SS பழனியாண்டவர் ஊஞ்சல் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பழனியாண்டவர் ஊஞ்சல்
பழனியாண்டவர் ஊஞ்சல்
பழனியாண்டவர் ஊஞ்சல்

(பழ.தரும.ஆறுமுகம் (பெரிய தோட்டம்) அவர்கள் இயற்றியது சிரவணம்பட்டி)

1. முண்டிதமாம் சிரத்தவனே ஆடீர் ஊஞ்சல்
முறுவலிக்கும் முகத்தவனே ஆடீர் ஊஞ்சல்
தண்டு கொண்ட புலத்தவனே ஆடீர் ஊஞ்சல்
தலை மாலை பூண்டவனே ஆடீர் ஊஞ்சல்
அண்டிவந்து அடிபோற்றும் அடியார் தம்மை
அருள்புரிந்து காப்பவனே ஆடீர் ஊஞ்சல்
பண்டுமுதல் இன்றுவரை சிரவை யூரில்
பழனிமலை ஆண்டவனே ஆடீர் ஊஞ்சல்

2. ஒருமையுடன் மலரடியை நினைந்து போற்றும்
உத்தமருக்கு அருள்பவனே ஆடீர்ஊஞ்சல்
பெருமையுடன் நினைப் போற்றும் தொண்டர் தங்கள்
பிழை பொறுத்துக் காப்பவனே ஆடீர் ஊஞ்சல்
இருமையிலும் இணையடிகள் காட்டிக் காக்கும்
ஏறுமயில் வாகனனே ஆடீர் ஊஞ்சல்
உரிமையுடன் தாண்மலர்கள் போற்றி நின்றோம்
ஒண்தண்ட பாணியனே ஆடீர் ஊஞ்சல்

3. கரம் குவித்து வருபவரைக் கருணை யோடு
காக்கின்ற சண்முகனே ஆடீர் ஊஞ்சல்
உரங் கொண்ட மனத்துடனே உன்னைப் போற்றி
உழைப்பவருக் கருள்பவனே ஆடீர் ஊஞ்சல்
மாங்கடம்பின் மலர்மாலை சூட்டி உன்னை
வணங்கினோம் மகிழ்வுடனே ஆடீர் ஊஞ்சல்
பரங்குன்றில் மணமகனே, சிரவை யூரில்
பயில் தண்ட பாணியனே ஆடீர் ஊஞ்சல்

4. வந்தவரின் மனங்குளிர மகிழ்ச்சி பொங்க
வரம்பலவும் தருபவனே ஆடீர் ஊஞ்சல்
சிந்தைமிக நொந்துவரும் தொண்டர் கட்குத்
திருவருளைப் பொழிபவனே ஆடீர்ஊஞ்சல்
கந்த குரு முருகன்எனக் கணங்கள் தோறும்
கடல் அலைகள் முத்தமிடும் கடல் ஒரத்துச்
செந்தில் நகர்க் காவலனே! சிரவை யூரில்
திகழ் தண்ட பாணியனே ஆடீர் ஊஞ்சல்

5. திரு நாளாம் கார்த்திகையில் அறுவர்மாதர்
திரு முலைப்பால் உண்டவனே ஆடீர் ஊஞ்சல்
குருபரனே! தமிழ்மகனே! ஆடீர் ஊஞ்சல்
குறை தீர்க்கும் குணக்குன்றே ஆடீர் ஊஞ்சல்
ஒருமகளாம் வள்ளிதனைத் தினைப்புனத்தில்
உருமாறி மணந்தவனே ஆடீர் ஊஞ்சல்
பெருமாளின் மருமகனே சிரவை யூரில்
பெரும் தண்ட பாணியனே ஆடீர் ஊஞ்சல்

6. நிருத்தமிடும் தனித்தலைவன் நெற்றிக்கண்ணில்
நீள் சுடராய் உதித்தவனே ஆடீர் ஊஞ்சல்
வருத்தமுடன் வந்துன்னை வணங்கு வோர்க்கு
வரமளித்துக் காப்பவனே ஆடீர் ஊஞ்சல்
விருத்தமுடன் அரகரா என்று போற்றி
வேண்டுபவர்க்கு அருள்பவனே ஆடீர் ஊஞ்சல்
திருத்தணியின் மன்னவனே! சிரவை யூரில்
சேர் தண்ட பாணியனே ஆடீர் ஊஞ்சல்

7. ஐந்துகரக் கணபதியின் தம்பியான
அறுமுகனே உமைமகனே ஆடீர் ஊஞ்சல்
ஐந்த முத நீரோட்டில் அனைத்து நாளும்
அநேகமுறை கொள்பவனே ஆடீர் ஊஞ்சல்
நைந்துருகி வருபவரை அருள்மழையில்
நனைத் தெடுத்துக் காப்பவனே ஆடீர் ஊஞ்சல்
பைந் தமிழின் திருவுருவே! சிரவை யூரில்
பகர் தண்ட பாணியனே ஆடீர் ஊஞ்சல்

8. சந்ததமுன் மலைமீது தங்கத் தேரில்
தனிப்பவனி வருபவனே ஆடீர் ஊஞ்சல்
செந்தமிழைத் தந்தவனே! ஆடீர் ஊஞ்சல்
திருமந்திர கிரிமலையாய் ஆடீர் ஊஞ்சல்
தந்தை புகழ் மந்திரனே ஆடீர் ஊஞ்சல்
தாய்ச்சக்தி வேலவனே ஆடீர் ஊஞ்சல்
பந்தமறச் செய்தவனே! சிரவை யூரில்
பழகு தண்ட பாணியனே ஆடீர் ஊஞ்சல்

9. ஐந்தமுதம் பால்தேன் நெய் பழச்சாற்றோடு
ஆயிரமரயிரம் குடங்கள் அமுதம் ஆட்டிச்
சிந்தைதனைக் குளிர்வித்த எங்கள் சாதுச்
சீர்முனியின் தெய்வதமே ஆடீர் ஊஞ்சல்
நொந்துமிக மனம்வாடி வருவோர் துன்பம்
நொடிப் போதில் தீர்ப்பவனே! ஆடீர் ஊஞ்சல்
செந்தமிழைத் தந்தவனே! சிரவை யூரில்
சீர் தண்ட பாணியனே ஆடீர் ஊஞ்சல்

10. அருணகிரி திருப்புகழைப் பொழிவ தற்கு
அருள் வயலூர் மாமணியே ஆடீர் ஊஞ்சல்
கருதும் ஒரு சோலை மலை பணிவோர்க் கெல்லாம்
கனிந்தருளும் கண்மணியே ஆடீர் ஊஞ்சல்
மருவும் எழில் சுவாமிமலை தனில் தந்தைக்கு
மாண்பொருளை உரைகுருவே ஆடீர் ஊஞ்சல்
மருதமலை மன்னவனே! சிரவை யூரில்
மகிழ் தண்ட பாணியனே ஆடீர் ஊஞ்சல்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar