SS சிவானந்தா லஹரி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சிவானந்தா லஹரி
சிவானந்தா லஹரி
சிவானந்தா லஹரி

ஆதிசங்கரர் அருளிய சிவானந்தா லஹரி

1. சிவ பார்வதிக்கு நமஸ்காரம்

சம்போ மகாதேவ!
கலாப்யாம் சூடாலங்க்ருத-
சசிகலாப்யாம் நிஜதப:
பலாப்யாம் பக்தேஷுப்ரகடித
பலாப்யாம் பவதுமே
சிவாப்யா மஸ்தோக த்ரிபுவன
சிவாப்யாம் ஹ்ருதி புனர்
பவாப்யா மானந்த ஸ்புர
தனுபவாப்யாம் நதிரியம்  - சம்போ மகாதேவ !

பொருள்: கலைவடிவாய்த் திகழ்பவர்களும், சந்திர கலையைச் சிரசில் அணிந்தவர்களும், ஒருவருக்கொருவர் தவத்தின் பயனாய் விளங்குபவர்களும், அருளின் பயனையெல்லாம் அடியவர்களிடம் விளங்க வைப்பவர்களும், மூவுலகினருக்கும் குறைவில்லாத சகல நலன்களையும் அருளி வருபவர்களுக்கும், உள்ளத்தில் நினைக்கும்போதெல்லாம் புதிதாய்த் தோன்றுபவர்களும் ஆத்மாவின் அனுபவத்தால் அளவற்ற மகிழ்ச்சி கொள்பவர்களுமாகிய, அர்த்த நாரீஸ்வர வடிவில், சிவசக்தி இணைந்த வடிவினருக்கு என்னுடைய சிரம் தாழ்த்திய வணக்கம் உரித்தாகட்டும்.

2. சிவானந்தப் பெருக்கு

சம்போ மகாதேவ!
சகலந்தீ சம்போ த்வச்சரித-
ஸரித: கில்பிஷரஜோ
தலந்தீ தீகுல்யாஸ ரணிஷு
பதந்தீ விஜயதாம்
திசந்தீ ஸம்ஸார ப்ரமண
பரிதாபோப சமனம்
வஸந்தீ மச்சேதோ ஹ்ரதபுவி
சிவானந்த லஹரீ  - சம்போ மகாதேவ !

பொருள்: சம்புவாகிய ஈசனே! உமது சரித்திரம் என்னும் நதியினின்றும் பெருகிவந்து, பாவம் என்னும் புழுதியை அடித்துச் செல்வதாயும், புத்தியெனும் வாய்க்காலின் வழியிலே பாய்ந்து சென்று, இவ்வுலக வாழ்வாகிய பிறவிச் சூழலில் ஏற்படும் பெருந்துன்பங்களைக் போக்கி அமைதியை அளிப்பதாயும், என் உள்ளத்தில் வந்து தேங்கி நிற்பதாயும் உள்ள சிவானந்த வெள்ளம் எப்போதும் வெற்றியுடன் விளங்குவதாக!

3. சிவனது வடிவத்தை தியானித்தல்

சம்போ மகாதேவ !
த்ரயீவேத்யம் ஹ்ருத்யம் த்ரிபுரஹர
மாத்யம் த்ரிநயனம்
ஜடாபாரோதாரம் சலதுரக
ஹாரம் ம்ருகதரம்
மஹாதேவம் தேவம் மயிஸதய
பாவம் பசுபதிம்
சிதாலம்பம் ஸாம்பம் சிவமதி
விடம்பம் ஹ்ருதிபஜே  - சம்போ மகாதேவ !

பொருள்: ரிக், யஜுர், ஸாமம் என்றும் மூன்று வேதங்களால் அறியத்தக்கவரும், மனதிற்கு மிக இனியவரும், முப்புரங்களை அழிப்ப வரும். எல்லாவற்றுக்கும் முதலானவரும். மூன்று கண்களையுடையவரும், சடைமுடியைத் தாங்கி கம்பீர உருவத்
தோற்றமுடையவரும், பாம்பை மாலையாய் அணிந்தவரும், மானைக் கையில் ஏந்தியுள்ளவரும், சுயமாய்ப் பிரகாசிப்பவரும், அருள் நோக்கம் கொண்டவரும், உயிர்களுக்கு நாயகரும், அறிவின் உறைவிடமாய் விளங்குபவரும், அம்பிகையுடன் கூடியிருப்பவரும், நடனத்தில் மிகுந்த வல்லமையுடைவருமான பரமேஸ்வரனை என் உள்ளத்தில் இருத்தித் தியானம் செய்கிறேன்.

4. வேறு எதையும் விரும்பாத பக்தி

சம்போ மகாதேவ !
ஸஹஸ்ரம் வர்த்தந்தே ஜகதி விபுதா:
க்ஷúத்ர பலதா
நமன்யே ஸ்வப்னே வா ததனுஸரணம்
தத்க்ருத பலம்
ஹரி ப்ரஹ்மாதீனா மபி
நிகடபாஜா மஸுலபம்
சிரம்யாசே சம்போ சிவ
தவ பதாம் போஜ-பஜனம்  -சம்போ மகாதேவ !

பொருள்: இந்த உலகில் மிகக்குறைவான பலனைத் தரக்கூடிய தேவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்களை வழிபடவோ, அதன்மூலம் பயனடையவோ நான் கனவிலும் எண்ணமாட்டேன். ஈசனே! உனக்கு மிக அருகிலேயே இருந்தாலும்கூட, விஷ்ணு, பிரம்மா முதலியவர்களாலும் அடைவதற்கரியதான உன்னுடைய திருவடித் தாமரையைப் பணிந்து தொழுவதையே நான் என்றும் வேண்டி நிற்கிறேன்.

5. சிவனது கருணையைக் கோருதல்

சம்போ மகாதேவ !
ஸ்மிருதௌ சாஸ்த்ரே வைத்யே சகுன:
கவிதா கான பணிதௌ
புராணே, மந்த்ரே வாஸ்துதி நடன
ஹாஸ்யேஷ் வசதுர:
கதம் ராஜ்ஞாம் ப்ரீதிர் பவதி
மயி கோஸஹம் பசுபதே
பசும்மாம் ஸர்வஜ்ஞ ப்ரதித
க்ருபயா பாலய விபோ   -சம்போ மகாதேவ !

பொருள்: மனு முதலிய தர்ம சாஸ்திர நூல்களிலும், ஜோதிடம் முதலிய கலைகளிலும், வைத்திய நூல்களிலும் பிறரை மகிழ்விப்பதிலும், புராணங்களைப் பற்றி விரிவுரை நிகழ்த்துவதிலும். மந்திரங்களைப் பயன்படுத்துதலிலும், நடிப்பு போன்ற கலைகளை வெளிப்படுத்துவதிலும் நான் சிறிதும் ஆற்றலில்லாதவன். எல்லாவற்றையும் அறிந்தவரும். உயிர்கள் அனைத்தின் தலைவரும், எங்கும் நிறைந்தவருமான ஈசனே! ஒன்றுமறியாதவனாகிய என்னை உம் அளவற்ற கருணையால் காத்தருள்வீராக!

6. வீண் விவாதம்

சம்போ மகாதேவ !
கடோ வாம்ருத், பிண்டோப்பயணுரபி
சதூமோஸ்க்னி ரசல:
படோவா தந்துர்வா பரிஹரதி
கிம் கோர சமனம்
வ்ருதா கண்ட÷க்ஷõபம் வஹஸி
தரஸா தர்க்கவசஸா
பதாம்போஜம் சம்போர் பஜ:
பரம ஸெளக்யம் வ்ரஜஸுதீ - சம்போ மகாதேவ !

பொருள்: குடம், மண்கட்டி, அணு, புகை, நெருப்பு, மலை, துணி, நூல் என்றெல்லாம் வாதத்திற்காகப் பல்வேறு மறைபொருள் சொற்களால், தொண்டையில் ஏற்பட்ட வறட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிறாய். கொடிய யமனை இது விலக்கி விடுமா? இறைவனாம் சிவபெருமானின் திருவடித் தாமரையைத் தியானம் செய்துவரப் பழகு. நல்லறிவு பெற்றவனே! அந்தப்
பேரின்பத்தையே நாடக் கற்றுக் கொள். (பொருளற்ற வீண் விவாதங்கள் இறைவனின் அருளைப் பெற உதவமாட்டா என்பது பொருள்.

7. எல்லாமே ஈசனுகு சமர்ப்பணம்

சம்போ மகாதேவ !
மனஸ்தே பாதாப்ஜே நிவஸது வச;
ஸ்தோத்ர பணிதௌ கரௌ
சாப்யர்ச்சாயாம் ச்ருதிரபி
கதா கர்ணன விதௌ:
தவ த்யானே புத்திர் நயனயுகலம்
மூர்த்தி விபவே
பரக்ரந்தான் கைர்வா பரமசிவ
ஜானே பரமத:   -சம்போ மகாதேவ !

பொருள்: பரமசிவனே! மனம் உன்னுடைய திருவடித் தாமரையிலும், வாக்கு உன் அளவற்ற புகழைப் பேசுவதிலும், இரு கரங்களும் உன்னை அர்ச்சனை புரிவதிலும், காது உன் வரலாறுகளைக் கேட்பதிலும், புத்தி முழுதும் உன்னைத் தியானம் செய்வதிலும், இரு விழிகளும் உன் திருமேனியின் பேரழகைக் கண்டு களிப்பதிலும் நிலைபெற்றிருக்கட்டும். அப்படி இருந்து விட்டால் மற்ற நூல்களைப் பற்றி நான் எப்படி அறிந்து கொள்ளுதல் இயலும்?

8. சிவனை விட சிறந்த தெய்வமில்லை

சம்போ மகாதேவ !
யதா புத்தி: சுக்தௌ ரஜதமிதி
காசாச்மனி மணிர்ஜலே
பைஷ்டே க்ஷீரம் பவதி
ம்ருகத் ருஷ்ணா ஸுஸலிலம்
ததா தேவ ப்ராந்த்யா பஜதி
பவதன்யம் ஜடஜனோ
மஹாதேவேசம் த்வாம் மனஸி
ச ந மத்வா பசுபதே   - சம்போ மகாதேவ !

பொருள்: பசுபதியே! சிப்பியை வெள்ளி என்றும், கல்லை வைரம் என்றும், மாவு கலந்த நீரைப் பால் என்றும், கானலை நீர் என்றும் மனம் எண்ணி எப்படி ஏமாறுகிறதோ, அப்படித்தான் அறியாமை மிக்க மனிதன், தேவர்களெல்லாம் போற்றி வணங்கக் கூடிய
மேலான தெய்வமான உன்னை மனத்தில் நினைத்துக் தொழாமல் வேறு தெய்வங்களைச் சேவிக்கிறான்.

9. உள்ளத்தாமரையே சிவனுக்குரிய மலர்

சம்போ மகாதேவ !
கபீரே சாஸாரே விசதி
விஜனே கோரவிபினே
விசாலே சைலே ச ப்ரமதி
குஸுமார்த்தம் ஜடமதி:
ஸமர்ப்யைகம் சேதஸ் ஸரஸிஜம்
உமாநாத பவதே
ஸுகேனா வஸ்தாதும் ஜனஇஹ
நஜானாதி கிமஹோ - சம்போ மகாதேவ !

பொருள்: உமாபதியான பரமசிவனே! உன்னை அர்ச்சிக்க ஆழ்ந்த  பள்ளங்களிலும், மக்கள் நடமாட்டமில்லாத அடர்ந்த காட்டிலும், உயர்ந்து விளங்கும் மலைகளிலும், மலர்களைத் தேடி அறியாமை மிக்க மனிதன் அலைந்து திரிகிறான். உள்ளமாகிய தாமரைப் பூவை அன்புடன் உனக்குப் படைத்துவிட்டு எங்கும் அலையாமல் ஓரிடத்தில் இருப்பதற்கு அறிந்து கொள்ளாமல் மனிதன் இருப்பது விந்தைதான்.

10. பக்திக்கு தேவையானது உள்ளம்

சம்போ மகாதேவ !
நரத்வம் தேவத்வம் நக
வன ம்ருகத்வம் மசகதா
பசுத்வம் கீடத்வம் பவது
விஹகத்வாதி ஜனனம்
ஸதா த்வத்பாதாப்ஜ
ஸ்மரண பரமானந்தலஹரி
விஹாராஸக்தஞ் சேத்த்ருத்ய
மிஹகிம் தேன வபுஷா  - சம்போ மகாதேவ !

பொருள்: மனிதப் பிறவியோ, தேவப் பிறவியோ, அல்லது மலைகளிலும், காடுகளிலும் அலைந்து திரியும் மிருகங்கள், கொசு, பசு, புழு, பறவை போன்ற எந்தப் பிறவியாயினும் ஏற்படட்டும். எப்பொழுதும் உன்னுடைய திருவடித் தாமரைகளை விட்டு நீங்காமல் இருந்து தியானம் செய்து அந்தப் பேரானந்த வெள்ளத்தில் விளையாடி மகிழும் <உள்ளம் மட்டும் வாய்க்குமானால், எத்தகைய உடலைப் படைத்தால்தான் என்ன குறைவு நேர்ந்துவிடப் போகிறது?

11. பக்தனிடம் வசப்படும் சிவன்

சம்போ மகாதேவ !
வடூர்வா கேஹீவா யதிரபி
ஜடீவா ததிதரோ
நரோ வாய: கச்சித் பவது
பவகிம் தேந பவதி
யதீயம் ஹ்ருத்பத்மம் யதி
பவததீனம் பசுபதே
த தீயஸ் த்வம் சம்போ பவஸி
பவ பாரஞ்ச வஹஸி  - சம்போ மகாதேவ !

பொருள்: மனிதப் பிறவியின் நான்கு நிலைகளான பிரம்மசாரி, இல்லறத்தான், சந்நியாசி, வாகனப் பிரஸ்தன் ஆகியவற்றிலோ, அல்லது இவையல்லாத நிலையிலோ வேண்டுமானாலும், ஒரு மனிதன் இருந்துவிட்டுப் போகட்டும். பரம சிவனே! பசுபதியே!
யாருடைய உள்ளமென்னும் தாமரை உன்னுடைய வசப்பட்டிருக்குமோ, அவனுக்கே நீ வசப்பட்டு விடுகிறாய். சம்புவே! அவனது பிறவி என்னும் சுமையையும் நீயே தாங்கிக் கொள்கிறாய் என்னும்போது அந்த மனிதனுக்கு வேறெதுவும் பொருட்டன்று.

12. பரமயோகி யார்?

சம்போ மகாதேவ !
குஹேயாம் கேஹேவா பஹிரபி
வனே வாஸ் த்ரிசிகரே
ஜலேவா வஹ்நௌ வா வஸது
வஸதே: கிம்வத பலம்
ஸதா யஸ்ஸைவாந்த: கரண மபி
சம்போ தவ பதே
ஸ்திதஞ்சேத் யோகோஸ்ஸெள
ஸ ச பரமயோகீ ஸ ச ஸுகீ -சம்போ மகாதேவ !

பொருள்: சம்புவே! ஒருவன் பக்தி செய்வதற்கு அவன் குகையிலோ, வீட்டிலோ, அல்லது வெளியிலோ இருந்தாலும் சரி, அல்லது மலை உச்சியிலோ, நீரிலோ, நெருப்பிலோ இருந்தாலும் சரி. இவையெல்லாம் பொருட்டில்லை. யாரொருவன், இருக்கும் எந்த இடத்திலும் உன்னுடைய திருவடிகளில் மனத்தைச் செலுத்தி நிலைபெறச் செய்கிறானோ அவன்தான் பரமயோகி எனச் சொல்லத்தக்கவன் ஆவான். அவனே இன்புறுபவன் ஆவான்.

13. மூவுலகிலும் சிறந்தவர்

சம்போ மகாதேவ !
அஸாரே ஸம்ஸாரே நிஜபஜன
தூரே ஜடதியா
ப்ரமந்தம் மாமந்தம் பரமக்ருபயா
பாது முசிதம்
மதன்ய: கோதீனஸ்தவ க்ருபண
ரக்ஷõதி நிபுணஸ்
த்வதன்ய: கோ வா மே திரிஜகதி
சரண்ய: பசுபதே  -சம்போ மகாதேவ !

பொருள்: பசுபதியான பரமசிவனே! என்னுடைய மதிமயக்கத்தால், பயனற்றதும், ஆத்ம தியானத்திற்கு உதவாததாயும் உள்ள பிறவிச் சுழலில் சிக்கிச் சுற்றி வரும் குருடனான என்னை, கருணை காட்டிக் காப்பாற்றுவது உன் கடமை. உன் கருணையைச் செலுத்த என்னை விட ஏழை வேறு யார் உளர்? ஏதுவன்றி எனக்கும் ஏழையேனைக் காத்து ரட்சிக்கும் தன்மையில் சிறந்தவராகிய உன்னைவிடச் சிறந்தவர்கள் இந்த மூவுலகிலும் யார் இருக்கிறார்கள்?

14. கருணை மனம் படைத்தவர்

சம்போ மகாதேவ !
ப்ரபுஸ்த்வம் தீனானாம் கலு
பரமபந்து: பசுபதே
ப்ரமுக்யோஸ்ஹம் தேஷாமபி கிமுத
பந்துத்வ மனயோ:
த்வயைவ க்ஷந்தவ்யா: சிவ
மத பராதாச்ச ஸகலா:
ப்ரயத்னாத் கர்த்தவ்யம் மதவன
மியம் பந்து ஸரணி  - சம்போ மகாதேவ !

பொருள்: பசுபதியான சர்வேஸ்வரனே! மகாப்பிரபுவான நீ எளியவரான அடியவர்களுக்குச் சிறந்த உறவினன் அல்லனோ? எளியவர்களிலும் மிக எளியவனான எனக்கும் உனக்கும் இடைப்பட்ட உறவைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? கருணை மிக்க மனம் படைத்தவனே ! என் குற்றங்கள் யாவும் உன்னால் பொறுத்தருளத் தக்கவைதாம் என்பதால், உன்னுடைய பெருமுயற்சியால்தான் நான் காத்து ரட்சிக்கப்பட வேண்டும்.

15. ஈசனருளால் விதியையே வெல்லலாம்

சம்போ மகாதேவ !
உபேக்ஷõ நோசேத் கிந்ந ஹரஸி
பவத் த்யான விமுகாம்
துராசாபூயிஷ்டாம் விதி லிபி
மசக்தோ யதி பவான்
சிரஸ்தத்வை தாத்ரம் ந நகலு
ஸுவ்ருத்தம் பசுபதே
கதம்வா நிர்யதனம் கர நக
முகேனைவ லுலிதம்  - சம்போ மகாதேவ !

பொருள்: பசுபதியே! என்னைக் காத்தருளும் நோக்கத்தில் உனக்கு வெறுப்பொன்றும் இல்லையாயின், தீய ஆசைகள் நிறைந்து, உன்னைத் தியானிக்கும் விருப்பமில்லாதிருக்கும் உள்ளத்தை எனக்குப் படைத்த பிரம்மாவின் எழுத்தை ஏன் நீ மாற்றவில்லை? அத்தகைய சக்தி உனக்கில்லாமலிருப்பின், திடமாக  அமைந்ததும், யாரையும் கிள்ளியெறிய முடியாததுமான பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்தெறிய உன்னால் எப்படி முடிந்தது? உன் கருணையிருந்தால் விதியையும் வெல்லலாம் என்பது தெளிவாகிறதன்றோ?

16. எளியவரைக் காப்பதில் எப்போதும் ஆசை

சம்போ மகாதேவ !
விரிஞ்சிர் தீர்க்காயுர் பவது பவதா
தத்பர சிரச் சதுஷ்கம்
ஸம்ரக்ஷ்யம் ஸகலு புவிதைன்யம்
லிகித வான்
விசார: கோ வா மாம் விசத
க்ருபயா பாதி சிவதே
கடாக்ஷ வ்யாபார: ஸ்வயமபி
ச தீனாவன பர:  - சம்போ மகாதேவ !

பொருள்: நிர்மலமான சொரூபமும், மங்களமான வடிவமும் கொண்டவரான சர்வேசா! பிரம்மா தீர்க்காயுள் உடையவராக விளங்கட்டும். கிள்ளியெறியப்பட்ட ஒரு தலை நீங்கலாக உள்ள அவருடைய ஏனைய நான்கு தலைகளும் <உன்னால் காத்தருளப்படட்டும். அவர்தானே என்னுடைய தலையில் எழுதி வைத்தவர்? அதேபோல, எளியவர்களைக் காப்பதில் எப்போதும் ஆவல் மிக்க உன் கடைக்கண் பார்வை தான் என்னையும் காப்பாற்றி வருகிறது.

17. திருவடிகளின் தரிசனம்

சம்போ மகாதேவ !
பலாத்வா புண்யானாம் மயி கருணயா
வா த்வயி விபோ
ப்ரஸன்னே பி ஸ்வாமின் பவ தமல
பாதாப் யுகளம்
கதம் பச்யேயம் மாம் ஸதகயதி
நமஸ் ஸம்ப்ரம ஜுஷாம்
நிலிம்பானாம் ச்ரேணிர் நிஜ
கனக மாணிக்ய மகுடை:  -சம்போ மகாதேவ !

பொருள்: எங்கும் நிறைந்த பரிபூரணனான இறைவனே ! என் நற்செயல்களின் பயனாலோ, என் பேரில் கொண்ட இரக்கத்தாலோ, என் முன்னே நீ தோற்றமளித்தும் கூட, உன்னை வணங்குவதில்  மிகுந்த ஆர்வம் கொண்டவர்களான தேவர்களின் கூட்டம், அவர்கள் அணிந்துள்ள மாணிக்கம் இழைத்த மகுடங்களால் என்னைத் தடுத்து விடுகிற காரணத்தால், <உன்னுடைய தூய்மை மிக்க திருவடிகள் இரண்டையும் நான் எப்படித் தரிசித்து மகிழப் போகிறேனோ?

18. அளவற்ற கருணை

சம்போ மகாதேவ !
த்வமேகோ லோகானாம் பரம பலதோ
திவ்ய பதவீம்
வஹந்தஸ் த்வன் மூலாம் புனரபி
பஜந்தே ஹரிமுகா:
க்யத்வா தாக்ஷிண்யம் தவ சிவ
மதாசா ச கியதீ
கதா வா மத்ரக்ஷõம் வஹஸி
கருணா பூரித த்ருசா  - சம்போ மகாதேவ !

பொருள்: பரமசிவனே ! நீ ஒருவனே உலக மக்களுக்கெல்லாம் சிறந்த நன்மைகளை அளிப்பவன். உன்னிடமிருந்து சிறந்த தெய்வீகமான பதவிகளைப் பெற்றுள்ள திருமால் போன்றோர் மேலும் மேலும் உயர்வு பெற விரும்பி உன்னைத் தொழுது துதித்து
வருகிறார்கள். அண்டியவர்களை ஆதரித்துக் காக்கும் உன் அத்தகைய கருணைத் திருப்பார்வையைப் பெற்று மகிழப் பெரிதும் ஆவல் கொண்டுள்ள என்னையும் எப்போது காத்தருள மனங் கொள்ளப் போகிறாய்?

19. தலையெழுத்தை மாற்றியருள்க !

சம்போ மகாதேவ !
துராசா பூயிஷ்டே துரதிப
க்ருஹத் வார கடகே
துரந்தே ஸம்ஸாரே துரித
நிலயே து: க்க ஜனகே
மதாயாஸம் கிந்ந வ்யபநயஸி
கஸ்யோ பக்ருதயே
வதேயம் ப்ரீதிச்சேத் தவசிவ
க்ருதார்த்தா: கலு வயம்   -சம்போ மகாதேவ !

பொருள்: தீய ஆசைகள் நிறைந்ததும், தீயவர்களான அதிகாரிகளின் வீட்டு வாசலில் கொண்டுபோய் நிறுத்துவதும், தீய முடிவை உடையதும், பாவத்திற்கிருப்பிடமானதுமான துன்பத்தின் விளைநிலமாகிய பிறவிச் சுழலில் அகப்பட்டுத் தவிக்கும் என் துன்பத்தை நீ போக்காத காரணம் தான் என்ன? என் தலையில் பிரம்மா எழுதிய எழுத்துப் பொய்யாகாதிருக்கும் பொருட்டு பிரம்மாவுக்கு நீ உதவும் உத்தியா? பக்தர்களிடம் உன் கருணை இத்தகையதெனில் நாங்கள் அதிலிருந்து மீண்டவர்கள் தாம்.

20. மனக்குரங்கை அடக்குவாயாக!

சம்போ மகாதேவ !
ஸதா மோஹாடவ்யாம் சரதி
யுவதீனாம் குசகிரௌ
நடத்யாசா சாகாஸ்வடதி
ஜடிதி ஸ்வைர மபித
கபாலின் பி÷க்ஷõமே ஹ்ருதய கபி
மத்யந்த சபலம்
த்ருடம் பக்த்யா  பத்த்வா சிவ
பவத தீனம் குருவிபோ   - சம்போ மகாதேவ !

பொருள்: எங்கும் பரிபூரணனாய் நிறைந்து நிற்கும் சிவபிரானே ! எப்போதும் என் மனம், இளம் பருவக் கன்னியரின் மீது மோகங்கொண்டு, அலைந்து திரிவதுடன், அவர்களின் தன் பாரங்களெனும் மலைகளின் மீது கூத்தாடி, ஆசையெனும் கிளைகளில் வேகமாக விருப்பப்படி திரிகிறதே! கபாலத்தைக் கையிலேந்தி பிட்சை ஏற்கும் சிவனே! கண்மூடித் தனமாய் ஓடி ஆடுகின்ற எனது மனம் என்னும் குரங்கை, உன் அன்பென்னும் கயிற்றினால் கெட்டியாய்க் கட்டி, என்னை உன் வசமாக்கிக் கொள்வாயாக!

21. மனமே மகேசனின் இருப்பிடம்

சம்போ மகாதேவ !
த்ருதி ஸ்தம்பா தாராம் த்ருடகுண
நிபத்தாம் ஸகமனாம்
விசித்ராம் பத்மாட்யாம் ப்ரதிதிவஸ
ஸன்மார்க்க கடிதாம்
ஸமராரே மச்சேத ஸ்புட
பட குஉம் ப்ராப்ய
விசதாம் ஜய ஸ்வாமின் சக்த்யா
ஸஹ சிவகணை: ஸேவித விபோ  - சம்போ மகாதேவ !

பொருள்: சிவகணங்களால் சேவிக்கப் பெற்றவரே! ஆண்டவரே! காமனை எரித்தவரே! துணிவென்னும் தூணை ஆதாரமாய்க் கொண்டு உறுதி வாய்ந்த நற்குணம் என்னும் கயிற்றினால் கட்டப்பட்டு, விரும்பியவாறு விரும்பிய இடங்களுக்கெல்லாம் செல்லக்கூடியதும், அழகிய தாமரை மலர் போன்ற வடிவில் அமைந்து தினமும் நல்வழியில் செ<லுத்தப்படுவதுமான என்னுடைய மனம் என்னும், அழுக்கற்ற விசாலமான கூடாரத்தை வெற்றிகொண்டு விளங்குவாயாக!

22. உள்ளங் கவர்ந்த கள்வன்

சம்போ மகாதேவ !
ப்ரலோ பாத்யை ரர்த்தாஹரண
பரதந்த்ரோ தனிக்ருஹே
ப்ரவேசோத்  யுக்தஸ்ஸன் ப்ரமதி
பஹுதா தஸ்கரபதே
இமம் சேதச்சோரம் கதமிஹ
ஸஹே சங்கர விபோ
தவாதீனம் க்ருத்வா மயி
நிரபராதே குரு கிருபாம்  - சம்போ மகாதேவ !

பொருள்: மங்களங்களை அருள்பவரே! (அடியவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும்) கள்வர் தலைவரே! பேராசை போன்ற  தீய குணங்களைக் கொண்டு பிறர் பொருளைக் கவர்வதிலேயே மனத்தைச் செலுத்தி, செல்வர்களின் இல்லங்களை அடைவதிலேயே எண்ணமுடையதாய் என் பாழ்மனம் சுழலுகிறது. இந்த மனம் என்றும் திருடனை நான் எப்படி பொறுத்துக் கொள்வேன் ? இதை உனக்கு அடங்குமாறு செய்து, என்னைக் குற்றமற்றவனாக்கி எனக்கு அருள் புரிவாயாக!

23. பக்தியை விடப் பெரிய பதவி உண்டோ?

சம்போ மகாதேவ !
கரோமி த்வத் பூஜாம் ஸபதி
ஸுகதோ மேபவ விபோ
விதித்வம் விஷ்ணுத்வம் திசஸி
கலு தஸ்யா: பலமிதி
புனச்ச த்வாம் த்ரஷ்டும் திவிபுவி
வஹன் பக்ஷிம்ருகதா
மத்ருஷ்ட்வா தத்கேதம் கதமிஹ
ஸஹே சங்கர விபோ  - சம்போ மகாதேவ !

பொருள்: எங்கும் நிறைந்தவரான ஈசனே! நான் எப்போதும் உன்னையே பூசை செய்து வருகிறேன். உடனே நீ எனக்கு முன் காட்சி தந்து எனக்குப் பேரின்பத்தை அளிப்பாயாக! ஆனால், என் பக்திக்குப் பரிசாக பிரம்மனின் பதவியையோ, திருமாலின் பதவியையோ எனக்களிப்பாயானால், அன்னப் பறவை வடிவையும், காட்டுப் பன்றி வடிவையும் எடுத்துக்கொண்டு அவர்கள் உன் திருமுடியையும், திருவடியையும் காண முயன்றது போல் என்னால் அலைய இயலாது. அதனால் ஏற்படும் துன்பத்தைச் சகிக்க என்னால் இயலாது என்பதை, மங்களங்களைச் செய்யும் மகேஸ்வரனாகிய நீ புரிந்து கொள்வாயாக!

24. கயிலாயக் காட்சி

சம்போ மகாதேவ !
கதா வா கைலாஸே கனகமணி ஸெளதே
ஸஹ கணைர் வஸன்
சம்போரக்ரே ஸ்புட கடித
மூர்த்தாஞ்ச லிபுட:
விபோ ஸாம்ப ஸ்வாமின் பரமசிவ
பாஹீதி நிகதன்
விதாத்ரூணாம் கல்பான் க்ஷணமிவ
விநேஷ்யாமி ஸுகத:  - சம்போ மகாதேவ !

பொருள்: எங்கும் நிறைந்த சர்வேஸ்வரனே! கயிலாய மலையிலே பொன்னாலும் ரத்தினங்களாலும் இழைக்கப்பட்ட உப்பரிகையில் உறையும் உனக்கு முன்னால் நின்று, சிவ கணங்களுடன் வசித்துக்கொண்டு தலைக்கு மேல் என் கைகளைக் கூப்பி உயர்த்தி நின்று கொண்டு, எங்கும் ஈசனே! அன்னையாம் அம்பிகையுடன் கூடியிருப்பவரே! மங்களங்களைச் செய்தருளும் மகேசனே! நீண்ட காலத்தையெல்லாம் ஒரு நொடிப் பொழுதைப் போல்ப் போக்கி என்னைக் காத்தருள்வாயாக என்று எப்போது நான் சொல்லிக் காலங்கழிக்கப் போகிறேன்?

25. மானையும் மழுவையும் ஏந்திய காட்சி

சம்போ மகாதேவ !
ஸ்தவைர் ப்ரஹ்மாதீனாம் ஜயஜய
வசோபிர் நியமினாம்
கணானாம் கேலீபிர் மதகல
மஹோக்ஷஸ்ய ககுதி
ஸ்திதம் நீலக்ரீவம் த்ரிநயனம்
உமாச் லிஷ்ட வபுஷம்
கதா த்வாம் பச்சேயயம் கரத்ருத
ம்ருகம் கண்ட பரசும்   - சம்போ மகாதேவ !

பொருள்: பிரம்மன் முதலிய தேவர்களின் துதிகளோடும், நியம முறைப்படி தொழும் ரிஷிகளின் ஜயஜய என்ற முழக்கங்களோடும், சிவகணங்களின் விளையாட்டுகளைக் கண்டு களித்தபடி, செழித்துப் பருத்து விளங்கும் காளையின் திமிலின் மேல் வீற்றிருப்பவரும், நஞ்சு தங்கியதால் நீலவண்ணத்தில் கழுத்து அமையப் பெற்றவரும், முக்கண்ணரும், உமாதேவியாரால், தழுவப்பெற்ற உடலைப் படைத்தவரும் கைகளில் மானையும், கண்டக் கோடரியையும் ஏந்தியுள்ளவரும் ஆன உன்னை நான் எப்போது மகிழ்வேன்?

26. திருவடி சேவையே இன்பத்தின் எல்லை.

சம்போ மகாதேவ !
கதா வா த்வாம் த்ருஷ்ட்வா கிரிச
தவ பவ்யாங்க்ரி யுகளம்
க்ருஹீத்வா ஹஸ்தாப்யாம் சிரஸி
நயனே வக்ஷஸி வஹன்
ஸ மாச்லிஷ்யாக்ராய ஸ்புட ஜலஜ
கந்தான் பரி மலா
னலப்யாம் ப்ரஹ்மாத் யைர் முத
மனுபவிஷ்யாமி ஹ்ருதயே   - சம்போ மகாதேவ !

பொருள்: கயிலாய மலையில் வசிப்பவரே! மகேசனே! உன்னைப் பார்த்து, நலமளிக்கக் கூடிய உன் திருவடிகள் இரண்டையும் என்னிரு கரங்களால் பிடித்து, தலையிலும், மார்பிலும் வைத்து இறுகத் தழுவிக் கொண்டு, மலர்ந்து மணம் வீசும் தாமரை போன்ற நறுமண வாசனைகளை முகர்ந்துகொண்டு, பிரம்மா முதலிய தேவர்களாலும் அடைவதற்கரிதான பெருமகிழ்ச்சியை நான் எப்போது அனுபவிக்கப் போகிறேன்?

27. மனத்தையே காணிக்கை ஆக்குகிறேன்

சம்போ மகாதேவ !
கரஸ்த்தே ஹேமாத்ரௌ கிரிச
நிகடஸ்த்தே தனபதௌ
க்ருஹஸ்த்தே ஸ்வர்பூஜாமர ஸுரபி
சிந்தாமணி கணே
சிரஸ்த்தே சீதாம்சௌ சரண
யுகலஸ்த்தே தாஸ்யேஹம் பவது
பவதர்த்தம் மம மன:  - சம்போ மகாதேவ !

பொருள்: கயிலாய மலையில் <உறையும் ஈசனே! உன் கையிலேயே பொன் மலை இருக்க, செல்வத்திற்கெல்லாம் அதிபதியான குபேரன் உன் அருகிலேயே இருக்க, நீ உறையுமிடத்திலேயே கற்பகவிருட்சம், காமதேனு, சிந்தாமணி ஆகிய அரிய செல்வங்களின் கூட்டம் இருக்க, தலையில் குளிர்ச்சி மிக்க கிரணங்களையுடைய சந்திரன் இருக்க, உன் திருவடிகள் இரண்டிலும் அனைத்து வகையான மங்களங்களும் நிலைபெற்றிருக்க, என் பொருட்டுக் காணிக்கையாய் நான் எதை உனக்குக் கொடுப்பேன் ? என் மனத்தையே சிறந்த காணிக்கையாய்த் தருகிறேன்.

28. இந்தப் பிறவியிலேயே அடைந்த பேரின்பம்

சம்போ மகாதேவ !
ஸாரூப்யம் தவ பூஜனே சிவ
மஹாதேவேதி ஸங்கீர்த்தனே
ஸாமீப்யம் சிவபக்தி துர்ய ஜனதா
ஸாங் கத்ய ஸம்பாஷணே
ஸாலோக்யஞ்ச சராசராத்மகதனு
த்யானே பவானீபதே
ஸாயுஜ்யம் மம ஸித்த மத்ர பவதி
ஸ்வாமின் க்ருதார்த்தோ அஸ்ம்யஹம் - சம்போ மகாதேவ !

பொருள்: ஸாரூப்யம் என்னும் முக்தி நிலை உனக்குச் செய்யும் பூசையிலும், ஸாமீப்யம் என்னும் முக்தி நிலை சிவனே ! மகாதேவனே! என்று கூறி <உன்னைத் துதிப்பதிலும், ஸாலோக்யம் என்னும் முத்திநிலை சிவபக்தி மிகுந்த அடியவர்களுடன் கூடிப் பேசி இருப்பதிலும், ஸாயுஜ்யம் என்னும் முக்தி நிலை பிரபஞ்சத்தின் வடிவமான உன் திருமேனியைக் கண்டு தியானிப்பதிலும் இங்கே இந்தப் பிறவியிலேயே கிடைத்துவிட்டதாகக் கருதுகிறேன். பார்வதியின் நாதனே! அடையவேண்டிய பயனை அடைந்தவனாக உணர்கிறேன்.

29. நல்லுபதேசம் அருள்வாயாக!

சம்போ மகாதேவ !
த்வத் பாதாம்புஜ மர்ச்சயாமி பரமம்
த்வாம் சிந்தயாம்யன்வஹம்
த்வாமீசம் சரணம் வ்ரஜாமி வசஸா
த்வாமேவ யாசே விபோ
வீக்ஷõம் மே திச சாக்ஷீஷீம் ஸகருணாம்
திவ்யைச் சிரம் ப்ரார்த்திதாம்
சம்போ லோக குரோ மதிய மனஸஸ்
ஸெளக்யோபதேசம் குரு  - சம்போ மகாதேவ !

பொருள்: எங்கும் நிறைந்த ஈசனே! உன் திருவடித் தாமரைகளை வணங்குகிறேன். யாவற்றிலும் சிறந்த உம்மை எப்போதும் தியானம் செய்கிறேன். இறைவனான உன்னையே என் வாக்கினால் பிரார்த்தனை செய்வதுடன் உன்னையே சரணடைகிறேன். சகல இன்பங்களையும் நல்கும் சம்புவே! தேவலோகத்தில் உள்ளவர்களே  விரும்பி எதிர்பார்க்கும் உன் கண்ணின் கடைப்பார்வை நோக்கை என்மீது செலுத்துவாயாக ! சகல உலகங்களுக்கும் குருவானவரே! என் உள்ளத்திற்குப் பேரின்பத்தைத் தரும் நல்லுபதேசத்தையும் செய்தருள்வாயாக!

30. என்னால் இயன்ற பூஜை

சம்போ மகாதேவ !
வஸ்த்ரோத் தூத விதௌ ஸகஸ்ரகரதா
புஷ்பார்ச்சனே விஷ்ணுதா
கந்தே கந்தவ ஹாத்மதா அன்னபசனே
பர்ஹிர் முகாத்யக்ஷதா
பாத்ரே காஞ்சன கர்ப்பதாஸ்தி
மயிசேத் பாலேந்து
சூடாமணே சுச்ரூஷாம் கரவாணி தே
பசுபதே ஸ்வாமின் த்ரிலோகீ குரோ  - சம்போ மகாதேவ !

பொருள்: உயிர்க்குலம் அனைத்துக்கும் தலைவரான இறைவா! இளம் பிறைச் சந்திரனைச் சிரசில் அணிந்தவரே ! மூவுலங்களுக்கும் குருவானவரே! பூசையின் பொழுது <உனக்கு வஸ்திரங்களை அணிவித்து அலங்கரித்து மகிழ எண்ணற்ற கைகளையுடைய சூரியனின் தன்மையும், மலர்களால் அர்ச்சிக்க விஷ்ணுவின் தன்மையும், நறுமணப் பொருள்களால் அர்ச்சிக்க வாசனையைக் காற்றில் பரவச் செய்யும் வாயு பகவானின் தன்மையும், அனைத்தைப் படைத்து நிவேதனம் செய்ய தேவர்களின் தன்மையும், பூசைக்குரிய பாத்திரங்களை உருவாக்க ஹிரண்யகர்ப்பரின் தன்மையும் ஆகியவையெல்லாம் என்னிடம் அமைந்திருக்குமானால் உனக்கு வழிபாடு செய்ய வல்லவனாவேன்.

31. நஞ்சுண்டு நானிலங் காத்தவன்

சம்போ மகாதேவ !
நாலம்வா பரமோபகாரக மிதம்
த்வேகம் பசூனாம்பதே
பச்யன் குக்ஷிகதான் சராசரகணான்
பாஹ்யஸ்த்திதான் ரக்ஷிதும்
ஸர்வாமர்த்ய பலாயநௌஷத
மதிஜ் வாலாகரம் பீகரம்
நிக்ஷிப்தம் காலம் கலே ந கலிதம்
நோத்கிர்ண மேவ த்வயா  - சம்போ மகாதேவ !

பொருள்: உயிர்க்குலங்கள் அனைத்திற்கும் தலைவரான சர்வேசா! உன் வயிற்றில் அடைக்கலாமகியுள்ள, அசையும் உயிர்களையும், அசையாத மரம்,செடி, கொடிகளையும், அதே போல வெளியில் உள்ளவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற கருணை நோக்கத்துடன்- நெருப்பை உமிழ்ந்து அச்சத்தைத் தோற்றுவிப்பதும் -தேவர்களையெல்லாம் துன்புறுத்துவதுமான மூலிகைப் பொருள் கலந்த கொடிய விஷத்தை விழுங்கிவிடாமலும், உமிழ்ந்து வைத்திருக்கிறாயே, இந்த ஒரு சிறந்த உபகாரமே போதாதா, உன் பெருமைக்கு ?

32. நஞ்சைக் கழுத்தில் நிறுத்திய நாயகன்

சம்போ மகாதேவ !
ஜ்வாலோக்ர ஸகலாமராதிபயத க்ஷ்வேல:
கதம் வா த் வயா த்ருஷ்ட
கிஞ்ச கரே த்ருத: கரதலே
கிம்பக்வ ஜம்பூ பலம்
ஜிஹ்வாயாம் நிஹிதச்ச ஸித்த
குடிகா வா கண்டதேசே ப்ருத
கிம் தே நீலமணிர் விபூஷண
மயம் சம்போ மஹாத்மன் வத  - சம்போ மகாதேவ !

பொருள்: சகல உயிர்களையும் காத்தருளும் சம்புவே! மகாத்மாவே! தீக் கொழுந்தின் கொடிய தன்மையுடன் அச்சமூட்டும் தன்மையும் கொண்ட விஷம் உன் கண்ணால் எப்படித்தான் பார்க்கப்பட்டதோ? அதை உள்ளங்கையில் ஏந்தி வைத்துக் கொண்டாயே, அது நாவற் பழமா என்ன? நாக்கில் வைத்துக் கொண்டாயே, சித்த வைத்திய மருந்தான குளிகையா அது? கழுத்தில் நிறுத்தி வைத்தாயே, அது நீலமணியால் செய்யப்பட்ட அழகிய அலங்கார ஆபரணமா, என்ன? எனக்குச் சொல்வாயாக!

33. முக்தி தருவது பக்தியே

சம்போ மகாதேவ !
நாலம் வா ஸக்ருதேவ தேவ பவதஸ்
ஸேவா நதிர்வா நுதி:
பூஜாவா ஸ்மரணம் கதாச்ரவண
மப்யாலோ கனம் மாத்ருசாம்
ஸ்வாமின்னஸ்த்திர தேவதானு சரணா
ஆயாஸேன கிம் லப்யதே
கா வா முக்திரித: குவோ பவதி சேத்
கிம் ப்ரார்த்தனீயம் ததா  - சம்போ மகாதேவ !

பொருள்: தேவர்களுக்கெல்லாம் அதிபதியான என் இறைவனே! ஒரே முறை - உ<ன் திருவடிகளைச் சேவிப்பதோ, உன்னை வணங்குவதோ, உனக்குச் சோத்திரம் சொல்வதோ, தியானம் செய்வதோ, உன் கதைகளைக் கேட்பதோ, தரிசிப்பதோ எனக்குக் கிட்டினாலே போதுமே! அதைத் தவிர வேறு முக்தி என்பதுதான் என்ன? இந்த வழிமுறைகளில் எனக்கு முக்தி கிட்டுமானால் உன்னிடம் நான் வேண்டிக்  கொள்ள வேறென்ன இருக்கிறது? நிலையற்ற வேறு பல தெய்வங்களை வேண்டும் முயற்சியில் நான் அடையப் போவதுதான் என்ன?

34. காலனுக்கும் காலன்

சம்போ மகாதேவ !
கிம் ப்ரூமஸ் தவ ஸாஹஸம் பசுபதே
கஸ்யாஸ்தி சம்போ பவத்
தைர்யஞ் சேத்ருச மாத்மன: ஸ்திதி
ரியஞ்சான்யை கதம் லப்யதே
ப்ரச்யத் தேவகணம் த்ரஸன் முனிகணம்
நச்யத் ப்ரபஞ்சம் லயம்
பச்யந் நிர்ப்பய ஏக ஏவ விஹரத்
யானந்த ஸாந்த்ரோ பவான்  - சம்போ மகாதேவ !

பொருள்: உலகுயிர் அனைத்தும் காக்கும் பசுபதியே! சம்புவே! உன் அளவற்ற துணிவை என்னவென்று சொல்லிப் புகழ்வேன்? உன் தைரியம் வேறு யாருக்குத்தான் வரும்? தேவர்களெல்லாரும் நிலை தடுமாறி நிற்கவும், முனிவர்கள் யாவரும் நடுநடுங்கி நிற்கவும், உலகம் அழியக்கூடிய பிரளயக் தோற்றத்தைக் கண்ணால் பார்த்துக் கொண்டு சிறிதும் பயமற்றவராக நீ ஒருவன் மட்டுமே தனியாகப் பார்த்து ஆனந்தப்படும் லீலையை - காலனுக்கும் காலனாய்த் திகழும் பெருமையை - எப்படிப் புகழ்வேன்?

35. நான் எடுத்துக் கூற என்ன உண்டு?

சம்போ மகாதேவ !
யோக÷க்ஷம துரந்தரஸ்ய ஸகல: ச்ரேய:
ப்ரதோத் யோகினோ
த்ருஷ்டாத்ருஷ்ட மதோபதேச
க்ருதினோ பாஹ்யாந்த்ர வ்யாபின:
ஸர்வஜ்ஞஸ்ய தயாகரஸ்ய பவத:
கிம் வேதி தவ்யம் மயா
சம்போ த்வம் ப்ரமாந்த ரங்க
இதிமே சித்தே ஸ்மராம் யன்வுஹம் - சம்போ மகாதேவ !

பொருள்: சராசரங்களை ரட்சிக்கும் சம்புவே! சகல நலங்களையும் அளித்துக் காக்கின்ற பாரத்தைத் தாங்குபவராயும், சிறப்பான நன்மைகளைத் தருபவராயும், இம்மையிலும், மறுமையிலும் எண்ணியதெல்லாம் அடையும் வழியை உபதேசம் செய்யும் குருவாயும், உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து காணப்படுவராயும், அனைத்தையுமே தெரிந்தவராயும், அன்பு காட்டுபவராயும் உள்ள உனக்கு நான் எடுத்துக் கூறவேண்டியது என்ன இருக்கிறது? இன்பங்களை நல்குபவரான உன்னையே எனக்கு நெருக்காமாயிருந்து நலம்புரிவராய் நம்பி நாள்தோறும் என் உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

36. உடலாகிய வீட்டினைத் தூய்மையாக்கல்

சம்போ மகாதேவ !
பக்தோ பக்தி குணாவ்ருதே முதம்ருதா
பூர்ணே ப்ரஸன்னே மன:
கும்பே ஸாம்ப தவாங்க்ரி பல்லவ
யுகம் ஸம்ஸ்த்தாப்ய ஸம்வித்பலம்
ஸத்வம் மந்த்ரம் உத்ரயன் நிஜம்
சரீராகார சுத்திம் வஹன்,
புண்யாஹம் ப்ரகடீ கரோமி ருசிரம்
கல்யாண மாபாதயன்  -சம்போ மகாதேவ !

பொருள்: பார்வதி தேவியுடன் கூடியிருப்பவரே ! நான் புனிதமானதொரு புண்யாஹவாசன முறையை உலகிற்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது, பக்தி என்னும் நூலால் சுற்றப்பட்டதும், மகிழ்ச்சி என்னும் அம்ருதம் போன்ற நீர் நிறைந்ததும், பிரகாசமாக ஒளிவீசக் கூடியதுமான என் உள்ளம் என்னும் குடத்தில் (கும்பத்தில்) உன் இரு திருவடிகளாகிய மாவிலைகளையும், ஞானமாகிய தேங்காயையும் வைத்து சத்துவ குணத்தை வளர்க்கும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து என் உடலாகிய வீட்டிற்குத் தூய்மையை  உண்டாக்கி, மனம் நிறைந்த மங்களங்களை அடைந்தவனாகிறேன் என்பதே அந்தப் புண்யாவாசன முறையாகும்.

37. பேரானந்த அமிர்தம்

சம்போ மகாதேவ !
ஆம்னாயாம்புதி மாதரேண ஸுமனஸ்
ஸங்காஸ் யமுத்யன் மனோ
மந்தானம் த்ருடபக்தி ரஜ்ஜு ஸஹிதம்
க்ருத்வா மதித் வாதத:
ஸோமம் கல்பதரும் ஸுபர்வ ஸுரபிம்
சிந்தாமணிம் தீமதாம்
நித்யானந்த ஸுதாம் நிரந்தர
ரமாஸெளபாக்ய மாதன்வதே  -சம்போ மகாதேவ !

பொருள்: உயர்வான குணம் பொருந்திய மனம் கொண்டவர்களின் கூட்டம், பக்தியாகிய கயிற்றுடன்  நல்ல முயற்சியென்றும் மனத்தை மத்தாகக் கொண்டு வேதம் என்னும் கடலை, நம்பிக்கையுடன் கடைந்து, அதிலிருந்து உமையன்னையுடன் கூடியவரும், கற்பக விருட்சத்தைப் போல வேண்டுவார்க்கு வேண்டுவனவற்றை, சிந்தாமணி என்னும் ரத்தினத்தைப் போன்றவரும், அறிவாளிகளுக்கு நிலையான பேரானந்தம் என்னும் அமிர்தம் போன்றவரும், அழிவற்ற மோட்சலட்சுமியின் சொரூபமும் ஆக இப்படி எல்லாமாக விளங்கும் பரமேஸ்வரனை அடைந்து மகிழ்கிறது.

38. சிவனும் சந்திரனும்

சம்போ மகாதேவ !
ப்ராக் புண்யாசல மார்க்கதர்சித
ஸுதாமூர்த்தி பிரஸன்ன: சிவ:
ஸோமஸ் ஸத்குண ஸேவிதோ ம்ருகதர:
பூர்ணஸ்தமோ மோசக:
சேத: புஷ்கர லக்ஷிதோ பவதி
சேதானந்தபாதோ நிதி:
ப்ரா கல்ப்யேன விஜ்ரும்பதே ஸுமனஸாம்
வருத்திஸ் ததா ஜாயதே  - சம்போ மகாதேவ !

பொருள்: சிவனுக்கும் சந்திரனுக்கும் சிலேடையாய் அமைந்த பாடல் இது. அமிர்த வடிவினனாயும், மங்களத்தை அருள்பவனாயும், நட்சத்திரங்களால் சூழப்பட்டவனாயும், மான் வடிவைத் தன்னிடம் கொண்டவனாயும், இருளைப் போக்குபவனாயும் உள்ள சந்திரன் வானத்தில் காணப்படும்போது, மலர்களெல்லாம் மலர்கின்றன என்ற கருத்து சந்திரனுக்குரியது. அமிர்த சொரூபமான வடிவத்தையுடையவரும், மகிழ்வுடன் மங்களங்களை அருள்பவரும், நற்குணங்களின் உறைவிடமானவரும், மானைக் கையிலேந்திய பரிபூரணரும், அறியாமை என்னும் இருளைப் போக்குபவரும், உமாதேவியாருடன் கூடியிருப்பவரும், ஆகிய சர்வேஸ்வரன், மனமென்னும் பெருவெளியில் காணப்படும்போது, நல்ல மனம் படைத்தோருக்கு நல் வாழ்வு மலர்ச்சி பெறும் என்ற கருத்து சிவனுக்குரியது.

39. ஈசனின் அருளாட்சி

சம்போ மகாதேவ !
தர்மோ மே சதுரங்க்ரிகஸ் ஸுசரித:
பாபம் விநாசம் கதம்
காமக்ரோத மதாதயோ விகலிதா:
காலா: ஸுகாவிஷக்ருதா
ஜ்ஞானானந்த மஹெளஷதி: ஸுப
லிதா கைவல்ய நாதே ஸதா மான்யே
மானஸ புண்டரீக நகரே
ராஜா வதம்ஸே ஸ்த்திதே  - சம்போ மகாதேவ !

பொருள்: மனத் தாமரையென்னும் நகரத்தில் எல்லாராலும் வணங்கப் பெற்றவரும், ஏகச் சக்ரவர்த்தியுமான பரமசிவன் வீற்றிருப்பதால், தவம், சுத்தம், தயை, சத்யம் ஆகிய நான்கு பாதங்களையுடைய தர்மம் நன்கு கடைபிடிக்கப்படுகிறது. பாவம் நசித்துவிட்டது. காமம், கோபம், கர்வம் ஆகியன நீங்கி விட்டன. எல்லாப் பருவ காலங்களிலு<ம் இன்பமே வெளிப்பட்டு மேலோங்கி நிற்கிறது. ஞானானந்தம் என்னும் சிறந்த பயிர் நல்ல பயனைத் தருகிறது.

40. பக்தி என்னும் பயிர்

சம்போ மகாதேவ !
தீ யந்த்ரோண வசோகடேன கவிதா
குல்யோப குல்யாக்ரமை
ரானீதைச்ச ஸதாசிவஸ்ய சரிதாம்
போராசி திவ்யாம்ருதை:
ஹ்ருத்கேதார யுதாச்ச பக்தி கலமா:
ஸாபல்ய மாதன்வதே
துர்பிக்ஷõன் மம ஸேவகஸ்ய பகவன்
விச்வேச பீதி: குத:

பொருள்: புத்தி என்கிற ஏற்றமிறைக்கும் யந்திரத்தால், வாக்கு ஏற்றச் சாலைக் கொண்டு கவிதை என்னும் வாய்க்காலில் பாய்ச்சுவதால் வெளிக்கொணரப்பட்ட சதாசிவனின் திவ்ய சரித்திரம் என்ற நீர்ப்பரப்பின், தேவாமிர்தம் போன்ற நீரால், இருதயம் என்னும் வயல் வெளியிலுள்ள பக்தி என்கிற பயிர்கள் பயன் தரும் வண்ணம் செழித்து விளங்குகின்றன. லோகநாதனான பகவானே! பக்திப் பயிரானது நீரின்றி வாடிவிடுமோ என்ற அச்சம் ஏன் எனக்கு வரப்போகிறது?

41. ஐம்புலன்களுக்கும் ஆணையிடுவாயாக!

சம்போ மகாதேவா !
பாபோத்பாத விமோசனாய
ருசிரைச்வர்யாய ம்ருத்யுஞ்சய
ஸ்தோத்ர த்யான நதி ப்ரதக்ஷிண
ஸபர்யா லோகனாகர்ணனே
ஜிஹ்வா சித்த சிரோங்க்ரி ஹஸ்த நயன
ச்ரோத்ரை ரஹம் ப்ரார்த்திதோ
மாமாஜ்ஞாபய தந்நி ரூபய
முஹுர் மாமேவ மாமேவச:  - சம்போ மகாதேவா !

பொருள்: யமனை வென்றவரே! பாபங்களென்னும் துன்பங்களிலிருந்து விடுபடவும், இனிய மங்களங்களையடையவும், ஸ்தோத்திரம், தியானம், வணக்கம், பிரதட்சிணம், பூஜை, தரிசனம், சிரவணம் ஆகியவற்றையெல்லாம் செய்ய முறையே நாக்கு, மனம், தலை, கால்கள், கைகள், கண்கள், காதுகள் ஆகியவற்றால் நான் வேண்டப்படுகிறேன். என்னை அப்படியே செய்யக் கட்டளையிடுவாயாக! உன் பொருட்டு மட்டுமே வாக்கைப் பயன்படுத்துமாறு எனக்கு அருள்வாயாக! என் வாக்கையும், மற்ற உறுப்புகளையும் உனக்குரிய திருப்பணியிலேயே ஈடுபடச் செய்தருள்வாயாக!

42. மனம் என்னும் கோட்டை

சம்போ மகாதேவா !
காம்பீர்யம் பரிகாபதம் கனத்ருதி:
ப்ராகார உத்யத்குண
ஸ்தோமச்சாப்தபலம் கனேந்த்ரிய சயோ
த்வா ராணி தேஹே ஸ்த்தித:
வித்யா வஸ்து ஸம்ருத்திரித்ய
கில ஸாமக்ரீஸமேதே
ஸதா துர்க்காதிப்ரிய தேவ மாமக
மனோ துர்க்கே நிவாஸம் குரு  - சம்போ மகாதேவா !

பொருள்: அடையமுடியாத கோட்டையில் உறைவதில் விருப்பம் மிகக் கொண்ட இறைவனே! ஆழங்காண முடியாத் தன்மையை அகழியாயும், திடமான மன <உறுதியை மதிலாயும், மேலான நற்குணங்களை மிக அரிய நட்புள்ள சேனைப்படையாயும், உடலிலுள்ள உறுதியான பஞ்சேந்திரியங்களை வாசல்களாயும், உயர்ந்த ஞானத்தை நிறைந்த பொருளாகவும், மற்றும் எல்லாப் பொருத்தமான அமைப்புகளும் கூடியதான என் மனம் என்னும் கோட்டையில் நீ எப்போதும் வாசம் செய்தருள்வாயாக!

43. மனம் என்னும் நந்தவனம்

சம்போ மகாதேவா !
மா கச்ச த்வமிதஸ்ததோ
கிரிச போ மய்யேவ வாஸம்
குரு ஸ்வாமின்னாதி கிராத
மாமகமன: காந்தார ஸீமாந்தரே
வர்த்தந்தே பஹுசோ ம்ருகா
மதஜு÷ஷா மாத்ஸர்ய மோஹாதயஸ்
தான் ஹத்வா ம்ருகபா விநோத
ருசிதாலாபஞ்ச ஸம்ப்ராப்ஸ்யஸி  - சம்போ மகாதேவா !

பொருள்: கயிலாய மலையில் உறையும் இறைவா! நீ இங்குமங்குமாக வேறெங்கும் போகவேண்டாம். என்னிடமே இருந்தருள்க! ஆதியில் வேடனாக இருந்தவரே! என் மதம் பிடித்தலையும் பொறாமை, மதிமயக்கம் போன்ற கொடிய மிருகங்கள் நடமாடுகின்றன. அவற்றையெல்லாம் கொன்று வேட்டையின் பயனை அடைவாயாக!

44. சிங்கமும் - சிவனும்

சம்போ மகாதேவா !
கரலக்னம்ருக: கரீõந்தர
பங்கோ கனசார்த்தூல
விகண்டனோஸ்த ஐந்து:
கிரிசோ விசதாக்ருதிச்ச
சேத: குஹரே பஞ்ச
முகோஸ்திமே குதோபீ:  - சம்போ மகாதேவா !

பொருள்: சிவபிரானுக்கும் சிங்கத்திற்கும் சிலேடையாய் அமைந்த பாடல் இது.
சிங்கத்துக்கு: கையில் மானைப் பிடித்துக் கொண்டு, யானைகளின் தலைவனை வெல்வது, கொடும்புலியையும், மற்ற சிறு பிராணிகளையும் கொல்வதும், மலையில் வசிப்பதும், வெளுத்த கம்பீரமான உடலையுடையதுமான சிங்கம் ஒன்று என் மனக்குகையில் இருக்கும் போது எங்கிருந்து எனக்கு அச்சம் ஏற்படும்? சிவபிரானுக்கு: கையில் மானை ஏந்தியவரும் கஜாசுரனைக் கொன்றவரும், வியாக்கிராசுரன் என்ற கொடிய அசுரனைக் கொன்று <உயிரினங்களையெல்லாம் தன்னிடம் ஐக்கியமாக்கிக் கொண்டவரும் கயிலையங்கிரியில் உறைபவரும், சாம்பல் பொடி பூசி வெண்ணிறத் தோற்றமளிப்பவருமான பரமசிவன் என் மனக்குகையில் இருக்கும்போது எங்கியிருந்து எனக்கு அச்சம் ஏற்படும்?

45. மனம் என்னும் மாயப் பறவை

சம்போ மகாதேவா !
சந்த சாகி சிகான் விதைர்
த்விஜவரை: ஸம்ஸே விதே
சாச்வதே சௌக்யாபாதினி கேத
பேதினி ஸுதாஸாரை
பலைர் தீபிதே சேத: பக்ஷிசிகாமணே
த்யஜ விருதா சஞ்சார
மன்யை ரலம் நித்யம் சங்கரபாதபத்ம
யுகளீ நீடே விஹாரம் குரு -  சம்போ மகாதேவா !

பொருள்: மிகச் சிறந்த மனமென்னும் மாயப் பறவையே ! சாகைகள் என்னும் கிளைகளையும், உபநிடதங்கள் என்னும் சிகரங்களையும் உடையதாயும், புனிதப் பிராம்மணர்கள் என்னும் பறவைகளால் விரும்பப் பெற்றதாயும், நிலையான இன்பத்தைத் தருவதும், துன்பத்தை அறவே போக்குவதாயும் அமிர்தம் போன்ற சுவை மிகுந்த தர்மார்த்த, காம மோக்ஷமெனனும் கனிவகைகளுடன் ஒளிவீசுவதாயும் உள்ள மரத்தில் காட்சி தரும் பரமேஸ்வரரின் தாமரை மலர்களாகிய இரண்டு திருவடிக்கூட்டில் இடைவிடாமல் விளையாடி மகிழ்வாயாக! இதைத் தவிர வேறு அலைச்சல்கள் ஏதுமிருப்பின் அவற்றையெல்லாம் விட்டு விட்டு விலகி நில்!

46. மனம் என்னும் அன்னப்பறவை

சம்போ மகாதேவா!
ஆகிர்ணே நகராஜி காந்தி விபவை
ருத்யத் ஸுதா: வைபவை:
ராதௌ தேபிச பத்மராக
வலிதே ஹம்ஸ வ்ரஜைராச்ரிதே
நித்யம் பக்தி வதூகணைச்ச
ரஹஸி ஸ்வேச்சா விஹாரம் குரு
ஸ்தித்வா மானஸ ராஜஹம்ஸ
கிரிஜா நாதாங்க்ரி ஸெளதாந்தரே  -சம்போ மகாதேவா !

பொருள்: சிறந்த அன்னமாகிய மனமே! வரிசையான தீபங்களினின்றெழும் ஒளிவெள்ளத்தால் நிறைந்ததும், சிரசிலுள்ள, வளரும் சந்திரனின் அமிர்த கலை ஒளிப் பெருக்கால் வெண்மையாய்க் காணப்படுவதும், பதுமராகக் கற்களால் இழைக்கப்பட்டதால் அழகுறச் சிவந்து காணப்படுவதும், அழகிய அன்னப் பறவைகளால் சூழப்பெற்றிருப்பதும் ஆன பார்வதி மணாளனாகிய சிவபிரானின் திருவடிகளாகிய அழகிய மாளிகையினுள், மறைவாக இருந்து கொண்டு பக்தியாகிய மகளிருடன் விருப்பப்படி கூடிக்குலவியபடி  இருந்து வருவாயாக!

47. இதயம் என்னும் இனிய பூந்தோட்டம்

சம்போ மகாதேவா !
சம்புத்யான வஸந்த சங்கினி
ஹ்ருதாராமேக ஜீர்ணச்சதா:
ஸ்ரஸ்தா பக்திலதாச்சடா
விலஸிதா: புண்யப்ரவாலச்ரிதா
தீப்யந்தே குணகோரகா ஜபவச:
புஷ்பாணி ஸத்வாஸனா
ஜ்ஞானானந்த ஸுதா மரந்தலஹரீ
ஸம்வித்பலா அப்யுந்நதி - சம்போ மகாதேவ !

பொருள்: சிவத் தியானமென்னும் வசந்தருதுவின் வருகையால் இதயம் என்னும் பூந்தோட்டத்தில் பாபமென்னும் பழுத்த இலைகள் உதிர்ந்து விடுகின்றன. பக்தி எனும் கொடியின் படைகள் அழகாய்ப் பிரகாசிக்கின்றன புண்ணியம் என்னும் இளம் துளிர்கள் தோன்றுகின்றன. நண்குணங்கள் என்னும் அரும்புகளும், ஜப மந்திரங்கள் என்னும் மணமலர்களும், நன்மையென்னும் நறுமணமும், ஞானானந்தம் என்னும் அமுதத்தேனின் பெருக்கும் ஞானானுபவம் என்னும் நறுங்கனியின் உயர்வும் ஒளிபரப்பித் திகழ்கின்றன.

48. சிவத்தியானம் என்னும் சிறந்த நீர் நிலை

சம்போ மகாதேவா !
நித்யானந்த ரஸாலயம் ஸுர முனிஸ்வாந்;
தாம்புஜா தாச்ரயம் ஸ்வச்சம்
ஸத்த்விஜ ஸேவிதம்
கலுஷ ஹ்ருத்ஸத் வாஸனா
விஷ்க்ருதம் சம்புத்யான ஸரோவரம் வ்ரஜ
மனோஹம்ஸா வதம்ஸஸ்த்திரம் கிம்ஷு
த்ராச்ரய பல்லவ ப்ரமண ஸஞ்ஜாத
ச்ரமம் ப்ராப்ஸ்யஸி - சம்போ மகாதேவா !

பொருள்: மனமென்னும் சிறந்த அன்னமே! அழிவற்ற பேரானந்தம் என்னும் நீர் நிறைந்ததும் , தேவர், முனிவர்களின் உள்ளங்களாகிய தாமரைகளுக்கிருப்பிடமாகியதும், தெளிவானதும், சாதுக்கள் என்னும் பறவைகளால் நாடப்பெற்றதும், பாபம் என்னும் அழுக்கைப் போக்குவதும், புண்ணியமான வாசனையை வெளிப்படுத்துவதுமான சிவத்தியானம் என்னும் சிறந்த நீர் நிலையை நிலையாக அடைவாயாக!

49. பக்தியால் விளையும் முக்திக் கனி

சம்போ மகாதேவா !
ஆனந்தாம்ருத பூரிதா ஹர
பதாம்போஜால வாலோத்யதா
ஸ்த்தைர்யோபக்ன முபேத்ய பக்திலதிகா
சாகோப சாகான் விதா
உச்சைர் மானஸ காயமான படலீ
மாக்ரம்ய நிஷ்கல்மஷா
நித்யா பீஷ்ட பலப்ரதா பவது
மே ஸத்கர்ம ஸம்வர்த்திதா -சம்போ மகாதேவா !

பொருள்: ஆனந்தமாகிய அமுதநீர் வார்க்கப் பெற்றதும், சிவபிரானின் திருவடித் தாமரை என்னும் பாத்தியில் முளைத்து வளர்வதும், உறுதியான உள்ளமென்னும் கொம்பைக் பற்றிக் கொண்டிருப்பதுமான பக்தி என்னும் கொடியானது, எண்ணற்ற கிளைகள் உடைய உயர்ந்த மனமென்னும் பந்தலின் மீது பற்றிப் படர்ந்து, குறையேதுமின்றி, புண்ணியச் செயல்களால் நன்றாகச் செழித்து வளர்ந்து எனக்கு என்றென்றும் மனத்திற்கினியதான முக்தி என்னும் ஒப்பற்ற கனியை அளிக்கும் வகையில் விளங்கட்டும் !

50. மல்லிகையும் மகேசனும்

சம்போ மகாதேவா !
ஸந்த்யாரம்ப விஜ்ரும்பிதம் ச்ருதி
சிரஸ்த தானானந்த ராதிஷ்டிதம்
ஸப்ரேம ப்ரமாபிராம மஸக்ருத்
ஸத்வாஸனா ஸோபிதம்
போகீந்த் ராபரணம் ஸமஸ்த ஸுமன:
பூஜ்யம் குணா விஷ்க்ருதம்
ஸேவே ஸ்ரீகிரி மல்லிகார்ஜுன
மஹாலிங்கம் சிவாலிங்கிதம் - சம்போ மகாதேவா !

பொருள்: மல்லிகை மலருக்கும் சிவபிரானுக்கும் சிலேடை: மல்லிகைக்கு: மாலையில் மலர்வதும், காது, தலை ஆகியவற்றில் சூடப்படுவதும், வண்டுகள் ஆசையுடன் அமர்வதும், அழகானதும், இன்பத்தை விரும்பும் பலரும் ஏற்றுக்கொள்வதும், மலர்களுக்குள் சிறந்ததெனப் போற்றப்படுவதும், குணத்தாலும் மணத்தாலும் சிறந்ததாய்க் கருதப்படுவதும் உமையால் தழுவப் பெற்றதுமான ஸ்ரீ சைலம் என்னும் மாமலையிலுள்ள மல்லிகார்ச்சுன - மஹாலிங்கம் என்னும் மல்லிகையை வேண்டுகிறேன். சிவபிரானுக்கு: மாலையில் நடனத்தில் களிப்படைபவரும், உபநிடதங்களிடையே நிலை பெற்றவரும், பிரமராம்பிகையுடன் சேர்ந்து அழகாய்த் தோன்றுபவரும், எப்போதும் பக்தி மணம் கமழ்பவரும், பாம்புகளை ஆபரணமாக அணிந்தவரும், தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், நற்குணங்களால் புகழ்பெற்றவரும், பராசக்தியால் தழுவப் பெற்றவருமான ஸ்ரீசைலம் என்னும் மலைமேல் உள்ள மல்லிகார்ச்சுனன் என்ற மஹாலிங்கரை வணங்குகிறேன்.

51. வண்டும் சிவனும்

சம்போ மகாதேவ!
ப்ருங்கீச்சா நடனோத்கட:
கரிமதக் ராஹீ ஸ்புரன் மாதவா
ஹ்லாதோ நாத யுதோ மஹாஸிதவபு:
பஞ்சே ஷுணா சாத்ருத:
ஸத்பக்ஷஸ் ஸுமனோவனேஷு
ஸபுன: ஸாக்ஷõன் மதீயே
மனோ ராஜீவே ப்ரமராதிபோ
விஹரதாம் ஸ்ரீ சைலவாஸீ விபு  - சம்போ மகாதேவ!

பொருள்: வண்டுக்கும் சிவனுக்கும் சிலேடை: வண்டுக்கு: பெண் வண்டுகளின் விருப்பத்திற்கேற்ப நடனமிடுவதும் யானைகளின் மதநீரைப்  பருகுவதும், பிரகாசமான வசந்த ருதுவைக் கண்டு மகிழ்வதும், ரீங்கார ஒலியெழுப்புவதும், கறுத்த உடலையுடையதும், மன்மதனின் ஆதரவு பெற்றதும், மலர் வனங்களை மிகவும் விரும்புவதும், அழகிய மலையில் வசிப்பதும் எங்கும் பறந்து செல்லும் ஆற்றல் உடையதுமான ஆண் வண்டு, என் மனமென்னும் தாமரையில் அமர்ந்து விளையாடுவதாக! சிவனுக்கு: பிருங்கி முனிவரின் விருப்பத்திற்கேற்ப நடனமிடுபவரும் கஜாசுரனின் ஆணவத்தை அடக்கியவரும், மோகினி வடிவ விஷ்ணுவைக் கண்டு மகிழ்ந்த வரும், பிரணவ நாதத்தையும், வெண்ணீறு விளங்கும் திருமேனியையும் உடையவரும், மன்மதனால் தன் பாணத்திற்கு இலக்காகக் கொள்ளப்பட்டவரும் தேவர்களைக் காப்பவரும், ஸ்ரீசைலம் என்னும் மலையில் உள்ளவருமான சிவன் என் மனமென்னும் தாமரையில் வீற்றிருக்கட்டும் !

52. மேகமும் சிவனும்

சம்போ மகாதேவ!
காருண்யாம்ருத வர்ஷிணம் கனவிபத்
க்ரீஷ் மச்சிதா கர்மடம்,
வித்யா ஸஸ்ய பலோதயாய ஸுமனஸ்
ஸம்ஸேவ்ய மிச்சாக்ருதிம்:
ந்ருத்யத் பக்த மயூரமத்ரி
நிலயம் சஞ்சஜ் ஜடா மண்டலம்
சம்போ வாஞ்சதி நீலகந்தர ஸதா
த்வாம் மே மனச் சாதக:  - சம்போ மகாதேவ!

பொருள்: மேகத்துக்கும் சிவனுக்கும் சிலேடை: மேகத்துக்கு: அமுதம் போன்ற மழையைப் பொழிவதும், வெப்பத்தைப் போக்க முனைவதும், வித்தை எனும் பயிர் நற்பயனைத் தரும் வகையில் விவசாயிகளால் விரும்பப்படுவதும் நடனமாடும் போது கண்டு மகிழும்  பலரின் பாராட்டைப் பெற்றதும், ஒளிர்கின்ற மின்னல் கற்றைகளையுடையதுமான கரியமேகமே! என் மனம் என்னும் சாதகப் பறவை எப்போதும் உன்னை விரும்பி நிற்கிறது. சிவனுக்கு: கருணையமுதைப் பொழிபவரும், தாபங்களைப் போக்குபவரும் வித்தை எனும் பயிர் நற்பயனைத் தரும் வகையில் நல்லவர்களால் வணங்கப்பட்டவரும், விரும்பியபடி உருவெடுப்பவரும், பக்தர்களாகிய மயில்களைப் பெற்றவரும் மலையில் வசிப்பவரும், சடைமுடியை உடையவருமான, கரிய கழுத்தையுடைய ஈசனே! என் மனமென்னும் சாதகப்பறவை எப்போதும் உன்னை விரும்புகிறது.

53. மயிலும் மகேசனும்

சம்போ மகாதேவ!
ஆகாசேன சிகீ ஸமஸ்த பணினாம்
நேத்ரா கலாபீ நதா அனுக்ராஹீ
ப்ரணவோபதேச நினதை:
கேகீதி யோகீயதே
ச்யாமாம் சைலஸ முத்பவாம்
கனருசிம் த்ருஷ்ட்வா நடந்தம்முதா
வேதாந்தோ பவனே விஹார ரசிகம்
தம் நீலகண்டம் பஜே  - சம்போ மகாதேவ!

பொருள்: மயிலுக்கும் சிவனுக்கும் சிலேடை: ஆகாயத்தையே கொண்டையாய்க் கொண்டதும் பாம்பின் படத்தைக் கொண்டதும், பிரணவப் பொருளை, தம்மை வணங்கியவர்களுக்கருள் செய்து, கே.கீ, என்று கூவுவதும் போன்ற, மயில் என்று யார் துதிக்கப்படுகிறார்களோ - அந்த சிவனை - பார்வதியின் மேகம் போன்ற தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்து நடனம் புரிபவரும், வேதாந்தம் என்கிற நந்தவனத்தில் விளையாடி மகிழ்பவனும் ஆன சிவனை வணங்குகிறேன். மயில் - உயர்ந்த கொண்டையைக் கொண்டது ஆதிசேஷனின் இரண்டாயிரம் கண்களைப் போன்ற கண்களையுடைய தோகை மயிலுக்குண்டு. சிவன் - ஆகாயத்தையே தலையாகக் கொண்டவன். ஆதிசேஷனே சிவனுக்கு ஆபரணமாயத் திகழ்கிறது. (மயில் கரிய மேகத்தைக் கண்டு ஆயிரக்கணக்கான கண்களையுடைய தோகையை விரித்து கே, கீ எனக் கூவிக்கொண்டு ஆடுவதைப் போல சிவனைக் கண்டு அடியவர்கள் ஆடிப்பாடித் தொழுவர் என்பது குறிப்பு.)

54. மாலை வேளையில் மயக்கும் நடனம்

சம்போ மகாதேவ!
ஸந்த்யா கர்ம தினாதயயோ
ஹரிஹரா காத ப்ரபூ தானக
த்வானோ வாரி தகார்ஜிதம் திவிஷதாம்
த்ருஷ்டிச் சடா சஞ்சலா
பக்தானாம் பரிதோஷ பாஷ்ப
விததிர் வ்ருஷ்டிர் மயூரீ சிவா
யஸ்மின்னுஜ்வல தாண்டவம்
விஜயதே தம் நீலகண்டம் பஜே - சம்போ மகாதேவ!

பொருள்: ஸந்தியா காலம், வெயில் காலத்தின் முடிவில் வரும் மழை காலத்தைப் போலவும்; விஷ்ணுவின் கரங்கள் அடிபடுவதால் தோன்றும் மிருதங்கத்தின் ஒலி, மேகத்தின் கர்ஜனையைப் போலவும்; தேவர்களின் பார்வைகள் மின்னல் கொடியைப் போலவும், பக்தர்களின் ஆனந்தக் கண்ணீர், பெரு மழையைப் போலவும், பார்வதி தேவி, பெண் மயிலைப் போலவும் உள்ள யாரிடத்தில், பிரகாசம் மிகுந்த நடனம் சிறப்பாகக் காணப்படுகிறதோ, அந்த - கருநீலக் கழுத்தையுடைய ஆண் மயிலைப் போன்ற - சிவபிரானை வணங்குகிறேன். வானத்தில் மழைமேகத்தைக் கண்டதும் ஆண் மயில் மகிழ்ச்சிகொண்டு பெண் மயிலின் முன்னால் ஆடுவதையும், மாலை வேளையில் மகிழ்ச்சியுடன் தன் துணைவியான பார்வதி தேவியின் முன் சிவன் மகிழ்ந்து நடனமாடுவதையும் ஒப்பிடும் பாடல்.

55. தாண்டவமாடும் தயாபரன்

சம்போ மகாதேவ!
ஆத்யாமித தேஜஸே ச்ருதிபதைர்
வேத்யாய ஸாத்யாயதே
வித்யானந்த மயாத்மனே த்ரிஜகதஸ்
ஸம்ரக்ஷணோத் யோகினே:
த்யேயாயாகில யோகிபிஸ் ஸுரகணைர்
கேயாய மாயாவினே
ஸம்யக் தாண்டவ ஸம்ப்ரமாய ஜடினே
ஸேயம் நதி: சம்பவே  - சம்போ மகாதேவ!

பொருள்: உலகம் தோன்றும் முன்னரே இருந்தவராயும், அளவற்ற தேஜஸ் உள்ளவராயும், வேதக் கருத்துகளால் அறியப்படுபவராயும், பிரதிஷ்டை செய்யச் சாத்தியமானவராயும், அறிவும், ஆனந்தமும் கொண்டு, மூவுலகினரையும் பாதுகாப்பதில் அக்கறை மிக்கவராயும், யோகியர், தேவர்கள் அனைவராலும் தியானம் செய்து போற்றப்படுபவராயும், நன்கு மாயையைத் தன் வயப்படுத்தியவராய் , நன்கு தாண்டவம் ஆடுவதில் உற்சாகம் அடைபவராயும், சடைகளைத் தரித்தும் மங்கள சொரூபியாயும் உள்ள உன்னைக் கருதி வழிபடும் இந்த என் வணக்கத்தை ஏற்றுக் கொள்வாயாக!

56. நடனத்தில் சிறந்த நாயகன்

சம்போ மகாதேவ!
நித்யாய த்ரிகுணாத்மனே புரஜிதே
காத்யாயனீ ச்ரேயஸே
ஸத்யாயாதி குடும்பினே முனிமன
ப்ரத்யக்ஷ சின்மூர்த்தயே
மாயாஸ்ருஷ்ட ஜகத் த்ரயாய
ஸகலாம்னா யாந்த ஸஞ்சாரிணே
ஸாயம் தாண்டவ ஸம்ப்ரமாய
ஜடினே ஜேயம் நதி: சம்பவே - சம்போ மகாதேவ!

பொருள்: என்றும் நிலையாய் உள்ளவராயும், முக்குணங்களையே உடலாய்க் கொண்டவராயும், முப்புரங்களையும் வெற்றி கொண்டவராயும், பார்வதியின் தவப்பயனால் பெற்ற உயர்நல வடிவினராயும், சத்தியசொரூபராயும், ஆதியில் வேட்டைக் குலத்தினராயும், முனிவர்களின் மனத்தில் காட்சியளித்தருளும் ஞானவடிவினராயும், மூவுலங்களையும் மாயையினால் தோற்றுவிப்பவராயும், எல்லா வேதங்களின் முடிகளிலும் நடமாடுபவராயும், மாலைப் பொழுதிலே நடனம் (தாண்டவம்) புரிவதில் நாட்டம் கொண்டவராயும், சடைமுடிகளை உடையவராயும் உள்ள சம்புவுக்கு அவற்றையெல்லாம் கருதி வணக்கம் செய்கிறேன்.

57. புண்ணியச்  செயல்களின் பயன்

சம்போ மகாதேவ!
நித்யம் ஸ்வோதர போஷணாய
ஸகலானுத் திச்ய வித்தாசயா
வ்யர்த்தம் பர்யடனம் கரோமி
பவத: ஸேவாம் நஜானே விபோ
மஜ்ஜன் மாந்திர புண்ய பாக
பலதஸத்வம் சர்வ ஸர்வாந்தரஸ்
திஷ்டஸ்யேவ ஹி தேன வா
பசுபதே தே ரக்ஷணீயோஸ்ம்யஹம் - சம்போ மகாதேவ!

பொருள்: உயிர்களைக் காப்பவரே! பக்தர்களின் பாபங்களைப் போக்குபவரே! எப்பொழுதும் என் வயிற்றை வளர்க்கும் நோக்கத்துடனேயே பணத்தாசை கொண்டு பலரையும் நாடிச் சென்று அலைந்து திரிகிறேன். உன்னை வணங்க எண்ணியதேயில்லை. எங்கும் நிறைந்த ஈசனே! என் முந்தைய பிறவிகளில் நான் செய்த புண்ணியச் செயல்களின் பயனாய், எல்லாருள்ளுமே நீ நிறைந்திருப்பதை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. அதற்காகவேனும் நீ என்னைக் காத்தருளத் தகுதியுள்ளவனாவேன்.

58. கோடி சூரியர்களின் பிரகாசம்

சம்போ மகாதேவ!
ஏகோ வாரிஜ பாந்தவ: க்ஷிதிநபோ
வ்யாப்தம் தமோ மண்டலம்,
பித்வா லோசன கோசரோபி
பவதித்வம் கோடிஸூர்யப்ரப:
வேத்ய: கிந்ந பவஸ்யஹோ
கனதரம் கீத்ருக் பவேன்
மத்தமஸ் தத்ஸாவம் வ்யபனீயமே
பசுபதே ஸாக்ஷõத் ப்ரஸன்னோ பவ - சம்போ மகாதேவ!

பொருள்: உலகிலுள்ள <உயிர்களையெல்லாம் காத்தருளும் இறைவனான ஈசனே! ஒரே ஒரு சூரியன் பூமியையும் ஆகாத்தையும் கப்பிக் கொண்டிருக்கும் இருட்படலத்தைப் பிளந்துகொண்டு என் பார்வைக்கு எட்டுகிறான். ஆனால், நீயோ கோடி சூரியர்களின் பிரகாசத்தை ஒன்றாக்கிப் பொருந்தியவன். ஆயினும் என்னால் உன்னை அறிந்து கொள்ள இயலவில்லையே ! அவ்வாறு நீ இருக்க என்ன காரணம் ? அப்படியாயின் என் அறியாமை இருள் எத்தனை அடர்த்தியாக இருக்க வேண்டும்? இனியாவது அந்த இருளை முழுமையாய்ப் போக்கி என் பார்வைக்குக் காட்சி தருவாயாக!

59. மனனென்னும் பறவை

சம்போ மகாதேவ!
ஹம்ஸ:  பத்மவனம் ஸமிச்சதி யதா
நீலாம்புதம் சாதக
கோக: கோக நதப்ரியம் ப்ரதிதினம்
சந்த்ரம் சகோரஸ்ததா:
சேதோ வாஞ்சதி மாமகம் பசுபதே
சின்மார்க்க ம்ருக்யம் விபோ,
கௌரீநாத பவத்பதாப்ஜ யுகளம்
கைவல்ய ஸெளக்ய ப்ரதம் - சம்போ மகாதேவ!

பொருள்: எங்கும் நிறைந்தவரான ஈசனே! பசுபதியே! பார்வதியின் துணைவரே! அன்னப்பறவை, சாதகப்பறவை, சக்ரவாகப் பறவை, சகோரப் பறவை ஆகிய ஒவ்வொன்றும் முறையே, தாமரை நிறைந்த இடத்தையும், கரிய மேகத்தையும், தாமரையை மலர்விக்கும் சூரியனையும், சந்திரனையும் எவ்வாறு விரும்புகின்றனவோ, அதைப் போன்றே, என் மனமும் ஞான மார்க்கத்தால் கண்டறியக் கூடியதும், பேரின்ப சுகத்தை அளிக்கக் கூடியதுமான உன் திருவடித் தாமரைகளையே நாள்தோறும் விரும்புகிறது.

60. திருவடிகளைச் சரணடைதல்

சம்போ மகாதேவ!
ரோதஸ் தோயஹ்ருத: ச்ரமேண
பதிகச் சாயாந்தரோர் வ்ருஷ்டித:
பூத: ஸவஸ்த்தக்ருஹம் க்ருஹஸ்த்த
மதிதிர் தீன: ப்ரபும் தார்மிகம்
தீபம் ஸந்த மஸா குலச்ச சிகினம்
சீதா வ்ருதஸ்த்வம் ததா
சேதஸ் ஸர்வபயாபஹம் வ்ரஜ ஸுகம்
சம்போ: பதாம்போருஹம் - சம்போ மகாதேவ!

பொருள்: என்னுடைய மனமே! வெள்ளத்தில் சிக்கியவன் கரையையும், நீண்ட வழி நடப்பவன் இளைப்பாற மரநிழலையும், மழைக்குப் பயந்தவன் ஒரு நல்ல வீட்டையும், வெளியூர்ப்பயணி அந்த ஊரிலுள்ள ஒரு வீட்டுக்குரியவனையும், ஓர் ஏழை, ஈகைக் குணமுள்ள ஒரு செல்வரையும், அதிக இருட்டில் தவிப்பவன் ஒரு விளக்கையும், குளிரால் தாக்குண்டவன் நெருப்பையும் எப்படி விரும்புவானோ, அப்படி நீ, அச்சங்கள் அனைத்தையும் அகற்றி, இன்பத்தைத் தரக் கூடிய, சர்வேஸ்வரனின் திருவடித் தாமரைகளை விரும்பியடைவாயாக!

61. பக்தியின் பயன்

சம்போ மகாதேவ!
அங்கோலம் நிஜப்ஜ ஸந்ததி ரயஸ்
காந்தோபலம் ஸூசிகா
ஸாத்வீ நைஜவிபும் லதா க்ஷிதிருஹம்
ஸிந்துஸ் ஸரித வல்லபம்
ப்ராப்னோ தீஹ யதாததா
பசுபதே பாதாரவிந்த
த்வயம் சேதோவ்ருத்திருபேத்ய திஷ்டதி
ஸதா ஸா பக்திரித் யுச்யதே - சம்போ மகாதேவ!

பொருள்: ஒரு குறிப்பிட்ட மரத்தை அதன் விதைவர்க்கங்களும், இரும்புக் காந்தத்தை ஊசியும், தன்னுடைய கணவனை பதிவிரதையான ஒரு பெண்ணும், மரத்தைக் கொடியும், கடலை நதியும், என ஒவ்வொன்றும் எவ்வாறு நாடித் தேடிச் சென்றடைகின்றனவோ, அப்படியே மனத்தின் நாட்டமும், பரமேஸ்வரனின் திருவடித் தாமரைகள் இரண்டையும் அடைந்து எப்போதும் நிலைபெற்றிருக்குமாயின் அது தான் பக்தி எனப்படும்.

62. பக்தி என்னும் அன்னை

சம்போ மகாதேவ!
ஆனந்தாச்ருபி ராதனோதி புலகம்
நைர்மல்ய தச் சாதனம்
வாசா சங்க்க முகே ஸ்திதைச்ச
ஜடாபூர்த்திம் சரித்திராம்ருதை:
ருத்ராøக்ஷர் பஸிதேன தேவ
வபு÷ஷா ரக்ஷõம் பவத்
பாவனா பர்யங்கே விநிவேச்ய
பக்தி ஜனனீ பக்தார்ப்பகம் ரக்ஷதி - சம்போ மகாதேவ!

பொருள்: மகாதேவா! பக்தியென்னும் தாய் ஆனந்தக் கண்ணீரால் நீராட்டி, மயிர்க் கால்களிலெல்லாம் மகிழ்ச்சியையும், களங்கமற்ற மனத்தால் ஆடையையும், வாக்கு என்னும் சங்கின் வாயிலுள்ள <உன் சரித்திரம் ஆகிய அமுதத்தால், வயிற்றுக்குப் போதுமான உணவையும், ருத்திராட்சத்தாலும் விபூதியினாலும் உடலுக்குப் பாதுகாப்பையும் வழங்குகிறாள். உன் தியானமாகிய தொட்டிலில் படுக்கவைத்துப் பக்தனாகிய குழந்தையைப் பாதுகாக்கிறாள்.

63. குறைகளை நீக்கும் பக்தி

சம்போ மகாதேவ!
மார்க்கா வர்த்தித பாதுகா பசுபதே
ரங்கஸ்ய கூர்ச்சாயதே
கண்டூஷாம்பு நிஷேசனம் புர
ரிபோர் திவ்யாபிஷேகாயதே
கிஞ்சித் பக்ஷித மாம்ஸசேஷ கபலம்
நவ்யோப ஹாராயதே, பக்தி:
கிந் நகரோத்யஹோ வநசரோ
பக்தாவதம் ஸாயதே - சம்போ மகாதேவ!

பொருள்: கண்ணப்ப நாயனாருடைய வழி நடந்து தேய்ந்த செருப்பு பரமசிவ மூர்த்திக்கு அபிஷேகத்துக்கு முன் சிரசில் வைக்கப்படும் தர்ப்பை போன்றதாகிறது. வாயிலிருந்து கொப்புளித்த தண்ணீரால் நனைப்பது, திரிபுரங்களையும் எரித்தழித்த தெய்வீகமான அபிஷேகம் போன்றதாகிறது. சிறிதளவு கடித்துப் பார்த்த இறைச்சியின் மீதியான பகுதி புதிதான நைவேத்யம் போன்றதாகிறது. என்ன வியப்பு! காட்டில் வசிக்கும் வேடன் கூட, பெரும் பக்தனாகிறான். பக்தி எதையும் செய்யும் என்பது இதுதானோ?

64. மனமே ஈசனின் பாதுகை

சம்போ மகாதேவ!
வக்ஷஸ்தாடன மந்தகஸ்ய கடினா
பஸ்மார ஸம்மர்த்தனம்,
பூப்ரூத் பர்யடனம், சமத்ஸுரசிர:
கோடீர சங்கர்ஷணம்
கர்மேதம் ம்ருதுலஸ்ய தாவக
பதத்வந்த் வஸ்ய கௌரீபதே,
மச்சேதோ மணிபாதுகா விஹரணம்
சம்போ ஸயதாங்கீ குரு - சம்போ மகாதேவ!

பொருள்: கௌரியின் பதியாகிய சிவபிரானே! யமனின் மார்பில் உதைத்தல், அறிவை மயக்கக் கூடிய காக்கை வலிப்பு என்னும் (தாருகாவனத்தில் சிவனை எதிர்க்க வந்த முயலகன் என்ற அரக்கனை வீழ்த்தி அவன் முதுகின் மீதேறி நின்று அவனை நசுக்கினார் சிவபிரான். அந்த அரக்கனுக்கு அபஸ்மாரன் என்ற பெயருமுண்டு என்பதால், இந்த வரி அதையும் குறிக்கும்.) அபஸ்மாரம் என்னும் கடினமான நோயைப் போக்குதல், மலையில் சஞ்சாரம் செய்தல், வணங்கும் தேவர்களின் தலைகளிலுள்ள கிரீடங்களில் தங்கியிருத்தல், ஆகியனவெல்லாம் மிக மிருதுவான உன் இரு திருவடிகளுக்குப் பழக்கமானவை. அந்த வகையில் சம்புவே! எப்போதும் என் மனம் என்னும் ரத்தினப் பாதுகையை அணிந்துகொண்டு விருப்பம் போல் சஞ்சாரம் செய்யுமாறு வேண்டுகிறேன்.

65. திருவடி சேவையின் பெருமை

சம்போ மகாதேவ!
வக்ஷஸ்தாடன சங்கயா விசலிதோ
வைவஸ்வதோ நிர்ஜரா:
கோடீரோஜ்வல ரத்ன தீபகலிகா
நீராஜனம் குர்வதே:
த்ருஷ்ட்வா முக்திவதூஸ் தனோதி
நிப்ருதாச்லேஷம் பவானீபதே
யச்சேதஸ் தவ பாதபத்ம
பஜனம் தஸ்யேஹ கிம் துர்லபம் - சம்போ மகாதேவ!

பொருள்: பவானி எனப்படும் பார்வதி தேவியின் நாயகரான ஈசனே! யாருடைய மனம் உன் திருவடித் தாமரைக்குச் சேவை செய்ய எண்ணுகிறதோ, அவனுக்கு இப்பூவுலகில் அடையமுடியாததென என்ன உள்ளது? (எதுவுமில்லை) மார்பில் உதைபட அஞ்சி யமன் ஓடிவிடுகிறான். தேவர்கள் தங்கள் கிரீடங்களில் ஒளிவீசும் மொக்கு போன்ற ரத்ன தீபங்களால் கற்பூர ஆரத்தி செய்கின்றனர். முக்தி எனும் பெண் கண்டவுடனே தழுவிக் கொள்கிறார்கள். (சிவபிரானை வணங்குவோர் யமபயத்தினின்றும் விடுபடுவர் என்பது குறிப்பு.)

66. ஈசனின் லீலையே இவ்வுலகம்

சம்போ மகாதேவ!
க்ரீடார்த்தம் ஸ்ருஜஸிப்ரபஞ்ச மகிலம்
க்ரீடாம்ரு காஸ்தே ஜனா:,
யத்கர்மா சரிதம் மயா ச பவத:
ப்ரீத்யை பவத்யேவ தத்
சம்போ ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம்
மச்சேஷ்டிதம் நிச்சிதம்
தஸ்மான் மாமக ரக்ஷணம்
பசுபதே கர்த்தவ்ய மேவத்வயா - சம்போ மகாதேவ!

பொருள்: உயிர்கள் அனைத்துக்கும் நாயகராகிய சம்புவே! உலகங்கள் அனைத்தையும் விளையாட்டிற்காகப் படைக்கிறாய். மக்கள் எல்லாரும் உனக்கு விளையாட்டுப் பிராணிகள். நானும் ஏதோ செயல் புரிந்தேன் எனில் அதுவும் <உன் விருப்பத்தின்படியே நிகழ்கிறது. அப்படி என்னை ஆடவைப்பதும் கூட உன்னுடைய அடியவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாகிறது என்பது நிச்சயமாய்த் தெரிகிறது. எனவே அத்தகைய அடியவனாகிய என்னையும் காப்பது உன் கடமைதானே?

67. சதாசிவத் தியானத்தின் பெருமை

சம்போ மகாதேவ!
பஹுவித பரிதோஷ பாஷ்ப்பபூர
ஸ்புட புலகாங்கித சாரு போக பூமிம்!
சிரபத பலகாங்க்ஷி ஸேவ்ய மானாம்
பரம ஸதாசிவ பாவனாம் ப்ரபத்யே!! - சம்போ மகாதேவ!

பொருள்: பல்வேறு விதத்திலும் மகிழ்ச்சி பெருகுவதற்கும், ஆனந்தக் கண்ணீர் பொங்கியெழுவதற்கும், வெளிப்படையாகவே புளகாங்கிதமடைவதற்கும் சிறந்த விளை நிலமாகியதும், நிலையான பதவியான மோட்சம் என்னும் பெருமகிழ்ச்சியின் பயனை விரும்புபவர்களால் போற்றப்பட்டதுமான சதாசிவத் தியானத்தை நான் அடைக்கலம் புகுகிறேன்.

68. பக்தியாகிய பசு

சம்போ மகாதேவ!
அமித முதம்ருதம் முஹுர் துஹந்தீம்
விமல பவத்பத கோஷ்ட மாவஸந்தீம்
ஸதய பசுபதே ஸுபுண்ய பாகாம்
மம பரிபாலய பக்திதேனு மேகாம்: - சம்போ மகாதேவ!

பொருள்: உயிர்கள் அனைத்துக்கும் தலைவரான ஈசனே! தயவு காட்டும் குணமுள்ளவரே! அளவற்ற மகிழ்ச்சி என்னும் அமுதத்தை மேன் மேலும் பெருக்குவதாகவும், தூய்மையான உன் திருவடியாகிய கொட்டிலில் வசிப்பதாகவும், சிறந்த புண்ணியச் செயல்களின் பயன்களின் வடிவமாகவும் உள்ள என் பக்தி என்கின்ற கறவைப் பசு ஒன்றை நன்கு காத்தருள்வாயாக! (பக்தி என்பதை, விரும்பியதையெல்லாம் கொடுக்கவல்ல காமதேனுவாகவும், பால் என்பதை, பேரின்ப வீடாகிய முக்தியின்பமாகவும், கொட்டில் என்பதை சிவபிரானின் திருவடிகளாகவும், உருவகித்துப் பாடப்பெற்ற பாடல்.)

69. ஈசனின் கருணை

சம்போ மகாதேவ!
ஜடதா பசுதா கலங்கிதா
குடில சரத்வஞ் சநாஸ்தி மயிதேவ!
அஸ்தியதி ராஜமெஸலே
பவதா பரணஸ்ய நாஸ்மிகிம் பாத்ரம் - சம்போ மகாதேவ!

பொருள்: சந்திரனைத் தலையிலணிந்து விளங்குபவரே! இறைவனாம் ஈசனே! மூடத்தனமும் மிருகத்தனமும், களங்கமான குணங்களும், தாறுமாறான நேர்மையற்ற நடத்தையும் என்னிடத்தில் சிறிதளவும் குடிபுகவில்லை. மேற்கூறப்பட்ட குறைபாடுகளெல்லாம் சந்திரனிடத்தில் இருப்பதைப் போல் என்னிடமும் இருந்திருக்குமானால் உன் அணிகலனாயிருக்க நான் தகுந்தவன் ஆகியிருக்கமாட்டேனா?
(சிவபிரானின் மீது பக்தி செலுத்துபவர்களிடம் தீய குணங்கள் அணுகா என்பதும், ஞானம், உயர்பண்பு, நேர்மை ஆகியன தாமே வந்தமையும் என்பதும் குறிப்பு.)

70. ஆராதனைக்கு எளிமையானவர்

சம்போ மகாதேவ!
அரஹஸி ரஹஸி ஸ்வதந்த்ர புத்த்யா
வரிவஸிதும் ஸுலப: ப்ரஸன்ன மூர்த்தி:
அகணித பலதாயக: ப்ரபுர்மே
ஜகததிகோஹ்ருதி ராஜசேகரோஸ்தி - சம்போ மகாதேவ!

பொருள்: வெளிப்படையாகவும், தனிப்பட்ட முறையில் ஏகாந்தமாக, ரகசியமாகவும் தன் சுயபுத்தியால் தொழுது போற்றுவதற்கு, பரமசிவன் மிக எளிதானவர். அருள்புரிய ஆயத்தமாகவும், நினைத்தற் கொண்ணாத அரிய நற்பயன்களை அளிக்கவும், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களிலும் வல்லவராயும், தோன்றி அழியும் இந்த உலகிற்கு அப்பாற்பட்டவராயும், பிறையணிந்த பெருமானாகவும் விளங்குகின்ற அவர் இதோ என் இதயத்திலேயே இருந்து வருகிறார். உள்ளத்திலேயே உறைபவர் என்பதால் ரகசியமாய் வணங்கவும், எங்கும் நிறைந்திருப்பவர் என்பதால் வெளியில் விருப்பப்படி வணங்கவும் ஏற்றவர். (அதாவது எப்படி வணங்குவதாயினும் அதற்கேற்ப மிக எளிதானவர் சிவபிரான் என்பதே இதன் உட்பொருள்.)

71. அழிவற்ற முக்தி நிலை

சம்போ மகாதேவ!
ஆரூட பக்திகுண
குஞ்சித பாவ சாப
யுக்தை: சிவஸ்மரண
பாண கணை ரமோகை:
நிர்ஜித்ய கில்பிஷ ரிபூன்
விஜயீ ஸுதீந்த்ரஸ்
ஸாநந்த மாவஹதி
ஸுஸ்த்திர ராஜலக்ஷ்மீம் - சம்போ மகாதேவ!

பொருள்: உச்சநிலையை அடைந்துள்ள பக்தி என்னும் நாணினால் வளைக்கப்பெற்ற பாவனை என்னும் வில்லில் தொடுக்கப் பெற்றவையும் வீணாகாதவையுமான சிவத் தியானம் எனும் அம்புகளால், பாபங்களாகிய பகைவர்களை அறவே ஒழித்து வெற்றிகரமாக விளங்கும் அறிவொளிகளிலேயே சிறந்தவனான ஒருவன், என்றுமே பேரின்பச் செல்வத்தை அடைந்து மகிழ்வான்.

72. திருவடிகளே பெரும்புதையல்

சம்போ மகாதேவ!
த்யானாஞ்ஜனேன ஸம÷க்ஷவ்ய
தம: ப்ரதேசம்
பித்வா மஹா பலிபிரீச்வர
நாம மந்த்ரை:
திவ்யாச்ரிதம் புஜகபூஷண
முத்வஹந்தி
யே பாதபத்ம மிஹதே
சிவதே க்ருதார்த்தா - சம்போ மகாதேவ!

பொருள்: சர்வேஸ்வரா! தியானம் என்கிற மையின் துணையால் புதையல் மறைந்திருக்கும் இடத்தை நன்றாய்த் தெரிந்து கொண்டு, அதை மறைத்திருக்கும் இருளான பகுதியைப் பிளந்து, ஈசனின் திருநாமங்கள் அடங்கிய மந்திரங்களான பலிகளால், தேவர்களால் வணங்கப்பட்டதும், பாம்புகளை ஆபரணமாய்க் கொண்டதுமான உன் திருவடியை யார் மேலே கொண்டு வருகிறார்களோ, அவர்களே வாழ்வின் பயனைப் பெற்றவர்களாவர். (அஞ்ஞானம் என்னும் இருளை, தியானம் என்னும் மையினால் கண்டு, சிவ நாம ஜபம் என்னும் பலி பூசையைச் செய்தால் பொற்குவியல் நிறைந்து கிடக்கும் புதையலாம் சிவபிரானின் திருவடிகளைக் கண்டு மகிழலாம் என்பதே கருத்து.)

73. முக்தி என்னும் மூலிகைகளின் விளைநிலம்

சம்போ மகாதேவ!
பூதாரதா முதவஹத்
யதபேக்ஷயா ஸ்ரீ
பூதார ஏம கிமதஸ்
ஸுமதே லபஸ்வ
கேதார மகாலித முக்தி
மஹெளஷ தீனாம்
பாதார விந்த பஜனம்
பரமேச் வரஸ்ய - சம்போ மகாதேவ!

பொருள்: நற்குணம் படைத்த புத்தியே! தேவர்கள் அனைவரிலும் மிகச் சிறந்தவரும், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இருவரையும் தம் பத்தினிகளாகக் கொண்டவருமான ஸ்ரீ மஹாவிஷ்ணு வராஹ வடிவை எடுத்துக் கொண்டாரே, அதற்குக் காரணமென்ன? உலகம் விரும்பக் கூடிய முக்தி என்னும் சிறந்த மூலிகைகளுக்கு விளைநிலமாக உள்ள பரமேஸ்வரனின் திருவடிகளுக்குச் சேவை செய்வதற்காகத்தான். எனவே நீயும் ஈசனின் திருவடிகளுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை நாடிப் பெறுவாயாக. நீ அடையத் தக்கதென அதைவிட வேறென்ன இருக்கிறது?

74. மனத்தைத் தூய்மைப்படுத்துவாயாக!

சம்போ மகாதேவ!
ஆசா பாச க்லேச
துர்வாஸனாதி,
பேதோத் யுக்தைர் திவ்ய
கந்தை ரமந்தை:
ஆசாசா டீகஸ்ய
பாதார விந்தம்
சேத: பேடீம் வாஸிதாம்
மே தனோது - சம்போ மகாதேவ!

பொருள்: கட்டிப் பிணைத்துவைத்துள்ள கயிற்றைப் போன்ற ஆசாபாசங்கள், குழப்பங்கள் ஆகிய கெட்ட வாசனைகளைப் போக்குவதற்கு, குறையாத நறுமணமுள்ள தெய்வீக வாசனைகளால் நிரம்பப் பெற்றதான, பற்றுகள் ஏதுமற்ற மகேசுவரனின் திருவடித்தாமரை, என் மனமென்னும் பேழையை நல்ல குணமுடையதாக மாற்றி அருள்புரியட்டும்!
(மனத்தை ஒருமுகப்படுத்தி, தியானம் செய்தால் ஈசனின் இணையற்ற திருவருளைப் பெறலாம் என்பதே உட்பொருள்.)

75. மனம் என்னும் குதிரை

சம்போ மகாதேவ!
கல்யாணினம் ஸரஸ
சித்ரகதிம் ஸவேகம்
ஸர்வேங்கிதஜ்ஞ மனகம்
திருவலக்ஷணாட்யம்
சேதஸ் துரங்க மதிருஹ்ய
சர ஸ்மராரே
நேதஸ் ஸமஸ்த ஜகதாம்
வ்ருஷபாதிரூட - சம்போ மகாதேவ!

பொருள்: மன்மதனை எரித்தவரே! உலகங்களுக்கெல்லாம் நாயகராய் விளங்குபவரே! மங்கள வடிவத்தை உடையதும், இன்பமூட்டக்கூடிய அழகிய நடையை உடையதும், வேகம் மிகுந்ததும், எல்லா நோக்கங்களையும் இங்கிதமாக அறிந்து நடந்து கொள்ளும் அறிவையுடையதும், குறையேதுமற்றதும், நல்ல அங்க லட்சண அமைப்புகளைப் பெற்றதுமான என் மனம் என்னும் குதிரையின் மீதேறிக் கொண்டு பயணம் செய்தருள்வாயாக! (மனத்தை இறைவனுக்கு வாகனமாக ஆக்கிவிட்டால், மனம் தூய்மையடைந்து விடும் என்ற சூட்சும வழியை உணர்த்தும் குறிப்பு.)

76. பக்தி மேகம் பொழியும் இன்ப மழை

சம்போ மகாதேவ!
பக்திர் மஹேச பத
புஷ்கர மாவஸந்தீ
காதம்பினீவ குருதே
பரிதோஷ வர்ஷம்
ஸம்பூரிதோ பவதி
யஸ்ய மனஸ்தடாகஸ்
தஜ்ஜன்ம ஸஸ்ய மகிலம்
ஸபலஞ்ச நான்யத் - சம்போ மகாதேவ!

பொருள்: பக்தி என்பது பரமசிவனின் திருவடியாகிய வானத்தில் இருந்துகொண்டு மேகக் கூட்டத்தைப் போல் இன்பம் என்னும் மழையைப் பொழிகிறது. இந்த இன்பமழையால் எவருடைய மனம் என்னும் தடாகம் நிரம்பி வழிகிறதோ, அவருடைய பிறவிப் பயிர் நல்ல பயனைத் பெறுகிறது. மற்றவை அவ்வாறு பயனடைவதில்லை.
இறைவனிடம் பக்தி செலுத்தாவிட்டால் இன்பத்தைப் பெற முடியாது என்ற கருத்தை மிக நுணுக்கமாக விளக்கிக் கூறுவதே இப்பாடல்.)

77. பிரிவாற்றாமையால் தவிக்கும் குறை நீங்கிட

சம்போ மகாதேவ!
புத்தி: ஸ்திரா பவிதும்
ஈச்வர பாதபத்ம -
ஸக்தா வதூர் விரஹிணீவ
ஸதா ஸ்மரந்தீ
ஸத்பாவனா ஸ்மரண
தர்சன கீர்த்தனாதி
ஸம்மோஹிதேவ சிவமந்த்ர
ஜபேன வின்தே - சம்போ மகாதேவ!

பொருள்: பரமசிவனின் திருவடித் தாமரைமீது பற்றுகொண்டுள்ள என்புத்தி, அதிலேயே நிலை கொள்ளும் வகையில், கணவனைப் பிரிந்து வாடும்  பெண்ணின் பிரிவாற்றாமை மனநிலையைப் போல், எப்பொழுதும் அதையே நினைத்துக் கொண்டும். அதை அடையப் போவதைப் பற்றியே நினைத்துப் பார்த்துக் கொண்டும், அகக் கண்ணால் கண்டும், நினைத்தும், புகழ்ந்து பாடிக் கொண்டும் சிவமந்திர ஜபத்தால் சுய உணர்வை இழந்தவளைப் போல் கவலைப்பட்டு வருகிறது.

78. புதுமணப் பெண்ணின் மனநிலை

சம்போ மகாதேவ!
ஸதுபசார விதிஷ்
வனு போதிதாம்
ஸவிநயாம் ஸுஹ்ருதம்
ஸதுபாச் ரிதாம்
மம  ஸமுத்தர புத்தி
மிமாம் ப்ரபோ
வரகுணேன நவோட
வதூமிவ - சம்போ மகாதேவ!

பொருள்: இறைவா! ஈசனே! பெரியவர்களுக்கு உபசாரம் செய்யும் விதிமுறைகளில் நன்கு போதனை பெற்றதாயும், வணக்கத்துடன் கூடியதாயும், தூய்மையான உள்ளத்தைப் படைத்தாயும், நன்மையிலேயே எப்பொழுதும் மிகுந்த நாட்டம் உடையதாயும் உள்ள என் இந்தப் புத்தியை, மணமகன் ஒருவன், தான் புதிதாகத் திருமணம் செய்து கொண்ட பெண்ணை, தன் குணச்சிறப்புகளால் ஆதரவான சொற்களைக் கூறித் தேற்றுவதைப் போல, கவலைக் கடலிலிருந்து கைதூக்கி விட்டுக் காத்தருள்வாயாக!

79. திருவடிகளுக்குச் சேவைபுரிய அருள்வாயாக!

சம்போ மகாதேவ!
நித்யம் யோகிமனஸ் ஸரோஜதல
ஸஞ்சார க்ஷ மஸ்த்வத் க்ரம,
சம்போ தேன கதம் கடோர
யமராட்வக்ஷ: கவாடக்ஷதி:
அத்யந்தம் ம்ருதுலம் த்வதங்க்ரியுகலம்
ஹாமே மனச் சிந்தயத்
யேதல்லேசன கோசரம் குரு
விபோ ஹஸ்தேன ஸம்வாஹாயே - சம்போ மகாதேவ!

பொருள்: எங்கும் நிறைந்தவரே! சம்புவே! ஈசனே! உன் திருவடிகள்,யோகியரின் மனம் என்னும் தாமரையின் இதழ்களிலேயே எப்பொழுதும் சஞ்சாரம் செய்யும் தன்மையுடையது. அவற்றால் கரடுமுரடான யமதர்மனின் கடினமான மார்பில் காயப்படுத்தியது வியப்பாயிருக்கிறது. உன் திருவடிகள் இரண்டும் மிகவும் மென்மையானவை ஆயிற்றே என்றெண்ணி என் மனம் கவலைப்படுகிறது. யமுனை உதைத்த திருவடிகளை  என் கண்களுக்குக் காட்டியருள்வாயாக! அப்படிக் காட்டினால் என் கைகளால் மெதுவாக அமுக்கி விடுவேனே!

80. மனம் என்னும் மன்றில் ஆடும் மகேசன்

சம்போ மகாதேவ!
ஏஷ்யத்யேஷ ஜனிம் மனோஅஸ்ய
கடினம் தஸ்மிந் நடானீதி,
மத்ரக்ஷõயை கிரிஸீம்னி கோமலபத
ந்யாஸ: புராப்யாஸித:
நோசேத் திவ்ய க்ருஹாந்தரேஷு
ஸுமன்ஸ் தல்பேஷுவேத்யாதிஷு
ப்ராயஸ்ஸத்ஸு சிலாதலேஷு
நடனம் சம்போ கிமர்த்தம் தவ - சம்போ மகாதேவ!

பொருள்: சம்புவாகிய ஈசனே! இவன் பிறவியை அடையவிருக்கிறான். இவனுடைய மனம் கடினமானது. அதில் நான் நடனம் ஆட இருக்கிறேன் என்று என்னைக் காப்பாற்றுவதற்காக, மெதுவான பாதங்களின் நடை (கயிலாய) மலைப் பகுதியில் முன்னரே பயிற்சியளிக்கப்பட்டது. அவ்வாறில்லையெனில் திவ்வியமான வீடுகளினுள்ளும், மலர்ப் படுக்கைகளிலும், உயர்ந்த மேடைகளிலும், நடனமாட ஏராளமான வசதிகள் இருக்கும்போது, கடினமான கற்கள் பரவிக் கிடக்கும் இடத்தை நடனமாடத் தேர்வு செய்யக் காரணமென்ன?

81. முக்தி நிலை

சம்போ மகாதேவ!
கஞ்சித் கால முமாமஹேச பவத:
பாதார விந்தார்ச்சனை:
கஞ்சித் த்யான ஸமாதிபிச்ச நதிபி:
கஞ்சித் கதா கர்ணணை:
கஞ்சித் கஞ்சித வேக்ஷணைச்ச
நுதிபி: கஞ்சித்தசா
மீத்ருசீம் ய: ப்ராப்னோதிமுதா
த்வதர்ப்பித மனா ஜீவன்ஸ முக்த: கலு - சம்போ மகாதேவ!

பொருள்: உமை அம்மையுடன் கூடியுள்ள மகேசுவரரே! சிறிது காலம் உன் திருவடித் தாமரைகளை அர்ச்சனை செய்வதுடன், சிறிது தியானம், அமைதி ஆகியவற்றுடன், சிறிது வணக்கங்களுடன், சிறிது சிவனின் திருவிளையாடல் கதைகளைக் கேட்பதுடனும்,
சிறிது தரிசனம் சிறிது ஸ்தோத்திரங்களுடனும், மகிழ்ச்சியால் மனத்தை உன்னிடம் அர்ப்பணம் செய்தவனாக எவனொருவனால் இருக்க முடியுமோ, அவன் நிச்சயமாக உடலுடன் வாழும் பொழுதே முக்தி நிலையை அடைந்தவனாவான்.

82. ஹரனும் ஹரியும்

சம்போ மகாதேவ!
பாணத்வம் வ்ருஷபத்வ மர்த்தவ புஷா
பார்யாத்வ மார்யாபதே,
கோணித்வம் ஸகிதா ம்ருதங்கவஹதா
சேத்யாதி ரூபம் ததௌ
த்வத்பாதே நயனார்ப்பணஞ்ச க்ருதவான்
த்வத்தேஹ பாகோ ஹரி:
பூஜ்யாத் பூஜ்யதரஸ் ஸஏவ ஹிந
சேத் கோவா ததன்யோ: திக - சம்போ மகாதேவ!

பொருள்: அம்பிகையின் பதியான ஈசனே! மகா, விஷ்ணு, உன் கையில் பாணமாகவும் (திரிபுர சம்ஹாரம்) காளையாகவும் (விருஷப வாகனம்) பாதி உடலால் மனைவியாயிருக்கும் தன்மையுடனும், இவை தவிர பன்றித் தன்மை, (அடிமுடி தேடும் படலம்) தோழித் தன்மை (பாற்கடல் கடைந்தபோது) மிருதங்கக்காரத் தன்மை (பிரதோஷ காலம்) போன்ற வடிவங்களைத் தாங்கினார். உன் திருவடிகளில் (ஒரு மலருக்குப் பதிலாக) ஒரு கண்ணையே அர்ப்பித்தார். இக்காரணங்களால் பூஜிப்பவருக்குரிய அனைவரினும் அதிகம் பூஜிக்கப்படுபவராயிருக்கிறார். அவரை விட மேலான பிறர் யார்தான் இருக்கிறார்கள்?

83. சிவபூஜையின் சிறப்புத்தன்மை

சம்போ மகாதேவ!
ஜனன ம்ருதியு தானாம்
ஸேவயா தேவதானாம்
ந பவதி ஸுகலே சஸ்
ஸம்சயோ நாஸ்தி தத்ர
அஜனி மம்ருத ரூபம்
ஸாம்பமீசம் பஜந்தே
யஇஹ பரம சௌக்யம்
தே ஹி தன்யா லபந்தே - சம்போ மகாதேவ!

பொருள்: பிறப்புக்கும் இறப்புக்கும் உட்பட்ட சிறு தேவதைகளை ஆராதனை செய்வதால் சிறிதும் சுகமேற்படாது. அதில் சிறிதும் ஐயமில்லை. பிற்பற்றவரும் மரணமில்லாத உருவத்தைக் கொண்டவரும், அம்பிகையுடன் கூடியிருப்பவருமான பரமசிவனை யார் ஆராதனை செய்கிறார்களோ அவர்களே பிறவியின் பயனை அடைவதுடன், பேரின்பத்தையும் அடைந்து மகிழ்வார்கள்.

84. புத்தி என்னும் கன்னிகை

சம்போ மகாதேவ!
சிவதவ பரிசர்யா
ஸந்நிதானாய கௌர்யா
பவமம குணதுர்யாம்
புத்தி கன்யாம் ப்ரதாஸ்யே
ஸகல புவுன பந்தோ
ஸச்சிதானந்த ஸிந்தோ
ஸதய ஹ்ருதய கேஹே
ஸர்வதா ஸம்வஸ த்வம் - சம்போ மகாதேவ!

பொருள்: மங்கள மூர்த்தியே! உலகை ஆக்குபவரே! உலகங்கள் அனைத்திற்கும் உறவாக உள்ளவரே! சச்சிதானந்தப் பெருங்கடலே! கருணை மிக்கவரே! பார்வதி தேவியுடன் கூடியிருக்கும் உனக்குப் பக்கத்திலேயே இருந்து பணிவிடைகளைச் செய்வதற்காக நற்குணங்கள் மிகுந்த என் புத்தியாகிய கன்னியைத் தானம் செய்கிறேன். நீ என் இதயமாகிய இல்லத்தில் எப்போதும் இனிதே வசித்திருப்பாயாக!

85. சிவனின் ஆபரணமும் ஆகாரமும்

சம்போ மகாதேவ!
ஜலதி மதன த÷க்ஷõ நைவ
பாதால பேதீ
நசவன ம்ருகயாயாம் நைவ
லுப்த: ப்ரவீண:
அசன குஸும பூஷா வஸ்த்ர
முக்யாம் ஸபர்யாம்
கதய கதமஹம் தே கல்ப
யானீந்து மௌலே - சம்போ மகாதேவ!

பொருள்: பிறைச்சந்திரனைச் சூடிய பெருமானே! நான் கடலைக் கடைய வல்லவன் அல்லேன்; பாதாளத்தைப் பிளக்க வல்லவனும் அல்லேன்; காட்டு மிருகங்களை வேட்டையாடுவதில் சமர்த்தனும் அல்லேன்; இவ்வாறிருக்க உனக்கு விருப்பமான ஆகாரம், மலர், ஆபரணம், ஆடை, அணிகள் ஆகியவற்றைக் கொண்டு பூஜை செய்ய என்னால் எப்படி இயலும்? சொல்வாயாக!

86. ஈசனின் அடியும் முடியும்

சம்போ மகாதேவ!
பூஜாத்ரவ்ய ஸம்ருத்தயோ விரசிதா:
பூஜாம் கதம் குர்மஹே,
பக்ஷித்வம் நசவா கிடித்வ
மபி ந ப்ராப்தம் மயா துர்லபம்
ஜானே மஸ்தக மங்க்ரி பல்லவ
முமாஜானே நதேஅஹம்விபோ,
ந ஜ்ஞாதம் ஹி பிதாமஹேன
ஹரிணா தத்வேன தத்ரூபிணா - சம்போ மகாதேவ!

பொருள்: உமாதேவியின் நாயகரே! எங்கும் நிறைந்த ஈசனே! பூஜைக்குரிய திரவியங்கள் குவியல் குவியலாகச் சேகரம் செய்து வைக்கப்பட்டுள்ளன. எனினும் பூஜையை எவ்வாறு செய்வதெனத் தெரியவில்லை. அன்னப் பறவையின் தன்மையும் எமக்கில்லை; பன்றியின் தன்மையும் எமக்கில்லை. அவற்றை அடைதலும் எம்மால் இயலாது. அதனால் அவற்றைப் போல உன்னுடைய திருமுடியையும் திருவடியையும் கண்டறிய உணரவில்லை. அந்த உருவங்கள் அடைந்த பிரம்மாவாலும் விஷ்ணுவாலும் கூட அறிய முடியவில்லையே!

87. பக்தி செலுத்த வைப்பாயாக!

சம்போ மகாதேவ!
அசனம் கரலம்
பணீகலாபோ
வஸனம் சர்ம ச
வாஹனம் மஹோக்ஷ:
மம தாஸ்யஸி கிம்
கிமஸ்தி சம்போ
தவ பாதாம்புஜ
பக்திமேவ தேஹி - சம்போ மகாதேவ!

பொருள்: சம்புவே! உனக்கு ஆகாரம், விஷம்; ஆபரணம், பாம்பு; ஆடை, தோல்; வாகனமோ பெரிய காளை. எனக்கு வேண்டியவற்றில் எதை நீ எனக்கு கொடுக்கப் போகிறாய்? என்ன இருக்கிறது? உன் திருவடித் தாமரைகளில் பக்தி செலுத்தும் வாய்ப்பொன்றையே கொடுத்தருள் வாயாக! நஞ்சை உண்டதும், பாம்பை ஆபரணமாக அணிந்ததும், அவற்றிடமிருந்து அடியவர்களைக் காப்பதற்காகவே தான். போகத்தில் பற்றில்லாமையைக் காட்டவே தோல் ஆடை. இந்தக் கோலத்திலுள்ள சிவபிரானைக் கண்ணாரக் கண்டு எனக்கு ஏதேனும் கொடு என்று கேட்க மனமின்றி, நீ உன்னையே உனக்குக் கொடு. நான் என்னையே உனக்குக் கொடுக்கிறேன். உன் திருவடியில் பக்தி செலுத்த வைப்பாயாக என வேண்டும் நிலையைக் கூறுகிறது இப்பாடல்.

88. அர்ச்சனையும் தியானமும்

சம்போ மகாதேவ!
யதாக்ருதாம் போநிதி
ஸேது பந்தன:
கரஸ்த்தலாத: க்ருத
பர்வதாதிப:
பவானிதே லங்கித
பத்ம ஸம்பவ:
ததா சிவார்ச் சா ஸ்தவ
பாவன க்ஷம: - சம்போ மகாதேவ!

பொருள்: சர்வேஸ்வரனே! கடலின் மீது அணை கட்டிய தசரத குமாரன் இராமபிரானைப் போலவும், தன் கையால் விந்திய மலையையே அமுக்கிய அகத்திய மாமுனியைப் போலவும், மஹா விஷ்ணுவின் நாபிக் கமலத்திலுள்ள பிரம்மாவையும் மீறியவனாகவும் நான் எப்பொழுது ஆவேனோ அப்பொழுதுதான் நான் <உன்னை அர்ச்சனை செய்வதிலும், ஸ்தோத்திரங்களைக் கூறித் தியானம் செய்வதிலும் திறமைபெற்றவனாக ஆவேன்.
(பிரம்மாவாலேயே செய்ய முடியாத ஒரு செயல் என்னால் எப்படி இயலும்? என்பதாக அடியவரின் வருத்தத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது இப்பாடலின் கருத்து.)

89. கல்லும் வில்லும்

சம்போ மகாதேவ!
நதிபிர் நுதிபிஸ்
த்வமீச பூஜா
விதிபிர் த்யான
ஸமாதிபிர் ந துஷ்ட:
தனுஷா முஸலேன
சாச் மபிர் வா
வத தே பிரீதிகரம்
ததா கரோமி - சம்போ மகாதேவ!

பொருள்: உலகங்களையெல்லாம் ஆள்பவரான சர்வேஸ்வரனே! (அர்ச்சுனனைப் போல) வில்லாலும் (சாக்கிய நாயனாரைப் போல) கல்லாலும் மற்றும் உலக்கையாலும் அடிக்கப்படும்பொழுது எவ்வாறு மகிழ்கிறாயோ, அவ்வாறே வணக்கங்களாலும்,
பூஜை விதி முறைகளாலும், தியான முறைகளாலும் நீ மகிழ்ச்சியடைவதில்லை. எனவே உனக்கு விருப்பமானதைத் தெரிவித்தால் நான் அவ்விதமே செய்வேன்.
(எதற்கும் கட்டுப்படாத ஈசன் அடியவர்களின் பக்திக்குக் கட்டுப்பட்டு மகிழ்வார் என்பதே உட்பொருள்.)

90. முக்கரண வழிபாடு

சம்போ மகாதேவ!
வசஸா சரிதம்
வதாமி சம்போ
ரஹமுத்யோக விதாஸு
தே அப்ரஸக்த:
மனஸாக்ருதி மீச்வ
ரஸ்ய ஸேவே
சிரஸாசைவ
ஸதாசிவம் நமாமி - சம்போ மகாதேவ!

பொருள்: உலகிற்கு நலங்களையெல்லாம் நல்கிடும் உன் திருவிளையாடல்களைச் சொல்கிறேன். நான் உன்னதமான யோகமுறைகளில் பயிற்சியற்றவன். ஆனால் மனத்தால், உலகை ஆள்பவராகிய உன் திருவுருவை வழிபடுகிறேன். என்றும் மங்கள வடிவினனான உன்னைத் தலையாலும் வணங்குகிறேன்.  (ஈசன் கருவி கரணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்றாலும் நான் முக்கரணங்களால் வழிபடுகிறேன் என்பதை மறைமுகமாக உணர்த்தும் பாடல்.)

91. அஞ்ஞானம் அகன்றிட

சம்போ மகாதேவ!
ஆத்யா (அ) வித்யா ஹ்ருத்கதா
நிர்க்க தாஸீத்
வித்யா ஹ்ருத்யா ஹ்ருத்கதா
தவத் ப்ரஸாதாத்
ஸேவே நித்யம் ஸ்ரீகரம்
த்வத் பதாப்ஜம்
பாவே முக்தேர் பாஜனம்
ராஜ மௌலே - சம்போ மகாதேவ!

பொருள்: தலையில் சந்திர கலையணிந்து காட்சி தருபவரே! ஆதி காலத்திலிருந்து என் இதயத்தில் இருந்து கொண்டிருந்த அறியாமை இருள் உன் அருளால் வெளியேறிவிட்டது. சிக்கல்களைத் தீர்க்கும் ஞானம் இதயத்தில் குடிகொண்டுவிட்டது. அரிய செல்வங்களை அளிப்பதும், முக்திக்கு இருப்பிடமாகியதுமான உன் திருவடித் தாமரையை எப்பொழுதும் தியானம் செய்து வணங்குகிறேன்.

92. பாபங்கள் யாவும் விலகிட

சம்போ மகாதேவ!
தூரீக்ருதானி துரிதானி
துரக்ஷ ரானி
தௌர்ப்பாக்ய துக்க
துரஹங்க்ருதி துர்வசாம் ஸி
ஸாரம் த்வதீய சரிதம்
நிதராம் பிபந்தம்
கௌரீச மாமிஹ
ஸமுத்தர ஸத்கடாøக்ஷ: - சம்போ மகாதேவ!

பொருள்: கவுரியின் நாயகனே ! பாபங்களும் கெட்ட தலையெழுத்துகளும், துரதிர்ஷ்டம் துன்பம், துர் அகங்காரம், தீய சொற்கள்ஆகிய எல்லாம் துரத்தித் தள்ளப்பட்டன. சுவை நிறைந்த உனது சரித்திரமாகிய இனிய தேனை இடையீடின்றிப் பருகி வரும் என்னை இப்போதே இங்கேயே கைதூக்கி விடுவாயாக!

93. பரஞ்சோதியின் திருவடிவம்

சம்போ மகாதேவ!
சோம கலாதர மௌலௌ
கோமல கனகந்தரே மஹாமஹஸி
ஸ்வாமினி கிரிஜாநாதே
மாமக ஹ்ருதயம் நிரந்தரம் ரமதாம் - சம்போ மகாதேவ!

பொருள்: சந்திர கலையைச் சிரசில் சூடிக் கொண்டுள்ளவரும், கரிய மேகத்தைப் போன்ற கறுத்த கழுத்தையுடையவரும், உலகங்கள் அனைத்தையும் தம்முடையதாகக் கொண்டவரும் பார்வதியின் நாயகரும் ஆகிய பரஞ்சோதியின் வடிவிலேயே என் உள்ளம் எப்பொழுதும் இடைவிடாது களித்திருப்பதாக!

94. வாழ்வின் பயன் சிவவழிபாடே

சம்போ மகாதேவ!
ஸா ரஸனா தே நயனே
தாவேவ கரௌ ஸ 
ஏவ க்ருத கிருத்ய:
யாயே யௌயோ
பர்க்கம் வததீ÷க்ஷதே
ஸதார்ச்சத: ஸ்மரதி - சம்போ மகாதேவ!

பொருள்: எங்கும் நிறைந்த ஈசனான பரமசிவனைப் பற்றி எது பேசுகிறதோ அதுவே தான் நாக்கு; எவை காண்கின்றனவோ அவைதாம் கண்கள்; எவை பூஜை புரிகின்றனவோ அவையே கரங்கள். எவன் எப்பொழுதும் பரம சிவனையே நினைக்கின்றானோ அவனே வாழ்வின் பயன்களை அடைந்தவனாவான். (சிவபிரானை இடைவிடாது தொழுது வழிபடுவதே வாழ்க்கையின் (இப்பிறவியின்) பயனாகும் என உணர்த்தப்படுகிறது.)

95. கல்லும் மலரும்

சம்போ மகாதேவ!
அதிம்ருதுதௌ மம சரணா
வதிகடினம் தே மனோ
பவானீச! இதி விசிகித்ஸாம்
ஸந்த்யஜ கதமாஸீத் கிரௌ ததா ப்ரவேச - சம்போ மகாதேவ!

பொருள்: பவானி என்னும் பார்வதியின் நாயகனே! சிவனே! என் திருவடிகள் மிகவும் மிருதுவானவை. உன்னுடைய மனம்தான் மிகவும் கடினமானது என்று என்னைப் பற்றி நீ கொண்டுள்ள உன் உள்ளத்திலுள்ள ஐயத்தை அறவே அகற்றிவிடுவாயாக. அவ்வாறிருக்கு மாயின் கயிலாய மலையில் புகுந்து சஞ்சாரம் செய்வது எவ்வாறு சாத்தியமாயிற்று?
(அடியவர்களைக் காப்பதற்காக கடினமான திருவடிகளைக் கொண்டு கயிலாய மலையில் சஞ்சரிப்பதும், அடியவர்களை நாடி வரும் போது மலரைப் மென்மையான திருவடிகளாக ஆக்கிக் கொள்ளவும் பயிற்சி பெற்றவராக சிவபெருமான் உள்ளார் என்பது குறிப்பு.)

96. கட்டுத்தறியாய்க் காத்தருளும் திருவடி

சம்போ மகாதேவ!
தைர்யாங்குசேன நிப்ருதம்
ரபஸாதாக்ருஷ்ய பக்தி ச்ருங்கலயா!
புரஹர சரணாலானே
ஹ்ருதய மதேபம் பதான சித்யந்த்ரை! - சம்போ மகாதேவ!

பொருள்: திரிபுரங்களையும் எரித்த சிவபிரானே! தைரியம் என்னும் அங்குசத்தால் அடக்கி நிறுத்தப்பட்டுள்ள, மதங்கொண்ட யானையைப் போன்ற என் மனத்தை, பக்தி என்னும் சங்கிலியால் வேகமாக இழுத்து, உன் திருவடிகள் என்னும் கட்டுத் தறியில் அறிவென்னும் யந்திரக் கருவிகளால் கட்டி வைத்துக் காத்தருள்வாயாக!

97. அடங்காத மனதை அடக்கும் ஈசன்

சம்போ மகாதேவ! ப்ரசாத்யபித:
ப்ரகல்ப வ்ருத்யா
மதவானேஷ மன: கரீ கரீயான்!
பரிக்ருஹ்ய நயேன பக்திரஜ்வா
பரம ஸத்தாணுபதம்
த்ருடம் நயாமும் - சம்போ மகாதேவ!

பொருள்: பரமேசுவரனே ! மதம் பிடித்ததும் பெரியதுமான யானையாகிய என் மனம் அடங்காத போக்குக் கொண்டு எங்கெங்கோ அலைந்து திரிகிறது. இதை நீ எப்படியேனும் நயமாக பக்தி என்னும் கயிற்றால் கட்டி அன்பால் வசப்படுத்தி அசைவில்லாத நிலைக்களமாகிய உன் திருவடிக்குக் கெட்டியாகப் பிடித்து அழைத்துச் செல்வாயாக!
எப்படியேனும் ஈசனைத் தம் இதயக் கோயிலில் குடியமர்த்த வேண்டும் என விரும்பும் ஓர் அடியவரின் நயமான கோரிக்கையின் விளக்கம். (ஏற்கெனவே சிவானந்த லஹரியில் 21,36,38,39,40,44,45,46,47,59,64,75,77,78,84  ஆம் பாடல்களில் இதே பொருள் இருக்கிறது)

98. கன்னிப்பெண் போன்ற கவிதை

சம்போ மகாதேவ!
ஸர்வாலங்கார யுக்தாம் ஸரலபதயுதாம்
ஸாதுவ்ருத்தாம் ஸுவர்ணாம்
ஸத்பிஸ் ஸம்ஸ்தூயமானாம் ஸரஸகுண
யுதாம் லக்ஷிதாம் லக்ஷணாட்யாம்
உத்யத்பூஷா விசேஷா முபகத விநயாம்
த்யோத மானார்த்த ரேகாம்
கல்யாணீம் தேவ கௌரீப்ரிய மம
கவிதா கன்யகாம் த்வம் க்ருஹாண - சம்போ மகாதேவ!

பொருள்: கன்னிப் பெண்ணுக்கும் கவிதைக்கும் சிலேடை: கவுரியின் நாயகனே! அலங்காரங்களுடனும், அழகிய நடையுடனும், பொலிவுமிக்க மேனியும் நல்லோரால் விரும்பத்தக்க எல்லா நற்குணங்களைக் கொண்டும், சிறந்த அங்கலட்சணங்களைக் பெற்றும், ஒளிமிக்க அணிகளைப் பூண்டும், கைகளில் தனரேகை விளங்குமாறும், மங்கள வடிவுடன் திகழும் என் கவிதை எனப்படும் கன்னியை நீ மனம் புரிந்து கொள்வாயாக!
கவுரியின் நாயகனே! உவமை முதலிய அலங்காரங்களும், எளிய, இனிய சொற்களும், சிறந்த எழுத்து வரிசைகளின் பொலிவும் கொண்டு, ஞானிகளால் போற்றப்படுவதாயும், பக்தி உடையதாயும், கவிதையின் லட்சணங்கள் நிறைந்ததாயும் கவர்ச்சி நிறைந்த சொல் அலங்காரங்கள் உடையதாயும், பிரகாசமான அர்த்தங்களைக் கொண்ட நயமான வரிகளை உடையதாயும், மங்களங்களைத் தருவதாயும் உள்ள கன்னிப் பெண்ணை யொத்த என்னுடைய இக்கவிதையை ஏற்றருள்வாயாக!

99.மங்களங்களை அளிக்கும் இறைவன்

சம்போ மகாதேவ!
இதம்தே யுக்தம் வா பரமசிவ
காருண்ய ஜலதே
கதௌ திர்யக்ரூபம் தவ
பதசிரோ தர் சனதியா
ஹரிப்ரமாணௌ தௌ திவிபுவி
சரந்தௌ ச்ரமயுதௌ
கதம் சம்போ ஸ்வாமின் கதய
மம வேத்யோஸி புரத: சம்போ மகாதேவ!

பொருள்: கருணைக் கடலான பரமசிவனே ! உன் திருவடியையும் காணவேண்டுமென்ற எண்ணத்துடன், பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவரும் (அன்னப்) பறவையும் (வராக) மிருகமும் ஆக, உருவத்தையடைந்து வானத்தி<லும் பூமியிலும் அலைந்து களைப்புற்றனர். மங்களங்களை அளிக்கும் இறைவா! என் முன்னால் மட்டும் இவ்வளவு எளிதாக நான் கண்டு மகிழ்தற்குரியவராக எவ்வாறு இருக்கிறாய் ? இது உனக்குப் பொருத்தமான யுக்திதானோ?

100. முடிவில்லாத சிவனின் பெருமைகள்

சம்போ மகாதேவ!
ஸ்தோத்ரேணால மஹம் ப்ரவச்மி நம்ருஷா
தேவா விரிஞ்சாதய:
ஸ்துத்யானாம் கணனாப்ரஸங்க: ஸமயே
த்வாமக்ர கண்யம் விது:
மாஹாத்ம்யாக்ர விசாரண ப்ரகரணே தானா
துஷஸ்தோமவத் தூதாஸ் த்வாம்
விதுருத் தமோத்தம பலம்
சம்போ பவத் ஸேவகா - சம்போ மகாதேவ!

பொருள்: சம்புவே! மனத்துக்கும் வாக்குக்கும் எட்டாத உன் பெருமைகள் முடிவில்லாததால் துதித்தது போதும் என எண்ணுகிறேன். தேவர்கள், பிரம்மா ஆகியோர் கூடி போற்றுதற்குரியவர்களின் எண்ணிக்கையை முடிவு செய்யும் பொழுது, முதலில் எண்ணத்தக்கவராக உன்னையே உணர்கிறார்கள். உன் அடியவர்களும் மற்றவர்களை ஒதுக்கி விட்டு முதலில் உன்னையே, போற்றுகிறார்கள். அடியவர்கள் உன்னை நன்றாகப் புரிந்து கொண்டுதான் போற்றிப் பாராட்டி மகிழ்கிறார்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar