SS ராஜராஜேஸ்வரி வழிபாடு- சமஸ்கிருதம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ராஜராஜேஸ்வரி வழிபாடு- சமஸ்கிருதம்
ராஜராஜேஸ்வரி வழிபாடு- சமஸ்கிருதம்
ராஜராஜேஸ்வரி வழிபாடு- சமஸ்கிருதம்

(அழியாத ஐஸ்வர்யங்களையும், பதவி உயர்வையும் தரவல்லது)

ஸ்ரீ ராஜராஜேச்வர்யஷ்கம்-ஸ்ரீ தேவி கருமாரி அம்மனுக்கும் பகவதி
ஸ்ரீ சண்டிகா தேவிக்கும் மிகவும் ப்ரியமான ஆனந்த ஸ்தோத்ரம்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவியைப் பற்றி எட்டு ஸ்லோகங்களும் அழியா செல்வம், அந்தஸ்து, புகழ், பதவி, நோயற்ற மங்களமான குடும்ப சுகவாழ்வு, உயர்கல்வி ஆகியவைகளை அளிக்கவல்லது. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தின் தலைப்பே எல்லா கடவுள்களுக்கும் ராணியானவள், சர்வ வல்லமை பொருந்தியவள்,  எல்லா இடத்திலும் வ்யாபித்துள்ளவள் என்று அறிவித்தாலும், எட்டு ஸ்லோகங்களும் அம்பா என்றே ஆரம்பிக்கின்றன. அம்பா என்றால் தாய். எல்லா உலகுக்கும் தாய். அவ்விதமே ஒவ்வொரு ஸ்லோகத்தின் கடைசி பாதம் பார்வதி தேவியை, எல்லோருக்கும் மேம்பட்டவள், சேதாநாரூபீ, சர்வ ஐஸ்வர்யம் படைத்தவள், தேவதைகளுக்கு எல்லாம் ராஜ ராஜேஸ்வரி என்று கூறி முடிகிறது உண்மையில் எல்லா ஸ்லோகங்களும் பார்வதி தேவியின் பல அவதாரங்களைக் குறிப்பவையே.

1. அம்பா சாம்பவி சந்த்ரமௌலி அபலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹைமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவீ
ஸாவித்ரீ நவயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய-லக்ஷ்மீ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

தாய், சாம்பவி, சந்த்ரமௌளி, அபலா, அபர்ணா, உமா, பார்வதி,காளி, ஹிமவானின் புதல்வி, சிவா, முக்கண்ணளான காத்யாயநீ,  பைரவீ, சாவித்ரீ, புதுப்புது இளமைத்தோற்றம் உடையவர், சுபத்தைத் தருபவள், சாம்ராஜ்ய லக்ஷ்மியை அளிப்பவள். இவளே ஆத்ம ஸவரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆவாள்.

2. அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனீ ஆனந்த-ஸந்தாயினீ
வாணீ-பல்லவ-பாணி-வேணு-முரளீ-கானப்ரியா-லோலினீ
கல்யாணீ உடுராஜபிம்ப-வதனா தூம்ராக்ஷ-ஸம்ஹாரிணீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

இத்தாயே-மோஹிநீ தேவதை, மூவுல காளி, பேரானந்தம் தருபவள், சரஸ்வதி, இளந்தளிர் கைகள் கொண்டவள், புல்லாங்குழல் இசையை  பிரியத்துடன் இசைத்து விளையாடுபவள். மங்களமானவள், சந்த்ர பிம்பம் போல் முகம் உள்ளவள். தூம்பராக்ஷனை வதம் செய்தவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆவாள்.

3. அம்பா-நூபுர-ரத்ன-கங்கண-தரீ கேயூர-ஹாராவலீ
ஜாதீ-சம்பக-வைஜயந்தி-லஹரீ-க்ரைவேயகை-ராஜிதா
வீணா-வேணு-விநோத-மண்டித-கரா வீராஸனே ஸம்ஸ்திதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

இத்தாயே ரத்னத்தால் ஆன சதங்கை, கை வளை, கழுத்தடிகை, பலவித ஹாரமாலைகள், ஜாதி, சம்பக மாலைகள், வைஜயந்தி மாலை, கழுத்து ஆபரணங்கள் ஆகியவைகளை அணிந்துள்ளாள். வீணை, புல்லாங்குழல் இவைகளை மீட்டும் திருக்கை கொண்டவள். வீராஸநத்தில் வீற்றிருப்பவள். இவளே ஆத்ம ஸ்வரூபிணீ, பரதேவதை பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

4. அம்பா ரௌத்ரிணி பத்ரகாளி பகலா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ
ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மானோஜ்ஜ்வலா
சாமுண்டாச்ரித-ரக்ஷ-போஷ-ஜநநீ தாக்ஷõயணீ வல்லவீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

இந்தத் தாயானவள் ரௌத்ரிணீ, பத்ரகாளி, தீக்கொழுந்து எரியும் முகம் உள்ள பகலா, வைஷ்ணவி, ப்ரஹ்மாணீ தீரிபுராந்தகீ, தேவர்களால் வணங்கப் பெறுபவள், பளபளக்கும் ஒளிபடைத்தவள், சாமுண்டா, அண்டினவர்களை காப்பாற்றுபவள், அவர்களுக்கு பூஷ்டி அளிக்கும் தாய், தாக்ஷõயணீ, வல்லமை பொருந்தியவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.
 
5. அம்பா சூல-தனு:-குசாங்குச-தரீ அர்த்தேந்து பிம்பாதரீ
வாராஹீ மதுகைடப-ப்ரசமனீ வாணீ-ரமா-ஸேவிதா
மல்லாத்யாஸுர-மூகதைத்ய-மதனீமாஹேச்வரீ அம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

இந்தத் தாயாவனள் சூலம், வில், கதை, அங்குசம் ஆகியவைகளைத் தன் திருக்கைகளில் தரித்தவளாயும், தலையில் அர்த்த சந்த்ரனை உடையவளாகவும் இருப்பவள். வாராஹீ, மதுகைடபர்களை அழித்தவள். சரஸ்வதி, லக்ஷ்மீ இவர்களாலும் துதிக்கப் பெற்றவள், மல்லாதி அசுரர்களையும் மூகாசுரனையும் அழித்தவள். மாஹேச்வரீ, அம்பிகா, இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

6. அம்பா ஸ்ருஷ்டி-விநாச-பாலனகரீ ஆர்யா விஸம்சோபிதா
காய்த்ரீ ப்ரணவாக்ஷர அம்ருதரஸ: பூர்ணானுஸந்தீ-க்ருதா
ஓங்காரீ விநதாஸுதார்ச்சித பதா உத்தண்ட-தைத்யாபஹா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

இந்தத் தாயானவள் ஸ்ருஷ்டி-ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்பவள் உயர்ந்தவளாக விளங்குபவள். காயத்ரீ, ப்ரணவம் (ஓங்கார எழுத்து) இவைகளின் அம்ருதரஸமானவள், ஓங்காரஸ்வரூபிணீ தேவதைகளால் வணங்கி அர்ச்சிக்கப்படும் திருவடியை உடையவள், அசுரர்களைக் கொல்வதில் முனைப்பாக இருப்பவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

7. அம்பா சாச்வத-ஆகமாதி-வினுதா ஆர்யா மஹாதேவதா
யா ப்ரஹ்மாதி-பிபீலிகாந்த-ஜநநீ யா வை ஜகன்மோஹினீ
யா பஞ்சப்ரணவாதி-ரேபஜனனீயா சித்கலா மாலினீ
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

இந்தத் தாயானவள் அழியாத தேவங்களால் போற்றப்பட்டவள். உயர்ந்த மஹாதேவதை, சதுர்முக ப்ரஹ்மா முதல் ஈ, எறும்பு வரை எல்லாவற்றையும் படைக்கும் ஜகந்மாதா ஆவாள். சகல ஜகத்தையும் மோஹிப்பிப் பவள். பஞ்சப்ரணவாதிகளை உண்டாக்குபவள், ÷ரபம் எனும் அக்ஷரத்துக்கு மூலமானவள் சித்கலா, மாலினி என்ற பெயர்கள் உடையவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

8. அம்பா-பாலித-பக்தராஜ-தனிசம் அம்பாஷ்டகம் ய:படேத்
அம்பா-லோக-கடாக்ஷ வீ÷க்ஷ-லலிதஞ்ச ஐச்வர்யமவ்யாஹதம்
அம்பா பாவன-மந்த்ர-ராஜ-படனா தந்தே ச மோக்ஷ-ப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேச்வரீ

இந்தத் தாயானவள் பக்தர்களைக் காப்பதில் பற்றுள்ளவள். இவளைப் பற்றிய இந்த அம்பாஷ்டகத்தை எவன் படிக்கிறானோ அவன் அம்பாவின் லீலா விநோத கடைக்கண் பார்வைக்கு இலக்காகி உன்னதமான அழியா நற்செல்வங்களைப் பெறுவான்.மேலும் அம்பாளின் இந்த மந்த்ர ராஜத்தைப் படிப்பவனுக்கு மோக்ஷமளிப்பாள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள்.

ஸ்ரீ ராஜராஜேச்வர்யஷ்டகம் சம்பூர்ணம் (இந்த ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தின் பெருமை எட்டாவது ஸ்லோகத்திலேயே சொல்லப்படுகிறது என்பது விசேஷம். எட்டு ஸ்லோகங்கள் உள்ளதால் அஷ்டகம் எனப்படும் அருமருந்தாகிறது.)


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar