்லோர் பிரானே ஜெய ஜெய
ஓம் நரக நாசனே ஜெய ஜெய
ஓம் நரபதி ஜெய ஜெய

ஓம் தேசம் முன் அளந்தவ ஜெய ஜெய
ஓம் தெள்ளியாய் ஜெய ஜெய
ஓம் எழில்கொள் சோதீ ஜெய ஜெய
ஓம் ஏறேழ் தழுவிய எந்தாய் ஜெயஜெய
ஓம் தந்தை கால் விலங்கு அற வந்து தோன்றினாய் ஜெயஜெய
ஓம் நால் வேதக்கடல் அமுதே ஜெய ஜெய
ஓம் ஏழுலகு உடையாய் ஜெய ஜெய
ஓம் எழில் பெறத் தாழும் மகர குண்டலத்தாய் ஜெய ஜெய
ஓம் ஒண்சங்கு கதை வாள் ஆழியாய் ஜெய ஜெய
ஓம் கண்டு கோடற்கு அரியாய் ஜெய ஜெய

ஓம் ஒருவா ஜெய ஜெய
ஓம் ஒலிநீர் உலகம் தருவாய் ஜெய ஜெய
ஓம் தன்னுள் அனைத்தும் தான் அவற்றுள்ளும் நிற்போய் ஜெயஜெய
ஓம் வானவர் தெய்வம் ஜெய ஜெய
ஓம் வாலியின் மாவலம் அழித்த வில் வாளா ஜெயஜெய
ஓம் தேவர்கள் நாயக ஜெய ஜெய
ஓம் கார்மேகம் கலந்ததோர் உருவக் கண்ணா ஜெய ஜெய
ஓம் நலந்திகழ் நாரண ஜெய ஜெய
ஓம் நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரிய ஜெய ஜெய
ஓம் நின்று ஓங்கு முடியாய் ஜெய ஜெய

ஓம் நித்திலக் கொத்தே ஜெய ஜெய
ஓம் தோளா மணிச்சுடர்க் கொத்தே ஜெய ஜெய
ஓம் கோகனகத்தவள் கேள்வ ஜெய ஜெய
ஓம் கிளர் மூவுலகும் வேள்வியில் அளந்த அந்தண ஜெயஜெய
ஓம் ஏழுலகுக்கும்ஆதீ ஜெய ஜெய
ஓம் பாழியந் தோள் நான்குடையாய் ஜெய ஜெய
ஓம் ஞாலமும் ஏழையும் உண்டு பண்டோர் பாலன் ஆகிய பண்பா ஜெயஜெய
ஓம் வனமாலை மார்ப ஜெய ஜெய
ஓம் அமரர் தனிமுதல் வித்தே ஜெய ஜெய
ஓம் தாயின் குடலை விளக்கிய கோனே ஜெய ஜெய

ஓம் பட அரவின் அணைப் பரஞ்சுடரே ஜெய ஜெய
ஓம் கோதில் செங்கோல் குடை மன்னரிடை தூது நடந்தாய் ஜெய ஜெய
ஓம் சுடரொளி ஒருதனி முதல்வா ஜெய ஜெய
ஓம் உலகு உணும் பெருவயிற்றானே ஜெய ஜெய
ஓம் பேய்மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்டாய் ஜெயஜெய
ஓம் அஞ்சிறைப் புட்கொடி உடையாய் ஜெயஜெய
ஓம் கோசலை தன்குல மதலாய் ஜெயஜெய
ஓம் தேசுடைத் தேவா ஜெய ஜெய
ஓம் தெய்வச் சிலையா ஜெய ஜெய
ஓம் தேவா ஜெயஜெய

ஓம் அலைகடல் அரவம் அளாவியோர் குன்றை வைத்தவ ஜெயஜெய
ஓம் வானவா ஜெயஜெய
ஓம் பைத்தேய் சுடர்ப்பாம்பு அணையாய் ஜெயஜெய
ஓம் தேவாசுரம் செற்றாய் ஜெயஜெய
ஓம் தனி மூவா முதலாய் ஜெயஜெய
ஓம் முத்தீ மறையாய் ஜெயஜெய
ஓம் வட மாமதுரைப் பிறந்தாய் ஜெய ஜெய
ஓம் பிறவாய் ஜெயஜெய
ஓம் பெருந்தாளுடைய பிரானே ஜெயஜெய
ஓம் பெருந்தோள் நெடுமால் ஜெயஜெய

ஓம் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பீ ஜெயஜெய
ஓம் ஆயிரம் தோளாய் ஜெயஜெய
ஓம் அசுரர் குலமுதல் அரிந்த படையாய் ஜெய ஜெய
ஓம் நிலமன்னனாய் உலக ஆண்டவ ஜெயஜெய
ஓம் பணமாடு அரவணைப் பள்ளிகொண்டு அருளும் மணவாளா ஜெய ஜெய
ஓம் மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணிவண்ணா ஜெயஜெய
ஓம் தஞ்சினம் தவிர்த்தார் தவநெறி ஜெயஜெய
ஓம் தனிநின்ற சார்விலா மூர்த்தி ஜெயஜெய
ஓம் பனிமதி கோள் விடுத்து உகந்தாய் ஜெயஜெய
ஓம் பாரிடம் ஆவாய் ஜெய ஜெய

ஓம் பாரதப் போரிடைக் கலந்த மாயா ஜெய ஜெய
ஓம் பீடுடை நான்முகற் படைத்தாய் ஜெய ஜெய
ஓம் நாடுடை மன்னர்க்குத் தூதா ஜெயஜெய
ஓம் ஞானச் சுடரொளி மூர்த்தி ஜெயஜெய
ஓம் ஏனத்து உருவாய் ஜெய ஜெய
ஓம் எம்மான் ஜெய ஜெய
ஓம் விண்ணோர் தம் அறவாளா ஜெய ஜெய
ஓம் விண்ணோர் முடி தோய் பாதா ஜெயஜெய
ஓம் மாபாவம் விட அரற்குப் பிச்சை பெய் கோபால கோளரி ஜெயஜெய
ஓம் குதிகொண்டு அரவில் நடித்தாய் ஜெயஜெய

ஓம் கருமுகில் திருநிறத்தவனே ஜெய ஜெய
ஓம் குழல்வாய் வைத்த மாயனே ஜெயஜெய
ஓம் மணித்தேர் மைத்துனற்கு உய்த்த ஆயனே ஜெய ஜெய
ஓம் மாற்றாரை மாற்றழிக்க வல்லவ ஜெயஜெய
ஓம் நாற்றச் சுவை ஊறொலியாய் ஜெயஜெய
ஒம் குருருவின் போய் அளவு கண்டாய் ஜெயஜெய
ஓம் காரணி மேகம் நின்றது ஒப்பாய் ஜெய ஜெய
ஓம் தடவரை அகலம் அது உடையவ ஜெய ஜெய
ஓம் சுடரொளியே ஜெய ஜெய
ஓம் தூமறையாய் ஜெய ஜெய

ஓம் அரன் அயன் என உலகழித்து அமைத்தாய் ஜெய ஜெய
ஓம் பொருள் என்று இவ்வுலகம் படைத்தவ ஜெய ஜெய
ஓம் வலத்தனன் திரிபுரம் எரித்தவன் ஜெய ஜெய
ஓம் கலைப் பல் ஞானத்துக் கண்ணனே ஜெய ஜெய
ஓம் வானிலும் பெரிய மாயை வல்லாய் ஜெய ஜெய
ஓம் ஞானநல் ஆவி ஆவாய் ஜெய ஜெய
ஓம் நடுவே வந்து உய்யக் கொள்வாய் ஜெய ஜெய
ஓம் குடைந்து வண்டு உணும் துழாய் முடியாய் ஜெய ஜெய
ஓம் ஞால முன்னீ ஜெய ஜெய
ஓம் ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலே ஜெய ஜெய

ஓம் மாகடலாய் ஜெய ஜெய
ஓம் வீடில் சீர்ப்புகழ் ஆதிப்பிரான் ஜெயஜெய
ஓம் ஈடும் வலியும் உடை நம்பீ ஜெயஜெய
ஓம் கற்கொண்டு கடலைத் தூர்த்தாய் ஜெயஜெய
ஓம் மற்பொரு தோளுடையாய் ஜெய ஜெய
ஓம் ஆலில் நீளிலைமீது சேர் குழவியே ஜெய ஜெய
ஓம் வாள்வரி வில்லும் வளையாழி சங்கமும் கதையும் அங்கையில் உடையாய் ஜெயஜெய
ஓம் அதிர்கடல் வண்ணா ஜெய ஜெய
ஓம் ஐவாய் அரவணை மேலுறை அமலா ஜெயஜெய
ஓம் கரைசெய் மாக்கடல் கிடந்தவ ஜெய ஜெய

ஓம் நக்க பிரானொடு அயனும் இந்திரனும் ஒக்கவும் தோற்றிய ஒருவா ஜெயஜெய
ஓம் காயமும் சீவனும் ஆவாய் ஜெயஜெய
ஓம் பேயைப் பிணம்படப் பாலுண் பிரான் ஜெய ஜெய
ஓம் சிந்தைக்கும் கோசரம் அல்லாய் ஜெயஜெய
ஓம் செந்தண் கமலக் கண் கை காலாய் ஜெயஜெய
ஓம் பனைத்தாள் மதகளிறு அட்டவ ஜெய ஜெய
ஓம் வினை செய்வோய் ஜெய ஜெய
ஓம் வினை தீர்ப்போய் ஜெய ஜெய
ஓம் மணிமின்னு மேனி நம் மாயவ ஜெய ஜெய
ஓம் அணிமானத் தடவரைத் தோளாய் ஜெய ஜெய

ஓம் பாலனாய் ஏழுலகு உண்டவ ஜெயஜெய
ஓம் ஆலிலை அன்ன வசம் செய்வாய் ஜெய ஜெய
ஓம் ஞாலத்தூடே நடந்தும் நின்றும் சாலப் பலநாள் கிடப்பாய் ஜெயஜெய
ஓம் பகையும் நட்பும் ஆவாய் ஜெயஜெய
ஓம் பகலும் இரவுமாய் நின்றாய் ஜெயஜெய
ஓம் உவகையும் முனிவுமாய் உள்ளாய் ஜெய ஜெய
ஓம் மகன் ஒருவர்க்கும் அல்லாய் ஜெய ஜெய
ஓம் ஞாலம் செய்தாய் ஜெய ஜெய
ஓம் நம் பரமன் ஜெய ஜெய
ஓம் கோலங்கொள் முகில் வண்ணா ஜெய ஜெய

ஓம் அளந்து காண்டற்கு அரியவ ஜெய ஜெய
ஓம் இளமையும் முதுமையும் ஆவாய் ஜெய ஜெய
ஓம் கல்வி ஆவாய் ஜெய ஜெய
ஓம் கல்வி செய்வாய் ஜெய ஜெய
ஓம் செல்வு நல்குரவும் செய்வாய் ஜெய ஜெய
ஓம் நரகமும் சுவர்க்கமும் ஆவாய் ஜெய ஜெய
ஓம் பெருமையும் சிறுமையும் உடையாய் ஜெய ஜெய
ஓம் ஞானமும் மூடமும் ஆவாய் ஜெயஜெய
ஓம் தானும் பிரமனும் சிவனும் ஆவாய் ஜெயஜெய
ஓம் பிரிவும் புணர்ச்சியும் ஆவாய் ஜெயஜெய

ஓம் கரியும் கழுதும் கழுதையும் மல்லரும் மருதும் விடையும் மடித்தாய் ஜெயஜெய
ஓம் இருளொடு சுடருமாய் இருந்தாய் ஜெய ஜெய
ஓம் உறியார் நறுவெணெய் தான் உகந்து உண்ட சிறியாய் ஜெயஜெய
ஓம் சேடாய் ஜெய ஜெய
ஓம் தண்மையும் தண்டமும் ஆவாய் ஜெய ஜெய
ஓம் உண்மையோடு இன்மையாய் வருவாய் ஜெயஜெய
ஓம் விடமும் அமுதமும் விரவுவாய் ஜெயஜெய
ஓம் அடல் ஏறே ஜெயஜெய
ஓம் ஐம்படையாய் ஜெயஜெய
ஓம் தேற்றமும் கலக்கமும் ஆவாய் ஜெயஜெய

ஓம் ஏற்றரும் வைகுந்தம் அருள்வாய் ஜெயஜெய
ஓம் வெந்திறல் வீரரில் வீரர் ஒப்பாய் ஜெயஜெய
ஓம் சிந்தை தன்னில் முந்தி நிற்பாய் ஜெயஜெய
ஓம் இன்பமும் துன்பமும் தருவாய் ஜெயஜெய
ஓம் தன்முடிவு ஒன்றிலாத தண்துழாயாய் ஜெயஜெய
ஓம் தழலானாய் ஜெயஜெய
ஓம் நிழலானாய் ஜெயஜெய
ஓம் பழி ஆனாய் ஜெயஜெய
ஓம் புகழ் ஆனாய் ஜெயஜெய
ஓம் புண்ணியம் பாவம் ஆவாய் ஜெயஜெய

ஓம் எண்ணமும் மறப்புமாய் இருப்பாய் ஜெயஜெய
ஓம் புதுமை ஆவாய் ஜெயஜெய
ஓம் பழைமை ஆவாய் ஜெயஜெய
ஓம் முது துவரைக் குலபதியாய் ஜெயஜெய
ஓம் சந்தம் ஆனாய் ஜெயஜெய
ஓம் சமயம் ஆனாய் ஜெயஜெய
ஓம் அந்தணன் பிள்ளையை அருளினாய் ஜெயஜெய
ஓம் எவ்வ நோய்களைத் தீர்ப்பாய் ஜெயஜெய
ஓம் பவ்வ நீருடை ஆடையாய் ஜெயஜெய
ஓம் பாரகலம் திருவடிவாய் ஜெயஜெய

ஓம் நீர் அழல் வானொடு நிலம் காலாய் ஜெயஜெய
ஓம் மாதிரம் எட்டும் தோளாய் ஜெயஜெய
ஓம் தீதில் நன்னெறி காட்டுவாய் ஜெயஜெய
ஓம் மின் உருவாய் ஜெயஜெய
ஓம் விளக்கொளியாய் ஜெயஜெய
ஓம் பொன்னுருவாய் ஜெயஜெய
ஓம் மணியுருவாய் ஜெயஜெய
ஓம் தமிழாய் ஜெயஜெய
ஓம் வடசொல்லாய் ஜெயஜெய
ஓம் சமயம் கண்டவை காப்பாய் ஜெயஜெய

ஓம் நால்வகை வருணமும் ஆனாய் ஜெயஜெய
ஓம் மேலை வானவரும் அறியாய் ஜெயஜெய
ஓம் அறமுதல் நான்கு அவை அருள்வாய் ஜெயஜெய
ஓம் நெறியெலாம் உரைத்த மூர்த்தி ஜெயஜெய
ஓம் அறுசுவைப் பயனும் ஆனாய் ஜெயஜெய
ஓம் நெறிவாசல் தானேயாய் நின்றாய் ஜெயஜெய
ஓம் கலங்காப் பெருநகர் காட்டுவாய் ஜெயஜெய
ஓம் வலந்தாங்கு சக்கரத்து அண்ணால் ஜெயஜெய
ஓம் கொண்டற் கை மணிவண்ணா ஜெயஜெய
ஓம் அண்டத்து அமரர் பணிய நின்றாய் ஜெயஜெய

ஓம் நீரேற்று உலகெலாம் நின்று அளந்தாய் ஜெயஜெய
ஓம் ஈரிரு மால்வரைத் தோளாய் ஜெயஜெய
ஓம் பரம மூர்த்தி ஜெயஜெய
ஓம் பௌழியாய் ஜெயஜெய
ஓம் பரனே ஜெயஜெய
ஓம் பற்பநாபா ஜெயஜெய
ஓம் புள்ளுவா ஜெயஜெய
ஓம் புருடோத்தமா ஜெயஜெய
ஓம் கள்ளா மாதவ ஜெயஜெய
ஓம் கடிய மாயா ஜெயஜெய

ஓம் உலகில் திரியும் கரும கதியாய் ஜெயஜெய
ஓம் உலகுக்கு ஓர் உயிர் ஆனாய் ஜெயஜெய
ஓம் வெஞ்சுடரே ஜெயஜெய
ஓம் விஷ்ணுவே ஜெயஜெய
ஓம் தஞ்சமாகிய தந்தை தாயொரு தானுமாய் அவை அல்லனுமாம் ஜெயஜெய
ஓம் மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாகித் தானாய்ப் பின்னும்
இராமானய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆவாய் ஜெயஜெய
ஓம் வெற்பெடுத்து ஒற்கமின்றி நின்றாய் ஜெயஜெய
ஓம் நாராயணா ஜெயஜெய.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar