SS திருவருள் விநாயகர் பதிகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> திருவருள் விநாயகர் பதிகம்
திருவருள் விநாயகர் பதிகம்
திருவருள் விநாயகர் பதிகம்

(சிரவையாதீனம் இரண்டாம் குருமகாசந்திதானம்
தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளியது)

காப்பு -வெண்பா.

பில்கும் வளச்சிரவை பேணியன்பர் வேணமுற்று
நல்குந் திருவருள்வி நாயகன்மேல் -மல்குமின்பத்
துத்தியப்பா வோதத் துணையன் னவன் றுணைத்தாட்
பத்தியடி யார்பொற் பதம்.

நூல்

எண்சீர் விருத்தங்கள்.

1. பிரணவத்தினுட் பொருணிலையுணரும்
பெரியர்நெஞ்சகம் பிரிகிலதமையுங்
கிரணவான்றுவர் மேனியுமலவன்
கீற்றணிந்தசெங் கேழ்ச்சடைமுடியுஞ்
சரணவாரிசங் களுஞ்சதுர்ப் புயமுந்
தழைத்தசேவையென் விழித்துணையகலா
தரணமாக நேர் திகழ்சிரவணவூ
ரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.

2. வரமுலாமணி வாசகன்மலர்வாய்
வாசகத்திறம் வயக்கிடு முன்னைத்
திரமுலாம்பொருள் கட்குமுற்பழமை
சிறந்து பிற்படும் புதுமைக்கும்புதுமை
யுரமுலாவுமெய் மூத்தபிள்ளைப்பே
ரோங்குன்மாட்சிமை யுணர்பவரெவரே
அரமுலாம் பணி யாய்சிரவணவூ
ரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.

3. உருகிடாக்கருங் கல்லிணைமனமு
முடையநாயகவுன் புகழ்வாரி
பருகிடாதவெண் மைத்தகைவாக்கும்
பத்திமிக்கு நின் படிவமொண்டிறைநீர்
பெருகிடாவிழி களும்படைத் துழலும்
பேயனேன்பிர பஞ்சமாயையினுள்
அருகிடாதரு கணைசிரவணவூ
ரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.

4. ஏணியேபெருந் தோணியேயெனமுன்
பெய்துவார்க்குப தேசம்விற்றிழிமண்
காணியேயெனக் கருதிவீணேநாள்
கழித்துமாயையிற் களித்தனன்குனித்து
நாணியேற்றுவிற் போற் கிழப்பருவ
நண்ணவோர்ந்துள நாணிலேற்குன்மெய்
யேர்பெற வருள்சிரவணவூ
ரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.

5. தத்தமைந்துழன் மனமொருநிலையிற்
சார்ந்திடாதுறும் படிகமொத்துலகப்
பித்தமைந்தணை பொருண்மயமாகிப்
பிரமைகொண்டுநின் பிடிவிடுத்தயர்ந்தேன்
முத்தமைந்தபுன் முறுவல்வல் லவைத்தாய்
முயங்குபேரருண் முதல்வநிற்கபயம்
அத்தமைந்தினி லாள்சிரவணவூ
ரவிர்ந்திடுந்திரு வருள் விநாயகனே.

6. விடையினோடிழி கரம்புலைச்சியின்மெய்
வேவுதூர்வையை வீசுகாற்றுன்மே
லடையவீசவர்ச் சனைபுரிந்தனவென்றமரர்
யோகரெய் தரும்ப தமளித்தா
யுடையநாயக வுன்றிருப்பதங்க
ளுவந்துபோற்றிடு மொதியனேன்பணிக
ளடைய வேற்றருள் வாய்சிரவணவூ
ரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.

7. கண்டதேபெருங் காட்சிகொண்டதுவே
கலந்தகோலமாக் கருதியைம்புலன்வா
யுண்டதேபுசித் துட்சலிபொருசற்
றுற்றிலேனுனக் குழுவலன்பிசைமெய்த்
தொண்டதே புரிந் தலகிலானந்தத்
துறையுண்மூழ்கநீ துணைசெய்நாள்புகல்வாய்
அண்டரேத்திறை வாசிரவணவூ
ரவிர்ந்திடுந்திரு வருள் விநாயகனே.

8. தெண்டிரைக்கடல் கொண்டுழுந்தளவாத்
திரட்டியுண்டருள் செந்தமிழ்முனிவன்
குண்டிகைப்புனல் புவிமிசை கவிழ்த்துக்
குட்டவோடினை கொள்கைமற்றதையுட்
கொண்டிசைப்புதுப் பூசனைபுரியக்
கோலமேவிரா மானந்தவடிவாய்
அண்டிடப்புரிந் தமைசிரவணவூ
ரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.

9. பணியெனப்படி வுற்றுயராலின்
பாற்கவின்றிடு மாற்கருள்புரிந்தாய்
பிணியெனப்பல வாசைசூழ்ந்தென்றும்
பிரிவறப்பணி பூண்களூண்கொள்ளத்
துணியெனத்திரி வேற்கு நின்பத்தித்
தொண்டியற்றுமெய்ச் சுவையுறத்திருநீ
றணியெனக்கனிந் தருள்சிரவணவூ
ரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.

10. கௌவையார்கலி யுடைகொளம்புவியின்
கண்வயங்குமாடவர்களேமேலோர்
கொவ்வைவாய்மட மாதர்தாழ் வென்னுங்
கூற்றமுற்றுமே மாற்றமென்றுணரச்
செவ்வைநாவலர் காவலன்சேரன்
சிந்தைநாணுறத் திருக்கயிலையின்மே
லௌவையாரைமுன் விடுஞ்சிரவணவூ
ரவிர்ந்திடுந்திரு வருள்விநாயகனே.

11. நித்தியஞ்செய்நை மித்தியச்சிறப்பு நிரனிறைப்பட
நிறை திருப்பணிசா
லத்தியற்புதம் பொலிசிரவணவூ
ரவிர்ந்திடுதிரு வருள்விநாயகனைச்
சத்தியச்சம ரசத்திருத்தொண்டர் தாசனாங்கந்த
சாமியுள்ளன்பால்
துத்தியம்புரி பதிகமேத் தெடுப்பார்
துன்பமற்றசிற் சுகத்திசைவாரே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar